அமெரிக்க அரசின் ரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வரும் முன்னாள் உளவுத்துறை தகவல் தொழில்நுட்ப பணியாளரான எட்வர்டு ஸ்னோடனுக்கு ரஷ்ய அரசு குடியுரிமை வழங்கி இருக்கிறது. அமெரிக்காவின் டெல் நிறுவனத்திலும் சிஐஏ உழவு நிறுவனத்திலும் பணியாற்றி இருந்த எட்வர்ட் அந்த நாட்டின் தேசிய புலனாய்வு அமைப்பாளர் என் எஸ் ஏ வில் கடந்த 2013 ஆம் வருடம் ஒப்பந்த பணியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் அதே வருடம் மே மாதத்தில் ரகசிய ஆவணங்களுடன் அவர் […]
Tag: குடியுரிமை
தாங்கள் ஒரு சர்ச்சைக்குரிய நபருக்கு அடைக்கலம் கொடுக்கின்றோம் என்பது தெரியாமல் ஒருவருக்கு உதவ முன்வந்தால் சிக்கலுக்குள்ளாகிய இலங்கை அகதிகளை நினைவு இருக்கலாம். 2016 ஆம் வருடம் Snowden என்ற திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகியுள்ளது. அந்த படம் அமெரிக்க அரசின் முக்கிய ரகசியங்களை வெளியிட்ட முன்னாள் உளவாளியான எட்வர்ட் ஸ்னோடெனை பற்றிய படமாகும். அந்தப் படத்தில் எட்வர்டுக்கு ஹொங்கொங்கின் சட்டதரணி ஒருவரும் இலங்கை அகதிகள் சிலரும் உதவும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அந்த அகதிகள் சிக்கலுக்கு அழகியுள்ளனர். மேலும் […]
பிரபல நாட்டின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டில் 246-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு வருடம் தோறும் அமெரிக்காவில் குடியுரிமை பெற்றவர்களை ஜூலை மாதத்தில் வரவேற்பது அங்கு வழக்கமாக இருக்கிறது. அதேப்போன்று நடப்பாண்டிலும் குடியுரிமை பெற்றவர்களை வரவேற்றனர். அப்போது அமெரிக்காவின் குடியுரிமையை விரும்பி பெற்றவர்களின் தகவல்களை வெளியிட்டனர். இதில் மெக்சிகோ முதல் இடத்திலும், இந்தியா 2-வது இடத்திலும், பிலிப்பைன்ஸ் 3-வது இடத்திலும், கியூபா 4-வது இடத்திலும், […]
ஸ்பெயின் நாட்டிற்குள் அகதிகளாக படகில் பயணித்து கொண்டிருந்தபோது பிறந்த பெண் குழந்தைக்கு ஸ்பெயின் அரசு அந்நாட்டின் குடியுரிமையை வழங்கியுள்ளது. ஸ்பெயின் நாட்டு குடியுரிமை பெற சம்பந்தப்பட்ட நபர் அந்நாட்டில் பிறந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோரும் 10 ஆண்டுகள் அங்கு சட்டப்பூர்வமாக குடியேறியிருக்க வேண்டும். ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த நபரை மணம் முடித்திருக்க வேண்டும். இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு, அந்நாட்டின் குடியுரிமையை பெறும் முதல் குழந்தை […]
இங்கிலாந்து நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பதவி வகித்து வருகின்றார். இவரது தந்தை ஸ்டான்லி ஜான்சன் (81) இவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்னாள் உறுப்பினராக கடந்த 2021 ஆம் வருடம் நவம்பரில் பிரெஞ்சுக் குடியுரிமை கோரி விண்ணப்பித்திருந்தார். இதனை பரிசீலித்த பிரான்ஸ் அரசு அவருக்கு குடியுரிமை வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. பிரான்ஸ் நிதி அமைச்சகம் சமீபத்தில் இதனை உறுதி செய்திருக்கின்றது. மேலும் பிரான்ஸ் நாட்டின் […]
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் 800 பேர் இந்தியாவில் குடியுரிமை கிடைக்க தாமதம் ஏற்பட்டதால் கடந்த வருடம் பாகிஸ்தான் நாட்டிற்கே திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் மதம் தொடர்பான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதால், ராஜஸ்தானில் தஞ்சமடைந்த இந்து மதத்தை சேர்ந்த மக்கள், இந்தியாவில் குடியுரிமை கோரிக்கை நிறைவேற்றப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் நாட்டிலிருந்து வெளியேறி மீண்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அவ்வாறு அங்கு சென்ற மக்கள், இந்திய அரசு, தங்களை மோசமாக நடத்தியது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள். இது தொடர்பில் Seemant […]
