கும்பகோணம், மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஜி இளங்கோவன். இவர் நெல் ஜெயராமன் மீது கொண்ட ஈடுபாட்டால் 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வேளாண் சாகுபடி நிலத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் தெரியும் வகையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு நிறம் கொண்ட நேபாள நாட்டு சின்னார் ரகமும், மைசூர் மல்லிகை ரகத்தையும் இணைத்து குறுவை சாகுபடியில் நடவு செய்துள்ளார். தற்போது 60 நாட்களை […]
Tag: கிராமம்
கம்போடியாவில் ஒரு கிராமத்தில் 50 முதலைகள் இருந்த குழிக்குள் ஒரு நபர் விழுந்த நிலையில் அவரை முதலைகள் கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கம்போடியாவில் இருக்கும் Kampong Tayong என்ற கிராமத்தை சேர்ந்த 37 வயதுடைய நபர் Sou Sothea, சுமார் ஐம்பது முதலைகளை வளர்த்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் முதலைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து குட்டிகளை விற்பதை தொழிலாக செய்து வருகின்றனர். இந்நிலையில் Sou Sothea குடும்பத்தாரோடு மதுபானம் அருந்தி […]
சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கொரோனா பணியின் போது உயிரிழந்த முன்கள பணியாளர் குடும்பத்தினருக்கு தலா 25 லட்சம் ரூபாயை அமைச்சர் சுப்பிரமணியன் வழங்கினார். இதையடுத்து அவர் பேட்டியளித்தபோது, “தொலைதுார கிராமங்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்கும் அடிப்படையில் 70 கோடி ரூபாய் செலவில் 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை அடுத்த வாரம் முதலமைச்சர் தொடங்கி வைப்பார். இதில் ஒவ்வொரு வாகனத்திற்கும் ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாகனம் […]
ஆசிரியர் பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்பார்கள். அதுபோல ஒரு ஆசிரியர் என்பவர் பல லட்சம் மருத்துவர்களையும், பல ஆயிரம் வழக்கறிஞர்களையும் உருவாக்குபவர். ஏற்றிவிடும் ஏணியாய் இருந்து தம் மாணவர்கள் உயரத்திற்கு செல்வதை கண்டு பெருமை அடைபவர்கள் ஆசிரியர்கள். அந்தவகையில் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள ஒரு பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திலுள்ள பள்ளிக்கூட ஆசிரியர் ஒருவர் முதல் தலைமுறை மாணவர்களையே அவர்களுடைய பெற்றோர்களும் ஆசிரியராக மாற்றியுள்ளார். ஆம், மாணவர்களே தங்கள் பெற்றோருக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். அதோடு […]
உள்ளாட்சி தேர்தலில் கட்சியா..? ஜாதியா..? யாருக்கு ஓட்டுப் போடுவது என்று நாம் குழம்பிக் கொண்டிருக்கும் இதே சமயத்தில் தான், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இந்தியக் கிராமங்கள் இன்னும் இருக்கின்றன. உதாரணமாக பஞ்சாப் எல்லையில் உள்ள மஹவா கிராமம். இந்த கிராமத்தில் இருப்பவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவமனைக்காக 35 கிலோ மீட்டர் செல்ல வேண்டும். தொடக்கப்பள்ளியில் 220 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார். இந்தியாவில் வளர்ச்சிக்கு மத்தியில் இருக்கும் இந்த பெரும் வேறுபாடுகள் எதைக் […]
இந்தியாவின் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் வியட்நாமை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கும் பிரதீப் என்ற இளைஞர் கடந்த 8 வருடங்களாக வியட்நாமில், யோகா ஆசிரியராக இருக்கிறார். அங்கு குயூன் டிசங் என்ற இளம் பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன் சந்தித்திருக்கிறார். இருவரும் நண்பர்களாக பழகி, பின் காதல் வயப்பட்டுள்ளனர். அதன்பிறகு இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, தங்கள் பெற்றோர்களிடம் […]
தமிழகத்தில் அரசு இ-சேவை மையங்கள் இல்லாத கிராமங்களில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் சேவை மையங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. இதுபற்றி மின் ஆளுமை முகமை இயக்கத் தலைமை செயல் அதிகாரி கே. விஜயேந்திர பாண்டியன் பேசியதாவது, தமிழகத்தில் 12,500 கிராமங்கள் இருக்கிறது. அந்த கிராமங்களில், தற்போது 5,000 கிராமங்களில் மட்டுமே அரசு இ-சேவை மையங்கள் செயல்படுகிறது. மேலும் மீதமுள்ள கிராமங்களில் மின் ஆளுமை முகமை இயக்கம் சார்பில் இ-சேவை மையங்கள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் […]
குஜராத் மாநிலம் மோதிபுரா என்ற கிராமத்தில் மது குடித்துவிட்டு வருபவர்களுக்கு வித்தியாசமான தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. குஜராத் மாநிலம், மோதிபுரா என்ற கிராமத்தில் யாரும் மது அருந்தக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையும் மீறி மது குடித்து வருபவர்களுக்கு இரும்பு கூண்டுகள் ஒன்று தயாரிக்கப்பட்டு அதற்குள் அவர்களை அடைக்கும் புதிய திட்டத்தை அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் பாபு நாயக் கொண்டுவந்துள்ளார். மது அருந்துபவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக […]
