Categories
தேசிய செய்திகள்

8 மாத கர்ப்பிணி மனைவி….. கொடூரமாக கொலை செய்த போலீஸ்காரர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

காவலர் ஒருவர் கர்ப்பிணி மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் மோகன்லால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிறப்பு காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஆஷா தேவி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் ஆஷா தேவி 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் மோகன்லாலுக்கும், ஆஷா தேவிக்கும் இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“குடும்பத் தகராறு” தேசியக்கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்….. ஈரோட்டில் திடீர் பரபரப்பு….!!!!

திடீரென ஒருவர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் வளர்ப்பு பிராணிகள் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவியுடன் சாந்தகுமாருக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இவர் அரசு மருத்துவமனையில் உள்ள ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அதன்பிறகு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்ற பாதகையை கழுத்தில் தொங்க விட்டுவிட்டு கையில் தேசிய கொடியுடன் தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“குடும்பத்தகராறு” மனைவி எடுத்த விபரீத முடிவு…. பரிதவிக்கும் 2 வயது மகள்…. பெரும் சோகம்….!!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த இலக்கியா (28) என்பவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (35) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இதழினி (2) என்ற பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் பாண்டியராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பியுள்ளார். அப்போது கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு காரணமாக பிரச்சனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் மனைவி தற்கொலை…. சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி பெற்றோர் புகார்…. சென்னையில் பரபரப்பு….!!!

பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அமைந்தகரையில் உள்ள பிபி தோட்டம் பகுதியில் என்ஜினியராக வேலை பார்க்கும் கலைவேந்தன் (30) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக கலை வேந்தனுக்கும், அம்பத்தூரை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில், பிரியதர்ஷினி மதுரவாயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியதர்ஷினி நேற்று முன்தினம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“புதுமணத் தம்பதிகள்” குடும்பத் தகராறில் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகுனிச்சி குறவர் காலனியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பஞ்சணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சுதாகருக்கும்-ஆர்த்திக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி கணவன் தூங்கிய நேரத்தில் ஒரு கிணற்றில் […]

Categories
தேசிய செய்திகள்

குடும்பத் தகராறு….. மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை….. பரபரப்பு சம்பவம்….!!!

குடும்பத்தகராறு காரணமாக மகனை தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் வீராம்பட்டினம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில் முதல் மனைவி கடலூரிலும், இரண்டாவது மனைவி புதுச்சேரியில் அவருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு இரண்டு மனைவி என்பதால் அடிக்கடி குடும்பத்தில் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு சண்டை வந்தபோது இரண்டாவது மனைவியின் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தகராறு… “விஷம் குடித்த நர்ஸ் மற்றும் மகள் மரணம்”…. சோக சம்பவம்..!!

குடும்ப பிரச்சனை காரணமாக விஷம் குடித்து நர்ஸ், அவருடைய மகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சந்திப்பில் சி.என். கிராமத்தில் வசித்து வருபவர் காற்றாலை இன்ஜினியர் மாடசாமி. இவருடைய மனைவி சுமதி(38). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. சுமதி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மாடசாமி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீட்டிற்கு வந்தபோது சுமதி மற்றும் இளைய மகள் சுப […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்த கொடூர கணவன்….!!காரணம் இதுவாம்….!!

குடும்ப சண்டையில் மனைவியை 8 வது மாடியில் இருந்து தூக்கி வீசி கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் லெக்னௌ அருகே கோஸைகஞ்ச் பகுதியில், வசித்து வருபவர் சஞ்சீவ் (36), இவரது மனைவி நீது (32) இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும் 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் திருமணமான நாள் முதலே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாததால் தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் உள்ள பாவடி தெருவில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த 2-ஆம் தேதி கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. சரமாரியாக வெட்டிய கணவர்…. கைது செய்த போலீஸ்….!!

குடும்பத்தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கண்ணந்தங்குடி கீழையூர் கிராமத்தில் கண்ணன்-குமுதவள்ளி என்ற  தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் குமுதவள்ளியின் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இதில் மகள்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். இதனையடுத்து கணவன்- […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடிக்கடி வந்த தகராறு…. தொழிலாளியின் சோக முடிவு…. போலீஸ் விசாரணை….!!

