Categories
தேசிய செய்திகள்

சுவாச கோளாறு: நோயாளிகளின் எண்ணிக்கை 50% ஆக அதிகரிப்பு?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தலைநகர் டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள நிலையில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை போன்றவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் ஆக அதிகரித்து இருக்கிறது. இது தொடர்பாக லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் மருத்துவர் ஷாரதா கூறியதாவது “சரியான புள்ளிவிபர தகவல் இல்லை. எனினும் அவசரகால நிலை ஏற்பட்டு இருக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகள் இடையே அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிக மோசமான நிலையில் காற்று மாசு…. அரசின் திடீர் அறிவிப்பால் மக்கள் அதிருப்தி….!!!

தலைநகர் டெல்லியில் காற்று மாசு எப்போதுமே அதிகமாக இருக்கும் என்பதை பலரும் அறிந்திருப்போம். தற்போது டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசமான பிரிவில் இருப்பதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் நாளில் காற்றில் தரம் கடுமை என்ற பிரிவில் இருந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக இன்று காற்று மாசு மிகவும் மோசம் பிரிவில் இருந்து வருகின்றது. காற்றின் தரம் 326 புள்ளிகளாக உள்ளது. இதனால் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு… சாலைகளில் தண்ணீர் தெளிக்கும் பணி தீவிரம்…!!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தற்போது கடுமை என்னும் பிரிவில் இருக்கிறது. டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த சில தினங்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசம் என்ற பிரிவில் இருந்து வந்த நிலையில் தற்போது கடுமை என்ற பிரிவில் இருக்கிறது. அண்டை மாநிலங்களில் பயிர்களை தொடர்ந்து எரிக்கப்படுவதும் காற்று மாசுபாட்டிற்கு மிகவும் முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதனால் காற்று மாசை குறைப்பதற்காக வாகனங்கள் இயக்குவதை குறைப்பதற்காக டெல்லி அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலத்தில் இந்த வாகனங்கள் நுழைய தடை…. விதியை மீறினால் ரூ.20,000 அபராதம்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.காற்றின் தன்மை மிக மோசமாக இருப்பதால் இணை நோய் உள்ள முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமல்லாமல் பல மருத்துவமனைகளில் குழந்தைகள் சுவாச கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் அரசு பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி வாகனங்கள் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை குறைப்பதற்கு மக்கள் வீட்டிலிருந்தே வேலை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மோசம்… பொதுமக்கள் கடும் சிரமம்…!!!!!

டெல்லியில் காற்றின் மாசுபாடு அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக தீபாவளி பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. அதையும் மீறி வெடித்தால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதையும் மீறி பலர் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை கொண்டாடியதால் தீபாவளி நாளில் உலகிலேயே மிகவும் மாசுப்பட்ட நகரமாக டெல்லி மாறி உள்ளது. இந்த சூழலில் கடந்த சில தினங்களாகவே தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி: இனி வீட்டிலிருந்தே வேலை….? ஊழியர்களுக்கு முக்கிய வேண்டுகோள்….!!!

டெல்லியில் அண்மை தினங்களாக காற்றின்தரம் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசானது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியில் காற்று மாசுபாடை குறைக்க, மாநில அரசின் சார்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் காற்று மாசு காரணமாக பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதுகுறித்து தேசிய குழந்தைகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையிலும் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு: 10ல் 8 குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு…. குழந்தைகள் நல மருத்துவர் தகவல்….!!!!

மோசமான காற்றின் தரத்தால் தில்லியில் 10ல் 8 குழந்தைகள் சுவாசக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வருவதாக குழந்தைகள் நல மருத்துவர் தெரிவித்து இருக்கிறார். தில்லியில் தொடர்ந்து காற்றுமாசு ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், இன்று காற்றின்தரம் “மிக மோசம்” பிரிவுக்கு மாறி இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி பிரபல தனியார் மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவர் கூறியிருப்பதாவது “வெளி நோயாளிகள் பிரிவில் வரும் குழந்தைகளில் 10ல் 8 பேருக்கு சளி, இருமல் மற்றும் சுவாசக்கோளாறு பிரச்னை உள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

அடடே இது நல்லா இருக்கே…! இந்த Certificate இல்லையா…? அப்போ பெட்ரோல் இல்ல…!!!!