கடந்த ஆண்டு 2021ல் மட்டும் 1,773 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயிடம் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசால் இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட மொத்த வெளிநாட்டு எண்ணிக்கை குறித்தும் ,அதை எடுத்துக் கொள்வதற்கான காரணங்களின் விளக்கம் குறித்தும் மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் அவர் குடியுரிமை சட்டம் 1955 கீழ் கடந்த 5 ஆண்டுகளில் 4,844 வெளிநாட்டவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் தகுதியான […]
சில நாடுகளில் நீங்கள் குடியுரிமை கோரும்போது சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் பிரான்ஸ் நாட்டில் குடியுரிமை பெறுவதற்கு சொந்த நாட்டின் குடியுரிமையை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. அதாவது 5 ஆண்டுகள் வரை நீங்கள் பிரான்சில் வசித்திருந்தாலோ ( அல்லது ) பிரான்ஸ் நாட்டில் ஒருவரை திருமணம் செய்து கொண்டாலோ நான்கு வருடங்களில் குடியுரிமை கோரலாம். அதேபோல் இரட்டை குடியுரிமையை பிரான்ஸ் அனுமதிக்கிறது. இருப்பினும் நம்முடைய சொந்த நாடு இரட்டைக்குடியுரிமை அனுமதிக்குமா […]
கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் வருகின்ற 2022-ஆம் ஆண்டில் வெளிநாட்டைச் சேர்ந்த 4,11,000 பேருக்கு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக கனேடிய அரசு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சீமான் கையெழுத்து போட்டால் வெளிநாடுகளில் குடியுரிமை கிடைக்கும் என்று அவர் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசம் ஆக்ரோஷம் கொண்டு மேடைகளில் பேசுபவர். அவரின் பேச்சைக் கேட்பதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் பேசும் பேச்சுகள் அனைத்தும் சிரிக்க வைப்பதோடு மட்டுமல்லாமல் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது ஒருபுறமிருக்க அவர் பேசிய பல கருத்துக்கள் விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் சீமானை அனைவரும் […]
கனடா அரசு, இன்றிலிருந்து சிலருக்கு பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. கனடா அரசு, தங்கள் நாட்டிற்குள் வருபவர்களில், கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் உடையவர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், கனடா அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் கனடாவிற்கு வரும்போது தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். கனடாவின் குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டிருப்பவர்கள், அவர்களின் நெருங்கிய குடும்பத்தினர், செல்லுபடியாகக்கூடிய கல்வி உரிமம் கொண்ட சர்வதேச மாணவர்கள் மற்றும் செல்லுபடியாகக்கூடிய பணி உரிமம் கொண்டவர்கள், […]
சுவிட்சர்லாந்தில் 2 கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேலவைக்கு விண்ணப்பம் ஒன்றை முன் வைத்துள்ளனர். அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் வசித்து வருகின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் வசிக்கும் வெளிநாட்டவருக்கு பிறக்கும் குழந்தைகள் தானாகவே அந்த நாட்டின் குடிமக்கள் ஆகிவிடுவர். ஆனால் சுவிட்சர்லாந்தில் அப்படி கிடையாது. ஒருவர் தனது வாழ்நாள் முழுவதும் சுவிட்சர்லாந்தில் தனது வாழ்க்கையை கழித்திருந்தாலும் அவருக்கு பிறக்கும் குழந்தை தானாக சுவிட்சர்லாந்தின் குடிமக்கள் ஆக முடியாது . இதனால் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த 2008ம் ஆண்டு இருந்த குடியுரிமை முறையை பின்பற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வேலையின் காரணமாக பெரும்பாலான அயல்நாட்டவர்கள் அந்நாட்டின் குடியுரிமை பெறுகின்றனர். இந்த குடியுரிமை பெறுவதில் இந்தியர்கள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர்.மேலும் அந்நாட்டு குடியுரிமை பெற விண்ணப்பிப்பவர்களுக்கு குடியுரிமை தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிக அளவு அயல்நாட்டவர்கள் குடியேறுவதை குறைப்பதற்காக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் இத்தேர்வில் சில மாற்றங்களை கொண்டு வந்தார். அதனடிப்படையில் கடந்த 2008 […]
