80 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அடுத்துள்ள குள்ளப்பநாயக்கன்பட்டியில் பாவாயி(85) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மூதாட்டி நிலைதடுமாறி 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் விழுந்துள்ளார். மேலும் அந்த கிணற்றில் 20 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மூதாட்டியால் நீந்தி மேலே ஏறி வர முடியவில்லை. இதனையடுத்து மூதாட்டியின் […]
Tag: கிணற்றில் விழுந்த மூதாட்டி
மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிணற்றிற்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகமாயிபுரம் கிராமத்தில் முத்துலட்சுமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டி வசித்து வந்துள்ளார். தற்போது நமணசமுத்திரம் ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் தனது மகளின் வீட்டில் மூதாட்டி இருந்துள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற மூதாட்டி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து வலையன்வயல் பகுதியில் இருக்கும் கருப்பையா என்பவருக்கு சொந்தமான கிணற்றில் மூதாட்டி தவறி விழுந்து […]
மூதாட்டி ஒருவர் எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சென்னிமலை பகுதியில் வசிப்பவர் கோபாலசாமி(80). இவரின் மனைவி சங்கரம்மாள்(70). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், வயதான இத்தம்பதியினர் தள்ளுவண்டியில் பஜ்ஜி மற்றும் போண்டா கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் சங்கரம்மாள் அங்குள்ள ஊர் பொதுக் […]