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதற்கு வாகனங்களில் இருந்து அதிகமாக வெளியேறும் புகையே முக்கிய காரணம். இதனை குறைக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் மாநில அரசு உள்ளது. எனவே சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்காக டெல்லி அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடுத்த படியாக வாகனங்களின் மூலம் ஏற்படும் மாசுபாட்டைக் குறைக்க புதிய திட்டத்தை கொண்டு வரவுள்ளது. இது தொடர்பாக பேசிய அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், ஆக.25க்கு பிறகு வாகனங்களுக்கு மாசு சான்றிதழ் இல்லையென்றால் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. காற்று மாசு குறைந்தது…. மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னையில் கடந்த வருடம் காற்று மாசு குறைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை நகரமயமாக்கல் மற்றும் தொழில் மயமாக்கல் காரணமாக மக்கள் தொகை தனிநபர் வாகன பயன்பாடு அதிகரித்ததால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பல்வேறு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை முயற்சியால் காற்றின் தரம் கணிசமாக மேம்பட்டது. இந்தியாவின் ஆறு பெரு நகரங்களை ஒப்பிடுகையில் சென்னையில் காற்றின் தரம் மிகவும் தற்போது குறைந்துள்ளது. தொழிற்சாலைகளில் காற்று மாசு குறித்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

என்னது!…. காற்று மாசால் இந்தியர்களின் ஆயுட்காலம் குறையுமா?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஏர் குவாலிட்டி லைஃப் இன்டெக் அமைப்பு காற்றின் தரம் மனித வாழ்வு, ஏற்படுத்தும் தாக்கம் குறித்து விரிவான ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியாவின் கங்கை சமவெளி பகுதி தான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதியாக உள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்கம் வரை நீளும் இந்தப் பகுதியை சேர்ந்த மக்கள் இந்த காற்று மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடி தூள்: ஒரே நாளில் வேற லெவலில் மாஸ் காட்டிய சென்னை மக்கள்…. சூப்பர்ரோ சூப்பர்….!!!!!

நேற்று போகி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் காற்று மாசு ஏற்படும் அபாயம் இருப்பதால் சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை எரிப்பதற்கு தடை விதித்து மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு போகி பண்டிகையின் போது காற்று தரக்குறியீடு அளவு சென்னை மாநகராட்சியின் 12 மண்டலங்களில் மிதமாகவும், மூன்று மண்டலங்களில் மோசமான அளவுகளாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் (2022) 15 மண்டலங்களிலும் காற்று தரக்குறியீடு திருப்திகரமான அளவுகளில்  இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

“இத தவிர வேற வழி இல்ல”….2025 ஆம் ஆண்டுக்கு பிறகு பைக்குகளுக்கு தடை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால், மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வெளியில் வருவதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் வாகன புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் காற்று மாசுபாட்டை […]

Categories
தேசிய செய்திகள்

என்னடா இது பாகிஸ்தானா…? டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில்…. ருசிகர சம்பவம்….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு…. 5 பேர் கொண்ட சிறப்பு குழு…. மத்திய அரசு அதிரடி….!!!!

டெல்லியில் காற்று மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி. ரமணா, 24 மணி நேரத்தில் காற்று மாசை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கெடு விதித்தனர். இந்த உத்தரவையடுத்து டெல்லியில் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை….. அனைத்து பள்ளிகளும் மூடல்….. அதிரடி அறிவிப்பு…!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மறு உத்தரவு வரும் வரை…. நாளை முதல் பள்ளிகள் மூடல்…!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை […]

Categories
Uncategorized

பிரபல நாட்டில் காற்று மாசு அதிகரிப்பு…. பள்ளி கல்லூரிகளுக்கு வரும் திங்கட்கிழமை விடுமுறை அளித்து அரசு நடவடிக்கை….!!

