திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் […]
Tag: கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு […]
திருவண்ணாமலையில் வருகின்ற 19ஆம் தேதி கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும்.அண்ணாமலையார் மலையின் மீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்யவும் கிரிவலம் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 17ஆம் தேதி பிற்பகல் ஒரு மணி முதல் 20-ஆம் தேதி வரை பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என எவரும் அண்ணாமலையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்.வருகின்ற 19ஆம் தேதி நடைபெறவிருக்கும் கார்த்திகை தீப திருவிழாவிற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வரத் தடை […]
அக்னிஸ் தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மகா தீபத்தையொட்டி நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை செய்யப்பட்டது. அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி செப்புத் தகட்டால் செய்யப்பட்ட 5.2 அடி உயரம் கொண்ட கொப்பரை தயாரிக்கபட்டது. 1,000 […]
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு நான்கு மாட வீதிகளில் தேர் திருவிழாவை நடத்துவது குறித்து தமிழக அரசு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் தேர் திருவிழாவை நடத்த தமிழக அரசு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக்கோரி விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வடதமிழக துணைத் தலைவர் திரு. வி. சக்திவேல் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் திரு. எம். சத்யநாராயணன், ஆர். ஹேமலதா ஆகியோர் கொண்ட […]