காற்றழுத்த தாழ்வுப் பகுதி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வருவதால் இன்னும் சற்றுநேரத்தில் 9 மாவட்டங்களில் மழை ருத்ரதாண்டவம் ஆடப்போகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சி, தி.மலை, விழுப்புரம், கோவை, நெல்லை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கும். எனவே, பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tag: காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது, இதனையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கனமழையும், நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் சில மாவட்டங்களில் கன முதல் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலனை கருதி கடந்த ஒரு சில நாட்களாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.அதேசமயம் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தெற்கு அந்தமான் பகுதிக்கு நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்ற இரண்டாம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அதன் பிறகு மத்திய வங்கக் கடல் பகுதியில் புயலாக வலுப்பெற்று வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா பகுதியை நெருங்கி கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து […]
மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, ஏற்கனவே மாவட்டங்களின் பல்வேறு பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாட்களில் தமிழக கடற்கரையை நோக்கி வரும் […]