துபாயில் நேற்றிலிருந்து ஐந்து வயதுக்கு அதிகமான குழந்தைகளுக்கு பைசர் பயோ என்டெக் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 2021 ஆம் வருடம் மே மாதத்திலிருந்து 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டது. அதனையடுத்து சினோபார்ம் தடுப்பூசி, சிறுவர்களுக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சுகாதார மையம் சார்பாக 5 வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கு பைசர் பயோடெக் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்றிலிருந்து துபாய் சுகாதார […]
Tag: கார்ட்டூன்
பெல்ஜியத்தில் பாஸ்போர்ட்களில் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பெல்ஜியத்தின் கார்ட்டூன் கதைகளை பிரபலப்படுத்துவதற்காக, மக்களின் பாஸ்போர்ட்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து கொடுக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். அதாவது, நாட்டில் பிரபலமான ஸ்மர்ப்ஸ், டின்டின் ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பாஸ்போர்ட்டில் வரையப்படுகிறது. பிற நாடுகளின் பாஸ்போர்ட்களிலிருந்து, தங்களது பாஸ்போர்ட் தனித்துவமாக இருப்பதற்காகவும், அதனை பிரபலமாக்குவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பிரேம் டாவின்சி கைவண்ணத்தில் புகைப்படம் ஒன்றை வெளியாகி உள்ளது. ‘டெல்லியை நோக்கி செல்வோம்’ என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பிரம்மாண்டமாக திரண்டுள்ளனர். விவசாய சட்டங்கள் தங்களுக்கு எதிராக உள்ளதாக கூறி கொட்டும் பனியிலும், சாலையில் இருந்து நகராமல் அமர்ந்துள்ளனர். தமிழ் சேனல்கள் இது பற்றி விவாதிக்காமல் ரஜினி பற்றி விவாதங்கள் நடத்துவதாக சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலர் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறேன் என்று முகப்பு படத்தில் குறிப்பிட்டுள்ளனர். […]
பிஎஸ்சி படிப்புக்கான தர வரிசைப் பட்டியலில் ஷின்சான் பெயர் இடம்பெற்றுள்ளது கொரோனா பரவலினால் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இருக்கும் சிலிகுரியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் பிஎஸ்சி தரவரிசைப் பட்டியலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலராலும் விரும்பி பார்க்கப்படும் கார்ட்டூன்களில் ஒன்றான ஷின்சான் நேஹாராவின் கதாநாயகன் ஷின்சானின் பெயர் முதலில் இடம்பெற்றிருப்பதாக கல்லூரி நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால் பெயர் பதிவு செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே […]