Categories
உலக செய்திகள்

“சந்தை பகுதியில் திடீர் குண்டுவெடிப்பு”… 13 பேர் காயம்… அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குஸ்தர் மாவட்டத்தில் சந்தை ஓன்று அமைந்துள்ளது. இந்த சந்தையில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் நேற்று இரவு குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தற்போது பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கிளை அமைப்பான பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் படுகொலை… பெரும் பரபரப்பு…!!!!!

கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது […]

Categories
மாநில செய்திகள்

குக்கர் குண்டு வெடிப்பு விவகாரம்…. கோவைக்கும்- மங்களூருக்கும் தொடர்பு இருக்கிறதா?… வெளியான பகீர் தகவல்….!!!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதனையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர் ஆவார். இதனால் ஜமீஷா மூபினுக்கும் முகமது ஷாத்ரிக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலமாக பேசி […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கார் வெடித்து சிதறிய சம்பவம் : 5 பேருக்கு நவம்பர் 8 வரை நீதிமன்ற காவல்..!!

கோவையில் கார் வெடித்து சிதறி சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேருக்கு நவம்பர் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகரத்தின் முக்கிய பகுதியான கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நேற்று அதிகாலை நேரத்தில் கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த சிலிண்டர் வெடிகுண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தமிழக காவல் […]

Categories
மாநில செய்திகள்

கோவை குண்டுவெடிப்பு சம்பவம்.. “இது தற்கொலைப்படை தாக்குதல் தான்”… பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடி…!!!!!

கோவை கார் சிலிண்டர் விபத்து தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்போது தீபாவளிக்கு முந்தினம் அக்டோபர் 23ஆம் தேதி கோயம்புத்தூரில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அதிகாலை 4 மணிக்கு ஒரு கார் விபத்து நடைபெற்றதாக செய்தி வந்தது அதன் பின் அந்த காரில் இருந்து சிலிண்டர் வெடித்துள்ளது என்ற செய்தி வந்தது. அதன் பின் தமிழக காவல்துறை டிஜிபி ஏடிஜிபி போன்ற விரைந்து சென்றுள்ளனர். இதனையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் கொடூரம்…. கல்வி நிறுவனத்தில் பயங்கர குண்டுவெடிப்பு… 32 பேர் பலியான பரிதாபம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் தற்கொலை படை பயங்கரவாதி வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததில் 32 நபர்கள் பரிதாபமாக உடல் சிதறி பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் தஷ்ட்-இ-பார்ச்சி என்னும் நகரில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்திற்குள் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் திடீரென்று புகுந்துள்ளார். அதனை தொடர்ந்து தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை அவர் வெடிக்க செய்ததில் பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 32 நபர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர். […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் திடீரென வெடித்த குண்டு…. கண்டக்டர் உள்ளிட்ட 2 பேர் காயம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

ஜம்மு காஷ்மீர் ஊதம்பூர் மாவட்டம் டொமைல் சவுக்கில் பெட்ரோல் பம்ப் அருகில் பயணிகள் பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த பேருந்தின் உள்ளே கண்டக்டர் மற்றும் மற்றொரு நபர் இருந்தனர். அதன் பிறகு இரவு 10:30 மணிக்கு அந்த பேருந்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதன் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உதம்பூர் மாவட்டம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பஸ் கண்டக்டர் மற்றும் மற்றொரு […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதல்…. சந்தேக நபராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அதிபர்…!!!

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் அதிபரான  சிறிசேனாவை, சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 11 நபர்கள் உட்பட 270 நபர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த […]

Categories
தேசிய செய்திகள்

இவரைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் பரிசு வெளியான முக்கிய அறிவிப்பு

மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டி வெடிப்பில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஆனால் தாவூத் இப்ராகிமை தேடப்படும் பயங்கரவாதியாக இந்தியா அறிவித்துள்ளது. அவர் பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் காராச்சி நகரில் தலைமறைவாக வசித்து வருகிறார். பாகிஸ்தான் அரசு அவருக்கு தேவையான வசதிகளை செய்து வருகிறது. இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கூறியது, இந்தியாவில் ஒரு பயங்கரவாத குழுவை அமைத்து நாட்டுககுள் வெடிபொருள்கள், பயங்கர ஆயுதங்கள், கள்ள நோட்டுகள் மற்றும் போதைப்பொருளை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி….. மீண்டும் ஆப்கானில் குண்டு வெடிப்பு…. 60க்கும் மேற்பட்டோர் பலி?….. 30க்கும் மேற்பட்டோர் காயம்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் காபூலில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை அடுத்து, அந்நாட்டில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி பெரும்பாலான மாகாணங்களை படிப்படியாக கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை அடுத்து முழுவதுமாக கைப்பற்றிய தலிபான்கள் தற்போது அங்கு ஆட்சி செய்து வருகின்றனர்.. இந்த ஆட்சி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. […]

Categories
உலகசெய்திகள்

பாகிஸ்தானில் குண்டு வீசி தாக்குதல்… ஒருவர் பலி…14 பேர் படுகாயம்… பெரும் பரபரப்பு….!!!!!!!

