மத்தியப்பிரதேசம் தமோ மாவட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுவன் அர்னவ் ஜெயின் சுமார் 40 அடி கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டனர். அதாவது, சிறுவன் அர்னவ் ஜெயின் கிணற்றின் ஓரத்தில் நடந்து சென்றுள்ளார். அதன்பின் கிணற்றை மூடியிருந்த வலையில் சிறுவன் நின்றபோது, அந்த வலை அறுந்து அவர் தவறி விழுந்தார். அதனை தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்த அர்னவின் நண்பரான சன்யம் ஜெயின், குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பின் […]
Tag: கிணறு
கிணற்றுக்கு குளிக்க சென்ற மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே சுரவாரிகண்டிகை கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நகுல் (12) ஆறாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் வசித்து வரும் குப்பன் என்பவரின் மகன் கோபிசந்த்(13) எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இரண்டு பேரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு பேருக்கும் கண்வலி ஏற்பட்டதால் பள்ளிக்கு செல்லவில்லை என […]
புகலூர் நாடார் தெரு பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவருக்கு சொந்தமான ஆடுகள் அந்த பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக தோட்டத்தின் அருகே மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று அங்குள்ள 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதை பார்த்த விஜயலட்சுமி அக்கம்பக்கத்தினரை அழைத்து ஆட்டை மீட்க சொல்லி கேட்டுள்ளார். இருப்பினும் மீட்க முடியவில்லை. இது பற்றி தகவல் அறிந்த […]
தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ராமிரெட்டிப்பட்டி கிராம பகுதியில் மக்களின் குடிநீர் சேவையை கிணறு ஒன்று பூர்த்தி செய்து வந்துள்ளது. நாளடைவில் அந்த கிணறு பயன்பாடு இல்லாமல் போனது. இந்த நிலையில் அதனை சிலர் மூடி மறைத்ததாக கூறப்படுகின்றது. இதனை அறிந்த கிராம மக்கள் காணாமல் போன அந்த கிணற்றை மீட்க வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு இடையே கிணறு இருந்த இடம் தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]
திண்டுக்கல் மாவட்டம் அருகே ரெட்டிய பட்டியில் கன்னிமார் கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் அருகில் தனியார் தோட்டத்தில் சுமார் 40அடி ஆழம் உள்ள கிணறு இருக்கிறது. இப்போது கிணற்றில் 6 அடி தண்ணீர் உள்ளது. நேற்று அந்த கிணற்றின் பக்கவாட்டு பகுதியில் 2 பாம்புகள் பின்னிப் பிணைந்து நடனமாடி கொண்டிருந்தது. அவற்றில் ஒன்று கரு நாகம், மற்றொன்று சாரைப் பாம்பு ஆகும். அவ்வாறு பாம்புகள் பின்னிப்பிணைந்த காட்சியை சில பேர் வேடிக்கை பார்த்தனர். இத்தகவல் அப்பகுதியில் காட்டுத் […]
300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை இந்திய ராணுவத்தினர் பத்திரமாக மீட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் சுரேந்திர நகர் மாவட்டம் துடாபூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணையில் சிவம் என்ற 2 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். சிறுவனின் பெற்றோர் கூலி வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 25 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டதால் இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
ஜார்கண்ட் மாநிலம் கிரிதி மாவட்டம் தியோரி பகுதியில் மம்தா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் கணவர் மற்றும் சுஹானி(5), சிக்கு(2) ஆகிய 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மம்தா தன் 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இரவு 1 மணியளவில் மம்தா தன் 2 குழந்தைகளுடன் அந்த கிராமத்தில் உள்ள பாசன கிணற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் மம்தாவை தேடிய குடும்பத்தினருக்கு அவர் […]
பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி மற்றும் கூட்டநாடு பகுதியிலுள்ள கிணறுகளில் உள்ள தண்ணீரில் தீப்பிடித்து எரிந்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கும், தீயணைப்புதுறை மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கிணறுகளில் இந்த மாதிரி தீப்பிழம்புகள் காணப்பட்டு வருகிறது. தற்போது அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஒரு சில கிணறுகளில் பெட்ரோல் வாசம் அடிக்கிறது. மேலும் ஒரு சில கிணறுகளில் மினரல் வாட்டரின் அம்சம் இருக்கிறது என கூறப்படுகிறது. அதே சமயம் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவில் அருகே ஞானவேல் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் பூஜா(3), ஐஸ்வர்யா(5) என்ற 2 குழந்தைகள் இருந்தனர். இதில் ஞானவேல் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனிடையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் பூஜா மற்றும் ஐஸ்வர்யாவுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் […]
குளிக்கச்சென்ற கட்டிட தொழிலாளி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய கொண்டாபுரம் காந்திநகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகன் இருந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி தன் நண்பர்களுடன் சேர்ந்து குளிப்பதற்காக மாரியம்மன் கோவில் அருகே உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றார். அங்கு கிணற்றில் குளிப்பதற்காக குதித்த கிருஷ்ணமூர்த்தி நீண்ட நேரம் ஆகியும் மேலே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த […]
