தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் கடந்த வாரங்களில் பள்ளிகளுக்கு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து வங்க கடலில் கடந்த வாரம் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்தாலும் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி , கோவை, தேனி, […]
Tag: காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கிலோ மீட்டர் உயரத்துக்கு வளிமண்டல சுழற்சி நிலவிவருகிறது. இதன் காரணமாக வங்கக்கடலில் அடுத்த 24 மணிநேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகுமென்று இந்திய வானிலை ஆய்வு மையமானது தெரிவித்தது. இந்த நிலையில் வங்கக் கடலில் புது காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இதனால் நாளை முதல் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு […]
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடந்த வாரம் தொடர்ந்து மழை பெய்ததால் மாணவர்களின் நலனை கருதி பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி என்ற உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நல்ல மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த சூழலில் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் வானிலை செய்திக்குறிப்பில், வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக்கியுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக சென்னை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை உள்ளிட்ட […]