பாகிஸ்தானில் காற்று மாசு காரணமாக  வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே காற்று மாசுபாடு அதிகம் உள்ள பகுதியாக பாகிஸ்தானின் லாகூர் நகரம் இருந்து வருகிறது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு காரணமாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. லாகூரில் காற்றின் தர குறியீட்டு எண் 348 ஆக உள்ளது இது கடந்த வார கணக்கெடுப்பு ஆகும். இதனை தொடர்ந்து காற்று மாசுபாடு […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலம் முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு இனி வீட்டில் இருந்தே வேலை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா காரணமாக முன்னணி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி வழங்கியது. அதனால் வேலை பாதிப்பு ஏற்படாமல் அதே சமயம் ஊழியர்களும் பாதுகாப்பாக இருந்தனர். தற்போது டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை வரை அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தபோது காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு எதிரொலி…. நவம்பர் 21 ஆம் தேதி வரை தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது. காற்று மாசை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் […]

Categories
தேசிய செய்திகள்

நாளையும் விடுமுறை தான்…. மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!!

டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு காற்றின் தரமானது மிகவும் மோசமடைந்துள்ளது. இதற்கு காரணம் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத  பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையினாலும் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேவைப்பட்டால் காற்று மாசுவை தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தி கொள்ளலாம் என்று உத்தரவிட்டது. இதனால் டெல்லியில் உள்ள பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாகவும், அரசு […]

Categories
மாநில செய்திகள்

இனி வாரத்தில் ஒருநாள் மோட்டார் வாகனங்களை தவிர்க்க முடிவு…. தமிழகத்தில் அதிரடி…..!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

நவம்பர் 17 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…. மாநில அரசு அதிரடி உத்தரவு…..!!!!

நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக அதிக அளவு காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து,மின் சாதனங்களின் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி முடிந்துள்ள நிலையில், காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் காற்று மாசு அளவை குறைக்கும் விதமாக டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: மாநிலம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு?…. அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வாரத்திற்கு விடுமுறை…. அரசு அதிரடிஅறிவிப்பு….!!!!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு மோசமாகிக் கொண்டிருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் காரணமாக ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

கண்ணை மறைக்கும் காற்று மாசு… டெல்லியில் மக்கள் தவிப்பு….!!

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் பல மாதங்களாக காற்று மாசு அதிகரித்து பெரும் பிரச்சினையாக நிலவுகிறது.இதற்கு வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவில் இருக்கிறது. இதனிடையில் காற்று மாசு அதிகரிப்பதால் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்திருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையின் போது டெல்லியில் பல்வேறு பகுதியில் தடையை மீறி பட்டாசு வெடிக்கப் பட்டதால் காற்று மாசு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்…. ஆன்லைனில் வகுப்புகள்…. அரசு புதிய அறிவிப்பு….!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்?…. உச்சநீதிமன்றம் புதிய பரபரப்பு அறிவிப்பு….!!!!!

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருகிறது.காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் அதிக அளவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி என்வி ரமணா, டெல்லி என் சி ஆர் பகுதிகளில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். காற்று மாசுபாடு என்பது […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]

Categories
தேசிய செய்திகள்

4 நாட்களாக தொடரும் காற்று மாசு…. டெல்லியில் பொதுமக்கள் அவதி…!!!

