அமெரிக்காவின் புகழ்பெற்ற செய்தி தொகுப்பாளர் பார்பரா வால்டர்ஸ் (93) இன்று காலமானார். அமெரிக்காவில் மாலை செய்திகளை தொகுத்து வழங்கிய முதல் பெண் என்ற பெருமைக்குரியவர் இவர். 50 ஆண்டுகால செய்தித்துறை பயணத்தில் 12 எம்மி விருதுகளை பார்பரா வென்றுள்ளார். இன்று உருவாகும் பெண் பத்திரிகையாளர்களுக்கு இவர் தான் முன்னோடி.
Tag: காலமானார்
பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கரின் வீடு சோகத்தில் மூழ்கியுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவரது தாயார் மீனாள்(95) இன்று காலமானார். கவாஸ்கர் இந்தியா பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக இருந்தபோது இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து உடனடியாக நாடு திரும்பினார் சுனில் கவாஸ்கர்.
சிக்கன் டிக்கா மசாலாவை ‘கண்டுபிடித்த’ பாகிஸ்தான் சமையல் கலைஞர் அலி அகமது அஸ்லாம் (77) காலமானார். உலகளவில் கோழிக்கறி எனப்படும் சிக்கன் அதிகமான மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. கோழிக்கறியில் பல வகைகள் உலகம் முழுவதும் ஒரே மாதிரியான பெயரில் மாறுபட்ட சுவையில் கிடைக்கிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் சிக்கன் டிக்கா மசாலா தான். இதை 1970இல் அலி அகமது அஸ்லாம் கண்டுபிடித்தார்.
மாநிலங்களவை திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் உடல்நலக்குறைவால் சற்றுமுன் காலமானார். இவர் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தவர். கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் இருந்தவர். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என கூறப்படுகிறது.
இந்திய சினிமாவின் ஆளுமைகளில் ஒருவரான நடிகர் அசோக் குமாரின் மகளும், நடிகையுமான பாரதி ஜாப்ரி காலமானார். நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாரதி ஜாப்ரி திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகை ராஷ்மி ஜெயகோபால் (51) கொச்சியில் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். “ஸ்வந்தம் சுஜாதா” என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், மலையாளம், தமிழில் பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் நாட்டில் புல்புல் என அழைக்கப்பட்ட இந்திய வம்சாவளியான பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார். பாகிஸ்தான் நாட்டின் புல்புல் என அழைக்கப்பட்ட பழம்பெரும் பாடகி நய்யரா நூர் என்பவர் உடல்நல குறைவால் காலமானார். இவருடைய வயது 71 ஆகும். இது குறித்து அவரது மருமகன் ராணா ஜைடி டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நய்யரா நூர் மறைவு செய்தியை கனத்த மனதுடன் அறிவிக்கின்றேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது […]
‘ஸ்பார்டக்கஸ்’ வெப் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகர் ‘ஐயோன் ஜான் கிங்’ காலமானார். இவருக்கு வயது 49. கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று உயிரிழந்தார். மேலும் சினிமா வாய்ப்புகள் எதுவும் இன்றி புற்றுநோய் சிகிச்சைக்கு இவர் ரசிகர்களிடம் நிதி சேகரித்தது வந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்திய முன்னாள் கால்பந்து அணி கேப்டன் சமர் ‘பத்ரு’ பேனர்ஜி காலமானார். இவருக்கு வயது 92. இவர் 1956ல் நடைபெற்ற மெல்பர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெறவைத்தார். பல்வேறு உடல்நலக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.
