Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்…. சோகத்தில் ரசிகர்கள்….!!!!

பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே (82) காலமானார். 16 வயதில் பிரேசில் அணியில் அறிமுகமான பீலே, 3 முறை உலகக் கோப்பை (1958, 1962, 1970) வென்றார். பிரேசில் அணிக்காக 77 கோல் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 1,363 போட்டிகளில் 1,281 கோல்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.

Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து…. சாம்பியன் அர்ஜென்டினாவுக்கு ரூ. 342 கோடி பரிசு அறிவிப்பு…..!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதின. அதில் சாம்பியன் பட்டத்தை அர்ஜென்டினா அணி கைப்பற்றி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு 342 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே இரண்டாவது இடத்தை பிடித்த பிரான்ஸ் அணிக்கு 244 கோடி பரிசு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்து அரையிறுதி போட்டி…. தோல்வியடைந்த மொராக்கோ அணி…. வெடித்த கலவரம்….!!!

கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர். காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். […]

Categories
உலக செய்திகள்

“போலீசார் கேட்ட அந்த கேள்வி “….? ஹேன்ட் பேக்கை பறி கொடுத்த பெண் அதிர்ச்சி..!!!!

கர்த்தார் நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த போட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் பணியில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த பெண் நிருபர் டாமினிக் மெட்ஜ்கர் என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரிடம் இருந்த ஹேன்ட் பேக் ஒன்று காணாமல் போனது. அதனை டாமினிக் சரியாக கவனிக்கவில்லை. இதனையடுத்து டாமினிக் இது குறித்து போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அப்போது போலீசார்  கூறிய பதிலை கேட்டு டாமினிக் ஆச்சரியமடைந்தார். அதாவது பெண் காவலர் ஒருவர் […]

Categories
அரசியல்

உலகக்கோப்பை போட்டிகள்: கோடைக் காலத்தில் நடைபெறாதது ஏன்?…. பலரும் அறியாத தகவல்….!!!!

உலகக்கோப்பை போட்டிகள் கோடைக் காலத்தில் நடைபெறாதது எ தற்காக என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம். கத்தாரில் பொதுவாக 25 டிகிரி சென்டிகிரேட் (77 டிகிரி பாரன்ஹீட்) ஆக வெப்பநிலை இருக்கும்போது நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 18ம் தேதிக்கு இடையில் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகள் நடைபெற இருக்கிறது. இறுதிப்போட்டிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற்றால், பொதுவாக போட்டிகள் 40 டிகிரி சென்டி கிரேட்டுக்கும் அதிகமாக, 50 டிகிரி சென்டிகிரேட்டை தொடுவதற்கும் சாத்தியம் உள்ள வெப்ப நாட்களில் நடைபெற […]

Categories
உலக செய்திகள்

கத்தாருக்கு சீனா அன்பாக அளித்த பரிசு… என்ன தெரியுமா?…

சீன அரசு, உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கும் கத்தாருக்கு பாண்டா கரடிகளை பரிசாக வழங்கியுள்ளது. கத்தார் நாட்டில் தான் இந்த தடவை உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தொடரில் சீனா தகுதி பெற முடியவில்லை. எனினும் சீனாவிற்கும் கத்தார் நாட்டிற்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது. எனவே, தங்களின் நட்புறவை வெளிக்காட்டும் வகையில், சீனா பாண்டா ஜோடியை பரிசாக  கத்தார் நாட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. அதன்படி, முதல் தடவையாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் கால்பந்து போட்டியின் போது திடீர் துப்பாக்கிச் சூடு… 3 பேர் காயம்… பெரும் பரபரப்பு…!!!!!

