பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அகசிபள்ளி பகுதியில் ராதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் லட்சுமி அதே பகுதியில் வசிக்கும் உறவினர்களான கோவிந்தன், முனியம்மாள் ஆகிய மூன்று பேரும் இணைந்து மோடிகுப்பம் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது நக்கல்பட்டி பகுதியை சேர்ந்த திம்மராஜ் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டு இருப்பவர்களிடம் தனக்கு பசிக்கிறது எனக்கு கூறி […]
Tag: #கிருஷ்ணகிரி
மருதனப்பள்ளி ஊராட்சியில் ரூ 1 கோடியே 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம் மருதனப்பள்ளி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய், சிமெண்ட் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் உட்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் ரூ ஒரு கோடியே 10 லட்சம் மதிப்பில் தொடங்கப்படுகிறது. இந்த பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதில் தளி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானுபிரியா, விமல்ரவிக்குமார் ஆகியோர் பூமி பூஜை செய்து […]
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வருகின்ற 5 வருடங்களில் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேயர் சத்யா கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மண் பாதுகாப்பு இயக்கம், கல்குவாரி உரிமையாளர் சங்கம் சேர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தியுள்ளன. ஓசூர் மூக்கண்டபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்கத்தின் நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கியுள்ளார். அதில் மாநகராட்சி மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்மணி, குவாரி […]
அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாமண்டரபள்ளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் 3 காட்டு யானைகள் புகுந்தன. இந்த காட்டு யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்தி தோட்டத்தில் இருந்த தக்காளி செடிகள், தென்னை மரங்கள், மா மரங்கள் ஆகியவற்றை மிதித்தும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் யானைகள் மரங்களை சேதப்படுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]
சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்த நாணயம் அதிநவீன அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெருகோபனப்பள்ளி யில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக்குமார்(11) என்ற மகன் உள்ளார். கடந்த மாதம் 26-ஆம் தேதி சிறுவன் தவறுதலாக 5 ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டான். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் நாணயம் சிறுவனின் உணவுக்குழாயில் சிக்கியிருந்தது தெரியவந்தது. இதனால் […]
சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் தேவசமுதிரம் மேம்பாலம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிஸ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து வேனிலிருந்து சாலையில் கொட்டிய மாங்காய்களை சிலர் பைகளில் எடுத்து சென்றனர். இது […]
பெண்ணை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பைல்காடு மலை கிராமத்தில் பசப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாதம்மாள்(38) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மாதமாளுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முருகன்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற அன்று மாதம்மாள் வளர்த்து வரும் மாடு முருகன் வீட்டு தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்தது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகன் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் […]
இளம்பெண் தனது கணவரை எரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் கார்த்திக்(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் கட்டுமான பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் சந்தியா (27) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]
முன்னாள் ராணுவ வீரரின் மனைவி இரண்டு குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகில் மாணிக்கனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ வீரர் மோகன். இவருடைய மனைவி 28 வயதுடைய பிரபா. இவர்களுக்கு 9 வயதுடைய ரித்திக் என்ற மகனும், 7 வயதுடைய ரக் ஷிதா என்ற மகளும் உள்ளார்கள். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பிரபா தனது மகன், மகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு […]
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிக அளவில் மழை மற்றும் கிராம பகுதிகளை கொண்ட மாவட்ட கிருஷ்ணகிரி. இந்த மாவட்டத்தில் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 18,79,870 பேர் உள்ளனர். இதில் கிராம மக்கள் மட்டுமே 4,28,363 பேர் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 72.41% உள்ளனர். அதனை தொடர்ந்து ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களின் எல்லையாகக் கொண்ட இந்த மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் […]
நடைபெற்ற புகைப்பட கண்காட்சியை மக்கள் பார்வையிட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழையூர் கிராமத்தில் வைத்து செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழகம் அரசின் சாதனையை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய போது எடுத்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும் நமது தமிழக அரசின் திட்டங்களான இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் […]
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் பேட்டை பகுதியில் எலக்ட்ரீசியனான சுரேஷ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தம்மகவுண்டனூர் கிராமத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கு திருமணம் செய்வதற்காக அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால் சரியான பெண் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுரேஷ் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து […]
