திருவள்ளுவர் மாவட்டத்தில் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த லலிதா குமாரி என்பவர் வசித்து வருகிறார். இவர் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் எல்ஐசி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவருக்கு திருத்தணி தாசில்தார் சாதி சான்றிதழ் வழங்கிய நிலையில் அதை சரி பார்ப்பதற்காக எல்ஐசி நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த சான்றிதழை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்த நிலையில், அவர் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை என்று கூறி அதை நிராகரித்து விட்டார். இதன் காரணமாக லலிதா […]
Tag: காலதாமதம்
இந்தியாவில் இந்த வேகத்தில் தடுப்பூசி செலுத்தினால் நாட்டில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இருப்பினும் மக்கள் ஒருசில அச்சம் காரணமாக தடுப்பூசி போடுவதற்கு முன் வர மறுக்கின்றனர். இதனால் நாட்டில் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே அம்மாபட்டி பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவில்லை. அதன்பின் எந்திரம் சரி செய்யப்பட்டு தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. […]
பயணிகளுக்கு இடையூறு ஏதும் இன்றி பயணசீட்டு வழங்குவதற்காக பயணசீட்டு சாதன மேலாண்மை தொழில்நுட்பத்தை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளதாவது: இனி தொழில்நுட்பத்தின் மூலம் கணினி முன்பதிவு பயணச் சீட்டு மற்றும் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் போது கணினி நெட்வொர்க்கில் தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டால் உடனடியாக இணைய வழியாக சரி செய்ய முடியும். இதன் மூலம் பயணிகளுக்கு எந்த இடையூறுமின்றி பயண சீட்டு வழங்க முடியும். இது போன்று ஏதாவது […]
விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் திட்டம் கால தாமதம் ஆகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் சுகன்யான் என்ற திட்டத்தை வருகின்ற 2022ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.அதற்கான பணிகள் அனைத்தும் தீவிரமாக நடந்து வருகின்றன.மேலும் அந்த திட்டத்திற்காக இந்திய விமானப்படையில் இருந்து இருபத்தைந்து விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் நான்கு பேர் இறுதியாக […]