கிணற்றில் தவறி விழுந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள துக்கியாம்பாளையம் மேலூர் கிராமத்தில் விவசாயி பழனி வசித்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு அருள்மணி என்ற மகனும், அகிலா ஆர்த்தி என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பழனியின் கிணற்றில் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. மேலும் கிணற்றை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து இருந்தது. இந்நிலையில் பழனி […]
கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள கரியம்பட்டியில் விவசாயி சிலம்பரசன் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்தார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் அஸ்வின் தனது அண்ணன் அகிலன் மற்றும் நண்பர்களுடன் கரியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராமல் மாணவன் அஸ்வின் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அகிலன் மற்றும் அவரது நண்பர்கள் கிணற்றிலிருந்து […]
பெற்றோர் கண்டித்ததால் மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சாலூர் கிராமத்தில் சேட்டு-ராஜாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மஞ்சு என்ற மகள் இருந்தார். இந்நிலையில் சேட்டுக்கும், அவரது மனைவி ராஜாத்திக்கும் இடையில் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தடுப்பதற்காக சென்ற மஞ்சுவை அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவி அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை […]
கிணற்றிற்குள் கார் பாய்ந்து தந்தையும், மகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு லிங்கா நகரில் வீரா என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு உமாலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதியினருக்கு சுஸ்மிதா என்ற மகள் இருந்தார். இதில் சுஸ்மிதா அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் உமாலட்சுமி தனது கணவர் மற்றும் […]
தாய்- மகள் இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர் பகுதியில் அருள் சிவக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் ஈரோடு மாவட்டம் டி.என். பாளையத்தை சேர்ந்த விஜயபிரியா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு சாம் என்ற மகனும், துதி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் விஜயபிரியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 6 மாதங்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 […]
திருமணமான சில நாட்களில் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாப்பம்பாடி காந்தி நகரில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சரவணன் அரூரில் உள்ள தனியார் தங்க நகை கடையில் பணி செய்து வருகிறார். அதே நகைகடையில் அரூரை சேர்ந்த ரகமத்துல்லா மகள் ரஷிதா பேகம் என்பவரும் பணிபுரிந்து வந்தார். அப்போது சரவணன் மற்றும் ரஷிதா பேகம் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து திருமணம் செய்து […]
கிணற்றுக்குள் இறங்கி மேலே ஏற முடியாமல் தவித்த வாலிபரை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொட்டையைகாட்டூர் இட்டேரி தோட்டத்தில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு சேவல் வளர்த்து வந்த நிலையில் அது அப்பகுதியில் உள்ள 100 அடி கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டது. அப்போது கிணற்றில் குறைவாக தண்ணீர் இருந்ததால் சேவல் தத்தளித்தபடி இருந்தது. இதனையடுத்து சேவலை காணவில்லை என்று கோகுல் தேடிப் பார்த்தபோது கிணற்றில் தத்தளிப்பது தெரியவந்தது. அதன்பின் சேவலை […]
காணாமல் போன வாலிபர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருப்பூர் கோவிந்த காடு பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து வீட்டிலிருந்து வெளியேறிய விஜயகுமார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் விஜயகுமாரை பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் விஜயகுமார் கிடைக்காததால் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் அதே […]
பாம்பைப் பார்த்து பயந்து ஓடிய விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கடம்பூர் இந்திரா நகர் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாய இருந்துள்ளார். இவருக்கு சத்யா என்ற மனைவி இருக்கின்றார். இதில் சிவகுமார் தனது விவசாய தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிவக்குமாருக்கு அருகில் பாம்பு ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் எதிர்பாராத விதமாக திடீரென சிவகுமார் […]
தோட்டத்து கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுக்கம்பாளையம் பகுதியில் தோட்டத்தில் வளர்க்கப்படும் நாய் அங்குள்ள ஒரு கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதனால் நாய் கிணற்றின் உள்ள பக்கவாட்டில் பாறையை பிடித்தபடி இரவு முழுவதும் குரைத்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு துறையினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்று கயிறு மூலம் கிணற்றிலிருந்து நாயை […]