பிரபல திரைப்பட இயக்குனர் வொல்ப்காங் பீட்டர்சன் (81) காலமானார். அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் இறந்தார். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 1982 ஆம் ஆண்டு வெளியான தி பூட் திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் வொல்ப்காங் பீட்டர்சன் பிரபலமானார். இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஜெர்மன் கடற்படைக் கப்பலில் சிக்கியவர்களின் கதைதான் படத்தின் மையக்கரு. அந்தப் படத்துக்குப் பிறகு ஹாலிவுட்டில் வித்தியாசமான கதைக்களம் கொண்ட பல படங்களைத் தயாரித்தார். வொல்ப்காங்கின் குறிப்பிடத்தக்க […]
அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி (87) மும்பையில் காலமானார். லட்சக்கணக்கான தமிழர்கள் தினமும் ‘செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி’ என்று கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளரான இவர், டெல்லியில் 35 ஆண்டுகள் ஒளிபரப்புத்துறையில் பங்காற்றினார். இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவின் முதல் எம்.பி.யான மாயத்தேவர் (88) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். எம்ஜி.ஆர் அதிமுகவை தொடங்கி சந்தித்த முதல் இடைத் தேர்தலில் (திண்டுக்கல் ) இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனவர். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல பழம்பெரும் நடிகர் மிதிலேஷ் சதுர்வேதி காலமானார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் லக்னோவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று இரவு காலமானார். இதனை மிதிலேஷின் மருமகன் ஆஷிஷ் சதுர்வேதி சமூக வலைதளங்களில் உறுதி செய்துள்ளார். மிதிலேஷ் சதுர்வேதி பல தசாப்தங்களாக சினிமா துறையில் உள்ளார். ஹிருத்திக் ரோஷனுடன் கோய் மில் கயா, சன்னி தியோலுடன் காதர் ஏக் பிரேம் கதா, சத்யா, பன்டி அவுர் பப்லி, க்ரிஷ், தால், ரெடி, அசோகா மற்றும் ஃபிசா உள்ளிட்ட […]
பிரபல மூத்த தெலுங்கு நடிகர் கே.ஜே சாரதி காலமானார். அவருக்கு வயது 83. 1978ம் ஆண்டு விட்டலாச்சாரியா இயக்கத்தில் வெளியான ஜெகன் மோகினி திரைப்படத்தில் வரும் “குட்டிப்பிசாசு” காட்சியில் நகைச்சுவையாக நடித்து அனைவர் மத்தியிலும் பிரபலமானவர். இவர் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புகழ்பெற்ற பாடகி நிர்மலா மிஸ்ரா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 81. பெங்கால் மற்றும் ஒடியா மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். அவர் ஒடியா இசைக்கு வழங்கிய வாழ்நாள் பங்களிப்புக்காக அவருக்கு சங்கீத் சுதாகர் பாலக்ருஷ்ண தாஸ் விருது வழங்கப்பட்டது. இவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல பழம்பெரும் தயாரிப்பாளரும், மலையாள இயக்குநர் கே.பி.கொட்டாரக்கராவின் மனைவியுமான சாரதா அம்மையார் (80) காலமானார். சென்னையில் மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தமிழில் தனிமரம் உள்ளிட்ட 30 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். கமல்ஹாசன், மம்முட்டி உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள், கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்த படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு […]
பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை காலமானார். 2007-இல் அஜித் நடிப்பில் வெளியான கிரீடம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய் . அதன் பிறகு மதராசப்பட்டினம்’, ‘தலைவா’, ‘தெய்வத்திருமகள்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார். இவரது தந்தை தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன். இவரின் தயார் வள்ளியம்மை கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் காலமானார். இந்திய திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 70. சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவரது உயிர் பிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 1952ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், நடிகர், எழுத்தாளர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை பெற்றவராக விளங்கினார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பல்வேறு […]
