கம்பம் காவல்நிலையத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் வரவேற்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் யாரிடம் புகார் கொடுப்பது எந்த அதிகாரியை சந்திப்பது என்று குழப்பத்தில் தயங்கி நிற்பது பல இடங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க தமிழகத்தில் அனைத்து காவல்நிலையங்களிலும் வரவேற்பாளர்களை நியமித்து வருகின்றனர். இதனால் காவல்நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் எளிதாக புகார் அளிக்க முடியும். மேலும் பொதுமக்கள் புகார் அளிக்க வந்த நேரம், புகாரின் தன்மை ஆகியவற்றை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் புகார் அளிக்க […]
Tag: காவல்நிலையம்
இபிஎஸ், ஓபிஎஸ் மீது சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தலில் மனு அளிக்க சென்றவர்கள் மீது அதிமுக கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தன. மேலும் ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் […]
சாலமன் தீவுகளில் நடந்த கலவரத்தில் நாடாளுமன்றத்தில் நெருப்பு வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்பட்டிருக்கிறது. சாலமன் தீவுகள் நாட்டில், மானசே சோகவரே கடந்த 2019-ஆம் வருடத்திலிருந்து பிரதமராக இருக்கிறார். சமீபத்தில் இவர் தைவான் நாட்டுடனான தூதரக உறவை முறித்துவிட்டு சீன நாட்டுடன் தூதரக உறவை உருவாக்கினார். இதனை மக்கள் கடுமையாக எதிர்த்தனர். அரசு இவ்வாறு தீர்மானித்ததை, நாட்டின் பல மாகாணங்கள் ஏற்கவில்லை. இதனையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று தலைநகர் ஹோனியாராவில் […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களாக சேலம் மற்றும் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் மாவட்டத்திற்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அதன்பிறகு தர்மபுரி செல்லும் வழியில் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் நேற்று போலீஸ் நிலையத்திற்கு எத்தனை புகார்கள் வந்தன? அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்று பணியில் இருந்த போலீசாரிடம் கேட்டறிந்தார். இதையடுத்து […]
தமிழகத்தில், காவல் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் எந்த தனியார் பெயர்களும் இடம் பெறக்கூடாது என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார் . அதில், சில போலீஸ் நிலையத்தின் பெயர் பலகையில் தனியார் நிறுவன பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவை மக்களிடையே தவறான புரிதலை ஏற்படுத்துகிறது. அதனால் விளம்பரத்துடன் கூடிய போலீஸ் நிலையத்தின் பெயர் பலகைகளை உடனே அகற்றி விட்டு, போலீஸ் நிலைய பெயர் […]
காவல் நிலைய வளாகத்திற்குள் மர்ம நபர்கள் சென்று மோட்டார் சைக்கிளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மெயின் சாலை பகுதியில் போலீஸ்காரர் கோடிஸ்வரன் மயிலாடுதுறை காவல் நிலைய தொழில்நுட்ப அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் காவல்நிலைய அலுவலக வளாகத்தில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்று பணியில் இருந்துள்ளார். இதனையடுத்து பணி முடிந்தபின் கோடீஸ்வரன் தனது வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்தபோது தான் நிறுத்தி […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு குற்றங்களை சார்ந்த இரு விசாரணை கைதிகளை போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் […]
கன்னியாகுமாரியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை அடுத்த ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இளம்பெண் மாயமான பின் அவரது குடும்பத்தினர் குளச்சல் மகளிர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் இருவரையும் வலைவீசி தேட, காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் காதலன் […]
சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலார் முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது கூடுதல் விவரங்களை எமது செய்தியாளர் கோமதி சங்கர் இடம் கேட்கலாம்: சாத்தான்குளம் தந்தை-மகன் வெளியிடும் மரணமடைந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட காவலர் முத்துராஜ் மட்டும் கைது செய்ய முடியவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கோவில்பட்டி பகுதிக்கு காவலர் முத்துராஜ் வந்து சென்றதாக செல்போன் சிக்னல் கிடைத்தது. கோவில்பட்டி கிழக்கு காவல் […]