தர்மபுரியில் மொபைல் ஸ்கேன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு கருக்கலைப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜா ராகவன் தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கின்றது. இந்த நிலையில் மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு செல்லும் பேருந்தில் சென்றுள்ளார். அப்போது அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் அவருக்கு அறிமுகமாகியுள்ளார். அந்த பெண் வனஜாவிடம் பேச்சு கொடுத்த போது தனக்கு இரண்டு பெண் […]
பைனான்சியரை மிரட்டி ரூ பத்து லட்சம் வாங்கிய கும்பலில் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி தெருவில் வசித்து வருபவர் 44 வயதுடைய வெங்கோபராவ். இவர் ஆட்டோ கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழிலும் பார்த்து வருகிறார். கடந்த 9ஆம் தேதி இவரை சிலர் சந்தித்து தங்களிடம் நிலம் இருப்பதாக தெரிவித்து அதை விற்க இருப்பதாகவும் கூறினார்கள். அந்த நிலத்தை வாங்க விரும்பிய வெங்கோபாராவ் அவர்களுடன் காரில் சென்றார். அப்போது அஞ்செட்டி – தேன்கனிக்கோட்டை […]
தண்ணீரில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார்(20) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் பொய்யன்கொட்டாயில் இருக்கும் பனங்காட்டூர் ஏரியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நவீன் குமார் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
நண்பனின் பிறந்த நாள் விழாவிற்கு பேனர்கட்ட சென்ற போது, சரக்கு வாகனத்திலிருந்து தவறி விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தல்சூர் கிராமத்தில் வசித்து வந்தவர் நவீன்குமார்(23). இவர் தன்னுடைய நண்பரான கார்த்திக் பிறந்தநாளுக்காக ஆங்காங்கே பேனர் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அப்போது சரக்கு வாகனத்தில் பேனரை ஏற்றிக்கொண்டு அதில் தொங்கிய படி சென்று கொண்டிருந்தபோது, ஆஞ்சநேயர் கோவில் பகுதியில் செல்லும் போது தவறிக் கீழே விழுந்து […]
நில பிரச்சனை காரணமாக தகராறு செய்த 7 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒபுலிகாட்டூர் பகுதியில் கூலி தொழிலாளியான சக்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே நில பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]
கட்டுப்பாட்டை இழந்த மினி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அரசு கலைக்கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரபட்டி, சாம்பல்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்றுள்ளனர். இவர்கள் முகாம் முடிந்ததும் மினி பேருந்தில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் ஓசூர் […]
சில மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலக்காடு சாலை பகுதியில் சந்தை ஒன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கியுள்ளனர். இதனை அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. […]
தெருநாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊடேதுர்க்கம் பகுதியில் காப்புக்காடு ஒன்று அமைந்துள்ளது. இந்த காட்டில் இருந்து புள்ளிமான் ஒன்று வழி தவறி அடக்கம் கிராமத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய்கள் புள்ளி மானை விரட்டி சரமாரியாக கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தெரு நாய்களை விரட்டி அடித்துவிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவ […]
வறண்டு கிடந்த மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்ததை பார்த்து பொதுமக்கள் ஆனந்தமடைந்து மலர்தூவி வரவேற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் மார்க்கண்டேயன் நதி அமைந்துள்ளது. இந்த நதியின் மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கின்ற சுமார் 10,000 ஏக்கர்க்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில வருடங்களாக கோடை மழை பெய்யவில்லை என்பதால் மார்க்கண்டேயன் நதி தண்ணீரில்லாமல் வறண்டு போனது. இந்நிலையில் தற்சமயம் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் கன மழையினால் கர்நாடக […]
தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏரி குளங்கள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 14- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. கடந்த 14ஆம் தேதி […]
தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் பணமோசடி செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் சிப்காட் பகுதியில் ராபர்ட் லாரன்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரை இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ஆதித்யா வர்மா, மணிஷ் நாயர் என்ற 2 மர்ம நபர்கள் தாங்கள் மாதம் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கான கட்டணத்தை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனை நம்பிய ராபர்ட் லாரன்ஸ் அந்த […]
சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேன்கனிக்கோட்டை பகுதியில் பாண்டி(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓசூர் சாந்தி நகரில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வீட்டில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி அரசு மருத்துவமனையில் […]
பலத்த காற்றில் பறந்து வந்த இரும்பு தகடு தலையில் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொம்மம்பட்டு கிராமத்தில் ஊர்க்காவல் படை வீரரான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பச்சையம்மாள்(42) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று மாலை அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பச்சையம்மாள் வீட்டிற்கு வெளியே காய வைத்திருந்த துணிகளை எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டின் மேல் கூரையில் இருந்த இரும்பு தகடு காற்றில் […]