ஹாங்காங் மக்கள் பிரிட்டனில் வாழ புதிய சிறப்பு விசா திட்டத்தை பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஹாங்காங்கில் ஏற்பட்ட கிளர்ச்சியின் எதிரொலியாக சீனா கடந்த ஆண்டு புதிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பிரிட்டிஷ் தேசிய வெளிநாட்டு BNO பாஸ்போர்ட் பயண ஆவணமாக செல்லுபடி ஆகாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பிரிட்டனில் இன்று பிற்பகல் முதல் பிரிட்டிஷ் தேசிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வேலை செய்யவும் வசிக்கவும் புதிய விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. BNO பாஸ்போர்ட் […]
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக போராடிய சிறுபான்மை மக்கள் மீது வழக்கு செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்று திருப்பூர் மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசியதாவது, திருப்பூரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை திமுகவினர் சந்தித்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி அவர்கள் திமுகவே […]
ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற்று ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் பதவி ஏற்க உள்ளனர். ஆட்சியில் அமர்ந்தவுடன் ஜோ பைடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவிற்கு சென்றவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் தான் முதல் கையெழுத்து போடுவார் என பலரும் கருதுகின்றனர். இதன்படி ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம்பெயர்ந்த மக்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கான திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி […]
ஐந்து வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வெள்ளை மாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற நாடுகளை சேர்ந்த 5 பேருக்கு வெள்ளை மாளிகையில் வைத்து குடியுரிமை சான்றுகள் அளிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவை சேர்ந்த பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் அரிய நிகழ்வாக அதிபர் டிரம்ப் முன்பு அந்நாட்டு குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார். அப்போது இந்திய பெண்மணி சுதா சுந்தரி நாராயணனை வரவேற்று […]
அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப் பிரச்சனை எழுப்பியுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்க இருப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை அதிகமாக […]
அயல்நாட்டிலிருந்து திருமணம் முடிந்து நேபாள் நாட்டிற்கு வரும் பெண்களுக்கு ஏழு வருடங்கள் குடியுரிமை வழங்கப்படாது என்ற சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேபால் நாட்டை சேர்ந்தவர்களை அயல்நாட்டு பெண்களை திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்கு ஏழு வருடம் முடிந்த பிறகே குடியுரிமை வழங்கப்படும் அதுவரை கிடையாது என்ற சட்டதிருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் ஒப்புதலுடன் நேபால் நாடாளுமன்றம் இந்த சட்டத்திற்கான மசோதாவை தாக்கல் செய்ய அந்நாட்டின் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு […]
இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்க அமெரிக்க அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துவரும் நிலையில் இந்தியர்களுக்கு கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து குடியுரிமை வழங்கி வருவதாக நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 20 தேதி பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அங்கு வசித்துவரும் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் அந்நாடு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. இதனிடையே, இந்தியர்களுக்கு கனடா அதிகம் முக்கியத்துவம் அளித்து அவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் குடியுரிமையை […]