Categories
அரசியல் உலக செய்திகள்

கால்பந்தின் உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா…. கொண்டாட்டத்தில் ரசிகை செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை…!!!

கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பையின் இறுதி போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ஒரு ரசிகை திடீரென்று தன் மேலாடை கழட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. கால்பந்து உலக கோப்பை போட்டியானது, கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில், சுமார் 36 வருடங்கள் கழித்து பிரான்ஸ் நாட்டை வீழ்த்தி அர்ஜென்டினா மீண்டும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கால்பந்து சூப்பர் ஸ்டாரான, மெஸ்ஸிக்கு நம் நாட்டிற்கு உலகக்கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் ஏக்கம் […]

Categories
உலக செய்திகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி…. காலிறுதிக்கு முன்னேறிய பிரான்ஸ் அணி…. கொண்டாடிய அதிபர் மேக்ரோன்…!!!

உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் பிரான்ஸ் அணி காலிறுதிக்குள் முன்னேறியதை அந்நாட்டு அதிபர் மேக்ரோன் கொண்டாடியிருக்கிறார். பிரான்ஸ் அணியானது உலககோப்பை கால்பந்து போட்டியின் கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. பிரான்ஸ் அணியின் ஒலிவியர் ஜிரூட் 44-ஆம் நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் கணக்கை தொடங்கிய பிறகு, விறுவிறுப்பாக மைதானத்தில் சுற்றி வந்த எம்பாப்வே 74 மற்றும் 90-ஆம் நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். En quarts ! pic.twitter.com/8GS5TTFrep — Emmanuel Macron (@EmmanuelMacron) […]

Categories
அரசியல்

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022: முதன்முறையாக நடுவர்களாக மகளிர்…. பெரும் வரவேற்பு…!!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. உலகின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விளாத்திகுளம் பள்ளியில்…. “மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி”…!!!!

விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் தொடங்கி வைக்க மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலசாமி, உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி”…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ்கள்….!!!!!

கோவில்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் இன்டர்நேஷனல் அகாடமி பள்ளியில் தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட அளவில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்றது. இறுதிப்போட்டியில் காயல்பட்டினம் அணியும் கோவில்பட்டி அப்துல் கலாம் அணியும் மோதியதில் 5-4 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

“பல லட்சம் செலவழித்தால் இந்த உற்சாகம் கிடைக்குமா”….. இணையதளத்தை கலக்கும் ஆனந்த் மகேந்திராவின் வீடியோ…!!!!

2022 பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெற உள்ள பிபா உலக கோப்பை என்பதால் இந்த போட்டியை நடத்த கத்தார் வேகமாக தயாராகி வருகிறது. இந்த தொடரை எதிர்பார்த்து உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். அவர்களை கவரும் வகையில் கால்பந்து உலகக்கோப்பை பிரபலப்படுத்தும் நோக்கிலும் அது குறித்த […]

Categories
விளையாட்டு

உலகக்கோப்பை மகளிர் கால்பந்து போட்டி: துணை பயிற்சியாளராக தமிழக பெண் தேர்வு….!!!!!

17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை மகளிர் கால் பந்து போட்டியானது இந்தியாவில் முதன்முறையாக நடக்கிறது. இப்போட்டி அக்டோபர் 11-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை புவனேஸ்வர், கோவா, நவி மும்பை போன்ற 3 இடங்களில் நடக்கிறது. இதில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. லீக முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இந்திய அணியானது “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா, மொராகோ, […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி…. “சாம்பியன் பட்டத்தை தட்டி சென்ற திருச்செந்துறை அரசு பள்ளி”….!!!!!

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் அரசு பள்ளி முதலிடம் பிடித்தது. திருச்சி மாவட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டது. இந்த போட்டியில் 19 வயதுக்குட்டபட்ட பிரிவு இறுதி ஆட்டத்தில் பிஷப்ஹீபர் பள்ளி அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. 17 வயது குட்பட்ட பிரிவில் திருச்செந்துறை […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்… 40 வருடத்திற்கு பின் அனுமதிக்கப்படும் பெண்கள்…. எதற்கு தெரியுமா…?

ஈரானில் 40 வருடத்திற்கு பின் உள்ளூர் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின் பெண்கள் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விதிமுறைகளில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தது. மேலும் பெண்கள் தனியாக கார் பார்க்கிங் செய்யும் வலிகளில் கால்பந்து போட்டிகளை பார்ப்பதாக இருந்து. இந்த நிலையில்இந்த வியாழக்கிழமை தான் முதன் முறையாக 40 வருடத்தில் பெண்கள் கால்பந்து ரசிகர்கள் உள்ளூர் போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 500 கால்பந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கால்பந்து போட்டி”…. பங்கேற்ற மாணவ-மாணவிகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம், குயின்சிட்டி ரோட்டரி சங்கம், மாவட்ட கால்பந்து கழகம் போன்றவை சார்பாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியானது விளையாட்டு அரங்கில் துவங்கியது. இதன் தொடக்கவிழாவிற்கு மாவட்ட கால்பந்து கழக தலைவர் ஜி.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். அத்துடன் செயலாளர் எஸ்.சண்முகம் முன்னிலை வகித்தார். இதையடுத்து மேற்கு ரோட்டரி சங்க தலைவர் ஜெயச்சந்திரன், குயின்சிட்டி ரோட்டரி சங்கதலைவி சர்மிளா பாலகுரு போன்றோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ்பாத்திமா மேரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கோத்தகிரியில் நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்து போட்டி”…. சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற நீலகிரி அணி…!!!!!