விநாயகர் சிலை ஊரின் முக்கிய தெரு வழியாக எடுத்துச் செல்லப்பட்டு கிராமம் அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை 3 நாட்கள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி தலைவர் பொன் ராஜேந்திரன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார். இதனையடுத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை மாநில பொதுச்செயலாளர் ரவிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். […]
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பொதுக் கிணறு அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குளம், குட்டை தூர்வாருதல், மண் சாலை சீர் செய்யும் பணிகளுடன், சிறிய வேளாண்மை பணிகளும் இணைக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு அதிக நிதி ஒதுக்குவதால் ஊராட்சியில் கான்கிரீட் தளம், பேவர் பிளாக் தளம், கான்கிரீட் தடுப்பணை, தனிநபர் மற்றும் சமுதாய உறிஞ்சு குழிகள் அமைத்தல், மரக்கன்று நடுதல் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டது. இதுகுறித்து […]
கணவரை கொன்று கிணற்றில் வீசிய பெண் மற்றும் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாண்டியன் திடீரென மாயமான நிலையில் கடந்த 19-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
பெயிண்டரை அடித்துக் கொன்று அவருடைய உடலை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவில் பாண்டியன் என்பவர் தொண்டராக வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதனையடுத்து கடந்த 2 நாட்களாக பாண்டியன் திடீரென காணாமல் போய்விட்டார். இந்நிலையில் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு பாண்டியன் பிணமாக […]
குழந்தையை காப்பாற்ற முயன்ற கிராம மக்களில் சிலர் கிணற்றில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்திலுள்ள கஞ்ச்பசோதா என்ற பகுதியில் 8 வயது குழந்தை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. விழுந்த குழந்தையைக் காப்பாற்றுவதற்காக கிராம மக்கள் கிணற்றின் அருகில் திரண்டு வந்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச் சுவரில் அதிக பாரம் ஏற்பட்டதால் அது இடிந்து விழுந்தது. இதையடுத்து சுவற்றின் ஓரத்தில் ஒட்டி நின்ற 15க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. […]
காணாமல் போன மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கொங்கரப்பட்டு கிராமத்தில் பச்சையப்பன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ரம்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மாலை மாணவி ரம்யா திடீரென காணாமல் போய் விட்டார். இதுகுறித்து பச்சையப்பன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். […]
கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவன் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தென்பாலை கிராமத்தில் சாம்பசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சந்தோஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களுடன் அதே ஊரில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது சந்தோஷ் படியில் இறங்கியபோது திடீரென கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதில் தலையில் […]
குளிக்கச் சென்ற வாலிபர் கிணற்றில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காளியம்மன்பட்டி சாமியார் மலை எம்.ஜி.ஆர். நகரில் துளசிராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஆகாஷ் மாலை வேளையில் கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்ற போது 50 அடி தண்ணீருக்குள் உள்ள சேற்றில் சிக்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் தண்ணீர் […]
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காமராஜர்புரத்தில் பாக்கிய ஜோதி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவர் அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் தனது மகன் லியோனுடன் பாக்கிய ஜோதியின் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் சங்கீதாவின் மகன் லியோன் சில நேரங்களில் கிராமத்தில் கிளி மற்றும் புறா பிடிக்க போவதாக கூறி விட்டு சென்றுள்ளான். இந்நிலையில் லியோன் காலையில் புறா பிடிக்க […]
கிணற்றில் தவறி விழுந்து விடிய விடிய திணறிய தொழிலாளியை தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி திருமணி பகுதியில் அமர்நாத் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகின்றார். இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இரவில் குடும்ப தகராறு ஏற்பட்டு அமர்நாத் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது அவர் செல்லும் வழியில் இருந்த 70 அடி ஆழ கிணற்றில் எதிர்பாராமல் தவறி விழுந்து நீச்சல் தெரியாமல் காரணத்தினால் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டுள்ளார். ஆனால் யாரும் அங்கு […]
