Categories
தேசிய செய்திகள்

தேடுதல் வேட்டை நடத்திய ராணுவம்….. 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது………!!

நேற்று காஷ்மீரின் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் காஷ்மீர் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் அர்ராஹ் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து ராணுவத்தினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் இரண்டு பேர் ஒரு வீட்டில் பதுங்கியிருந்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ள 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென சுடத்தொடங்கிய தீவிரவாதிகள்… உயிரிழந்த தாத்தா… அழுதுகொண்டிருந்த சிறுவனை மீட்ட போலீசார்..!!

காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதுகாப்புப் படை வீரர் உட்பட இருவர் இறந்த நிலையில், 3 வயது சிறுவன் ஒருவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.. காஷ்மீரின் சோபூர் என்ற பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி திடீரென பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத்தொடங்கினர்.. யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதால், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் இறந்தார். மேலும், 3 பாதுகாப்புப் படை வீரர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த சண்டைக்கு நடுவே, 3 […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 5 வயது சிறுவன், CRPF வீரரை கொன்ற 2 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை..!!

கிழக்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள வாகாமா பகுதியில் இன்று நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். முன்னதாக, இந்த பயங்கரவாதிகள் இருவரும் 5 வயது சிறுவன் மற்றும் ஒரு சிஆர்பிஎப் படை வீரரை சுட்டுக்கொன்றுள்ளனர். இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் டோடாவில் வசிக்கும் மசூத் அஹ்மத் பட் என அடையாளம் காணப்பட்டார். இவர், கடைசியாக எஞ்சியிருக்கும் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி என்று அழைக்கப்படுபவர். மேலும் ஒரு பாயங்கரவாதியை தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்திய வீரர் வீரமரணம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தமானது அமலில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்தியா தரப்பிலும் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நவ்ஷேராவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு நடத்தினர். One Indian Army jawan has lost his life in the ceasefire violation by Pakistan Army in the Nowshera sector […]

Categories
தேசிய செய்திகள்

எல்லையில் உளவு பார்த்த 2 வாலிபர்கள் கைது..!!

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளை உளவு பார்த்ததாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியான கில்ஜித்தில்  2 வாலிபர்கள் உளவு பார்த்துவருவதாக, இந்திய உளவுத்துறை தெரிவித்தது. இதையடுத்து கில்ஜித் மாவட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், காஷ்மீரைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. போலீசார் நடத்திய விசாரணையில், அவர்களின் பெயர் நூர் முகம்மது வாணி மற்றும்  ஃபெரோஸ் அகமது லோன் என்பதும், அவர்கள் 2 பேருமே பந்திபோரா மாவட்டத்தில் தங்கியிருந்ததும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையான பிஞ்சோராவில் தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை!

காஷ்மீர் எல்லையான பிஞ்சோரா பகுதியில் இன்று போலீசார் நடத்திய தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. சோபியான் மாவட்டத்தில் தீவிரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி ஜைனா போராவில் உள்ள மத்திய ரிசர்வ் பொலிஸ் படையின் 178 பட்டாலியன், ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு செயல்பாட்டுக் குழு (எஸ்ஓஜி) ஆகியவற்றின் கூட்டுக் குழு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி காஷ்மீரில் சுட்டுக்கொலை…!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்து வருவதால் மூன்று தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் ஜம்மு காஷ்மீர் போலீசார் முடுக்கிவிடப்பட்டன. அதில், ராணுவத்தால் தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும், பயங்கரவாதக் குழுவின் தளபதியுமான ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டான். அதேபோல, மாவட்ட பாம்பூர் பகுதியின் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டை – 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம்!

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கி சண்டையில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 5 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ராணுவ வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றுள்ளனர். 4 Indian Army personnel incl the Commanding Officer, Major of 21 Rashtriya Rifles unit […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் துப்பாக்கிசூடு: பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பாதுகாப்பு படையினரால் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். சோபியான் மாவட்டத்தின் சைன்பூரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படைக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாதுகாப்புப் படையினரும் சோபியான் காவல்துறையினரும் இணைந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் பாதுகாப்பு படையினரை நோக்கி சுடத் தொடங்கினர். அதில் இருவர் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிசூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின், சோர்பூர், பூஞ்ச, புல்வாமா உள்ளிட்ட எல்லை மாவட்டங்களில் தீவிரவாத ஊடுருவல் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகின்றன. கடந்த முறை நடந்த சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 2 ராணுவப்படை வீரர்கள் மரணமடைந்தனர். இந்த நிலையில், இன்று புல்வாமா பகுதியில் பயங்கரவாத ஊடுருவல் இருப்பதாக ராணுவத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, பாதுகாப்பு […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை, மகள் கைது!

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த தந்தை மற்றும் மகளை தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 2019ம் ஆண்டு பிப்ரவரி 14தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி 78 பேருந்துகளில் சிஆர்பிஎப் படை வீரர்கள் பயணித்து கொண்டிருந்த போது, அவந்திபோராவில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று வீரர்களின் பேருந்து ஒன்றின் மீது மோதியது. இந்த பயங்கர தாக்குதலில் 40 துணை ராணுவப்படையினர் உடல் சிதறி பலியானார்கள். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர். இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலைக்கு திரும்பியது : 7 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பு!

காஷ்மீரில் 7 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல் பள்ளிகளை திறக்க மாநில கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதுடன் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மக்களுக்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் பதற்றமான நிலை காணப்பட்டதால் மாநிலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் ட்ரால் பகுதி என்கவுண்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் ட்ரால் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும்  பயங்கரவாதிகளுக்கும் இடையிலான   துப்பாக்கிச்சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி  இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர், ராணுவத்தினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீஸார்  இணைந்து ரகசிய தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது, திரால் பகுதியில் பதுங்கியிருந்த  பயங்கரவாதிகள்,  திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு […]

Categories

Tech |