கலெக்டர் அலுவலகத்தில் குழந்தையிடம் தரையில் அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகில் உஸ்தலப்பள்ளியில் வசித்து வருபவர் வெங்கடேஷ்(30). இவருடைய மனைவி துளசி(27). இவர்களுக்கு 7 வயதுடைய ஒரு ஆண் குழந்தையும், 4 வயதுடைய ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் துளசி தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு துளசி தரையில் குழந்தையிடம் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார். அதன்பின் அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியதாவது, […]
காதல் திருமணத்தை பதிவு செய்ய வந்த இடத்தில் இருதரப்பினரும் மோதிக் கொண்டதால் ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஏ.கே மேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் கார்த்திக். ஊத்தங்கரை அடுத்துள்ள சந்தகொட்டாவூர் கிராமத்தில் வசித்து வருபவர் சத்தியவாணி. இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கிடையில் சத்தியவாணியை கார்த்திக் கடத்தி சென்றுள்ளார் என்று அந்தப் பெண்ணின் உறவினர்கள் ஊத்தங்கரை காவல் […]
சிறுத்தை குதிரையை தாக்கி கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளாளம்-நெல்லுமார் சாலையில் அல்லி உல்லாகான் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் பண்ணையில் 20-க்கும் மேற்பட்ட குதிரைகளைப் பராமரித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி 5 வயது பெண் குதிரையை மர்ம விலங்கு ஒன்று கடித்து கொன்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்ணையில் கண்காணிப்பு கேமராவை பொருத்தியுள்ளனர். அப்போது பண்ணைக்குள் புகுந்து இறந்து […]
பைக்கில் சாகசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் இரண்டு இளைஞர்கள் சென்றார்கள். அப்போது அவர்கள் பவர்கிரீட் அருகில் செல்லும்போது திடீரென சாகசத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதை அந்த வழியாக சென்றவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் போட்டுவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது. மேலும் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் […]
சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் இதுவரை 300-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சேதம் அடைந்ததாக மின்வாரிய அதிகாரிகள் கூறினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மின் கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு இடங்களில் நான்கு மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது, கிருஷ்ணகிரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த மூன்று […]
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் மாமனாரை தாக்கிய மருமகன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜவளகிரி கிராமத்தில் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகானா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சகானாவிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக சகானா தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் […]
வீட்டிற்குள் நுழைந்த மலைப்பாம்பை வாலிபர்கள் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவில் சகாதேவன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று அருகில் இருந்த காட்டு பகுதிகளில் இருந்து 10 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சகாதேவனின் குடும்பத்தினர் அலறி அடித்து வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி வாலிபர்கள் சகாதேவனின் […]
கிராமத்திற்குள் புலி புகுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொளதாசபுரம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக எஸ்டேட் ஒன்று அமைந்துள்ளது. இந்த எஸ்டேட் பகுதியில் நேற்று மாலை புலி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி வாலிபர்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் -அப்பில் அனைவருக்கும் அனுப்பியுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் புலியை […]
ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]
விஷ காயை சாப்பிட்ட 6 மாணவர்கள் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் தளிக்கோட்டூர் கிராமத்தில் படித்து வரும் மாணவர்கள் 10 வயதுடைய நிதிஷ்குமார், 9 வயதுடைய அஜீத், 9 வயதுடைய சதீஷ், 9 வயதுடைய மகேஷ்குமார், 10 வயதுடைய பிக் பாஷா. இந்த மாணவர்கள் நேற்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அங்கு உள்ள ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருந்த காய்களை அழகு கூடும் என்று கருதி […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் வருகின்ற 10-ஆம் தேதிக்குள் தாங்களாகவே முன்வந்து போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், ஊர் தலைவர் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டால் அவர்கள் மீது எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட மாட்டாது. இதனையடுத்து 10-ஆம் தேதிக்கு பிறகு காவல்துறையினர் நடத்திய சோதனையில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றின் […]
மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செந்தில் நகர் பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொம்மசந்திரா பகுதியில் அமைத்துள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஷ் தினமும் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதைப்போல் நேற்றும் சதீஷ் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி […]
பள்ளி வளாகத்தில் வைத்து மாணவிக்கு மாணவன் தாலிகட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஒருவன் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவிக்கு பள்ளி வளாகத்தில் வைத்து சமீப காலத்தில் தாலி கட்டி உள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், மாணவியின் பெற்றோரிடம் மற்ற மாணவர்கள் தகவல் அளித்துள்ளார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை […]
