தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 2-ம் தேதி ஜெய் பீம் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையப்படுத்தி ஞானவேல் இயக்கியிருந்தார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு சமூகத்திலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக பலரும் […]
Tag: காவலர்
நாய் கூட சாப்பிடாது என தங்களுக்கு வழங்கப்படும் உணவைக் காட்டி கதறி அழுத காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதோடு, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆகஸ்ட் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத் பகுதியிலுள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத விடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. கண்களில் கண்ணீருடன், கையில் உணவுத்தட்டுடன் உத்தரப்பிரதேசம் மாநில தலைமைக்காவலர் மனோஜ்குமார் பொதுமக்கள் முன்னிலையில் தன் துயரத்தை வெளிப்படுத்தினார். இதற்கென அவர் பிரோஸாபாத்தில் இருந்து 600 […]
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது கடையில் கதவு இல்லாத காரணத்தினால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளே உறங்குவது வழக்கமாகும். இதே போல் கடையில் செந்தில் குமாரின் மகன் செல்வ சிவா தந்தைக்கு உதவியாக இருந்திருக்கின்றார். இந்த நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்ப்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்ட […]
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மூன்று காவலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி இன்று தென்காசி மாவட்டம் SSI பார்த்திபன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை கொண்டார். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படை காவலர் பிரபு தூக்கிட்டும், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தலைமை காவலர் யுவராஜ் கையை அறுத்துக் கொண்டும் தற்கொலை செய்துக் கொண்டனர்.
புதுச்சேரி காவலர் பயிற்சி பள்ளியில் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகின்றது. தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை பொதுமக்கள் அதிகளவில் போட்டு வருகின்றன . இதனிடையே புதுவை காவலர் பயிற்சி பள்ளியில் 100க்கும் மேற்பட்ட பயிற்சி போலீசாருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்நிலையில் அங்குள்ள பயிற்சி போலீசார் 29 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகி உள்ளது. இது […]
ஹரியானாவில் கனிம கொள்ளை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத்தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருவதாக தகவல் கிடைத்த நிலையில் அங்கு டிஎஸ்பி சுரேந்திர சிங் விரைந்து சென்றுள்ளார். கற்களை ஏற்றிய லாரியை அவர் தடுத்த நிலையில் அதன் ஓட்டுனர் அவர் மீது லாரியை ஏற்று கொலை செய்துவிட்டு தப்பி ஓடி விட்டார். […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022 ஆம் வருடத்திற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வை தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர், ஆர் வி […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு பணியாளர் பணிக்கான தேர்வு வருகிற ஜூன் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4360 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தேர்விற்காக காரைக்குடியில் ஐந்து இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் அங்கு தேர்வு எழுதும் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள தேர்வு மையங்களில் […]
போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் திறனறிதல் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக 444 பணியிடத்திற்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். மாநில அளவில் 197 மையங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வு, மதியம் 3:30 முதல் மாலை 5 மணி வரை தமிழ் திறனறி தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் பொது […]
ராமநாதபுரத்தில் தலைமை அரசு மருத்துவமனை எதிரில் நேற்று இரவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்து உள்ளனர். அப்போது அந்த நபர் மதுபோதை தலைக்கேறிய நிலையில் இருந்தார். அதனை தொடர்ந்து அந்த நபர் தலைமை காவலருடன் வாக்குவாதம் செய்வதோடு அவரை மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதனை காவலர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர் தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன் முதலாளி தன்னை கண்டிக்கிறார், எனவே வாகனம் நிறுத்த பணம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் […]
கவர்னர் முதல் காவலர் வரை தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “நெல்லை பழவூரில் பெண் எஸ்.ஐ மார்க்ரெட் தெரசா, அபராதம் விதித்ததற்காக கழுத்தறுக்கப்பட்ட சம்பவம், கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் […]