டெல்லியில் தீபாவளியை தொடர்ந்து நான்கு நாட்களாக புகைமூட்டம் நீடித்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு அதிகம் வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட புகையால் காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதிகாலையில் ஏற்படும் பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் சுமார் நான்கு நாட்களாக பனிமூட்டம் நீட்டித்து வருகிறது. காற்று சுத்தத்தை கணக்கிட பயன்படுத்தப்படும் “AQI” முறையில் நூற்றுக்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் அது அசுத்தம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில் AIQ ஆனது 580 ஆக […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காற்று மாசு தடுக்கக்கூடிய வகையில் வேதிப்பொருள் அல்லாத பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அதனை குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை அன்று நீதிமன்றம் நடவடிக்கைகளை பொதுமக்கள் மீறினார்கள். சென்னை மாநகரத்தில் பட்டாசு நச்சுப் புகையால் காற்றின் தரம் மிக அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளது. காற்று மாசுபாடு 50 ஆக இருந்தால் நல்லது என்றும் 100 வரை இருந்தால் திருப்தியானது. ஆனால் சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் காற்று மாசு அதிகரிப்பு…. எந்தெந்த ஊரில் எவ்வளவு?…. இதோ மொத்த லிஸ்ட்….!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க நேரம் கட்டுப்பாட்டை கடைபிடிக்காததால் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்று மாசு பல மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை,மாலை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் நேர கட்டுப்பாடு விதித்தது.அதுமட்டுமல்லாமல் பொது மக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் சரவெடி களை தயாரிக்க […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷாரா இருங்க…. சற்றுமுன் வெளியான அதிர்ச்சித் தகவல்…..!!!!

நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்றுமற்றும் காற்று மாசுபாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருந்தாலும் அந்தக் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை பெரும்பாலானோர் வெடித்தனர். இதனால் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் பட்டாசு வெடித்தால் சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு மோசம் என்கிற நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை நகரில் காற்று மாசுபாட்டின் அளவில் 100 முதல் 150 […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசுபாட்டை தடுக்க…. 200 மின்சார பேருந்துகள்…. அசாம் அரசு அசத்தல்…!!!

பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரி பொருட்களின் மூலமாக இயங்கும் வாகனங்களிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுகிறது. இந்த புகையின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. இதனால் வளி மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசு படாமல் இருப்பதற்காக தற்போது பல்வேறு மின்சார வாகனங்கள், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதத்தில், அசாம் அரசு 200 மின்சார பேருந்துகள் மற்றும் 100 இயற்கை எரிவாயு பேருந்துகளை பெற்றுள்ளது. இதுகுறித்து […]

Categories
சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்….. கடும் எச்சரிக்கை…. அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை காற்றில் மாசு ஏற்படுத்தும் துகள்கள் அளவு அதிகரித்துள்ளதுடன், சிலிக்கா, மாங்கனீசு மற்றும் நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இவை நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு …!!

டெல்லியில் நாளுக்கு நாள் மோசமாகி வரும் காற்று மாசை தடுக்க முடியாமல் அரசு இயந்திரங்கள் திணறி வருகின்றன. தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைகிறது. அதுமட்டுமின்றி கண் எரிச்சல், சரும நோய் பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது. டெல்லியில் இன்றும் வழக்கம் போல் காலையிலேயே வீதி எங்கும் பனி மூட்டம் போல ஒரே புகை மண்டலமாக காட்சியளித்தது. லட்சுமி நகர், பட்பருணச், ஆனந்த்விஹார், […]

Categories
தேசிய செய்திகள்

காற்று மாசு மிகத் தீவிரம்… மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை… தேசிய பசுமை தீர்ப்பாயம்…!!!

நாட்டில் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. காற்று மாசு உயர்வு மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதிலும் காற்று மாசு அதிகமாக உள்ள மாநகரங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படுகிறது. காற்று மாசு, மிக மிக […]

Categories
தேசிய செய்திகள்

எங்கயுமே இப்படி இல்ல… டெல்லியில மட்டும்தான் இருக்கு… மக்கள் படும் அவதியை பாக்க முடியல…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிகத் தீவிர காற்று மாசு… உள்ளே நுழையவே முடியல… பொதுமக்கள் கடும் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மிக பெரிய ஆபத்து… உள்ளே செல்ல நடுங்கும் மக்கள்…சுவாசப் பிரச்சனையால் மக்கள் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மோசமடையும் காற்று மாசு… சுவாசப் பிரச்சனையால் மக்கள் அவதி…!!!