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர  கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 […]

Categories
தேசிய செய்திகள்

வாரணாசியில் குண்டுவெடிப்பு 16 ஆண்டுகள் வழக்கு….. பயங்கரவாதிக்கு தூக்குத் தண்டனை…. கோர்ட் அதிரடி உத்தரவு…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதாவது அன்று மாலை 6 மணிக்கு வாரணாசியில் உள்ள சங்கத் மொச்சான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அன்று பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதனால் பக்தர்கள் அலறியடித்து ஓடினர். பலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு குண்டு வெடித்த 15 நிமிடங்கள் கழித்து வாரணாசி கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் முதல் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து 4 குண்டுவெடிப்புகள்…. 16 பேர் பலி…. பயங்கர சம்பவம்…. !!!

ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள 4 இடங்களில் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் ஷியா பிரிவினரை குறிவைத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும் இந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் மசூதியில் மாலை நேரத் தொழுகை நடந்துகொண்டிருந்த போது குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அதனைப் போலவே மாஷார் ஷரிப் நகரில் மூன்று மினி […]

Categories
உலக செய்திகள்

ரமலான் மாதம்… வழிபாட்டு தளத்தில் குவிந்த பக்தர்கள்… திடீர் குண்டுவெடிப்பு… 50 பேர் உயிரிழப்பு….!!!!!

ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டு தளத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் ஹலிபா ஷகிப் என்ற இஸ்லாமிய மதவழிபாட்டு தளம் இருக்கிறது. ரமலான் மாதம் என்ற காரணத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை வழிபாட்டு தளத்தில் அதிக அளவிலானோர் வழிபாடு செய்ய குவிந்திருந்தனர். சன்னி பிரிவினர் வழிபாடு நடத்தும் அந்த மதவழிபாட்டு தளத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு…. பின்னணியை கண்டறிய வேண்டும்…. போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்…!!!

இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய  நபர்களின் குடும்பத்தினர் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு…. நாங்க பொறுப்பேற்க்கிறோம்…. வெளியான தகவல்கள்….!!!!!!

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதில் இருந்து, குண்டுவெடிப்புகளும், தாக்குதல்களும் வழக்கமாகி கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவ்லவி செகந்தர் மசூதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 30-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 43 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள்  வெளியாகி இருக்கிறது. இதே போல மசார்-இ-ஷரிப் மற்றும் ஷேடோகான் ஆகிய பள்ளிவாசல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

லைவ் அப்டேட்ஸ்: மைக்கோ லைவ் குண்டுவெடிப்பு… 10 பேர் பலி, 46 பேர் காயம்… பெரும் சோகம்…!!!!

உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டதாக அந்நகர மேயர் அலுவலகம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 44 நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை காண்போம். ஏப்ரல் ஐந்தாம் தேதி அதிகாலை 2.02 மணி அளவில் உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் நடந்த குண்டு வெடிப்பில் சிக்கி பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். மேலும் 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

டீக்கடையில் குண்டுவெடிப்பு…. காவல்துறை விசாரணை…. பெரும் பரபரப்பு….!!!!

கேரளாவில் பரபரப்பான சாலையில் அமைந்துள்ள டீக்கடையில் குண்டுவெடிப்பு ஏற்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேரள மாநிலம் பத்தனம் திட்டா அருகே பிடனுபிலவு அனிகாடு பகுதியில் பஷீர் என்பவருக்கு சொந்தமான கடையில் வழக்கம்போல் டீ கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கடையில் சில வாடிக்கையாளர்கள் வந்தனர். அவர்கள் கடையின் உள் பகுதியில் அமர்ந்து டீ குடித்தனர். அப்போது திடீரென கடையில் குண்டு வெடிக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரித்தானியாவில் வெடித்து சிதறிய டாக்ஸி… உயிர் சேதங்களை தவிர்த்த டிரைவர்… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

