Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகள் பயங்கர தாக்குதல்…. கடும் சேதமடைந்த காவல்நிலைய தலைமையகம்…!!!

உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரத்தில் இருக்கும் காவல்நிலையத்தின் தலைமையகத்தில் ரஷ்ய படைகள் பயங்கரமாக தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது, ரஷ்யா தொடர்ந்து 7-ஆம் நாளாக கடுமையாக தாக்குதல் நடத்திவருகிறது. எனவே, உக்ரைன் அரசு, தங்களைக் காத்துக் கொள்வதற்காக பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்கி எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகராக விளங்கும் கார்க்கிவிற்குள் புகுந்திருக்கிறது. அதன்பிறகு, அங்கிருக்கும் மருத்துவமனையில் தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் இராணுவத்தளத்தை நோக்கி தாக்குதல்… 70 இராணுவ வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டின் தலைநகர் மற்றும் கார்க்கிவ் நகரங்களுக்கு இடையில் அமைந்திருக்கும் ராணுவ தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் வீரர்கள் 70 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து 6-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. பல நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துகிறது. ஆரம்பத்தில், ரஷ்யாவை எதிர்த்து, உக்ரைன் தீவிரமாக எதிர்த்தாக்குதல் நடத்தியது. ஆனால் தற்போது […]

Categories
உலக செய்திகள்

கார்கிவ் பகுதியை ஆக்கிரமித்த ரஷ்யா… மீண்டும் மீட்ட உக்ரைன்…!!!

ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதி, மீண்டும் உக்ரைனால் மீட்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து நான்காவது நாளாக தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், பல மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள, நாட்டிலிருந்து வெளியேற முயன்று வருகிறார்கள். தலைநகர் கீவ்வில் தாக்குதல் நடந்து வருவதால் அங்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனின் மிகப்பெரிய நகரை ஆக்கிரமித்த ரஷ்யா… வெளியான அறிவிப்பு…!!!

ரஷ்ய அரசு, உக்ரைன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாக இருக்கும் கார்க்கிவை கைப்பற்றி விட்டதாக அறிவித்திருக்கிறது. ரஷ்யா, உக்ரேன் நாட்டின் மீது தொடர்ந்து 4-ஆம் நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் கீவ்வில், தாக்குதல் நடைபெற்று வருவதால் அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. நள்ளிரவு நேரங்களில் அங்கு பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகரை கைப்பற்ற ரஷ்ய படையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா தென்கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பெரிய நகர்களை சுற்றி வளைத்திருப்பதாக  தெரிவித்திருக்கிறது. […]

Categories

Tech |