குடும்ப தராறில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருநாதன். இவருடைய மகன் பழனிசாமி (31). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே சமத்துவபுரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு 7-வது மனை சிறப்பு காவலர் பயிற்சி மையத்தில் 2-ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இதில் பழனிசாமி பாளையம் பகுதியில் வசித்து வந்த திவ்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். […]
Tag: காவல் அதிகாரி
ஆடு திருடர்களை பிடிக்க முயன்ற காவல் அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் பூமிநாதன். அப்பகுதியில் சனிக்கிழமை இரவுகளில் திருடப்படும் ஆடுகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சந்தைகளில் விற்கப்பட்டு வருவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை 2 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் ரோந்து […]
டெல்லியை சேர்ந்த பெண் காவல் அதிகாரி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சங்கம் விகார் பகுதியில் வசித்து வரும் 21 வயதான இளம்பெண் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு டெல்லியில் சிவில் பாதுகாப்பு துறையில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி பணிக்கு சென்ற ராபியா வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் அருகில் உள்ள காவல் […]
கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவர், தன் மனைவியும் வேறு நபரும் முத்தமிடுவதை கண்டவுடன் அவர்கள் இருந்த ட்ரக்கை உலோக கம்பியால் அடித்து நொறுக்கியுள்ளார். கனடாவில், Ottawa காவல்துறையில் Ken Bruce என்பவர் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இவர் சில நாட்களாக தன் மனைவி வித்தியாசமாக செயல்படுவதை அறிந்திருக்கிறார். இந்நிலையில், இவர் வீட்டில் இருந்த சமயத்தில் அவரின் மனைவி ஷாப்பிங் சென்றுள்ளார். எனவே, Bruce மனைவி மீது சந்தேகமடைந்து, அவரின் வாகனத்தை டிராக் செய்யக்கூடிய ஆப்பை பயன்படுத்திருக்கிறார். அப்போது […]
பிரிட்டனில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் 33 வயது பெண் Sarah Everard. இவர் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அன்று தன் குடியிருப்புக்கு சென்ற போது திடீரென்று காணாமல் போனார். அதன் பின்பு வன பகுதியில், அவரின் உடல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைத்து Wayne Couzens என்ற காவல் அதிகாரி மீது சந்தேகம் […]
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் உயர் அதிகாரி மீதான வழக்கில் ஆறு வாரத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்தது. நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான […]
லாரி மோதிய விபத்தில் காவல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கீழப்பசலை கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இரவு வேலை நிமித்தமாக இருசக்கர வாகனத்தில் கண்ணன் சென்றுள்ளார். அப்போது மதுரை- ராமேசுவரம் நெடுஞ்சாலையில் மேலப்பசலை கிராமத்தின் அருகில் வந்தபோது எதிரே வந்த லாரி கண்ணன் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணன் […]
துணை ராணுவப் படை வீரர்கள் ஊர் திரும்பிய போது காவல்துறையினர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், கே.வி குப்பம் சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு, பாலிடெக்னிக் கல்லூரியில் துணை கமாண்டர் பங்கஜ்குமார்ராம் தலைமையில், துணை ராணுவபடை வீரர்கள் 97 பேர் கடந்த 8ம் தேதியில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனையடுத்து தற்போது வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதால் பாதுகாப்பு பணியில் இருந்த ராணுவ வீரர்களை […]
திருப்பத்தூரில் இரண்டு நாட்களில் 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 14 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது . அவர்களில் ஹோட்டல் நிறுவனர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் நடத்திவந்த ஹோட்டல் மூடப்பட்டது. அதோடு சப் இன்ஸ்பெக்ட்ர் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு வாணியம்பாடி காவல் நிலையமும் மூடப்பட்டது. மேலும் வாணியம்பாடி தாசில்தார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடேயே […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டு போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போது மீண்டும் அமல்படுத்த பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் தங்கி இருக்கும் போக்குவரத்து காவல் அதிகாரியான சக்திவேல் என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது […]
அமெரிக்காவில் 13 வயது சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியை காவல்துறையினர் வெளியிட்டுள்ளது. சிகாகோவை சேர்ந்த ஆடம் டோலிடோ என்ற 13 வயது சிறுவன் கடந்த மார்ச் 29ஆம் தேதி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனுடைய கையில் துப்பாக்கி இருந்ததால் சுட்டதாக போலீசார் தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் சிறுவனின் கையில் துப்பாக்கி இல்லை என்று அவரின் குடும்பத்தினர் கூறியுனர். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரியின் உடலில் பொருத்தப்பட்டிருந்த […]
உதவி காவல் அதிகாரி பதவி உயர்வுக்காக முகேஷ் அம்பானி வீட்டின் அருகே குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார். ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு அருகே கடந்த 25-ஆம் தேதி மர்ம கார் ஒன்று ரெடி பொருளுடன் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த காரின் உரிமையாளர் சிறிது நாளில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கு கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. யார் அந்த இடத்தில் காரை நிறுத்தி அதில் வெடிபொருளை வைத்தது என்று காவல்துறையினர் […]
பிரான்சில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணிடம் ஆபாச படம் கேட்ட காவல் அதிகாரியை போலீஸார் விசாரித்து வருகின்றனர். பிரான்ஸ் ரூவன் நகரில் உள்ள காவல் நிலையம் ஒன்றுக்கு இளம் பெண் ஒருவர் புகார் அளிக்க சென்றார். அங்கு அவர் ஒரு போலீஸ் அதிகாரியிடம் கலந்துரையாடி தனது புகாரை தெரிவித்தார். சில நாட்களுக்குப் பின்னர் அந்த போலீஸ்காரர் புகார் அளிக்கப் வந்த பெண்ணுடன் தனியாக தொடர்புகொண்டு பேசி வந்தார். இந்நிலையில், போலீஸ்காரர் அந்தப் பெண்ணை தனது அறையில் நிர்வாணமாக நின்று […]
காவல்துறை ஆய்வாளராக திகழ்ந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் ஒருவர் குவாலியர் வீதியில் பிச்சை எடுக்கும் காட்சி வருத்தமளிக்கிறது மனீஷ் மிஸ்ரா என்ற துடிப்பாடன் இளைஞர் 1999ஆம் ஆண்டில் மத்திய பிரதேச மாநில காவல்துறையில் உதவி ஆய்வாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியில் சேர்ந்த 250 பேரில் சிறந்த தடகள வீரராகவும் குறி பார்த்து சுடுவதிலும் நிபுணத்துவமும் பெற்ற மனீஷ் மிஸ்ரா, ஒரு முன்னாள் காவல் அதிகாரியின் மகன். அவரது மூத்த சகோதரரும் ஒரு […]
பதினைந்து வருடங்களுக்கு முன்பு காணாமல் போன காவல் அதிகாரி பிச்சைக்காரராக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள டேட்டியா காவல் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்தவர் மணிஷ் மிஸ்ரா. 2005ஆம் வருடம் திடீரென காணாமல் போன இவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் 15 வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன்பு மன நலம் சரியில்லாமல் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த மணிஷ் மிஸ்ராவை அவருடன் […]