Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வயலுக்குள் கவிழ்ந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வாலிபர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் காரில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடுவதற்காக சென்றுள்ளனர். இவர்கள் வெங்குளம்கரை பகுதியில் இருக்கும் அபாயகரமான வளைவில் அதிவேகமாக சென்றனர். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பு சுவரில் மோதி வயலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் 4 வாலிபர்களும் உயிர் தப்பினர். பின்னர் அவர்களை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி அறிந்த தீயணைப்பு வீரர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயடைந்த 5 பேர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமி கும்பிடுவதற்காக சென்ற குடும்பத்தினர்….. தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. பரபரப்பு சம்பவம்…!!!

கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மருதை(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொட்டுநீர் பாசனம் அமைக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சாந்தி(45) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா(21) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் மருதை தனது மனைவி மற்றும் மகளுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் வேடசந்தூர்- […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கட்டுப்பாட்டை இழந்த கார்கள்” சாலையில் கவிழ்ந்து 8 பேர் படுகாயம்…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலம்”…. அவ்வழியாக வந்த கார் கவிழ்ந்து விழுந்து விபத்து…!!!!!

வீரவநல்லூரில் புதியதாக கட்டப்படும் பாலத்தில் அவ்வழியாக சென்ற கார் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. திருச்செந்தூர் பாபநாசம் இடையேயான சாலையில் விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருவதால் வீரவநல்லூர் புறவழி சாலையில் தனியார் ஆலை அருகே புதிய பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்களுக்காக தற்காலிகமாக மண் சாலை அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராதவிதமாக திடீரென புதிதாகக் கட்டப்பட்டிருந்த பாலத்துக்குள் செங்குத்தாக பாய்ந்து கவிழ்ந்தது. இந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் கவிழ்ந்து விபத்து….. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்….. மகிழ்ச்சியில் குடும்பத்தினர்…..!!

கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டிணம்காத்தான் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குடும்பத்தினருடன் சிவகாசிக்கு சென்று பட்டாசுகள் வாங்கியுள்ளார். அப்போது மறையூர் கிருதுமால் ஆற்றின் குறுக்கே இருக்கும் வளைவில் கார் கவிழ்ந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சரவணன், அவரது மனைவி சசிகலா மற்றும் 2 குழந்தைகள் லேசான காயத்துடன் அதிஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

Categories

Tech |