நீலகிரி கால்பந்து கழகத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்ததில் நீலகிரி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி காந்தி மைதானத்தில் நீலகிரி கால்பந்து கழகத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழாவையொட்டி கால்பந்து போட்டியானது நடைபெற்றதில் நீலகிரி, கோவை, சென்னை, தேனி, திருவள்ளூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, ஈரோடு, திண்டுக்கல், சேலம், வேலூர், தஞ்சாவூர், காஞ்சிபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றது. […]

Categories
உலக செய்திகள்

விறுவிறுப்பாக நடந்த போட்டி…. பின்னர் நடந்துள்ள சோக சம்பவம்…. வேண்டுகோள் விடுத்த அதிகாரிகள்….!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் நடந்த கால்பந்து போட்டியையடுத்து சுமார் 52 வயதுடைய நபருக்கு எப்படியோ தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள். இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் குயின்ஸ் பார்க் ரேஞ்சர்ஸ் மற்றும் லூடன் டவுன் என்னும் அணிகளுக்கிடையே மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள கால்பந்து போட்டி நடந்து முடிந்த பின்பு அதே பகுதியில் 52 வயதுடைய நபருக்கு தலையில் பலத்த […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்கள் ஆட்சியில் முதல் முறை!”.. காபூலில் நடந்த கால்பந்து தொடர்.. ரசிகர்கள் உற்சாகம்..!!

தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல் தடவையாக காபூல் நகரில் கால்பந்து போட்டி நடைபெற்றிருக்கிறது. ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் நடைபெறவிருந்த ஒரு டெஸ்ட் போட்டியையும் ரத்து செய்துவிட்டது. அதே சமயத்தில், காபூல் நகரில் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்றுள்ளது. அதாவது, மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தலிபான் அரசு அனுமதி வழங்கவில்லை. இதனை எதிர்க்கும் விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம், வரும் 27ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற இருந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியை ரத்து […]

Categories
உலக செய்திகள்

தொண்டு நிறுவனம் நடத்திய கால்பந்து போட்டி… பிரான்ஸ் அதிபர் பங்கேற்பு… வெளியான முக்கிய தகவல்..!!

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் நடைபெற்ற நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அந்நாட்டில் தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட நட்புமுறை கால்பந்து போட்டியில் பங்கேற்று விளையாடியுள்ளார். அதாவது பிரான்சில் உள்ள பாய்ஸி நகரில் நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கு நிதி திரட்டும் வகையில் பிரான்ஸ் மற்றும் பாரீஸ் மருத்துவமனை அறக்கட்டளை சார்பில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் பங்கேற்று பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி அதிபர் இமானுவேல் மேக்ரான் கோல் அடித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

இனி இதற்கு தடை விதிக்கப்படும்..! இனரீதியான விமர்சனம்… இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை..!!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இனரீதியாக சமூக ஊடகங்களில் விமர்சிப்பவர்களை கால்பந்து போட்டிகளை நேரில் பார்வையிட இனி தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் உள்ள விம்ப்ளி மைதானத்தில் ஐரோப்பிய நாடுகள் கலந்து கொண்ட யூரோ கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதிக்கொண்டதில் இத்தாலியிடம் இங்கிலாந்து பெனால்ட்டி சூட்டில் தோல்வியடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணியில் உள்ள மூன்று கருப்பின வீரர்கள் ( Marcus Rashford, Bukayo Sako, jadon Sancho ) […]

Categories
உலக செய்திகள்

“நீ வேலைக்கு வர தேவையில்லை!”.. பொய் கூறிவிட்டு கால்பந்து போட்டிக்கு போன பெண்.. முதலாளியிடம் மாட்டிய சுவாரஸ்யம்..!!

அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு பணிக்கு செல்லாமல் கால்பந்து விளையாட்டு காணச் சென்ற இளம்பெண் முதலாளியிடம் மாட்டிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. பல திரைப்படங்களில் கதாநாயகன் அலுவலகத்தில் பொய் கூறிவிட்டு விடுமுறை எடுக்கும் காட்சிகள் இடம் பெறும். உதாரணமாக தில்லுமுல்லு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களை கூறலாம். இந்நிலையில் உண்மையில் இது போன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Ilkley என்ற பகுதியில் வசிக்கும் Nina Farooqi என்ற பெண், தன் தோழியுடன் கால்பந்து போட்டியை […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் லீக் போட்டிகள்… மறுப்பு தெரிவித்த முன்னணி அணிகள்… இளவரசர் வில்லியமின் ட்விட்டர் பதிவு…!!!

ஐரோப்பிய சூப்பர் லீக் போட்டிக்கு இங்கிலாந்து கால்பந்து சங்கத்தின் தலைவரான இளவரசர் வில்லியம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஐரோப்பாவின் புதிய கால்பந்து ‘சூப்பர் லீக்’ போட்டிகள் தொடங்குவதற்கான பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. ஐரோப்பாவின் 12 முன்னணி கால்பந்து கிளப்புகளான ஏசி மிலன், அர்செனல், அட்லெடிகோ மாட்ரிட், செல்சியா, பார்சிலோனா, இன்டர் மிலன், ஜுவென்டஸ், லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் ஆகியவை இணைந்து சூப்பர் லீக் என்ற […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகள் போராட்டம்… கால்பந்து போட்டியில் ஒளிபரப்பு… வரலாற்று சாதனை…!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வரும் சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த விளம்பரம் ஒளிபரப்பானது. மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் தொடர் போராட்டம் […]

Categories

Tech |