மத்தியபிரதேச மாநிலம் பாலஹட் மாவட்டம் சீதாபூர் கிராமத்தில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று மாலை வகுப்பு முடிந்த பின் மாணவ-மாணவிகள் வீடு திரும்பினர். அப்போது, அந்த பள்ளியில் படித்த மாணவன், 2 மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும், அக்கம்பக்கத்திலும் திவிரமாக தேடினர். அப்போது, கிராமத்திற்கு அருகே உள்ள குட்டையில் 3 பேரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த […]
Tag: குட்டை
ஆபத்தான குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்ககோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்தலையூர் மேற்கு குட்டிபாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில் அருகில் ஒரு குட்டை இருக்கின்றது. இந்நிலையில் பாசிபடர்ந்து காணப்படும் இந்த குட்டையில் மக்கள் குப்பைகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள். மேலும் ஆபத்தை விளைவிக்கும் இந்த குப்பை அருகே குழந்தைகள் விளையாடுகிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் ஆபத்தான இந்த குட்டையில் உள்ள கழிவு நீரை வெளியேற்றிவிட்டு, சுற்றி […]
வனப்பகுதியில் யானைகள் தனது குட்டிகளுடன் குட்டையில் இறங்கி குளித்து மகிழ்ந்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், டி.என்.பாளையம், கடம்பூர், விளாமுண்டி, ஜீர்பள்ளி, சத்தியமங்கலம் போன்ற 10 வனச்சரகங்கள் இருக்கின்றன. இங்கு யானை, கரடி, சிறுத்தை, புலி போன்ற பெரும்பாலான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. எனவே தற்போது வனப்பகுதியில் பரவலாக மழை பெய்து இருப்பதனால் செடி, கொடிகள் துளிர்விட்டு பசுமையாக இருக்கின்றது. மேலும் வனப்பகுதியில் உள்ள குட்டைகள் சீக்கிரமாக நிரம்பி […]
குட்டையில் குளிக்கச் சென்ற இளம்பெண் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்திலுள்ள தொரப்பாடி காந்தி தெருவில் நவ்சாத் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மூத்த மகள் நசியா 8-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் நசியா தனது தங்கை, தம்பிகளுடன் சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அப்போது நசியா குளித்துக் கொண்டிருக்கும்போது நீச்சல் தெரியாமல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி விட்டார். இதனைக் கண்ட சிலர் நசியாவை […]
வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் […]
தேனியில் விஷம் கலந்த நீரை குடித்ததால் 16 ஆடுகள் வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டியில் விவசாயியான பாஸ்டின் துரை என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவரும் வசித்து வருகிறார். இவர்களிருவரும் ஆடுகளை வளர்த்து அதனை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லுவது வழக்கம். அந்த வகையில் இருவரும் ஆடுகளை தர்மபுரி அருகே மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். இதனையடுத்து ஆடுகள் தாகத்தை தணிப்பதற்காக அங்கிருந்த குட்டையிலிருந்த தண்ணீரை குடித்தது. அக்குட்டையிலிருந்து […]
இரண்டு வயது சிறுவர்கள் இருவர் குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மன் நாட்டின் கிரேவன் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பிற்கு அருகில் இருந்த குட்டையில் இரண்டு சிறுவர்களின் சடலம் மிதந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்த சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு வயது என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தெரியவந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவர்கள் இறந்து விட்டதாக […]