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தால் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களை உள்ளடக்கி மொத்தம் 444 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கான எழுத்து தேர்வு வருகிற ஜூன் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த பணிக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். மேலும் உச்ச வயது வரம்பு 30.ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 7.4.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலும் விவரங்களை www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் […]
காவல் சார்பு ஆய்வாளர்கள் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் tnusrb.tn gov.in என்ற இணையதளத்தில் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள்: 444. எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் மாதம். சரியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காலி பணியிடங்களுக்கு மார்ச் 8 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலி பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. மற்ற துறைகளை தொடங்கி தற்போது தமிழக காவல் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. TNUSRB தேர்வு வாரியம் காவலர்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு TNUSRB (pc) […]
காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் அடையாள அட்டையை காண்பித்து செல்வதாக புகார்கள் எழுந்துள்ளன. தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாடு காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு சென்னை காவல் ஆணையர் மற்றும் ரயில்வே கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் ஒன்று அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாடு காவலர்கள் ரயில்களில் அடையாள அட்டையை காண்பித்து பயணிப்பதாக ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகப்படியான புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் அடையாள […]
காவல்துறை என்பது ஒரு மகாணத்தில் சட்டத்தை செயல்படுத்தவும், சட்ட ஒழுங்கை காக்கவும், உடமைகளை பாதுகாக்கவும், அமைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இதில் அதிகார வரம்பிற்கு ஏற்றார்போல குறிப்பிட்ட எல்லைகள் வரை செயல்படும். காவல்துறையினர் குற்றங்களை தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும், ஓய்வில்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை தமிழக முதல்வர் வெளியிட்டார். 5800 காவல் ஆளிநர்களை அதிக அளவில் கொண்ட சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் வேலைபார்க்கும் காவலர்கள் முதல் பல்வேறு […]
மதுரையில் கட்டடம் இடிந்ததில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிதிஉதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை விளக்குத்தூண் காவல் நிலையதில் காவலராக சரவணன், கண்ணன் ஆகிய இருவரும் பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் இருவரும் மதுரை கீழவெளியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திடீரென பழைமையான கட்டிடத்தின் முதல் மாடி சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் சரவணன் உயிரிழந்தார்.. மேலும் படுகாயமடைந்த காவலர் கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை […]
சுவிட்சர்லாந்தில் இரவு நேர பணியில் பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகளாக தூங்கிய காவலர் ஒருவரை சிறை நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. சுவிட்சர்லாந்தில் வலைஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் Cretelongue என்னும் சிறையில் இரவு நேரம் பணியில் காவலர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் இவரும், சக ஊழியரும் சுமார் 8 ஆண்டுகள் செய்ததுபோல சம்பவத்தன்றும் இரவு நேர பணியில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்கள். அப்போது திடீரென 3 துறை சார்ந்த அதிகாரிகள் அந்த சிறையில் ஆய்வுக்கு […]
சாலை விபத்தில் மூச்சுப் பேச்சு இன்றி கிடந்த இளைஞருக்கு காவல்துறையினர் ஒருவர் உதவி செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் பொம்மக்கலைச் சேர்ந்த அப்துல்கான் என்பவர், பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், அப்துல் காயமடைந்து மூச்சுப் பேச்சு எதுவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் சிபிஆர் எனப்படும் முதலுதவியை செய்தார். மார்பில் அழுத்தம் கொடுத்து சுவாசத்தை மீட்கும் […]
காவலர் தாக்கி இறந்த வியாபாரியின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த நபரை காவல்துறையினர் தாக்கியதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி […]
