குடிநீர் கட்டணம் செலுத்தாத 11 வீடுகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் நகராட்சியில் 2020ஆம் நிதியாண்டு முதல் தற்போது வரை நிலுவையில் இருக்கும் குடிநீர் கட்டணங்களை செலுத்துமாறு காங்கயம் நகராட்சி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் கொடுத்த கால அவகாசத்தை தாண்டியும் இன்னும் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து நகராட்சி ஊழியர்கள் 11 குடியிருப்புகளின் குடிநீர் இணைப்புகளை துண்டித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த 11 வீடுகளில் மொத்தம் நிலுவைத் தொகையாக 66,254 இருக்கின்றது. […]
Tag: குடிநீர் குழாய்
பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாய்களை சரிசெய்து கொடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையத்திலுள்ள மக்களுக்கு குடிநீர் தொட்டியின் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அந்த தொட்டியில் 4 குடிநீர் குழாய்கள் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில் 1 குடிநீர் குழாய் மட்டும்தான் தண்ணீர் பிடிக்க பயன்படுகிறது. ஆனால் மீதமுள்ள 3 குழாய்கள் பழுதாகி இருக்கிறது. மேலும் அந்த குடிநீர் தொட்டியை சுற்றி செடிகள் முளைத்து இருப்பதோடு, மழைநீரும் தேங்கி காணப்படுகிறது. இதன் […]
சாலை பணிக்காக குழி தோண்டியபோது குழாய் சேதமடைந்து தண்ணீர் பொங்கி எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி பள்ளிப்பட்டியிலிருந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை வரை நடந்து வருகிறது. இதனால் அரூர்-சேலம் சாலை வேலைக்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, புதுப்பட்டி, எருமியாப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து விட்டது. […]
குடிநீர் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்வதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகர பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி மாநகர் பகுதி முழுவதிலும் 1 லட்சத்து 30 ஆயிரம் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகரின் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டது. இங்கு ஏற்கெனவே இருந்த தொட்டிகளில் நீரேற்றம் செய்து குடிநீர் விநியோகம் […]
ஈரோட்டில் பல இடங்களில் பெய்த மழையினால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருந்ததால் ராஜாஜிபுரம், பெரியவலசு, கருங்கல்பாளையம், ஆர்.கே.வி.ரோடு போன்ற பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. மேலும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து பாதாளச் சாக்கடை, மின்சார கேபிள் பதிக்கும் பணி, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் சேறும் சகதியுமாக காட்சியளித்தது. மேலும் […]
திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் பாறையை தகர்க்க வைத்த வெடி பயங்கரமாக வெடித்து சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய்களை கொண்டு செல்ல சிமெண்ட் தூண்கள் அமைத்து கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஒரு தூண் அமைக்கும் பகுதியில் ஆற்றில் பாறை இருந்ததால் அந்த பாறையை தகர்ப்பதற்க்கு எந்த வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் பணி மேற்கொண்டவர்கள் பாறையில் வெடி […]
தேனியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்வதால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மாவட்ட நிர்வாகியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். தேனி மாவட்டதிலுள்ள பெரியகுளம் பகுதியில் கிருஷ்ணன்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு பின்புறம் பெரிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதிலிருந்து அப்பகுதியில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இக்கோவிலுக்கு அருகே இருக்கும் குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் வீணாகும் தண்ணீர் […]
ஜல் ஜீவன் திட்டப்பணிக்கு, நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதால், பயனாளிகளின் பங்களிப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 2025க்குள் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகள் தோறும், தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளின் விபரம், தேவையான புதிய குடிநீர் தொட்டி, போர்வெல் உள்ளிட்ட கட்டமைப்பு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராமகளிலும், மிகச்சிறிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குடிநீர் […]