இரண்டாம் நிலை காவலர்கள் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் 3,552 பணியிடங்களுக்கு நடந்த தேர்வில், 18,671 பேர் தேர்ச்சி பெற்று, உடற்திறன் தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர் இதில், 15,158 பேர் ஆண்கள், 3,513 பேர் பெண்கள் ஆவர்.
Tag: காவலர் தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் 2-ம் நிலை காவலர், 2-ம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான பதவிகளுக்கான 2022 ஆம் ஆண்டு நேரடிக்கு முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இப்பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு ஜீன் மாதம் 30 ஆம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்து. இப்பணிகளுக்கு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. தற்போது […]
தமிழகத்தில் 9,791 இரண்டாம்நிலை காவலர் பணிக்கான 7 மாத அடிப்படை பயிற்சி கடந்த வாரம் நிறைவு பெற்றது. இதில் ராணிப்பேட்டை மாவட்ட அரக்கோணம் அடுத்த கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்த சகோதரிகளான ப்ரீத்தி(28), வைஷ்ணவி(25), நிரஞ்சனி(22) ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் போலீஸ் பணிக்கு தேர்வாகி ஒரே மையத்தில் பயிற்சி நிறைவு செய்துள்ளனர். இதில் ப்ரீத்திக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சிப்பள்ளியில் சகோதரிகள் மூன்று பேரும் இரண்டாம் […]
தமிழ்நாடு அரசின் குடிமைப் பணிகள் பயிற்சிமையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத்தேர்வில் இபந்த பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். இப்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2ம் நிலை காவலர், […]
புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டுனர் தனது விடா முயற்சியால் காவலர் தேர்வில் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளுக்குப் பின் காவலர் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. காவல் துறையில் காலியாக உள்ள 390 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக உடல்தகுதி தேர்வு கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்தது. இந்த உடல் தகுதி தேர்வில் 2,644 பேர் தேர்வு தகுதி பெற்றனர். மேலும் மிக விரைவாக திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் மார்ச் 26ஆம் தேதி அதிகாலை வெளியிடப்பட்டிருந்தது. […]
காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணிக்கு மொழி தேர்வில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்லமுடியும் என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழக காவல் துறையில் பல காலி பணியிடங்கள் இருப்பதால் காவலர் பணியிடங்களுக்கான விவரம் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுந்த தேர்வு நடத்தி காவலர் மற்றும் உதவியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஆரம்பத்தில் விருப்பம் மொழிப் பாடங்களை தேர்வு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக […]
புதுவையில் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை தற்போது அரசு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக ஏராளமான இளைஞர்கள் தங்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கின்றனர். தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காவல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த ஆண்டு இறுதியில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 437 காலிப் பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இத்தேர்வுக்கு 17, 627 பேர் விண்ணப்பித்தனர். இதில் […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]
தமிழகம் முழுவதும் காவலர் தேர்வு முடிவுகளை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் 11,813 காலி பணியிடங்கள் இருந்து காவலர் தேர்வு நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட காவலர் தேர்வு முடிவுகளை சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்கூறு அளத்தல், உடற் தகுதி தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் பதிவு எண் www.tnsrbonline.org என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த தேர்வினை எழுதினர். அதன்படி தேர்வில் 1:5 என்ற […]
சீருடை பணியாளர் தேர்வு நடைமுறையை தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் 8888 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்பட்டு, எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு முடிந்து கடந்த 10ஆம் தேதி தற்காலிக தேர்ச்சி பட்டியலை வெளியிடப்பட்டது. இதில் வேலூர் மற்றும் விழுப்புரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இருந்து 800க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றது முறைகேடா ? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இட […]
2019 ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு நியமண நடைமுறைகளுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த 15 பேர் தொடர்ந்த வழக்கில் , 2019ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் , தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தார். அரசு தேர்வுகளில் பலமுறை இப்படி முறைகேடுகளை நடைபெறுவது […]