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் தொலிடோ எனும் நகரில் உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பள்ளியில் கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் அந்த பள்ளிக்கும் மத்திய கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளிக்கும் இடையே நேற்று இரவு போட்டி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மூன்றாவது சுற்று முடிவடைந்து அடுத்த சுற்றுக்கு சென்றுள்ளது. அதனால் போட்டி நடைபெற்ற பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளியின் கால்பந்து போட்டி நடத்தப்பட்ட பகுதிக்கு வெளியே திடீரென துப்பாக்கிச் […]

Categories
உலக செய்திகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிர முயற்சி… உக்ரைன் அரசின் ஆர்வத்திற்கு.. இது தான் காரணமா?…

உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த உக்ரைன் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 7 மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அங்கு, ஒவ்வொரு நாளும் தீவிரமாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், போரின் தீவிரத்தை முறியடிப்பதற்காகவும் அதன் தாக்கத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காகவும் மக்களின் கனவை நிறைவேற்ற உக்ரைன் அரசு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்த தீவிரமாக முயன்று வருகிறது. வரும் 2030-ஆம் வருடத்தில் நடக்க இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

“சொந்த மண்ணில் தோல்வியடைந்த அரேமா அணி “… கொந்தளித்த ரசிகர்கள்… வன்முறையில் 174 பேர் பலி…!!!!!!

இந்தோனேசியாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 174 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணம் நகரில் உள்ள கஞ்சுருஹான் மைதானத்தில் நேற்று முன்தினம் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்த கால்பந்து போட்டியை காண்பதற்கு சுமார் 42 ஆயிரம் பார்வையாளர்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர். இந்த நிலையில் போட்டியில் அரேமா அணி 2-3 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்துள்ளது. சொந்த மண்ணில் தங்கள் அணி தோல்வி அடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத […]

Categories
உலகசெய்திகள்

லண்டன் மதுபான விடுதியில்… இங்கிலாந்து கால்பந்து ரசிகர்கள் மீது ஜெர்மன் ரசிகர்கள் தாக்குதல்… பெரும் பரபரப்பு…!!!!!

லண்டனில் நேற்று நடைபெற்ற நேஷனல் லீக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஜெர்மனி அணிகள் மோதியுள்ளது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். வெம்ப்லியில் போட்டி நடைபெறும் மைனாதனத்திற்கு அருகே அமைந்துள்ள ஒரு மதுபான விடுதியில் திடீரென புகுந்த சிலர் அங்கிருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் இங்கிலாந்து கால்பந்து போட்டியை காண வந்திருந்த ரசிகர்கள். அப்போது முகமூடி அணிந்த சுமார் 100 ஆண்கள் வெம்ப்லியில் உள்ள மதுபான விடுதியில் புகுந்து […]

Categories
உலகசெய்திகள்

அடடே சூப்பர்… தரையில் படுத்து கொண்டே பந்தை கோல் கம்பத்தில் உதைக்கும் குழந்தை… வைரலாகும் வீடியோ…!!!!!

ஒரு தீவிர கால்பந்து ரசிகர் தனது குழந்தைக்கு ஒரு பந்து மற்றும் ஒரு கோல் கம்பத்தை வாங்கி கொடுத்திருக்கிறார். மேலும் அந்த குழந்தை பிறந்தது முதல் கால்பந்து பயிற்சி அளித்து இருக்கின்றார். இந்த நிலையில் அந்த குழந்தை தவழும் பருவத்திற்கு முன்னரே தரையில் படுத்து கொண்டே பந்தை கோல்  கம்பத்தில் சரியாக உதைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அந்த குழந்தையின் தந்தை மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப் அணியின் தீவிர கால்பந்து ரசிகர் […]

Categories
தேசிய செய்திகள்

பிஃபா கால்பந்து உலகக்கோப்பை பார்க்க ஆசையா…? VIVO அறிவித்துள்ள செம சூப்பர் ஆப்பர்…!!!!!!

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் vivo மிகவும் பிரபலமானதாகும். அந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் ஃபோன்களும் நன்கு விற்பனையாகி வருகின்றது. இந்த நிலையில் ஓணம் மகிழ்ச்சியில் இருக்கும் அந்த நிறுவனம் சில புதிய சலுகைகளை வழங்கியிருக்கிறது.  கால்பந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஆஃபர் அது. அதாவது கால்பந்து உலக கோப்பை 2022 இலவசமாக பார்க்கும் வாய்ப்பை அறிவித்திருக்கிறது. இந்த சலுகைகள் பற்றி விளக்கமாகவும் இலவச டிக்கெட்களை வாங்குவது எப்படி என்பதையும் இங்கே பார்ப்போம். விவோ நிறுவனம் பல கவர்ச்சிகரமான ஆஃபர் […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்”… பிபா அறிவிப்பு…!!!!!!