டெல்லியில் காற்று மாசு மிக மோசமாக இருப்பதால் மக்கள் அனைவரும் சுவாச பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. வாகனங்கள் வெளியிடுகின்ற புகை மட்டும் அல்லாமல், பஞ்சாப், அரியானா மற்றும் உத்திர பிரதேசம் அதை சுற்றியுள்ள பல்வேறு மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்கு பின்னர் கழிவுகளை விவசாயிகள் அனைவரும் தீவைத்து எரிப்பதால் ஏற்படும் புகையும் டெல்லியில் காற்று மாசுபடுவதற்கு முக்கிய காரணம். அந்தப் புகையின் மூலமாக காற்றில் கார்பன் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரிப்பு…!!

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியில் காற்று மாசு ஒவ்வொரு ஆண்டும் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. பெருகி வரும் வாகனங்கள் வெளியிடுகிற புகை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் வயல்களில் அறுவடைக்குப் பின்னர் விவசாயிகள் கழிவுகளை தீ வைத்து எரிக்கும்போது  வெளியாகும் புகை டெல்லிக்கு காற்றில் மாசு பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. காற்றில் மாசு அதிகரிப்பதால் அதன் தரம் குறைந்துகொண்டே போகிறது. டெல்லியின்  காற்றின் தரம் மோசமாகி வருவது […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் ஆபத்து – மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி

டெல்லியில் மீண்டும் உயர்ந்து வரும் காற்று மாசின் காரணத்தினால் உயிர்வாழ தகுதியே இல்லாத தரமற்ற காற்றின் சூழல் நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையிலும் காற்று மாசு அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் நாட்டு மக்களை பீதி அடைய வைத்திருந்த நிலையில் தற்போது அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு குறைந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு…!!

டெல்லியில் இன்றும்  காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கொரோனா  ஊரடங்கு அமல் ஆனதால் தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வாகனங்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு இருந்ததால் காற்று மாசு வெகுவாக குறைந்தது. டெல்லியில் இருந்து பார்த்தால் இமயமலை தெரியும் அளவிற்கு வானம் தெளிவாக இருந்த நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சகஜ நிலைக்கு திரும்பியதால் டெல்லி மீண்டும் மிகக்கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஆளாகியுள்ளது. எங்கு […]

Categories
தேசிய செய்திகள்

அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் காற்று மாசு உயர்வு…!!

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அறுவடையில் எஞ்சிய தாள்களை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது. வாகன நெரிசல் காரணமாக டெல்லியில்  வழக்கமாக காற்று மாசு அதிகமாகவே காணப்படும். குளிர் காலங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காற்று மாசு வெகுவாக குறைந்தது. பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டு வாகனங்கள் இயக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதால், கடந்த சில நாட்களாக காற்று மாசு உயரத் தொடங்கியது. பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா  உள்ளிட்ட டெல்லியைை சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் காற்று மாசு…!!

டெல்லியில் கொரோனா ஊரடங்கின் போது சீரடைந்து மாசு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் அங்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இன்றும் அதிகாலை முதல் பல இடங்களில் மாசு அடர்ந்து  காணப்பட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாட்டின் தலைநகரான டெல்லியில் வாகனப் பெருக்கம் மற்றும் அதிக அளவிலான சிறு  தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்தது. குறிப்பாக  காற்றில் மாசு அளவு அதிகமாகி இயல்பு வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

திட மற்றும் திரவ மாசு….. மூக்கு வழியாக நுரையீரல் செல்லும்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!

காற்று மாசு குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று பெங்களூர் சுற்றுச்சூழல் அறிவியல் துறை நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் டெல்லி, பெங்களூர், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்று மாசு அதிகரித்து வருகிறது என்ற எச்சரிக்கையை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், காற்றின் சுத்தம் அதிகரித்துவருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சமீபத்தில் தெரிவித்தது. இந்த மகிழ்ச்சியான செய்தியை கேட்டு ஓரிரு மாதங்கள் கூட ஆகாத நிலையில், தற்போது காற்று […]

Categories

Tech |