கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரி ஊராட்சியில் அளேசீபம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஓசூர்-தர்மபுரி மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சாலை ஓரமாக இருக்கும் வீடுகளில் கழிவு நீர் செல்வதற்கு வழி இல்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் சாலையோரமாக புதிதாக கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டதாக கூறி ஒரு வீட்டின் சுவற்றில் எழுதப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 4,79,999 நிதி […]
Tag: கால்வாய்
கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலம் சாலையின் ஒரு பகுதியில் பட்டணம் என்ற கால்வாய் ஓடுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசூபாறை என்ற இடத்தில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இந்த உடைப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மணல் மூட்டைகளை வைத்து சீரமைத்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக இந்த பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கால்வாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. […]
தூர்வாரப்பட்ட குடிநீர் கால்வாயை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா பேரூராட்சியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சேறும் சகதியுமாக தூர்வாரப்படாமல் கழிவுநீர் கால்வாய் ஒன்று அமைந்துள்ளது. இதனால் மழை நேரங்களில் நீர் நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரூராட்சியில் உள்ள அனைத்து கால்வாய்களையும் உடனடியாக தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி செயல் அலுவலர் உமாராணி தலைமையில் பொக்லைன் இயந்திரங்கள் […]
எகிப்தில் ஓட்டுனர் உரிமம் பெறாத இளைஞர் இயக்கிச்சென்ற ரிக்சா, நீர் பாசன கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் 8 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். எகிப்தில் இருக்கும் தலைநகர் கெய்ரோவிலிருந்து பெஹைரா என்ற மாகாணத்தின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுடன் ஒரு ரிக்சா சென்றிருக்கிறது. அப்போது நைல் ஆற்றின் டெல்டா பகுதியில் நீர் பாசன கால்வாயில் சென்று கொண்டிருந்த ரிக்சா திடீரென்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் இருந்த 12 பேரில் குழந்தைகள் 8 பேரும் பரிதாபமாக பலியாகினர். அந்த ரிக்சாவின் […]
விழுப்புரம் மாவட்டத்தில் வாய்க்கால் அமைக்காமல் ஒரு கோடியே 36 லட்சம் போலி பில்கள் மூலம் எடுக்கப்பட்டது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனுர் ஒன்றியத்திற்குட்பட்ட இளங்காடு ஊராட்சியில் 1,500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இளங்காடு ஊராட்சியில் உள்ள குடுமியான்குப்பம் மற்றும் பெத்துரெட்டிக்குப்பம் ஆகிய கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஏரி கால்வாய் பாசனத்தை நம்பி மட்டுமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதிகளில் கடந்த 2014ஆம் ஆண்டு தற்போது வரை […]
சாக்கடை கால்வாயில் வாலிபர் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள திருவகவுண்டனூர் ரவுண்டானா அருகில் சாக்கடை கால்வாயில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது அந்த வாலிபர் உடல் மீது கல் ஒன்று கிடந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். […]
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் கால்வாயில் மிதந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் சரகத்திற்கு உட்பட்ட தாழக்குடியில் இருந்து சந்தைவிளைக்கு செல்லும் சாலையோரம் நாஞ்சில் புத்தனாறு கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் குறுக்கே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் வசதிக்கேற்ப அதன் அருகில் குழாய்கள் அமைத்து தற்காலிக பாலம் போடப்பட்டுள்ளது. எனவே […]
புதிய கால்வாய் அமைத்து வரும் பணியை அதிகாரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையினால் குமரகிரி ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் பச்சப்பட்டி, வெள்ளகுட்டை கால்வாய் வழியாக வரும் மழைநீர் சாலைகளில் தேங்கி காணப்பட்டது. இதனை ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆய்வு மேற்கொண்டு பச்சப்பட்டி பகுதியில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். இதற்குரிய பணிகள் தொடங்கப்பட்டு மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் நேரில் சென்று […]
ஏரிகளுக்கு தடையின்றி தண்ணீர் செல்ல கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 250 ஏக்கர் பரப்பில் இருக்கின்ற பெரிய ஏரியை கலெக்டர் அமர் குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது ஏரியின் பரப்பளவு, ஏரி முழுவதுமாகப் பரவி இருக்கின்ற கருவேலமரங்களை அகற்றுதல் குறித்தும், ஏரியினை டிரோன் மூலம் வரைபடம் தயாரிக்கவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து மேட்டுபாளையம் கிராமத்தில் பாலாறு உதயேந்திரம் […]
செல்பி எடுக்கும் பொழுது கால்வாயில் தவறி விழுந்த இளைஞரை காப்பாற்றுவதற்காக தண்ணீரில் குதித்த 3 நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த லோகேஷ் என்பவரின் மனைவி பிரியா. இவர்கள் தங்களது நண்பர்களான யுவராஜ், பாலாஜி, கார்த்திக் என்ற மூன்று பேருடன் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள உப்பலமடுகு அருவிக்கு சென்றுள்ளனர். அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட காரணத்தினால் அனைவரும் அருகில் உள்ள கால்வாய் பகுதியை சுற்றி பார்த்துவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். […]
பிரிட்டனில் கால்வாயிலிருந்து பிறந்து சில நாட்களே ஆன பிஞ்சு குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் லீ கோல்ஸ் என்ற 27 வயதான நபர், கடந்த வியாழக்கிழமையன்று சூப்பர் மார்க்கெட்டிலிருந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது, வழியில் வால்சால் என்ற பகுதியில் இருக்கும் கால்வாயில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ந்துள்ளார். எனவே அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்போது காவல்துறையினர் அந்த குழந்தை தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் இந்த குழந்தையினுடைய […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்வாயில் கிடந்த கோவில் கல் தூண்களை அறநிலையத்துறையினர் மீட்டுள்ளார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் பஞ்சுபேட்டையில் இருக்கும் மின்வாரியத்திற்கு அருகே ஒரு பெரிய கால்வாய் உள்ளது. இக்கால்வாயில் சுமார் 150க்கும் மேற்பட்ட கோவில் கல் தூண்கள் கிடப்பதை கவனித்த தனிநபர் எவரோ மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அப்பகுதிக்கு விரைந்து சென்று கல் தூண்களை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் தூங்களை அப்புறப்படுத்துமாறு அறநிலையத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அறநிலையத்துறையின் சில முக்கிய அதிகாரிகள் […]
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்புக் உபகரணங்கள் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் தூய்மை பணியாளர்கள் கால்வாயில் இறங்கி அடைப்பை சரி செய்து மழை நீரை வெளியேற்றினர். எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி அவர்கள் தூய்மைப் பணியை […]