80’s 90’s கிட்ஸ்-களிடம் வெகுவாக கவர்ந்த ஒருதிரைப்படம் தான் ‘ஜேம்ஸ் பாண்ட். இந்த திரைபடத்தின் தூண்டுதலால் தான், தமிழில் அந்த காலத்தில் பெரும்பாலான CID சம்மந்தப்பட்ட படங்கள் எடுக்கப்பட்டது. ஜேம்ஸ்பாண்ட் திரைப்படம் என்றும் நிலைத்து நிற்க காரணம் அதன் தீம் மியூசிக் தான்.அந்த மியுசிக்கை இசையமைத்த இசையமைப்பாளர் மாண்டி நார்மன் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. கிழக்கு லண்டனை சேர்ந்த இவர், பல்வேறு ஹாலிவுட் படத்திற்கு இசையமைத்துள்ளார். வயதுமுதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை […]
பிரபல திரைப்பட இயக்குனர் அமீரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யுவன் சங்கர் ராஜா, வெற்றிமாறன், சீமான் மற்றும் முன்னணி நடிகர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்த மதுரை விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவன் இவன் என்ற படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் நடிகர் ராமராஜ். இவர் தற்போது உடல் நலக்குறைவால் காலமானார். கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்த இவர் ஓய்வுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க தொடங்கினார். விஷால் மற்றும் ஆர்யா நடித்த அவன் இவன் என்ற திரைப்படத்தில் போலீசாக நடித்து ரசிகர்களிடையே புகழ்பெற்றவர். இதையடுத்து சில படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்நிலையில் உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். […]
பிரபல திரைப்பட தொகுப்பாளர் கௌதம் ராஜு உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 68. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் 800க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். ரஜினியின் குசேலன், விசாலின் தோரணை உள்ளிட்ட படங்களை தெலுங்கில் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் துள்ளுவதோ இளமை, வில்லன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களின் தெலுங்கு ரீமேகியிலும் இவர் பணியாற்றியுள்ளார் இவரின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகரும், சண்டைக் கலைஞரும், எம்.ஜி.ஆர். நகர் தி.மு.கவின் முன்னாள் வட்ட செயலாளருமான டி.எஸ்.ராஜா உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 88. இவர் எம்.ஜி.ஆர் உடன் நீண்ட காலம் பயணித்தவர். கமல், ரஜினி, விஜய், படங்களில் ஸ்டண்ட் நடிகராக நடித்தவர். என்.டி.ஆர், அமிதாப், ஜித்தேந்திரா, தர்மேந்திரா, பிரான் ரஞ்சித் ஆகியோருக்கு டூப் கலைஞராகவும் நடித்தவர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் அன்பு பாராட்டியவர். சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரின் 113வது வட்ட தி.மு.க.செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் நடிகர் ஜாகுவார் […]
ஒலிம்பிக் பதக்கம், உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி வீரர் வரீந்தர் சிங் (75) காலமானார். இவர் 1975ல் ஆண்களுக்கான ஹாக்கி உலகக் கோப்பையில் தங்கப்பதக்கம் வென்ற அணி, 1972ஆம் ஆண்டு முனிச் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அணி, 1973இல் ஆம்ஸ்டர்டாம் உலக கோப்பையில் வெள்ளிப்பதக்கம் வென்ற அணி என பல்வேறு வெற்றிபெற்ற அணியிலும் இடம் பெற்றிருந்தார். 2007ஆம் ஆண்டு வரை வரீந்தர் சிங்கிற்கு தயான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் அவருடைய […]
மூத்த சிபிஐ(எம்) தலைவரும், கேரள முன்னாள் நிதியமைச்சருமான டி.சிவதாச மேனன் (90) வயது தொடர்பான உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவரது உடல் தகனம் நாளையில் மஞ்சேரியில் நடைபெறுகிறது.
