ரேஷன் கடைகளில் சுமார் 4000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களை மாவட்ட ஆட்சியர் நிலையங்கள் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் விதிகளின்படி 5 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தில் மாவட்ட கலெக்டர்கள் நியமனம் செய்யும் ஒரு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட உணவு பொருள் வளங்கள் அலுவலர் போன்றோர் குழு உறுப்பினர்களாக புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். கொரோனா பெருந்தொற்றிற்குப் பின் இந்த தேர்வு நடவடிக்கை அதிக எண்ணிக்கையிலான நபர்கள் விண்ணப்பிக்க […]
Tag: காலி பணியிடம்.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. காலியிடம் குறித்து மக்களவையில் பதிலளித்த அமைச்சர் ஜிதேந்திர சிங், “2021 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் உள்ள 40.35 லட்சம் பணியிடங்களில் தற்போது 30.55 லட்சம் பணியாளர்கள் பணியில் உள்ளனர். ஓய்வு, பதவி உயர்வு,ராஜினாமா மற்றும் இறப்பு போன்ற காரணங்களால் காலியிடங்கள் உருவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசில் புதிய பணியிடங்களை […]
இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கிய பிறகு முதலில் கேள்வி நேரம், கேள்வி நேரம் முடிந்த பிறகு நீர்வளத் துறை மற்றும் வேளாண்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. கேள்வி நேரத்தில் தமிழகம் முழுவதும் வேளாண்மை துறையில் படித்து முடித்து உள்ள இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி சட்டப்பேரவையில் […]
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தமிழகத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து விட்டதாகவும், மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை நம்பி அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்கள் பலரும் சரியான பாடம் நடத்தப்படாததால் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சில பள்ளிகளில் முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்களே இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் பணியில் உள்ளதாக கூறப்படும் ஆசிரியர்களும் கற்பித்தல் அல்லாத மாற்று பணிக்கு அனுப்பப்படுகின்றனர். அதாவது மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வி […]
இந்தியாவில் அரசு நிர்வாகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஐஏஎஸ் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுகிறது. அதாவது 6699 அதிகாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் 5205 ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதற்கு தேர்வு முறையை தான் என்று முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி வருகிறது. இதில் முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. […]
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்று எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு துறை இணை அமைச்சர் அஜய் பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் கூறியுள்ளார். அதில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு துறையில் 7, 476 அதிகாரிகள் பணியிடங்களும், 97177 வீரர்கள் பணியடங்களும், இந்திய விமானப்படையில் 621 அதிகாரிகள் பணியிடங்களும், 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 1265 அதிகாரிகள் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக உள்ளன பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. […]
மத்திய பல்கலைக்கழகங்களில் ஒபிசிக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் வரை காலியாக இருப்பதாக மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் 55 சதவீதம் காலியாக இருப்பதாக தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த அவர் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ் சி பிரிவினருக்கான இடங்களின் 38. 71 சதவீதமும், எஸ் டி பிரிவில் 41.64 காலி […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அரசு பள்ளிகளில் படிக்கும் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலமே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் […]
ஆதார் ஆணையத்தில் MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் : இந்திய ஆதார் ஆணையம் பணியின் பெயர் : MANAGER-UI DESIGNER AND USABILITY EXPERT காலிப்பணியிடங்கள் :பல்வேறு காலிப்பணியிடங்கள். கல்வித்தகுதி : Painting, Multimedia சார்ந்த துறைகளில் Diploma/ Graduation தேர்ச்சி Excellent visual design, typography, layout, and […]
கொலிஜியம் பரிந்துரை செய்யாததால் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து திரு சஞ்சன் கோகாய் கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து மூத்த நீதிபதிகள் திரு தீபக் குப்தா, திருமதி பானுமதி திரு அருண் மிஸ்ரா ஆகியோரும் ஓய்வு பெற்றனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 34 நீதிபதிகளுக்கு பதிலாக 30 நீதிபதிகள் உடன் உச்சநீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் கௌஹாத்தி மத்திய பிரதேஷ் […]