கிணற்றில் தள்ளிவிட்டு விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கோல்காரனுர் காட்டுவளவு பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு பூபதி என்ற மனைவியும், பிரபாகரன்-ரேவதி என்ற மகனும் மகளும் இருக்கின்றனர். இதில் ரேவதி, பிரபாகரன் இருவரும் சேலத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய கிணற்றில் காயங்களுடன் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி […]
கிணற்றில் ரயில்வே ஊழியர் சடலமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பால்னாங்குப்பம் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் அழுகியபடி ஒரு ஆண் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினரின் உதவியுடன் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இறந்தவர் திருப்பத்தூர் ரயில்வே காலனியில் […]
மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள காருகுடி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய பசுமாடு அப்பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் அருகில் மேய்ந்து கொண்டிருக்கும் போது கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. இதனையடுத்து சுமார் 2 மணிநேரம் பசுமாடு தண்ணீரில் தத்தளிப்பது கண்ட கிராம மக்கள் வேப்பூர் தீயணைப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி அலுவலர் கரிகாலன் தலைமையில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் 22 நாட்களில் வீட்டின் அருகே கிணறு தோண்டி தண்ணீர் வர வைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வாசிம் நகரை சேர்ந்த ஜம்கேட் கிராமத்தை சேர்ந்தவர் ராம்தாஸ் போலே. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். இவர்கள் கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கு கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதனால் ராம்தாஸ் போலே வீட்டின் அருகே கிணறு […]
வத்தலகுண்டு அருகில் கிணற்றில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலகுண்டு கன்னிமார் கோவில் தெருவில் நெஸ்புரூஸ் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மகன் சதீஷ் ப்ளஸ்-2 முடித்து கல்லூரியில் சேர்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் சதீஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து கட்டகாமன்பட்டி அருகில் உள்ள தனியார் தோட்டத்து கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நண்பர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது சதீஷ் மட்டும் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து அவரது நண்பர்கள் வத்தலகுண்டு […]
சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து ஓடும்போது ஒருவர் கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள சாமியார்மலை பகுதியில் கட்டிட மேஸ்திரியான சிவக்குமார் என்பவர் வசித்து வந்தார். இதனை அடுத்து சிவக்குமார் தனது நண்பர்களுடன் கன்னிதோப்புக்கு பின்புறம் இருக்கும் ஒரு தோப்பில் சீட்டு விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது காவல்துறையினர் வருவதாக நினைத்து விளையாடிக் கொண்டிருந்த அனைவரும் பதறியடித்து வீடுகளுக்கு ஓடி சென்றனர். அப்போது துரதிஷ்டவசமாக சிவகுமார் ஓடும்போது […]
பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் திடீரென்று கிணறு உள்வாங்கி பூமிக்குள் சென்றதால் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு தடை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள பாண்டூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 9 லட்சத்து 50 ஆயிரம் ரூ செலவில் மின் மோட்டார் அறை மற்றும் திறந்தவெளியில் கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த கிணற்றின் இருந்து தினசரி ஆம்பூர் பகுதியில் வசிக்கக்கூடிய கிராம மக்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அந்த கிணறு திடீரென்று பூமிக்குள் […]
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர் கிணற்றில் தவறி விழுந்தும் ஒரு சிறு காயம் கூட ஏற்படாமல் ஏழு மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டார். ஆந்திர மாநிலம் திருப்பதி ரேணிகுண்டா பகுதியில் வசித்து வருபவர் 70 வயதான சுப்பம்மா. இவர் வயல்வெளிக்கு அதிகாலை சென்றுள்ளார். அப்போது திடீரென விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தெரியாமல் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து கிணற்றில் இருந்த மோட்டார் பைப்பை பிடித்து கொண்டு என்னை யாராவது காப்பாற்றுங்கள் என்று […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பை கிடங்காக மாறிய கிணற்றை மழை நீர் சேகரிப்பு தொட்டியாக மாற்றித் தர வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தி குளக்கரையில் பழமையான கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் தெருவுக்கு தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டதும் பொதுமக்கள் அந்த கிணற்றை உபயோகப்படுத்துவதை தவிர்த்துள்ளனர். இதனால் அந்த கிணறு தற்போது குப்பை தொட்டியாகவும், நோய் பரப்பும் இடமாகவும் மாறி விட்டது. இதனையடுத்து […]
மதுரையில் கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பேரையூரில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் கிருஷ்ணாபுரத்திலிருக்கும் கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அப்புகாரை ஏற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை […]