பதவி காலம் முடிந்த பின்னரும் புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை சுப்ரீம் கோர்ட் நீக்கம் செய்துள்ளது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்துள்ளது. இந்த நிலையில் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட் புதிதாக தேர்தலை நடத்த ஏதுவாக மூன்று பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய முன்னாள் கால்பந்து கேப்டன் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

இந்திய முன்னாள் கால்பந்து அணி கேப்டன் சமர் ‘பத்ரு’ பேனர்ஜி காலமானார். இவருக்கு வயது 92. இவர் 1956ல் நடைபெற்ற மெல்பர்ன் ஒலிம்பிக்கில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி, அந்த அணியை தரவரிசைப் பட்டியலில் 4வது இடத்தில் இடம்பெறவைத்தார். பல்வேறு உடல்நலக்கோளாறு பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்த அவர், இன்று உயிரிழந்தார்.

Categories
பல்சுவை

அவமானங்களே வெற்றிக்கு முதல்படி…. சாதித்துக் காட்டிய பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

பொதுவாக கால்பந்து விளையாட்டு பலருக்கும் பிடிக்கும். இப்படிப்பட்ட கால்பந்து விளையாட்டுக்கு Random Song பாடிய ஒரு பெண்ணைப் பற்றி பார்க்கலாம். அதாவது மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஷகிரா என்ற பெண்ணுக்கு சிறுவயதில் இருந்தே கலை துறையில் சாதிக்கவேண்டும் என்ற லட்சியம் இருந்துள்ளது. ஆனால் ஷகிரா பள்ளியில் படிக்கும் போது சக மாணவிகள் அவருடைய பாடலைக் கேட்டு கேலி செய்துள்ளனர். ஆனால் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் ஷகிரா தன்னுடைய லட்சியத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் 2010-ம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து வீரர் ரொனால்டோவின் குழந்தை மரணம்…. பெரும் சோகம்…!!!!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று பிறந்த தன்னுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், மற்றொரு குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு  நன்றி கூறிய அவர் தன்னுடைய குடும்பத்திற்குப் பிரவேசி கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் ரொனால்டோவின் குழந்தை உயிரிழந்ததற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை கால்பந்து…. ஒரே பிரிவில் இடம்பிடித்த ஜெர்மனி, ஸ்பெயின்….!!!!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஒரே பிரிவில் ஜெர்மன், ஸ்பெயின் என்ற இரண்டு அணிகள் இடம் பிடித்துள்ளன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க உள்ளன. இதுவரை 29 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள மூன்று அணிகள் எவை என்பது குறித்து ஜூன் மாதம் தகவல் வெளியாகும்.  இந்நிலையில் இந்த போட்டியில் லீக் சுற்றில் யார் யாருடன் மோதுவது என்பது […]

Categories
கால் பந்து விளையாட்டு

நட்பு ரீதியான கால்பந்து போட்டி…. நாளை மோத காத்திருக்கும் பக்ரைன்-இந்திய அணிகள்….!!!

 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம் தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய  கால்பந்து  அணி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதோடு பக்ரைன் மற்றும் பெலாரஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் பக்ரைன் தலைநகரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்த்தும் இதைத்தொடர்ந்து வரும் 26 தேதி பெலாரஸ் அணியுடனும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 […]

Categories
கால் பந்து விளையாட்டு

பெனால்டி ஷூட்-அவுட்டில் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ்…. முதல் ஐ.எஸ்.எல். சாம்பியன் கோப்பை…. மகிழ்ச்சியில் எப்சி அணி….!!

கோவாவில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் சூப்பர் லீக் இறுதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் ஐதராபாத் எப்சி அணி போட்டியிட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் முதல் பாதி ஆட்டம் வரை எந்த அணியும் கோல் போடவில்லை. இதை தொடர்ந்து 1-1 என்ற விகிதத்தில் 2 அணியும் சமநிலையாக கோல் அடித்தது. இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாமல் பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதன் முடிவில் ஐதராபாத் அணி 3-1 என்ற கணக்கில் கேரளாவை […]

Categories
கால் பந்து விளையாட்டு

FLASH NEWS: பிரபல வீரர் திடீர் ஒய்வு…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!