சிறந்த தொழில் திருப்புமுனை நபருக்கான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகளைப் பெற்ற பிரபலமான BHEL மற்றும் மாருதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி. இவர் இன்று காலமானார். அவருக்கு வயது 97. தமிழகத்தில் கருவேலி எனும் ஊரில் பிறந்த கிருஷ்ணமூர்த்தி மாருதியின் தலைவரானபின் அவர் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் நவீன யுகத்தை அறிமுகப்படுத்தினார். மாருதி 800 இன் அறிமுகம் மூலம் வாகன சந்தையை நிரந்தரமாக மாற்றியமைத்தார். இந்நிலையில் இவரது தொழிலில் இவர் புரிந்த சாதனைகளுக்காக அரசு […]
குமுதம் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் சென்னையில் சற்றுமுன் காலமானார். 30 ஆண்டுக்கும் மேலாக குமுதம் இதழில் பணியாற்றி வந்த அவர் காலமான செய்தியை குமுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது. இவர் ஆன்மீக தொடர்பான அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் சின்னா (69). இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வெளியான ‘தூரல் நின்னு போச்சு’ படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமான இவர், அதன்பின் அமராவதி, வைதேகி காத்திருந்தாள், வானத்தைப் போல, செந்தூரப்பாண்டி, நேசம் மற்றும் முந்தானை முடிச்சி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் நடன இயக்குனர் சின்னா நேற்று (15.06.2022) உடல் நலக்குறைவால் காலமானார். இந்த செய்தியை அவரது மகளும் சின்னத்திரை நடிகையுமான ஜெனிஃபர் […]
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ கே.கே.வீரப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவர் தமிழக முன்னாள் சட்டமன்ற . ஆவார் 1996 ஆம் வருடம் தேர்தலில் கபிலர்மலை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001 தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிராகரித்ததுடன் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக அவரை இடை நீக்கம் செய்தனர். இவருடைய மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நாமக்கல்லை சேர்ந்த முற்போக்கு எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. இந்திய கம்யூனிச சித்தாந்தங்களை உள்ளடக்கி தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை, மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா என ஏழு நாவல்களை எழுதியுள்ளார். இவரின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், புஷ்பேக், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு பலரும் தங்களது […]
தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் காலமானார். தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் காலமானார். அவருக்கு வயது 89. இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.
மராட்டிய மாநிலத்தில் சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அந்தேரி கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ரமேஷ் லகேதே நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். இவர் கடந்த 2014ம் வருடம் மராட்டிய சட்டசபைக்கான தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருடைய மறைவிற்கு அரசியல் கட்சியினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பழம்பெரும் நடிகையான ரங்கம்மாள் பாட்டி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரங்கம்மாள் பாட்டி. இவர் வயது மூப்பின் காரணமாக சற்று முன் காலமானார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு நடித்த கிமு என்ற படத்தில் இடம்பெற்ற ‘போறதுதான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போ […]
பிரபல திரைப்பட நடிகர் சக்கரவர்த்தி காலமானார். அவருக்கு வயது 62. உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட அவர் மும்பையில் இன்று காலமானார். 80களில் பிரபலமான இவர் தமிழில் ரிஷிமூலம், முள் இல்லாத ரோஜா உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
நாராயண் தாஸ் நரங் தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வந்த இவர் முன்னணி நடிகர்களை வைத்து பல படங்களை தயாரித்திருக்கிறார். 1980களில் ஃபினான்ஷியராக தனது கெரியரை தொடங்யுள்ளார்.40 ஆண்டுகளாக 650க்கும் மேற்பட்ட படங்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார் நாராயண் தாஸ் நரங். நாராயண் தாஸ் நரங் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மல்டிபிளக்ஸ் குழுமத்தின் தலைவராகவும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் இருந்திருக்கிறார். சமீபத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான லவ் ஸ்டோரி நாக […]
பிரபல மலையாள நடிகரான கைனகரி தங்கராஜ் காலமானார். கேரள மாநிலம், கொல்லம் அருகே கேரளத்தை சேர்ந்த பிரபல மலையாள நடிகர். இவர் நாடகத்துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பிரேம்நசீர் நடித்த அனாப்பச்சன் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதை தொடர்ந்து அவர் 35 படங்களில் நடித்துள்ளார். மோகன்லாலின் லூசிபர் மற்றும் இஷ்க், ஹோம் ஆகிய படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் கடைசியாக மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்தார். இதுவே இவர் தமிழில் […]
சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் ஆவார். இவர் 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் திமுக சார்பாக வெற்றி பெற்று சோழிங்கநல்லூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். இந்நிலையில் இவரது தாயார் சகுந்தலா(81) உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். இவருடைய மறைவிற்கு கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அண்மையில் திமுக எம்பி என்.ஆர். இளங்கோ மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இப்படி […]
பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். குழுமத்தின் முன்னாள் தலைவர் ராகுல் பஜாஜ் (83). இவர் ஜூன் 10 1938ஆம் ஆண்டு பிறந்தார். பொருளாதாரம் மற்றும் சட்டப் பிரிவுகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ள இவர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் 1968ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியை ஏற்கும் போது இப்பதவி ஏற்ற இளம் இந்தியர் என்ற பெருமையை […]
பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டியின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து செய்தி ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். பாஜகவின் மூத்த தலைவரான ஜங்கா ரெட்டி காலமானார். தற்போது இவருக்கு 87 வயதாகிறது.இவர் 1984-ஆம் ஆண்டு ஆந்திராவின் ஹனுமகொண்டா நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவை தோல்வியுறச் செய்து முதல்முறையாக எம்பி ஆனார். அத்தேர்தலில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு மக்களவை உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார். ஜங்கா ரெட்டி மறைவிற்கு பிரதமர் மோடி, […]
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி எஸ்.சிங்காரவடிவேல் ( வயது84 ) கொரோனாவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இவர் 1984 மற்றும் 1989-ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தஞ்சாவூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சமூக சேவகரான பாபா இக்பால் சிங் ( வயது 95 ) காலமானார். கடந்த ஒரு மாதமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பாபா இக்பால் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கல்வி மருத்துவம் மற்றும் சமூக பணிகளில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரபு கவிஞரும், முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான கா.வேழவேந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 25-க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை நூல்களை எழுதியுள்ள இவர் கலைமாமணி, சிறந்த எழுத்தாளர் விருதுகளை பெற்றுள்ளார். திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த இவர் மே முதல் தேதியை விடுமுறை தினமாக அறிவிக்கும் தீர்மானத்தை கொண்டு வந்து அதை சட்டமாக்கினார். இவரது மறைவுக்கு முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1960 களில் வியட்நாம் போரின் எதிர்ப்பாளராக பிரபலமடைந்து “நினைவாற்றலின் தந்தை” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் வியட்நாமிய பௌத்த துறவியான திச்-நாட்-ஹன் தனது 95 வது வயதில் காலமானார். ஜென் புத்த துறவியும், கவிஞரும், அமைதி ஆர்வலருமான திச்-நாட்-ஹன், தனது ஆன்மீக பயணம் தொடங்கிய கோவிலில் காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மிகவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான நாராயணன் தேப்நாத் காலமானார். 97 வயதுடைய அவர் வெகு நாட்களாக உடல்நலக்குறைவால் கோல்கட்டாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.
பிரபல முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் ரமேஷ் பாபு உடல் நலக்குறைவால் திடீரென காலமானார். தெலுங்கு திரையுலகில் தயாரிப்பாளரும், பிரபல நடிகருமான கிருஷ்ணா அவர்களின் மூத்த பையன் ரமேஷ் பாபு ‘சீதாராமராஜு’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் நடிகராக 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டில் ரமேஷ்பாபு நடிப்பிலிருந்து முழுவதுமாக விலகி ‘கிருஷ்ணா ப்ரொடக்க்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து […]
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. அதன்பின் கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது […]
பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் கைத்தபுரம் விஸ்வநாதன் நம்பூதிரி காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த இவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மலையாளத்தில் 1997-ல் ஜெயராஜ் இயக்கிய தேசியவிருது படமான களியாட்டம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், 23 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நடிகர் முஷ்டாக் மேர்ச்சன்ட் காலமானார். அவருக்கு வயது 67. உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் அமிதாப் பச்சன் நடித்த ஷாலோ என்ற படத்தின் மூலம் பிரபலமானவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பணிபுரிந்த இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடிய பேராசிரியர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார். அவருக்கு வயது 90. நெல்சன் மண்டேலா முதல் கருப்பின அதிபராக பதவியேற்ற போது வானவில் தேசம் என்ற சொல்லாடலை உருவாக்கி பிரபலப்படுத்தியவர். ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து அமைதி வழியில் போராடியதால் 1984 இல் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், மக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.