மோட்டார் வாகன உதிரிபாக கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகில் மேல்செங்கம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவர் போச்சாம்பள்ளியில் உள்ள திருப்பத்தூர் ரோட்டின் அருகில் மோட்டார் வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்த கடையில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு, மோட்டார் வாகனங்களுக்கு பயன்படுத்தும் ஆயில் கேன்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து பன்னீர்செல்வம் போச்சம்பள்ளி […]
ஆய்வகத்தில் இருந்து மெக்னீசியம் பாஸ்பேட்டை உப்பு என்று நினைத்து சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த மோரணபள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 941 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் 392 மாணவர்கள் மேல்நிலை கல்வி படிக்கிறார்கள் அவர்களுக்கு ஆய்வக தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில், கடந்த 25 ஆம் தேதி அன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் 180 பேருக்கு […]
பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காந்தி சாலை நகராட்சி அலுவலகம் பகுதியில் முருகன், நாகராஜ் ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் அதே பகுதியில் தங்களுக்கு சொந்தமான 2,500 சதுர அடி நிலத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பு 7 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். இந்நிலையில் முருகன், தங்கராஜ் ஆகிய 2 பேரும் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்யவில்லை. […]
7-ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தலைமையாசிரியரை கிராம மக்கள் அடித்து உதைத்து கார் கண்ணாடியை உடைத்தார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை சேர்ந்தவர் லாரன்ஸ். இவர் தேன்கனிகோட்டை அருகில் கும்பகரை கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தம் 4 ஆசிரியர்கள் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்தப் பள்ளியில் மொத்தம் 102 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று தலைமை […]
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், டாஸ்மாக் கூடங்கள், டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி பெற்றுள்ள அரசு, தனியார் ஹோட்டல்கள், மதுபான கடைகள் அனைத்தும் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) அடைக்கப்படும். இதை மீறி விற்பனையாளர்கள் மதுவை விற்றாலும், கடைகளைத் திறந்தாலும் அவர்கள் மீது […]
பிரசித்தி பெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்கள் வினோதமான வழிபாடு செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தூர் பகுதியில் பிரசித்தி பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இதனையடுத்து அர்ச்சுனன் தபசு நாடகம், திரௌபதி அம்மனுக்கு திருக்கல்யாணம், வில் வளைப்பு, அரக்கு மாளிகை பக்காசூரனுக்கு சோறு எடுத்தல், பாண்டவர் பிறப்பு, அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு, […]
திடீரென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மோரமடுகு கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் என 2 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தலைமை ஆசிரியர் விடுப்பு எடுத்திருந்ததால் உதவி ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்தார். இதனால் மாணவர்கள் வகுப்பறையில் இல்லாமல் பள்ளி […]
உரங்களை விதி மீறி விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் தொடக்க, வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில் யூரியா 1,442 டன் டி.ஏ.பி 897 டன், பொட்டாஷ் 389 டன், காம்பளக்ஸ் 3,802 டன், எஸ். எஸ். பி […]
சிப்காட் பகுதியில் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட் பகுதியில் தொழிற்சாலையை விரிவாக்கும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போச்சம்பள்ளி – கல்லாவி வரை செல்லும் ரோட்டில் சிறிது நேரம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டுட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது […]
”கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வன விலங்குகளால் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,” என, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்தார். கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., – கே.பி.முனுசாமி கூறிய போது, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தொகுதி, கொங்கனப்பள்ளி கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் உள்ள திம்மப்ப நாயுடு என்பவர் யானை தாக்கி இறந்தார்.அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் ஊருக்குள் யானை வராமலிருக்க, மின் வேலி அமைக்க வேண்டும் […]
கிருஷ்ணகிரி அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு இசைப்பள்ளியில் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பாக உலக ஓவிய தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியில் 5 முதல் 16 வயது வரை உள்ள 96 மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள். இவர்களுக்கு இயற்கை காட்சி மற்றும் தேச தலைவர்கள் என்ற தலைப்பில் ஓவியப் பயிற்சியானது வழங்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது ஓய்வு பெற்ற அரசு […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 10 ஒன்றியங்களிலும் சுகாதார திருவிழா தொடங்கியுள்ளது என மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டமானது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. இதில் நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், உதவி இயக்குனர் வெங்கடாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த பொதுக் கூட்டத்தில் பேசப்பட்டததாவது, மாவட்டத்திலுள்ள பத்து ஒன்றியங்களிலும் […]