பார்சிலோனாவுக்கு விளையாடி வரும் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் அக்வேரா  திடீரென ஓய்வு அறிவித்துள்ளார். மெஸ்ஸியின் நெருங்கிய நண்பரான இவர் அண்மையில் நடந்த ஒரு ஆட்டத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து உடல்நலன் கருதி ஓய்வை அறிவித்துள்ளார். இதனால் இவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மொத்தம் 420 கோல் அடித்துள்ள இவர் பிரீமியர் லீக்கில் அதிக ஹாட்ரிக்  உள்ளிட்ட பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்தில் கைகலப்பு….! கோல் கீப்பர் மீது தாக்குதல்…. சர்சையில் பிரபல வீரர் …!!

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் நெய்மர் எதிர் அணியின் கோல் கீப்பரை கீழே தள்ளி விட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பிரான்சில் நடந்துவரும் கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி – மெட்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் இருந்த நிலையில், போட்டியின் கடைசி நிமிடத்தில் பி.எஸ்.ஜி ஹக்கீமி ஒரு கோல் அடித்தார். இதனால் பி.எஸ்.ஜி அணி 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இதையடுத்து பி.எஸ்.ஜி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பி.எஸ்.ஜி […]

Categories
கால் பந்து சற்றுமுன் விளையாட்டு

இந்திய கால்பந்து அணியின்…. முன்னாள் கேப்டன் காலமானார் – சோகம்…!!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் சந்திரசேகரன்(86) காலமானார். இவர் 1960இல் ரோம் ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர். இவரது தலைமையில் 1962இல் நடந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி தங்கம் வென்றது. இதனையடுத்து 1964 ஆசிய கோப்பையில் இந்திய அணி வெள்ளி வென்றது. 1958-1966 வரை இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
கால் பந்து விளையாட்டு

பிரபல கால்பந்து ஜாம்பவான் காலமானார் – சோகம்…!!!

கால்பந்து வரலாற்றில் தலைசிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படும் ஜெர்மனியை சேர்ந்த ஜெர்ட் முல்லர் (76 வயது) உடல்நிலை குறைவால் இன்று காலமானார். 60s, 70s காலகட்டத்தில் உலகின் முன்னணி வீரராக வலம் வந்தவர் இவர் 1974-இல் ஜெர்மனி உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.  39 தனிப்பட்ட விருதுகளுடன் சர்வதேச போட்டிகளில் 62 கோல்கள், இதர முதல் தரப் போட்டிகளில் 555 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

Categories
கால் பந்து விளையாட்டு

பெண்கள் ஹாக்கி: இந்தியா போராடி தோல்வி…!!!

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி பிரிவில் இந்தியா 0-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியிடம் தோல்வி அடைந்தது. கடந்த ஆட்டத்தில் நம்பர் ஒன் அணியான நெதர்லாந்திடம்  5-1 என  தோல்வியடைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் இந்தியா மேலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் ஜெர்மனியின் தாக்குதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்தது. புதன்கிழமை நடைபெறும் 3-வது ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்தியா மோதும் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து விளையாட்டில் கலக்கும் தோனி… வைரலாகும் புகைப்படம்…!!!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி மற்றும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் கால்பந்து விளையாடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மும்பையில் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப் சார்பில் நடத்தப்பட்ட நட்பு ரீதியிலான போட்டியில் ரன்வீர் சிங், தோனி இருவரும் ஒரே அணியில் விளையாடினார். பிரபலங்கள் இருவரும் ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து கிளப்பின் ஒரு பகுதியாகும். இது இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்கும் போது தொண்டுக்கான வருமானத்தை […]

Categories
கால் பந்து விளையாட்டு

நிறவெறி தாக்குதலுக்கு… இங்கிலாந்து கேப்டன் பதிலடி…!!!

இத்தாலிக்கு எதிரான யூரோ கால்பந்து இறுதியாட்டத்தில், பெனால்டி தவறவிட்ட இங்கிலாந்தின் ராஸ் போர்ட், சான்ச்சோ, சாகா மீது ரசிகர்கள் கடுமையான நிறவெறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரையும் இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் படியும், அவர்களது இனத்தை பற்றி தவறாக பேசியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இனவெறியை தூண்டும் வகையில் கடுமையான பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து கேப்டன் கேன் “தைரியமாக […]

Categories
கால் பந்து விளையாட்டு

தோல்வியடைந்த கோபத்தில்…. இத்தாலி ரசிகர்களை தாக்கிய இங்கிலாந்து ரசிகர்கள்…!!!