பெரம்பலூரில் காணாமல் போன பெண் கிணற்றில் சடலமாக கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முல்லை நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மஞ்சுளா என்ற மகள் இருந்தார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும், இவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு கார்த்திக் என்ற மகனும் இருந்தார். இந்த நிலையில் ராஜா கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் மஞ்சுளா […]
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த காட்டெருமைகள் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அயனாம்பட்டியில் வெள்ளையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் தோட்டம் ஒன்று உள்ளது. அந்த தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் 10 அடிக்கு இருந்தது. இந்நிலையில் அந்தக் கிணற்றுக்குள் இருந்து நேற்று அதிகாலை 3 மணியளவில் காட்டு […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியதுரையான் வாய்க்கால் அருகே கிணறுகள் தடுப்பணைகள் இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே ராமபட்டிணம்புதூர், சிந்தலவாடம்பட்டி ஆகிய ஊர்களில் ஏராளமான விவசாய கிணறுகள் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியதுரையான் வாய்க்காலில் இருந்து வரும் தண்ணீர் மூலம் அங்குள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள் பெரியதுரையான் வாய்க்கால் அருகில் புதிய தடுப்பணைகள் இல்லாததால் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக பல […]
மதுரையில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆனையூரில் நவீன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் பொறியியல் கல்லூரிகள் இறுதியாண்டு பயின்று வந்தார். இந்நிலையில் நவீனும், அவரது நண்பர்களும் அலங்காநல்லூரில் இருக்கும் தனிநபர் கிணற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது நவீன் கிணற்றின் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க முற்பட்டதால் அவர் நீரில் மூழ்கியுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் நவீனை வெளியே […]
கன்னியாகுமரி அருகே கேரள எல்லையில் வீட்டு உபயோக கிணற்றில் பெட்ரோல் கலந்த நீர் வருவதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னசமூடு, புலியூர் சாலையில் கோபி என்பவரது வீட்டிற்கு உள்ள அந்த கிணற்றில் இருந்து கடந்த 6 நாட்கள் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. கிணற்றிலிருந்து நீரை இறைத்து பற்ற வைத்தபோது அது தீப்பற்றி எரிந்து இருக்கிறது. கோபியில் வீட்டுக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் கிடங்கில் கசிவு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் மனைவியின் சிரமத்தை போக்க கணவர் வீட்டிலேயே கிணறு வெட்டி அசத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்குவதற்கு அவரின் கணவர் வீட்டிற்குள் 15 நாட்களில் சொந்தமாக கிணறு தோண்டி அசத்தியுள்ளார். அவரின் மனைவி வீட்டில் இருந்து அரை கிலோமீட்டர் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றில் இருந்து அடிகுழாய் பம்பு மூலமாக மிகவும் சிரமப்பட்டு தண்ணீர் எடுத்து வருகிறார். அவர்களின் குடும்பத்தில் நான்கு பேர் இருப்பதால் தினசரி […]
குழந்தை இறந்துவிட்டது என்று கூறி மருத்துவர்கள் கைவிடப்பட்ட நிலையில் நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலத்தில், சத்ரா என்ற பகுதியில், சோன்புராவின் கஞ்ச் பஞ்சாயத்தில் சிட்டு யாதவ் என்பவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். அவருக்கு ஒன்றரை வயதில் சோனி குமார், 3 வயதில் கோலி குமாரி என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த வியாழக்கிழமை யாதவின் மனைவி ஷானுகுண்டலா தனது இரு […]
அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகிலுள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் ரகுராம் (20 வயது). ரகுராம் மேட்டுப்பாளையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். நான்கு மாதங்களுக்கு முன்பு நர்மதா எனும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். ரகுராம் குடிப்பழக்கம் உடையவர். ஆகையால் கணவர் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரகுராம் குடித்து விட்டு வீட்டிற்கு […]
நீச்சல் பழகுவதற்காக கிணற்றுக்கு சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன்-அய்யம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும் தனுஷ் என்ற மகனும் உள்ளனர். தனுஷ் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காக தனுஷ், பிரியதர்ஷினி மற்றும் மேலும் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து கிணற்றுக்கு சென்றுள்ளனர். அப்போது தனுஷிற்கு […]
சொத்து தகராறு காரணமாக குழந்தையின் பெரியம்மாவே குழந்தையை கிணற்றில் வீசி சென்ற நிகழ்ச்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த செட்டிதாங்கல் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தனுசு, கோபிகா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று பகல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடியுள்ளனர். பின்னர் ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். […]