காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இந்நிலையில் அதிகாரிகள் மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக கூடுதலாக தண்ணீரை வெளியேற்றி வருகிறது. இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து […]
Tag: காவேரி
கர்நாடகா கேரளா மாநில நிர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியுள்ளது. இதனால் இந்த இரண்டு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கேரட்டி ராசிமனல், பிலிகுண்டுலு ஒன்றிய பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதனால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கின்றது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு […]
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் பக்தர்கள் குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டிருக்கிறார். மேற்கு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்ற நிலையில் மேட்டூர் அணையிலிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றும் சூழல் எழுந்திருக்கின்றது. இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழாவின்போது ஆறுகளில் நீராடும் மக்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, காவிரி […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சென்னை காவேரி மருத்துவமனையில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டது. இந்தநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்து விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில் கொரோனா தொற்றிலிருந்து தான் குணமடைய விரும்பிய மக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னர் தன்னை ஆயிரக்கணக்கானோர் தொடர்புகொண்டு நலம்பெற வாழ்த்தியதாகவும் […]
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. ஒரு சில இடங்களில் அணைகளில் இருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அந்தவகையில் மேட்டூர் அணையில் நீர் கொள்மட்ட அளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் […]
காவிரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் பருவ மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கிறது. தொடர்ந்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 120 அடியை எட்டியது. அணையில் இருந்து பாசன தேவைக்காக திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் […]
நடிகர் விக்ரமுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இவருக்கு என தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகான். இந்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து அவர் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற […]
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு தொடர்வதற்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். கர்நாடக முதல்வர் பசவராஜ் நேற்று டெல்லி சென்று மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினார். அப்போது மேகதாது திட்டம் குடிநீர் மற்றும் மின் உற்பத்தி ஆகிய நோக்கங்களுக்காக செயல்படுத்தப்பட இருப்பதால் விரைவில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கு சட்டரீதியாக எந்த சிக்கலும் இல்லை என்றும் அவர் […]
காவிரி உபரி நீரை தமிழகம் பயன்படுத்திக்கொள்ள கர்நாடக அரசு அனுமதி அளிக்காது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரி, வைகை, குண்டாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் விதமாக 14,400 கோடி ரூபாய் செலவில் நதிகள் இணைப்பு திட்டத்தை அண்மையில் தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி அடிக்கல் நாட்டில் தொடங்கி வைத்தார். காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை மாயனூர் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதன் […]
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எந்த வகையிலும் அனுமதிக்காது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அனுமதியைப்பெற கர்நாடகம் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையிலான குழு பிரதமரை சந்திக்க இருப்பதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் பேசினார். இதற்கு தமிழக அரசின் எதிர் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதுபற்றி பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கி […]
தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையால் காவேரி அணையில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் தற்போது ஒரு வார காலமாக மிதமான மழை முதல் கனமழை வரை பல்வேறு மாவட்டங்களில் பெய்து வருகிறது. இதேபோன்று கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு அணைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதாவது தமிழக எல்லையான பிலிக்குண்டுலுக்கு நேற்று மாலை 22,000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1000 அடி உயர்ந்து […]
கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் காவிரியாற்றில் நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்து விட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறைந்து விட்டது. இதனால் காவிரி ஆற்றில் பிலிக்குண்டுலுக்கு நீர்வரத்து இன்று காலை நொடிக்கு 13,000 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்தும் நொடிக்கு 7,271 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேட்டூர் […]