குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேறியதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.. சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.. சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து கோரும் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியதாவது, ஒன்றிய அரசு 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், மதநல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்று பேரவை கருதுகிறது.. […]
Tag: குடியுரிமை திருத்தச் சட்டம்
கொரோனாவால் தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் சமூகதல செயற்பாட்டாளர்கள் உடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் திரு. JP நட்டா மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் ஆட்சியில் இந்துக்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார். கொரோனா தொற்று காரணமாக தாமதமான குடியுரிமை திருத்தச் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறிய அவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் […]
கடலூரில் வங்கியில் உள்ள பணத்தை திரும்ப பெற இஸ்லாமிய பெண்கள் ஒரே நேரத்தில் கூடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் அவர்கள் இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெறுகின்றது. கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை பகுதியில் இஸ்லாமியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்று […]
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக இஸ்லாமிய தலைவர்களுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்ட திருத்தம் மூலம் சிறுபான்மையினர் மற்றும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசு சார்பில் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து விதமான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் அதிகாரிகள் பதில் அளிக்க […]
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினியின் இல்லத்தில் சந்தித்து பேசி வருகின்றனர். CAA சட்டம் குறித்து ரஜினி தெரிவித்த கருத்து அதிர்ச்சியளிப்பதாக இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ள நிலையில் தற்போது இந்த சந்திப்பு நடைபெற்று வருகின்றது. குடியுரிமை சட்டத்தின் பாதிப்புகள் குறித்து நடிகர் ரஜினிகாந்துக்கு விளக்கம் தர சந்தித்து பேசி வருகின்றனர். முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திற்கு சென்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
ரஜினியின் குரல் இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை அளித்துள்ளது என்று தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இல்லத்ரத்திற்கு சென்று அவரை சந்தித்ததற்கு பின் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இஸ்லாமிய மக்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்று சொன்னது 30 கோடி இஸ்லாமிய மக்களின் மனதில் நம்பிக்கை கொடுத்துள்ளது. அவர் டெல்லி கலவரத்துக்கு குரல் கொடுத்ததற்கு […]
மதுரையில் நடைபெற இருந்த பாஜக பேரணி நடைபெற இந்தநிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதே போல பல பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்திற்கு எதிராகவும் , CAA சட்டத்திற்கு ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாஜக சார்பில் இன்று மாலை CAAக்கு ஆதரவாக மதுரையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதனால் மதுரை […]
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது. இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடஇந்தியாவில் இந்த […]