தன்னுடைய கிராமம் வளர்ச்சி அடையும்வரை தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று ஒரு பெண் கூறியுள்ளார். தங்களின் குடும்ப சூழ்நிலைகள் காரணமாக பல பெண்கள் திருமணத்தை தள்ளி வைத்து கொள்வதை பார்த்திருப்போம். ஆனால் இங்கு கர்நாடகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் தனது கிராமம் வளர்ச்சி அடையும் வரை நான் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறியுள்ளார். தாவணகெரே மாவட்டம் மாயகொண்டா தாலுகா எச்.ராமபுரா கிராமம் மலைப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இந்த கிராமத்தில் சரியான சாலை […]
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்த கிராமத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அப்படி அங்கு என்ன நடக்கின்றது என்பதைப்பற்றி இதில் தெரிந்துகொள்வோம். உலகையே புரட்டிப் போட்ட கொரோனா தொற்றில் இருந்து விடுபடுவதற்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாக உள்ளது. பல இடங்களில் தற்போது மக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசிகளை போட்டுக் செல்கின்றனர். சில பகுதிகளில் கோரோனா தடுப்பூசி பற்றிய அச்சம் மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகின்றது. கர்நாடக மாநிலம், […]
காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்துவந்த பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசிக்கும் கிராமம் தற்போது உலகின் முதன்மை பணக்கார கிராமமாக மாறியுள்ளது. இந்தியாவிலுள்ள குஜராத் மாநிலத்திலிருக்கும் குட்ச் மாவட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்தில் வாழும் 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் காலங்காலமாக கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இவர்கள் குஜராத்தினுள்ளும், வெளிநாட்டிற்கும் சென்று தங்களுடைய பாரம்பரிய கட்டுமான பணிகளை செய்து வருகிறார்கள். இந்த 18 கிராமத்திலும் மதாபர் என்னும் கிராமம் உலகிலேயே முதன்மை […]
டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவத்தொடங்கியதால் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு காரணத்திற்காக ரசிகர்கள் போட்டியை காண அனுமதிக்கப்படவில்லை. அதன்படி ஒலிம்பிக் கிராமத்தில் பயிற்சியாளர்கள், வீரர்கள், அவர்களுக்கான காவலர்கள் மற்றும் கமிட்டியினர் போன்றோர் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனினும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டும், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்திலும் கொரோனா பரவி வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக வந்த […]
இத்தாலியில் உள்ள கலாப்ரியா என்ற கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் குடியேறுபவர்களுக்கு 25 லட்சம் நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் அந்த கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். அதன் காரணமாக கிராமம் வெறிச்சோடி கிடக்கிறது. இதனால் கிராமத்திற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டும் விதமாக நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் நிரந்தரமாக அந்த கிராமத்தில் குடியேறி அங்கு தொழில் தொடங்கும் பட்சத்தில் அவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் ஒரு வினோதமான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பிக்சர்பள்ளி என்ற கிராமத்தில் அங்கயா என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருணா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து மணமகன் பெண் போல வேடமிட்டு, மணமகள் அருணா ஆண் போல வேடமிட்டு கிராம தேவதை கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தனர். அந்த மாவட்டத்தில் கும்மா என்று வீட்டுபெயர் கொண்ட குடும்பங்களில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்படும் வழிமுறையாகும். இதனை […]
இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நகர்ப்புறங்களை போன்று கிராமத்திலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றைத் தடுப்பதற்கு சுகாதாரத்துறை ஊழியர்கள் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வீட்டிற்கு சென்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோன்று கர்நாடக மாநிலத்தில் ஹாவேரி மாவட்டம் பேடகி தாலுகா கிரேசுனஜி கிராம பஞ்சாயத்தில் உள்ள சிக்கஜனகி என்ற சிறிய கிராமத்தில் கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஊழியர்கள் சென்றிருந்தனர். இதையடுத்து ஊழியர்கள் பரிசோதனைக்கு வருவதை அறிந்த கிராம மக்கள் வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து கிராமங்களுக்கும், […]
பிரபல நடிகர் மகேஷ்பாபு கிராம மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் பிரபல நடிகருமான கிருஷ்ணாவுக்கு கடந்த மே ஒன்றாம் தேதி பிறந்த நாளாகும். ஆண்டுதோறும் இவரது பிறந்த நாளின் போது நடிகர் மகேஷ் பாபுவின் படங்கள் குறித்த போஸ்டர்கள் வெளியாகும். ஆனால் இம்முறை கொரோனாவின் அலை காரணமாக கொண்டாட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆகையால் நடிகர் மகேஷ் பாபு தனது […]
விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பழத்திலேயே முதன்மையானது என்று அகத்தியரும் முதல் பழம் இந்த விளாம்பழம். இதில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது. கிராமங்களில் பெரும்பாலும் காணப்படும் மரங்களில் ஒன்று விளாமரம். இதில் காய்க்கும் கனிதான் விளாம்பழம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதை காண்பது என்பது அரிதாக உள்ளது. விளாம்பழத்தில் பல நன்மைகள் உள்ளது. அதைப்பற்றி இதில் பார்ப்போம். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக […]
சத்தீஸ்கரில் உள்ள ஒரு கிராமத்தில் தங்களது குடும்பம் பெண்களின் பெயர்களை தங்களின் வீடுகளுக்கு சூட்டி கவுரவித்து வருகின்றன. சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இதில் 840 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் இருக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களின் பெயர்களை வீட்டின் முன்பாக வைத்து அவர்கள் செய்யும் தொழிலைக் குறிப்பிட்டு உள்ளன. இது நடப்பாண்டு மகளிர் தினத்தன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில பஞ்சாயத்து தலைவர் கூறுகையில் “எங்கள் […]
இந்தோனேஷியாவில் கிராமம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சி அளிக்கிறது. இந்தோனேசியாவில் அடிக்கடி மழை வெள்ளம் ஏற்படுவது இயல்பான ஒன்று. இதே போன்று மத்திய ஜாவா தீவில் ஜெயம் கொண்டான் என்ற இடத்தில் நேற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வெள்ள நீர் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியது. அதன்பின் ஒட்டு மொத்த கிராமத்திலும் இந்த இரத்த சிவப்பு நிற வெள்ளம் நிரம்பி காணப் பட்டது. இதனை பலர் புகைப்படம் எடுத்து […]
ஆஸ்திரேலியாவில் 90 வயது முதியவர் தன் சொத்திலிருந்து 2 மில்லியன் யூரோக்கை கிராமத்திற்கு நன்கொடையாக அளித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் 90 வயதான எரிக் ஸ்வாம் என்பவர் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். அதன்பின் அவர் எழுதி வைத்திருந்த உயிரைப் படித்தனர். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது, 1943இல் இரண்டாம் போரின்போது நாஜிகளிடம் இருந்து நானும் எனது குடும்பமும் பிரான்ஸில் உள்ள லூ சாம்பன் சுர் லிக்னன் என்ற கிராமத்தில் அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்பட்டு மறைத்து […]
விவசாயி ஒருவர் தன் கால்நடைகளை மீட்பதற்காக ஓநாயுடன் போராடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. இக்கிராமத்திற்குள் ஓநாய்கள் புகுந்து கால்நடைகளை கொன்று வருவது வழக்கமாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் அதே போல் கிராமத்திற்குள் புகுந்த ஒரு பெரிய ஓநாயானது நாய்கள் இரண்டை கொன்றுள்ளது.மேலும் அங்கிருந்த குதிரையையும் தாக்கியுள்ளது. அப்போது அங்கு வந்த விவசாயி தன் நாய்கள் ஓநாயால் கொல்லப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் மீதமுள்ள தன் கால்நடைகளை காப்பாற்ற […]
இளைஞர் ஒருவர் புத்தாண்டிற்கு பட்டாசு வெடித்தபோது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் இருக்கும் அல்சேஸ் பிரதேசத்தின் தலைநகரம் Stras bourg. புகழ்பெற்ற இந்நகரத்திற்கு தெற்கில் அமைந்துள்ள சிறிய கிராமம் Boof zeim. இக்கிராமத்தில் புத்தாண்டை முன்னிட்டு பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 25 வயதுடைய இளைஞர் ஒருவரும் மோட்டார் பட்டாசு என்று ஒரு பட்டாசை வெடித்துள்ளார். அப்போது, அப்பட்டாசு அந்த இளைஞரின் அருகிலேயே அதிரும் வகையில் பயங்கர சத்தத்துடன் வெடித்துள்ளது. […]
ஈரோடு மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமமே பாஜகவில் இணைந்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு பெற்ற கட்சிகளாக திகழ்வது ஒன்று அதிமுக, மற்றொன்று திமுக. தமிழகத்தின் பல கிராமங்களில் இந்து கடவுள்களை புனிதமாக மதித்துப் போற்றக்கூடிய மக்கள்தான் பெரும்பான்மையானவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் கந்த சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசியதை திமுக சிறிதளவு கூட கண்டிக்கவில்லை என்றும், அதிமுக அரசும் பெரிதளவு கண்டுகொள்ளவில்லை எனவும் விரக்தியடைந்த ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி […]
கிராமங்களில் பின்பற்றப்படும் சமையல் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம் 1. துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன் வரமிளகாய் கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால் பொடி மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும். 2. எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி போன்ற சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து, பின்பு தயார் செய்தால் சாதம் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும். 3. உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது […]