திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசுப் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகளுடன் இயக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில தளர்வுளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பேருந்துகள், வேலூர், சென்னை, தாம்பரம்போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. […]
Tag: கிருமி நாசினி
நாளை (திங்கட்கிழமை ) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் 500 பேருந்துகள் இயக்குவதற்கு கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. எனவே கடந்த மே மாதம் 10-ம் தேதி பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் விசாரணை கைதிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் காவல்நிலையம் முழுவதிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள டவுன் போலீஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெவ்வேறு குற்றங்களை சார்ந்த இரு விசாரணை கைதிகளை போலீசார் அழைத்து வந்து மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் விசாரணை முடிந்தபின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அவர்கள் இருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரையும் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் மதுபானம் கிடைக்காததால் சானிடைசர் குடித்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதற்காக மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் படி மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், சனிடைசரை பயன்படுத்துதல் போன்றவற்றை கடைபிடிக்க […]
வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்ட பள்ளிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து பரவி வருகிறது. இதனால் மத்திய அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்துள்ளது. கடந்த 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது வாக்கு சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்ட பள்ளிகளில் ஏராளமான பொதுமக்கள் வந்து வாக்களித்தனர். இது தவிர கொரோனா நோயாளிகள் வாக்களிப்பதற்கு மாலை 6 மணி […]
கோடைகாலத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது வியர்குரு. அதிலிருந்து தப்பிக்க சில எளிய டிப்ஸ்களை இதில் தெரிந்து கொள்வோம். கொளுத்தும் வெயிலில் அதிக அளவு வியர்வை வெளியேறும். இதன் காரணமாக வியர்குரு பிரச்சனையை உருவாகும். இதனை தடுப்பதற்கு சில வழி முறைகளை நாம் பின்பற்ற வேண்டியது அவசியம். இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது. வியர்க்குருக்கு சந்தனம் மிகவும் சிறந்த நிவாரணி. ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசி குளிக்கலாம். சந்தனத்துடன் மஞ்சள் சேர்த்து தடவலாம். மஞ்சள் கிருமி நாசினி […]
கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]
வேப்பிலையை தினசரி நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம். வேப்பிலை ஒரு கிருமி நாசினி பொருள். பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது. இது மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை. இந்த இலைகளைக் கொண்டு பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும். பெரும்பாலும் ஆயுர்வேத மருத்துவத்தில் நோய்களைக் குணப்படுத்துவதற்கு வேப்பிலை முக்கிய பொருளாக பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையின் நன்மைகள்: வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து, […]
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை தலைமை செயலகத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினசரி பாதிப்பு ஆயிரத்து 400 நெருங்கி வருகிறது. இந்நிலையில் மாதத்தின் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை தலைமை செயலகம் முழுமையாக மூடப்பட்டு அனைத்து அலுவலகங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தலைமை செயலகத்தில் அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினித் தெளிக்கும் பணி நடைபெற்றது. இதையொட்டி இன்றும் […]
தலைமைச் செயலகத்தில் இருக்கும் அலுவலக அறைகள் முழுவதும் இன்று கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்வதால், அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலும் இன்று கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.. சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையில், மாதத்தின் 2ஆவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி கொண்டு சுத்தம் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிருமி நாசினியை முறையற்ற முறையில் பயன்படுத்துபவர்களுக்கு தான் பொறுப்பு இல்லை என்று கூறி சமாளித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ட்ரம்ப் தலைமையிலான அரசு என்ன செய்வது என்றே திணறி வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின்போது, கொரோனா வைரசை குணப்படுத்துவதற்கான வழியாக லைசால் மற்றும் டெட்டால் ஆகிய கிருமி நாசினிகளை உடலுக்குள் செலுத்தி பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து […]
கடலூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார். நகரம், கிராமம் என அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் கிருமிநாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக சேலம், திருச்சி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல, சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் […]
கள்ளை பயன்படுத்தி கிருமிநாசினி தயாரிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கேட்டுள்ளார் இந்தோனேசியாவில் கிருமிநாசினி தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பனை மரங்களிலிருந்து கள் இறக்கி புளித்த கள்ளை கிருமி நாசினி தயாரிக்க முக்கிய பொருளாக பயன்படுத்தி வருகின்றனர் என தமிழ்நாட்டு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “கொரோனா வைரஸ் இந்தோனேசியாவில் இருக்கும் பாலித்தீவில் பரவ தொடங்கியதை அடுத்து அங்கு கிருமிநாசினி […]
மஞ்சள் கிழங்கில் மூன்று வகை உள்ளது. முதல் வகை முட்டா மஞ்சள் என்று அழைக்கப்படுகிற முகத்துக்குப் போடும் மஞ்சள். இரண்டாம் வகை தட்டையாக, நிறைய வாசனையோடு இருக்கும் கஸ்தூரி மஞ்சள். மூன்றாவது வகை நீட்ட நீட்டமாக இருக்கும் விரலி மஞ்சள். விரலைப் போன்று நீளமாக இருப்பதால் இதற்கு விரலி மஞ்சள் என பெயர் வந்தது. விரலி மஞ்சள் தான் சமையலறையின் முதற்பொருள். இந்த மஞ்சளுக்குக் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் என்ற நிறமிதான் […]
கேரளா மாநிலத்தில் பறவைக்காய்ச்சல் ஏற்பட்டிருப்பதின் எதிரொலியாக, புளியரை சோதனை சாவடி வழியாக, தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. கேரளாவில், கோழிக்கோடு மாவட்டத்தில் இருக்கும் கோழிப்பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்திற்கு இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது. எனவே தமிழக மற்றும் கேரள எல்லையில் அமைந்துள்ள தென்காசி, புளியரை சோதனை சாவடியில், கால்நடை துறை அதிகாரிகள் பறவைக்காய்ச்சலுக்கான […]
சீனாவின் ஹுபே மாகாணத்தை சுற்றிலும் கொரானா வைரஸ் தொற்றை தடுக்க சுகாதாரத்துறை ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்ததன் விளைவாக எதிர்வினை உருவாகியுள்ளது. அந்த பகுதியில் பறவைகளும், விலங்குகளும் கொத்துக்கொத்தாக இறந்துள்ளது. கிருமிநாசினி அதிக அளவில் தெளிக்கப்பட்ட காரணதால் வனவிலங்குகள் பலியாகி இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். காட்டுப்பன்றிகள், மர நாய்கள் மற்றும் சில பறவை வகைகள் என இந்த காட்டுபகுதிகளில் சுமார் 135 வனவிலங்குகள் இறந்துள்ளது. இதில் சோகமான சம்பவம் என்னவென்றால்? பலியான அந்த விலங்குகள் மற்றும் […]