யூரோ கால்பந்து இறுதிப் போட்டியில் இத்தாலி அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. இதனால் ஆத்திரம் அடைந்த இங்கிலாந்து ரசிகர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்த இத்தாலி ரசிகர்களை தாக்க துவங்கின.ர் இந்த ஆட்டம் இங்கிலாந்தின் வெம்பிலி மைதானத்தில் நடைபெற்றதால் இங்கிலாந்து ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் அந்த இடம் கலவரம் போல் காட்சியளித்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. https://youtu.be/fZADLaZ5zrU

Categories
தேசிய செய்திகள்

இங்கிலாந்து அடித்த கோலுக்கு ஆட்டம் போட்ட நாய்… வைரலாகும் வீடியோ…!!!

நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகள் வீட்டிலுள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு அதுவும் நடந்து கொள்ளும். நாம் சந்தோஷமாக இருந்தால் அதுவும் சந்தோஷமாக இருக்கும், நாம்  சோகமாக இருக்கும்போது நம்முடன் சேர்ந்து அதுவும் சோகமாக இருக்கும். செல்லப்பிராணிகளை வளர்க்கும் முதலாளிகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளை டிவியில் பார்க்கும்போது நமக்கு பிடித்தவர் கோல் அடித்து விட்டாளோ அல்லது நமக்கு பிடித்த அணி வென்று விட்டாளோ மகிழ்ச்சியில் துள்ளி குதிப்போம். அதைப் பார்க்கும் செல்லப்பிராணிகளும் அதேபோன்று நடனமாடி சந்தோசத்தை […]

Categories
கால் பந்து விளையாட்டு

அடேங்கப்பா! ஒரு டிக்கெட்டின் விலை ரூ.15 லட்சம்…!!!

யூரோ கால்பந்து போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கான இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் லண்டன் நகரில் உள்ள வெம்பிலி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் இத்தாலி- இங்கிலாந்து அணிகள் மோதுகின்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் ஜூலை 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இந்த போட்டிக்கான டிக்கெட் ரூ.15 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Categories
கால் பந்து விளையாட்டு

“நான் நலமாக உள்ளேன்” – ரசிகர்கள் பெருமூச்சு…!!!

டென்மார்க், பின்லாந்து நாடுகளுக்கிடையே நடைபெற்ற யூரோ கால்பந்து ஆட்டத்தின்  நாற்பதாவது நிமிடத்தில் டென்மார்க்கின் எரிக்சன் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்தில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனால் கால்பந்து உலகமே சோகத்தில் ஆழ்ந்தது. இந்நிலையில் இன்று தான் நலமாக உள்ளதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கால் பந்து விளையாட்டு

முக்கிய பிரபலம் மாரடைப்பால் காலமானார் – பெரும் சோகம்…!!!

இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பிரணாப் கங்குலி (75) மாரடைப்பால் காலமானார். கோலாலம்பூரில் நடந்த மெர்டேக்கா கோப்பையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 1969இல் ஐஎப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணிக்காக விளையாடிய இவர் 2 கோல் அடித்து அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர். பல அகாடமிகளில்  பயிற்சியாளராக இருந்துள்ளார். மோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.

Categories
உலக செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட சூப்பர் லீக் போட்டி…. எதிர்ப்பு தெரிவித்த முக்கிய நபர்கள்…. சங்கத் தலைவரின் ட்விட்டர் பதிவு….!!!

