கிரீஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் கைத்திரா தீவிலிருந்து, தென்மேற்கு பகுதியில் சுமார் 18 மைல்கள் தூரத்தில் இன்று பயங்கர நிலநடுக்கம் உருவானது. இது 5.2 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக ஏதென்ஸ் பல்கலைகழகத்தின் நிலநடுக்கவியல் மையம் கூறியிருக்கிறது. சுமார் 18.6 மைல்கள் ஆழத்திற்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் பாதிப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகவில்லை.
Tag: கிரீஸ் நாடு
கிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டின் பிரபல சுற்றுலா தீவான கிரீட்டில் 6.3 ரிக்டரில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கிரீட் தீவின் கிழக்கு கடற்கரையில் உள்ள Palekastro கிராமத்தில் 10 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து தீவில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்கள் குறித்து உடனடியாக தகவல் ஏதும் […]
கிரீஸ் அரசு தடுப்பூசி, செலுத்தாத மக்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை மேற்கொள்வதை ரத்து செய்ய தீர்மானித்துள்ளது. கிரீஸ் நாட்டில் சமீப தினங்களில் கொரோனா தொற்று சற்று அதிகரித்திருக்கிறது. நேற்று 4608 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் தற்போது வரை 53% நபர்கள் தடுப்பூசி எடுத்துள்ளார்கள். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கையை 70%-ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்துள்ளது. மேலும், இதற்கென்று புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில், வரும் செப்டம்பர் […]
கிரீஸ் நாடு சுமார் 40 கிலோமீட்டர் நீளமுள்ள சுவரை துருக்கி உடனான எல்லையில் எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றியதையடுத்து 2015-ஆம் ஆண்டு காலகட்டத்தில் நேர்ந்தது போல் தற்போது அகதிகள் பலரும் மீண்டும் இடம்பெயர வாய்ப்புள்ளதால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கிரீஸ் நாட்டிற்கு அகதிகள் பலரும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து இடம்பெயர வாய்ப்புள்ளதால் கிரீஸ் நாடு துருக்கி உடனான எல்லையில் சுமார் 40 கிலோமீட்டர் நீளத்தில் பெரிய சுவர் ஒன்றை […]
கிரீஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அந்நாட்டு அரசு ஜூன் 14-ஆம் தேதி வரை வெளிநாட்டவருக்கு தடை விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிரீஸ் நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 14-ஆம் தேதி வரை வெளிநாட்டவர் அந்நாட்டிற்குள் வருவதற்கு அரசு தடை விதித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸால் கிரீஸ் நாட்டில் மொத்தம் […]
கிரீஸ் நாட்டில் பற்றி எரியும் காட்டுத்தீயை மூன்று நாட்களாக தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி அணைத்து வருகின்றனர். கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள பெலோபென்னீஸ் தீபகற்பத்தில் உள்ள காடுகள் அடர்ந்த பகுதியான கோரிந்த் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் பயங்கர காட்டுத்தீ பரவியுள்ளது. இதையடுத்து பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ பரவிய இடங்களை சுற்றிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயானது காற்றுடன் வேகமாக வீசியதால் கோரிந்த் பகுதியிலிருந்து தீயானது மேற்கு அட்டிகா பகுதியில் பரவியுள்ளது. மேலும் பைன் […]