குடும்பத்தகராறு காரணமாக கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியில் ஜெகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் குடும்பபிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெகநாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“2 குழந்த இருக்கு”, இருந்தாலும் இவரு இப்படி பண்ணிருக்க கூடாது…. கடல் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் கடல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் கடல் தொழிலாளியான பென்னட் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இவரது குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டே வந்திருக்கிறது. இதனால் மனமுடைந்த பென்னட் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கினை போட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கூடங்குளம் காவல்துறையினர் பென்னடின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப சண்டையை தடுக்க சென்ற…” காவலர்களுக்கு நேர்ந்த கொடுமை”… அதிர்ச்சி சம்பவம்..!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் குடும்ப சண்டையை தடுக்க சென்ற காவலர்கள் தாக்கப்பட்ட  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியை சேர்ந்த ரஃபிக் என்பவரின் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக வீட்டின் அருகில் இருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு இரண்டு காவலர்கள் சென்று சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது காவலர்களை ரபீக்கின் குடும்பத்தினர் செங்கல் மற்றும் கற்களால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த காவலர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து காவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கு மேல அவர் கூட என்னால வாழ முடியாது… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

நிலக்கோட்டை அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மல்லியம்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகா என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் கார்த்திகா மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இச்சம்பவம் குறித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

3 மாத கர்ப்பிணி…. குடும்பத் தகராறில் நேர்ந்த சோகம்…. போலீஸ் விசாரணை….!!

மதுரையில் கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை நகரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார் . இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த கிருபாராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இதைத்தொடர்ந்து தற்போது கிருபா ராணி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் . இந்நிலையில் கிருபாவிற்கும் செந்தில்குமாருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டிருக்கிறது . இதனால் மிகவும் மன உளைச்சலடைந்த கிருபா நேற்று […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முற்றிய குடும்பத்தகராறு… மனைவி மீது தீ வைத்த கணவன்… காவல்துறை கைது..!!

நாகை அருகே குடும்ப தகராறில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதநாயகம் செட்டித்தெருவில் விஜயபாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன்பு தனவள்ளி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் தற்போது ஆண் குழந்தை ஒன்று உள்ளது. மேலும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு முற்றியது. அப்போது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

எங்க அம்மாவயே அடிக்கிறியா..! தந்தையை கொடூரமாக தாக்கிய மகன்… சிவகங்கையில் பரபரப்பு சம்பவம்..!!

சிவகங்கையில் குடும்ப தகராறில் மகன், தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாலுக்கோட்டை கிராமத்தில் முனியாண்டி என்பவர் வசித்து வந்தார். இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ராக்கு என்ற மனைவியும், பொன்னி என்ற மகளும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக ராக்குவுக்கும், முனியாண்டிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முனியாண்டி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

3ஆண் குழந்தைகளை தவிக்கவிட்டு…! வாழ்க்கையை முடித்துக்கொண்ட இலங்கை தமிழ்ப்பெண்… காரணம் என்ன ?

திருவண்ணாமலையில் குடும்ப பிரச்சனையினால் பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள தென் பள்ளிப்பட்டு இலங்கை தமிழர்களின் முகாமை சேர்ந்த தம்பதிகள் கனகராஜ் மற்றும் மேரி. இத்தம்பதிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கனகராஜ் மற்றும் மேரி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். சம்மபவத்தன்று இருவருக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டதில் மன விரக்தியில் இருந்த மேரி தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அதன்பின்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுல ஒரே சண்டை…. கோவித்துக் கொண்ட மனைவி….. கணவனுக்கு நேர்ந்த துயரம்….!!

குடும்ப தகராறில்  மனைவியும் குழந்தையும் பிரிந்து  பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின்   மேட்டுத்  தெருவைச் சேர்ந்தவர்  மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ்,  30வயதுடைய  இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை  உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும்  இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது . மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப […]

Categories
செங்கல்பட்டு தற்கொலை மாவட்ட செய்திகள்

தீராத வீட்டுப் பிரச்சனை…..கடுமையான மன உளைச்சல்…… அர்ச்சகரின் சோக முடிவு….!!

மதுராந்தகம் அருகே குடும்ப தகராறில் அர்ச்சகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் என்னும் பகுதியை சேர்ந்தவர் ரவி. 48 வயதான இவர் கோவில்களில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ரவி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப் போட்டுக் கொண்டார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறில் இளைஞர் மீது துப்பாக்கி சூடு…!!

சென்னை ராயபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக வாலிபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராயபுரம் என்.ஆர்.டி சாலையில் உள்ள தனியார் குடியிருப்பில் வசித்து வருபவர் செய்யது இப்ராஹீம்ஷா. இவருக்கும் இவரது மனைவிக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இது தொடர்பாக செய்யது இப்ரஹிம்ஷ மனைவியின் தங்கை மகன் அசாருதீன் சையது இப்ரஹிம் ஷாவிடம் பேச முயன்றுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ரஹிம் உரிமம் பெற்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“மன உளைச்சல்” அலற வைத்த மாஜி ராணுவ வீரரின் செயல்…!!

கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியார் குடும்பத்துடன் தகராறு… 3 பேருக்கு கத்திக்குத்து… மருமகன் கைது..!!

குடும்பத்தகராறு காரணமாக மூன்றுபேரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தில் கண்ணன்  (30) என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழில் செய்து வரும் இவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பேரளி கிராமத்தை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் மலர்கொடி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனால் மஞ்சுளா குடும்பத்தினருக்கும், கண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், மஞ்சுளா […]

Categories

Tech |