தற்போது கிடைத்த தகவலின் படி, ஒரு பயிற்சி மருத்துவர், 8 காவல் அதிகாரிகள் உட்பட சென்னையின் பல்வேறு இடங்களில் 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை காவல்துறையில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டி.பி.சத்திரம், கீழ்பாக்கம், புதுப்பேட்டை, மாம்பலம் காவலர்கள் குடியிருப்பில் தலா ஒருவருக்கு கொரோனா தோற்று இன்று உறுதியாகியுள்ளது. ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் காவல் உதவி ஆய்வாளருக்கு முதன்முதலாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் காவல் அதிகாரிக்கு ஏற்பட்ட […]
Tag: காவலர்
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]
புதுச்சேரியில் கொரோனா பாதுகாப்பு பணியில் இருந்த ஊர்க்காவல் படை வீரரை காவலர் ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழுப்புரம், புதுச்சேரி சாலை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மூலக்குளம் அருகே சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற காவலர் அரவிந்த்ராஜை ஊர் காவல் படை வீரர் அசோக் தடுத்து நிறுத்தியிருக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. அசோக் கொடுத்த புகாரின் பேரில் இரு பிரிவுகளின் கீழ் ரெட்டியார்பாளையம் […]
அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுனரிடம் காவலர் மன்னிப்பு கேட்டுள்ளார். புளியந்தோப்பு தேசிய நெடுஞ்சாலையில் ஊரடங்கு உத்தரவை மீறிய காரணத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் நித்தியானந்தம் மற்றும் குமரேசனுக்கும் வாக்குவாதம் ஏற்படவே நித்தியானந்தம் ஆட்டோ ஓட்டுநர் மூர்த்தியை கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்நிலையில் மூர்த்தியை நேரில் சந்தித்து காவலர் நித்யானந்தம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் நித்யானந்தம் தனக்கு 14 வருட நண்பர் […]