கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக காயமடைந்த காவலர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார். பலத்த காயமடைந்த காவலர் சக்திவேலுக்கு ரூ.2 லட்சம் நிவாரண உதவியும், லேசான காயமடைந்த காவல் ஆய்வாளர் அந்தோணி ஜெகதாவுக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவியும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். திருநெல்வேலி […]
Tag: காவலர்கள்
சென்னையில், தற்போது வரை கிடைத்த தகவலின் அடிப்படையில் 62 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 4 பெண் பயிற்சி மருத்துவர்கள் உட்பட 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில், நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால், பெரும் அச்சத்தில் சென்னை மக்கள் உள்ளனர். மேலும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து […]
சென்னையில் மேலும் 2 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தை சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் காவல்நிலையம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், முதல்நிலை காவலராகவும், மற்றொருவர் உளவுத்துறை முதல்நிலை காவலராகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் காவல் நிலைய கட்டிடத்தில் […]
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள மாஹேவைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி ஒருவருக்கு முதன் முறையாக கடந்த வாரம் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று வந்த இவருக்கு மாஹே அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையின் காரணமாக அவர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் புதிதாக மூன்று பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு […]