கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1500 மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவெளி விட்ட பின் உணவருந்தி விட்டு மாணவர்கள் அனைவரும் இரண்டு மணி அளவில் வகுப்பறை வந்து அமர்ந்துள்ளனர். சற்று நேரம் கழித்து ஆறு மற்றும் ஏழாவது அறையில் உள்ள மாணவர்களுக்கு திடீரென்று விஷவாயு தாக்கி கண்பார்வை மங்கலாகவும் ஒரு சில மாணவர்களுக்கு மயக்கமும் ஏற்பட்டு […]
Tag: கிருஷ்ணகிரி மாவட்டம்
ஜவுளி கடையின் ஆஃபரால் பெண்கள் கூட்டம் கூட்டமாக சென்று புடவை வாங்கிச் சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பிரபலமான ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்த கடையின் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஸ்பெஷல் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. அதாவது கடைக்கு முதலில் வரும் 500 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு புடவை, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச பேன்ட் ஷர்ட் என பல்வேறு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக கடை திறப்பதற்கு முன்பாகவே கடையின் முன்பு பெண்கள் கூட்டம் திரண்டது. அதோடு முதியவர்கள் மற்றும் […]
ஆன்லைன் மோசடியில் 2 பேர் 6 லட்சம் பணத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேரிக்கை பகுதியில் நவீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆதிலட்சுமி என்ற மனைவி இருக்கிறார். இவருடைய செல்போன் நம்பருக்கு கடந்த 3-ஆம் தேதி ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உங்களுக்கு டபுள் தமாக்கா ஆஃபர் ஸ்கீமில் பரிசு விழுந்துள்ளது. அந்த பரிசில் உங்களுக்கு 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் விழுந்துள்ளது. இதற்கு வரி பணமாக […]
புத்தகங்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வந்தது. அதில் மொத்தம் 29,265 புத்தகங்கள் வந்த நிலையில், 17,265 புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 12,000 புத்தகங்களும் […]
யானைகள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல் நத்தம் பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வேலை முடிந்தவுடன் ஓ.என். கொத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்குள் சென்ற […]
கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லைப் பகுதிகளில் உள்ளதால் அண்டை மாநிலங்களில் இருந்து சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தல் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை என மூன்று மதுவிலக்கு அமல் பிரிவு காவல் பிரிவுகள் அமைக்கப்பட்ட தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டவிரோதமாக விற்பனைக்கு கடத்திவரப்பட்ட கர்நாடகா, ஆந்திரா, கோவா மாநில மதுபாட்டில்கள் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது 1, […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பீ.கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(23). இவர் குமுதேப்பள்ளியை சேர்ந்த தனது நண்பர் முருகேசன்(26) வீட்டிற்கு அடிக்கடின் சென்று வருவார். அப்போது சந்தோஷும் முருகேசனின் தங்கை மீனாவும் காதலிக்க தொடங்கினர். இந்த நிலையில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சந்தோஷ், மீனாவை வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார், அண்மையில் முருகேசன் வீட்டார் தங்களது நிலத்தை விற்க முயன்றபோது மீனாவின் சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் கேட்டதாக கூறப்படுகிறது. காதல் திருமணம் செய்ததற்கே […]
கம்மம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவனின் அசத்தல் கண்டுபிடிப்பு வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அந்த ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்மம்பள்ளி ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. மேலும் இப்பள்ளியில், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விக்னேஷ் என்ற மாணவர் மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழிக்கும் விதமாக ஹுமனோய்டு ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். […]
செல்போன் பேசிக்கொண்டு ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற வாலிபர் ரயிலில் அடிபட்டு உயிரிலாத சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ஹாய்தர் பகுதியில் வசித்து வந்த தஸ்லிம் அன்சாரி(19) என்ற வாலிபர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓசூரில் உள்ள ரயில்வே டபுளின் லைனில் தற்காலிகமாக தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அன்னை நகரில் கூடாரம் அமைத்து தங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தஸ்லிம் அன்சாரி அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் செல்போனில் பேசியபடி நடந்து […]
ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் அப்பாவு பிள்ளை பேருந்து நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகரில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லக்கூடிய முக்கிய பேருந்துநிலையமாக அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம் இருந்து வருகிறது. இந்நிலையில் இங்கிருந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் தினந்தோறும் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள்,வணிகம் மேற்கொள்வர். இதையடுத்து இந்த பேருந்து நிலையத்திற்கு, ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா திடீரென ஆய்வு மேற்க்கொள்ள வருகை புரிந்துள்ளார். அப்போது […]
கல்லூரி மாணவியை பேசி மயக்கி சேலம் அழைத்து சென்று தங்க நகையை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் கல்லூரி மாணவி வசித்து வருகிறார் இவர் தர்மபுரியில் இருக்கும் ஒரு கல்லூரியில் படித்து வருகின்றார். கடந்த 30ஆம் தேதி இந்த மாணவி பேருந்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 50 வயது மதிக்கத்தக்க நபர் பேருந்தில் ஏறி மாணவிக்கு அருகில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த நபர் உனது […]
ஒஸ்கூர் கிராமத்தில் 1000ஆண்டுகள் பழமையான மத்தூரம்மா கோவில் தேர்த்திருவிழா தேரை 2 ஆயிரம் காளைகள் இழுத்தன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்துள்ள ஒஸ்கூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கிறது. இந்த கோவிலை ராஜேந்திர சோழன் கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள மாரியம்மனை மக்கள் மத்தூரம்மா என்று சொல்லி வழிபடுகின்றனர். மத்தூரம்மா ஒஸ்கூர் கிராமப்பகுதிற்கு மட்டுமல்லாமல் அந்த கிராமத்தை சுற்றியுள்ள 48 கிராமங்களையும் காக்கும் தேவியாக அருள்பாலிக்கிறாள். வருடந்தோரும் இந்த கோவிலில் […]
ஓசூர் அருகே ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகிலுள்ள சின்ன வேடகானப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் வெங்கடசாமியின் மகன் வேலு. 20 வயதான இவர் கடந்த சில மாதங்களாகவே மனரீதியான பாதிப்பில் இருந்ததால் அவரது பெற்றோர்கள் டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராமத்திலிருந்து வேலுவும் அவரது சகோதரர் பிரபு, நண்பர் மணி ஆகிய மூவரும் வெளியே சென்றனர். அப்பொழுது ஓசூரில் […]
கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைப்பதை எதிர்த்த வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ராஜன் குட்டையை சேர்ந்த ரமேஷ் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் கிருஷ்ணகிரி நகராட்சியில் இருந்து 4.3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெரிய பனமுட்லு அருகே சுங்கச்சாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திண்டிவனம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் 11 ஆண்டு காலமாக நடைபெற்று வருகின்றது. இந்த […]
ஓசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. சூளகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேலுமலை தேசிய நெடுஞ்சாலையே வாகனங்கள் மெதுவாக செல்வதால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் மேலுமலை வனப்பகுதியில் சுழல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது
கத்தியை காட்டி மிரட்டி 9 பவுன் நகை, 5000 ரூபாய் பணம் மற்றும் செல்போனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் செந்தில்நகரில் முருகன் என்கிற அருள்வாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்ஸ் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் வீட்டில் தனியாக இருந்த போது திடீரென 3 மர்மநபர்கள் உள்ளே வந்து அவரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து அவரிடம் இருந்த செயின், மோதிரம் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமநாயக்கன் ஏரியில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் பொது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் ஏராளமான தனியார் மருத்துவமனைகளும், அரசு மருத்துவமனைகளும் செயல்பட்டு வருகிறது. தற்போது நோய் தொற்று காலம் என்பதால் அனைத்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகள் மாநகராட்சியின் தனி வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஆனால் சில தனியார் மருத்துவமனைகள் அதன் மருத்துவ […]
குடிபோதையில் கர்பிணி பெண்ணை தந்தையே சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாதையன்தொட்டி என்ற கிராமத்தில் அருணாச்சலம் (60) மற்றும் அவரது மனைவி மாதேவி இருவரும் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் வெங்கடலட்சுமி (21). இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் மாலூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது வெங்கடலட்சுமி 3 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் யுகாதி பண்டிகை விருந்துக்காக அவரது கணவருடன் நேற்று மாதையன்தொட்டியில் […]
11 வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்வதற்காக அரசு பள்ளி ஆசிரியர் அவரை கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஜிஞ்சம்பட்டியில் மூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் முதல் மனைவி இறந்து விட்ட காரணத்தால் இவர் 2வதாக காவியா என்ற பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். மூர்த்தியின் முதல் மனைவியின் மகள் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். மூர்த்தி மற்றும் காவியா இருவருமே கூலி வேலை செய்து வறுமையில் இருந்தாலும் இவர்களுடைய மகளை திருவண்ணாமலை […]
ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு 1977 ஆம் ஆண்டு பர்கூர் சட்டமன்ற தொகுதி உதயமானது. ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக முதலமைச்சரானார். அடுத்தத் தேர்தலிலேயே அவர் படு தோல்வி அடைந்ததும் பர்கூரில் தான். மாம்பழ சாகுபடியில் முன்னணி வகிப்பதோடு, குட்டி சூரத் என அழைக்கப்படும் அளவிற்கு ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்குவது தொகுதியில் சிறப்பம்சம். பர்கூர் சட்டமன்ற தொகுதியில் திமுக 2 முறையும், அதிமுக 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன. தொகுதியின் தற்போதைய […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை தொகுதியில் புகழ்பெற்ற பாம்பாறு அணை உள்ளது. விவசாயத்தை சார்ந்துள்ள இந்த பகுதியில் மா, குண்டு மல்லி, நெல், காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. நான்கு மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை இந்த தொகுதியின் வழியே தான் செல்கிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வரும் அனுமன் தீர்த்தம் ஆஞ்சநேயர் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை இருந்த ஊத்தங்கரை தொகுதி அதன்பிறகு அரூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. இந்தநிலையில் அண்மையில் நடைபெற்ற ஊத்தங்கரை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளே இருந்த நிலையில் மறுசீரமைப்பில் புதிதாக உருவான தொகுதியே வேப்பனஅள்ளி என அழைக்கப்படும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி. ஆந்திரா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதியில் அதிக அளவிலான வன பகுதியை உள்ளடக்கிய தொகுதி ஆகும். விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ள இந்த தொகுதியில் முழுக்க முழுக்க கிராம ஊராட்சிகள் மட்டுமே உள்ளன. எல்லையோர தொகுதி என்பதால் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் உருது என நான்கு மொழிகள் பேசும் மக்கள் இங்கு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கர்நாடகா மற்றும் ஆந்திரா எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதி ஓசூர். குண்டூசி முதல் விமான உதிரிபாகங்கள் வரை தயாரிக்கக் கூடிய தொழில் நகரமாகவும் ஓசூர் உள்ளது. ஒரே நேர்கோட்டில் மலை மீது அமைந்துள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் கோவில்கள் புகழ் பெற்றவையாகும்.ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பண்ணை இங்குதான் உள்ளது. தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். ஓசூர் சட்டமன்ற தொகுதியில் அதிக அளவாக காங்கிரஸ் 9 முறை வெற்றி […]
காடுகள், மலைகள் சூழ்ந்து இயற்கை வளம் கொண்ட பகுதியாக திகழும் தளி தொகுதி ‘லிட்டில் இங்கிலாந்து’ என அழைக்கப்படும் குளிர்பிரதேசம் ஆகும். தேன்கனிக்கோட்டையில் உள்ள யாரப் தர்கா அனைத்து மதத்தினரும் செல்லும் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும். 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தளி தொகுதியில் காங்கிரஸ் நான்கு முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுக, ஜனதா கட்சி, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் தலா 1 முறை வென்றுள்ளனர். தற்போது […]
ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. மேலும் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பன்முகத்தன்மை கொண்ட மாவட்டமாக உள்ளது. விவசாயம் மற்றும் பால் உற்பத்தியை பிரதானமாக நம்பியுள்ள தொகுதி இதுவாகும். நெல், ராகி, சோளம், துவரை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. மா மற்றும் மல்லி பூ சாகுபடி இங்கு அதிகம். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக 6 முறை, அதிமுக 6 முறையும் வென்றுள்ளன. காங்கிரஸ் இருமுறையும், சுயேச்சை வேட்பாளர் ஒரு முறையும் […]
மனநிலை பாதிக்கப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூர் பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மனநல பாதிப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கதிரவன் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை கண்ட அவரது உறவினர்கள் கதிரவனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அளிக்கப்பட்ட தீவிர […]
கணவன் மனைவி தகராறில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெம்பத்தப்பள்ளி பகுதியில் அந்தோணிசாமி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தோணிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட அந்தோணிசாமியின் மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவத்தால் மனவேதனை அடைந்த விவசாயி வீட்டில் […]
மதுபோதையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் முனிராஜ் என்னும் வாலிபர் வசித்து வந்தார். இவர் கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கெலமங்கலம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் […]
மது அருந்த மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் அந்தேவணபள்ளி கிராமத்தில் குமார் என்பவர் வசித்து வந்தார். மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் தன் மனைவியிடம் சென்று கேட்டுள்ளார். அவர் மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். குடும்பத்தினரும் பணம் கொடுக்க மறுத்ததால் குமார் மன உளைச்சலில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்துள்ளார். உயிருக்கு […]
வயிற்று வலியால் பூச்சி மருந்தை குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை அருகே வன்னியபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற ஒரு மகள் உள்ளார். அவர் பல நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் நோய் குணமடையாததால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் பூச்சி மருந்தை குடித்து […]
அண்ணன் இறந்த துக்கம் தாங்காமல் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரிய கரடியூர் பகுதியில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வைஷியா என்ற மகளும், ஒரு மகனும் இருந்துள்ளனர். வைஷியா கரடியூர் பகுதியிலுள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருக்கிறார். சிறுமியின் அண்ணன் சென்ற வருடம் ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான […]
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இதில் 25 கிலோ தங்கமும், பணமும் கொள்ளை அடிக்கபட்டதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் […]
கிருஷ்ணகிரி சீனிவாசன் தெரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டிலிருந்த பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த மின்சாதனப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி காவல்துறையினர் வீட்டு உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறின. ஊத்தங்கரை அடுத்த சாம்பல் பட்டி குன்னத்தூர் சாலையில் 20 ஆண்டுகளுக்கு மேல் கமல் பாஷா பட்டாசு கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் தற்போது தீபாவளி பண்டிகைக்காக சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுவகையிலான பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சாலையோரம் இரண்டாவது நாளாக போட்டி போட்டுக்கொண்டு பொதுமக்கள் தங்ககாசுகளை எடுத்ததால் பரபரப்பு நிலவியது. ஓசூர் அருகே பாகலூர் சர்ஜபுரி சாலையில் நேற்று மாலை சாலையோரத்தில் உள்ள புதரில் சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடந்துள்ளன. இதையடுத்து பாகலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்க காசுகளை எடுத்து அங்கு குவிந்தனர். 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறிய அளவிலான தங்ககாசுகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை […]
கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் உசுர், பர்கூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை, தளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலை பேருந்து நிலையம் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சாலைகளில் வெள்ள நீர் தேங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதேபோன்று மாவட்டத்தின் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனி கோட்டை அருகே தக்காளி தோட்டத்திற்குள் யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் உலாவிக் கொண்டிருந்த யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உளிச்செட்டி பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை மிதித்து நாசம் செய்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளது. இதில் ஐயூர் கிராமத்தில் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்திருந்த தக்காளி பயிர்கள் முற்றிலும் நாசமானது. […]