கூவம் ஆற்றில் சிக்கிய மாட்டை தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர். சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதிகளில் பூந்தொட்டிகள், செடி போன்றவற்றை மாட்டுவண்டியில் தொழிலாளி ஒருவர் விற்பனை செய்கிறார்.அந்தத் தொழிலாளி ஓய்வு எடுப்பதற்காக வண்டியை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் நிறுத்திவிட்டு மாட்டை அவிழ்த்து சாலையின் ஓரமாக கட்டி வைப்பதற்காக அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நகரின் மெயின் ரோட்டில் உள்ள கூவ ஆற்றில் மாடு தவறி விழுந்தது. இதனை அடுத்து […]
தாய்லாந்து நாட்டில் திருடச் சென்ற இளைஞர் செய்துள்ள காரியத்தை பார்த்து காவலர் அதிர்ச்சி அடைந்தனர். தாய்லாந்து நாட்டில் அதித்கின் குந்துத் (22)என்பவர் வசித்துவருகிறார். அவர் அங்குள்ள வீட்டின் உரிமையாளர்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து அங்கு இருக்கும் பொருள்கள் திருடுவதை வழக்கமாக கொண்டவர். அவர் வழக்கம்போலவே சுமார் 2மணியளவில்அங்குள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். விசியான் பூரி ஜியாம் ப்ரசெர்ட்டின் மாவட்ட காவல் அதிகாரி ஒருவரின் வீட்டில் நுழைந்து திருட முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கிருந்த […]
சாலையோர காவலர் ஒருவர் வாகன ஓட்டுனரிடம் மனித நேயத்துடன் நடந்து கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே இளைஞர்கள் அனைவரும் பைக்கில் நெடுந்தூரம் பயணம் செய்வது என்றால் மிகவும் விரும்புவார்கள் . அதுமட்டுமல்லாமல் தங்கள் பயணம் செய்ய தேவையான ரைட்டிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெல்மெட் போன்றவற்றை தங்களுடன் எப்போதும் வைத்திருப்பார்கள். அதன்பிறகு பைக்கில் செல்லும்போதுvlog செய்வதும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதனால் தங்கள் ஹெல்மெட்டில் மேல்புறம் கேமரா ஒன்றை பொருத்தி […]
ராஜஸ்தானில் காவலர் ஒருவர் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்த நரேஷ் குமார் என்பவர் தனக்கு தெரிந்த பெண் ஒருவருடன் இணைந்து யோகா மையம் நடத்தி வருகிறார். இவர்களுக்குள் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் தனது பங்கை பிரித்து கொடுக்குமாறு அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இதையடுத்து அந்த பெண் நிரப்பப்படாத காசோலையை கொடுத்து பணத்தை […]
டெகாலா பிரசாந்த் என்ற காவல் ஆய்வாளர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கனபாபுரம் பகுதியை சேர்ந்த டேகாலா பிரசாந்த் என்பவர். காவல் ஆய்வாளராக பணியாற்றினார். இவர் தினமும் சக காவலர்களுடன் இணைந்து பேட்மிட்டன் விளையாடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்றும் அவர் வழக்கமாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக […]
இளம்பெண்களுக்கு ஆபாச படங்களை அனுப்பிய கல்வி காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகாரை அளித்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்திருந்த காவல் […]
திருச்சியில் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி, காவல்காரன்பட்டி ஆலத்தூர் பகுதியை சேர்ந்த காவலர் மகாலிங்கம். இவருக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு திருமணமாகி முதல் மனைவி இறந்த நிலையில் இரண்டாவது திருமணமாக நிஷா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜீயாபுரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரை மாற்றலாகி பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் காவலராக […]
ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலரை போலீசார் கைது செய்துள்ளனர். கேரளாவில் இருந்து சென்னைக்கு மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்து கொண்டிருந்த 18 வயது இளம் பெண்ணுடன் எல்லை பாதுகாப்பு படை போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவரை கைது செய்தனர். கேரளாவின் தலச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுடன் புதுவையிலிருந்து கல்லூரியில் சேர்ப்பதற்காக ரயிலில் புறப்பட்டார். அதிகாலை அவர் பயணம் செய்த மங்களூரு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. எஸ்.4 […]
சென்னையில் காவல் துறை அதிகாரி 22 பக்கம் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தலைமறைவாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டம் நட்டாலம் பகுதியைச் சேர்ந்த ஷெலின் ஷீபாது என்பவருடன் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஷிஷன்சிங் , ஷைஷா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஜினிகுமார் நட்டாலத்தில் உள்ள தனது […]
போலீஸ்காரர் 8 வருடங்களாக வளர்த்த நாய் உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் மனம் உடைந்து அதனை போலவே மெழுகு சிலை அமைத்து பராமரித்து வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு மதுவிலக்கு பிரிவில் ரேணுகாந்த் என்பவர் காவல்துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர், பிறந்து 40 நாட்கள் ஆன ஜெர்மன் ஷெப்பர்டு என்ற நாய் குட்டியை கடந்த 2012 ஆம் ஆண்டு கொடைக்கானலில் இருந்து வாங்கி இருக்கிறார். அதன்பின் அந்த நாய்க்குட்டிக்கு பவுலி என்னும் பெயரை வைத்து 8 […]
சென்னை மெரினாவிற்கு குடிபோதையில் வந்த காவலர் அங்கிருந்த பெண்ணிடம் சிலுமிஷம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரை மிகவும் பொழுதுபோக்கான இடமாக மக்களுக்கு விளங்குகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக மக்கள் மெரினா கடற்கரைக்கு வருவது தடை செய்யப்பட்டிருந்தது. நேற்று முன் தினம் முதல் பொதுமக்கள் மெரினா கடற்கரைக்கு வர அனுமதி வழங்கப்பட்டது. தகவலை கேட்ட உடன் மெரினா கடற்கரைக்கு முதல் நாளே மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர். அங்கு […]
மத்தியபிரதேசத்தில் மனைவிக்கு பயந்து பின் குறிப்புடன் விடுப்பு அளித்த காவலாளர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் ஒரு காவலர் தனது மைத்துனரின் திருமணத்திற்கு கலந்து கொள்ள மேலதிகாரியிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு ஒன்று எழுதி கொடுத்துள்ளார். காவலர் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. அதுபோல மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்த திலீப் குமார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனது மைத்துனருக்கு […]
சென்னையில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் காவலர் பாலியல் தொல்லை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்த கூடிய பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை வடபழனியில் இன்று காலை பேருந்துக்காக பெண் ஒருவர் காத்திருந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர் ஒருவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். […]
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் போக்குவரத்து காவலரை கார் ஓட்டுநர் காரில் அடித்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று வாகன சோதனையின் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்வதற்காக போக்குவரத்து காவலர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த காரின் ஓட்டுனர், காரை வைத்து காவலரை அடித்து தூக்கி உள்ளார். அந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்து […]
சட்டத்தை மீறி நடந்த சேவல் சண்டையை தடுக்க சென்ற காவலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது பிலிப்பைன்ஸ் நாட்டில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் காவலர் ஒருவர் விசாரிக்க சென்றுள்ளார். கிறிஸ்டின் என்ற காவலர் சேவல் சண்டையில் ஈடுபட்டிருந்த ஒரு சேவலை பிடித்ததோடு சண்டை நடந்ததற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருந்தார். அப்போது சேவல் காலில் கட்டப்பட்ட கத்தி கிறிஸ்டின் தொடையில் வெட்டி உள்ளது. அப்போது முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டதால் அதிக அளவு ரத்தம் […]
போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை சாலையில் வைத்து பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது. மும்பையைச் சேர்ந்த சங்ரிகா திவாரி என்ற பெண் மிக்சின் என்பவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் களபதேவி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரையும் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த ஏக்நாத் பார்த்தே என்பவர் தடுத்து நிறுத்தி தலைக்கவசம் அணியாததற்கான காரணத்தை கேட்டுள்ளார். அப்போது சங்ரிகாவுக்கும் காவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட பார்த்தே அந்த பெண்ணிடம் தவறாக […]
புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் போராட்டம். புதுச்சேரியில் அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியரை தாக்கிய காவல் ஆய்வாளர் சண்முக சுந்தரத்தை கைது செய்யக்கோரி மூன்றாவது நாளாக மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலைக்கு புறப்பட்ட ஆயுதப்படை காவலர் செல்லும்வழியில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அருகே பழைய சீவரம் பகுதியில் வசித்து வருபவர் இன்பரசு. 28 வயதாகும் அவர் புழல் சிறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். நேற்று வீடு திரும்பிய இன்பரசு ,இன்று பணிக்கு செல்ல அவரது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த தகவல் அறிந்து சம்பவ […]
சேலம் மாவட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தலைவாசல் காவல் நிலையத்தில் சிறப்பு காவல்படை காவலராக பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்த சக காவலர்யிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தத் தொகையை திரும்ப செலுத்தும்படி சககாவலர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால் வெங்கடேஷ் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் ஏற்பட்ட விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது சகோதரரிடம் செல்போனில் […]
கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட நிலையில் சடலமாக […]
மணல் லாரி மோதியதால் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மோசஸ் மோகன்ராஜ். இவர் பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி ஜெனிபர், 21/2 வயது மகள் கேத்தரின் எஸ்தருடன் அதிராம்பட்டினத்தில் வசித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தார். சென்ற சில தினங்களாக விடுமுறையில் இருந்த மோசஸ், தனது […]
நெல்லை அருகே ரவுடியுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை கிராமத்தில் ரவுடி துறை முத்துவை பிடிக்க சென்ற போது வெடிகுண்டு வீசியதில் காவலர் சுப்ரமணியன் உயிரிழந்தார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. உடலில் எந்த இடத்தில் காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்ய முதலில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. தொடர்ந்து உடற்ககூரு ஆய்வு ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுப்பிரமணியத்தின் […]
கைது செய்ய வாரண்ட் இருப்பதாகக் கூறி பெண்ணை அழைத்து சென்று தவறாக நடந்துகொண்ட காவலர் கைது செய்யப்பட்டுள்ளார் அமெரிக்காவில் இருக்கும் ஹவுஸ்டன் பகுதியை சேர்ந்த லீ பாய்க்கின் என்ற காவலர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நேரத்தில் தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் இளம்பெண் ஒருவரை பார்த்து உன்னை கைது செய்வதற்கு என்னிடம் வாரண்டு உள்ளது அதனால் உனது வாகனத்தை விட்டு விட்டு என் வண்டியில் வந்து ஏறி விடு என கூறியுள்ளார். அந்தப் […]
திருச்சியில் ரம்மி விளையாடுவதற்காக கடன் வாங்கி கடனாளியானா காவல் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை பெரியார் நகரில் ஆனந்த் என்ற 26 வயதுடைய இளைஞர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டம் ஜீயபுரம் வாத்தலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி சூதாட்டம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதற்காக தன்னுடன் பணியாற்றுகின்ற நண்பர்களிடம் அடிக்கடி கடன் வாங்கி இருக்கிறார். அதன்பிறகு வாங்கிய கடனை […]
விருதுநகர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகுதியை அடுத்த மொட்டைமலை என்னும் பகுதியில் உள்ள சிறப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முத்தையா என்ற காவல்துறை அதிகாரி கடந்த 12ஆம் தேதி பணியில் இருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார். பின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட […]
சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்படும் நபராக காவலர் முத்துராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தூத்துக்குடியில் சிபிசிஐடி கஸ்டடியில் இருந்து காவலர் முத்துராஜ் தலைமறைவாகியுள்ளார். அவரை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருக்கிறது.
சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேலும் சில இடங்களில் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதாக புகார் எழுந்து வருகிறது. அந்த வகையில், திருச்சி நீதிமன்ற வளாகம் அருகில் சைக்கிளில் முதியவர் மீது காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதற்கு நியாயம் கேட்ட முதியவரை அந்த காவலர் நாடு ரோட்டில் வைத்து தாக்கிய காட்சி அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில், சைக்கிளில் சென்ற முதியவரை தாக்கிய உறையூர் காவல் நிலைய காவலர் […]
புதுச்சேரி நேரு வீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலைய காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெரியக்கடை காவல் நிலையம் மற்றும் கிழக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 690 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 417 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் தற்போது 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் புதுச்சேரியில் இதுவரை 11 பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் […]
மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காவலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பணியாற்றும் காவலர் ஒருவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அலுவலகத்தில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அலுவலகத்தில் இருந்து காவலர்கள் அனைவரும் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் காவலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பதையடுத்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து […]