ஐரோப்பாவில் தொடங்கப்படும் ‘சூப்பர் லீக்’ போட்டிக்கு இங்கிலாந்தின் கால்பந்து சங்கத்தினுடைய தலைவரான இளவரசர் வில்லியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலிருக்கும் கால்பந்து கிளப்புகளான மான்செஸ்டர் யுனைடெட், அட்லெடிகோ மாட்ரிட் உட்பட சில கால்பந்து கிளப்புகள் சேர்ந்து புதிதாக நிறுவப்படும் கால்பந்து போட்டிக்கான ‘சூப்பர் லீக்கை’ அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு UEFA, பிபாவின் தலைவர்கள் மற்றும் ஐரோப்பிய நாட்டின் தேசிய கால்பந்திற்கான சங்கமும் விமர்சனம் தெரிவித்தது. மேலும் பிரித்தானியாவின் பிரதமரான போரிஸ் ஜான்சனும், பிரான்சின் ஜனாதிபதியான இம்மானுவேல் என்பவரும் சூப்பர் […]

Categories
கால் பந்து விளையாட்டு

இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழச்சி…!!!

இந்திய மகளிர் கால்பந்து அணியின் கேப்டனாக தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் என்பவர் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “கடலூரை சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் அவர்கள் கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவருடைய வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்” என்று ட்விட் செய்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

வாசற்படியில் இருந்த சாக்லேட்டும் கடிதமும் …ரொம்ப நாளா தவிச்சிட்டு இருந்தோம்… லைக்கை அள்ளும் வைரல் வீடியோ…!!!

இங்கிலாந்து நாட்டில் மூன்று குழந்தைகளின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இங்கிலாந்தில் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் என்ற பகுதியில் டோலி சூட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் மெண்டல் ஹெல்த் பார்மசிஸ்ட் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் மூன்று( 6)(8) மற்றும்( 5) குழந்தைகள் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் வீட்டு வாசலில் இரண்டு சாக்லேட் பாக்கெட் மற்றும்  ஒரு கடிதமும் இருந்து. அப்போது அவர் வெளியே வந்தது […]

Categories
கால் பந்து விளையாட்டு

கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி… பெரும் மகிழ்ச்சி….!!

ஸ்பெயின் நாட்டில் நடந்த லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மாட்ரிட் லா லிகா போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. அதில் ஜீபுஸ்கோவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா அணி, ரியல் சோசிடாட்டை எதிர் கொண்டுள்ளது. இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக களமிறங்கிய  பார்சிலோனா அணி 6-1 என்ற கோல் கணக்கில் ரியல் சோசிடாட்டை எளிதில் தோற்கடித்து முன்னேறி […]

Categories
கால் பந்து விளையாட்டு

OMG ! இந்திய கால்பந்து அணி கேப்டனுக்கு…. கொரோனா உறுதி…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனாவானது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் பலரையும் பதம் பார்த்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரட்டை சகோதரிகள்… இணையத்தில் வெளியான தகவல்…!

தேசிய கைபந்து அணியில் விளையாடி வந்த இரட்டையர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தென்கொரிய தேசிய கால்பந்து அணியில் லீ ஜே யோங்,லீ டா யோங் என்ற 24 வயதுடைய இரட்டையர்கள் விளையாடி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இது அவர்களை அணியில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது. இணையத்தில் வெளியான குற்றச்சாட்டு என்னவென்றால், இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களை வம்பிழுத்து தொல்லை […]

Categories
உலக செய்திகள்

கனவுடன் சென்ற ஆட்டக்காரர்கள்… புறப்பட்ட சில நொடிகளில்… அப்பளம் போல் நொறுங்கிய விமானம்…!

பிரேசிலில் விமானத்தில் சென்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்ன் தலைவரும், அணியின் நாலு ஆட்டக்காரர்களும் கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றனர். புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பால்மான் அணியின் தலைவர், 4 ஆட்டக்காரர்கள் உள்பட விமானியும் உயிரிழந்தனர். விமானம் எப்படி […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கடைசி வரை திக்திக்..! கிடைத்த ஒரே வாய்ப்பு… மாஸ் காட்டிய அஷ்லே பார்ன்ஸ்… அசத்திய பர்ன்லி எஃப்சி…!!

இன்று நடைபெற்ற இபிஎல் கால்பந்து தொடரில் பர்ன்லி எஃப்சி அணி -லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று லீக் போட்டி நடைபெற்றது. அதில் லிவர்பூல் அணி – பர்ன்லி எஃப்சி அணியை எதிர்கொண்டது. பரபரப்புடன் தொடங்கிய போட்டியில் இரு அணி ஆட்ட காரர்களும் தங்களது கோல்களை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வலிமையான டிஃபன்ஸ் ஆட்டத்தால் கோல் அடிக்க முயற்சி […]

Categories
கால் பந்து விளையாட்டு

1இல்ல.. 2இல்ல… 12போட்டி காலி… பிரபல கால்பந்து கேப்டனுக்கு சிக்கல்… அதிர்ந்து போன ரசிகர்கள்…!!

எதிரணி வீரரை தாக்கிய காரணத்திற்காக பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அடுத்து நடைபெறவுள்ள 12 போட்டிகளில் இருந்து இடைநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பார்சிலோனா அணியும் – அத்லடிகா பில்பாவோ அணியும்  நேற்று நடைபெற்ற சூப்பர் கோப்பையின் இறுதிப் போட்டியில் மோதியது. இந்த போட்டியில்  பார்சிலோனா அணியை வீழ்த்தி அத்லடிகா பில்பாவோ  அணி 3- 2 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது. இப்போட்டியின் கடைசி நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கேப்டன் லியோனல் […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐதராபாத் எஃப்சி – ஒடிசா எஃப்சி மோதல்… புள்ளிப்பட்டியலில் முன்னேறுவது யார்?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எஃப்சி அணி ஒடிசா எஃப்சி அணியுடன் விளையாட உள்ளது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் ஏழாவது சீசன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.இன்று  நடைபெறும் லீக் போட்டியின்  புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஒடிசா அணியுடன் விளையாடவுள்ளது. ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 […]

Categories
கால் பந்து விளையாட்டு

பிரபல கால்பந்து விளையாட்டு வீரர்…. களத்திலேயே மாரடைப்பால் மரணம் – சோகம்…!!

பிரபல கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ மாரடைப்பால் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர் அலெக்ஸ் அபோலினாரியோ(24). இவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும், மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 24 வயது மட்டுமே ஆகிறது. இந்நிலையில் கால்பந்து வீரர் அலெக்ஸ் சிறு வயதிலேயே திடீரென மாரடைப்பால் […]

Categories
கால் பந்து விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இன்று தொடங்கிய போட்டி…. முதல் வெற்றியை பதித்த அணி….!!

இன்று தொடங்கிய இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் முதல் போட்டியில் மோஹன் பகான் அணி வெற்றி பெற்றுள்ளது நாடு முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனால் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது தொற்று குறைந்து வரும் சூழலில் இன்று முதல் கோவாவில் வைத்து ஏழாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நடைபெற தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் – ஏடிகே […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

“இந்தியன் சூப்பர் லீக்” இந்த முறை 10 இல்ல 11…. அதிகரித்த போட்டிகள்… யாரு சாம்பியன்….?

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் 10 அணிகளுடன் புதிதாக பதினோராவது அணியாக ஈஸ்ட் பெங்கால் இணைந்துள்ளது கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வரும் நிலையில் ஏழாவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டு நாளை முதல் தொடங்க உள்ளது. ஏற்கனவே ஐஎஸ்எல் கால்பந்து விளையாட்டில் 10 அணிகள் இடம் பெற்றிருக்கும் நிலையில் தற்போது ஈஸ்ட் பெங்கால் அணி புதிதாக சேர்ந்துள்ளது. கால்பந்து ரசிகர்களை அதிக அளவு கொண்ட மேற்கு வங்கத்திலிருந்து இரண்டாவது அணியாக ஈஸ்ட் பெங்கால் […]

Categories
கால் பந்து பல்சுவை விளையாட்டு

கால்பந்து ரசிகர்களுக்கு…. “இந்தியன் சூப்பர் லீக்” நாளை முதல் ஆரம்பம்….!!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாளை முதல் கோவாவில் வைத்து தொடங்க உள்ளது கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடக்க இருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது 7வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. வழக்கமாக இந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சி, […]

Categories
உலக செய்திகள் கால் பந்து விளையாட்டு

கொரோனா பரவல்…U-17 மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு…பிபா அறிவிப்பு

வேகமாக பரவி வரும் கொரோனோவால், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற வேண்டிய மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் வருகின்ற நவம்பர் 2ம் தேதி முதல் 21ம் தேதிவரை 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பங்கேற்கும் இந்த மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதனுடைய அட்டவணையை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிடப்பட்டிருந்தது. இப்போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories

Tech |