பிரித்தானியாவில் டாக்சி ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் லிவர்பூலில் உள்ள மகளிர் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் பகல் 10.59 மணி அளவில் டாக்ஸி ஒன்று திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவத்தில் டாக்சிக்குள் இருந்த நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் டாக்ஸி வெடிப்பு சம்பவம் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளான பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சம்பவத்தன்று அந்த டாக்ஸியில் ஏறிய நபர் ஒருவர் டாக்சியின் ஓட்டுநரான […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்… பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் இன்று திடீர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆயுதம் மற்றும் குண்டுவெடிப்பு தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இன்று காபூல் நகரில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

Categories
உலக செய்திகள்

மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்… 3 பேர் உயிரிழப்பு… தலிபான் அதிகாரிகள் பரபரப்பு தகவல்..!!

ஆப்கானிஸ்தானில் எதிர்பாராதவிதமாக மசூதி ஒன்றில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் Spin Ghar மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் எதிர்பாராதவிதமாக குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 15 பேர் காயமடைந்ததாகவும், மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரின் தொடர் தாக்குதல் காரணமாக Nangarhar மாகாணத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தலிபான் அதிகாரிகள், வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறும் என்பதால் spin Ghar மாகாணத்தில் உள்ள […]

Categories
உலக செய்திகள்

இராணுவ பேருந்தை குறிவைத்து தாக்குதல்…. 14 பேர் பலி…. பதிலடி கொடுத்த அரசு….!!

சிரியாவில் இராணுவ பேருந்து மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் நடைபெறும் உள்நாட்டு போரானது முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. மேலும் சிரியாவின் முக்கிய பகுதியான idlib மாகாணம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இதனால் சிரியா அரசுப்படை idlib மாகாணத்தை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, ரஷியா அரசின் உதவியோடு சிரியா இராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். […]

Categories
உலக செய்திகள்

குண்டுவெடிப்பில் சிக்கிய வாகனம்…. 4 வீரர்கள் பலி…. பிரபல நாட்டு எல்லையில் பயங்கரம்….!!

பாகிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு படையினரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பஞ்பூர் மாவட்டம் உள்ளது. இந்த பஞ்பூர் மாவட்டமானது ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ளது. இந்த நிலையில் பஞ்பூர் பகுதியில் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது சாலையோரம் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டு ஒன்று பயங்கரமாக வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனம் வெடித்து சிதறி முழுவதுமாக சேதம் அடைந்தது. குறிப்பாக இந்த […]

Categories
உலக செய்திகள்

குண்டுவெடிப்பில் சிக்கிய இராணுவ பேருந்து…. 13 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

சிரியாவில் நாடாளுமன்றம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் சாலை ஓரத்தில் மறைத்து வைத்திருந்த 2 வெடிகுண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி விபத்துக்குள்ளானது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 3 இராணுவ வீரர்கள் படுகாயங்களுடன் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த சம்பவம் இன்று காலை பரபரப்பான போக்குவரத்து மிகுந்த பாலம் ஒன்றில் நிகழ்ந்துள்ளது. அதிலும் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் மசூதியில் வெடிகுண்டு தாக்குதல்.. 100 பேர் உயிரிழப்பு..!!

ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் தொழுகையில் இருந்த 100க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் குந்தூஸ் என்ற மாகாணத்தில் இருக்கும் ஒரு மசூதியில் தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை, இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் தான் சமீபத்தில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்பு…. விசாரணையை தொடங்கிய போலீஸ்…. அமெரிக்காவில் நடந்த சம்பவம்….!!

அமெரிக்காவில் பொது மக்கள் வாழும் வளாகத்தில் திடீரென ஏற்பட்ட குண்டு வெடிப்பு குறித்து காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் அட்லாண்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த அட்லாண்டா பகுதியிலுள்ள பொதுமக்கள் வாழும் இடத்தில் திடீரென குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட குண்டு வெடிப்பினால் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனையடுத்து குண்டு வெடிப்பினால் காயமடைந்த அந்த நபரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் எவ்வாறு […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு…. பெரும் பதற்றம்…!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர்.  இவ்வாறு மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் 13 பேர் அமெரிக்க படையினர் உட்பட 100 பேர் பலியாகினர். இந்நிலையில் காபூல் பகுதியில் மீண்டும் குண்டு வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் அங்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஆப்கானில் குண்டுவெடிப்பு – ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்…!!!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர்.  இதனால் அங்கிருந்து வரும் மக்களுக்கு பல்வேறு நாடுகளும் அடைக்கலம் கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஆப்கான் மக்கள் குறித்து பல்வேறு நாடுகளும் கவலை தெரிவித்து வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே சற்றுமுன் குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் […]

Categories
உலக செய்திகள்

அங்க என்ன இருக்கு…. வெடித்த குண்டுகள்…. 7 தாலிபான்கள் பலி…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பதுங்கு குழிகளில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தீடிரென வெடித்ததில் 7 தாலிபான்கள் பலியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் இருபது வருடங்களாக இருந்த அமெரிக்க படையினர் வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவர்கள் வெளியேறுவதை தொடர்ந்து தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் தாலிபான்களின் நடைமுறைகளினால் அச்சமடைந்துள்ளனர். இந்த சமயத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பக்டியா  மாகாணத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

விமானப்படை தளத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு…. பரபரப்பு….!!!!!

ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் நள்ளிரவு 1.45 மணிக்கு 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

ஆப்கான் தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு.. வெடித்து சிதறி 55 நபர்கள் பலியான பரிதாபம்..!!

காபூலில் பள்ளிக்கு அருகில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதலில் மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று குண்டு வெடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இதில் கார் வெடிகுண்டு, மோட்டார் வெடிகுண்டு என்று தொடர்ந்து வெடித்திருக்கிறது. இந்நிலையில் Sayed ul Shuhada என்ற பள்ளியின் அருகில் மாணவர்கள் வெளியேறும் சமயத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அதிகமான மாணவர்கள் உட்பட சுமார் 55 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்த […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லி குண்டுவெடிப்பு பயங்கரவாத சம்பவம் தான்…!! “அதுக்கு ஆதாரம் கிடைச்சிருக்கு” – இஸ்ரேல் தூதர் ரான் மல்கா…!!

டெல்லி இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத சம்பவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட I.E.T வெடிபொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் ஆங்கில  செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கும்  தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும்  ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று […]

Categories
உலக செய்திகள்

பாக். மதபாடசாலையில் குண்டுவெடிப்பு – சிறுவர்கள் உட்பட 7 பேர் பலி…!!

பாகிஸ்தானில் செயல்பட்ட மதம் பாடசாலையில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் உள்ள சுவன் ஜமாத் என்ற மசூதி ஒரு  பகுதியில் மத கருத்துக்களை  கற்றுக் கொடுக்கும் மத பாடசாலை செயல்பட்டு வந்தது. அந்த பள்ளியில் சிறுவர்கள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மத பாடசாலையில் இன்று காலை வழக்கம்போல 80க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மத கல்வி பயின்று வந்தனர். காலை 8.30 மணி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு… துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் பலி… 22 பேர் படுகாயம்…

பாகிஸ்தானில் மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததால் துணை ராணுவ படை வீரர் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் மேற்கு கடலோர பகுதியின் வழியாக படகுகளில் சட்டவிரோதமாக பயணம் செய்த 160 அகதிகள் மீட்கப்பட்டிருப்பதாக இடம்பெயர்வு காண சர்வதேச அமைப்பு கூறியுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் உளவு பார்த்ததாக கூறி ரஷ்ய தூதரக அதிகாரிகள் மூன்று பேரை அந்நாட்டின் அரசு நாடு கடத்தி இருக்கிறது. இத்தகைய […]

Categories
தேசிய செய்திகள்

இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு…! இந்தியாவில் இருக்கும் தாக்குதல் நடத்தியவரின் மனைவி…! அதிர்ச்சி தகவல் …!!

இலங்கையில் தேவாலயங்கள் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவரின் மனைவி இந்தியாவிற்கு தப்பி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த  ஆண்டு ஏப்ரல் 21 இல் நடைபெற்ற ஈஸ்டர் திருநாள் அன்று இலங்கை தலைநகர் கொழும்புவில் இருக்கின்ற மூன்று தேவாலயங்கள் மற்றும் சொகுசு விடுதிகள் மீது தொடர்ச்சியாக குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. அத்தகைய சம்பவத்தில் 260 நபர்கள் உயிரிழந்தனர் மேலும் 500க்கும் மேலான மக்கள் காயமடைந்தனர். இத்தகைய தாக்குதல் தொடர்பாக 200க்கும் மேற்பட்ட நபர்களை இலங்கை காவல்துறையினர் கைது செய்து விசாரணை […]

Categories
உலக செய்திகள்

திடீர் குண்டுவெடிப்பு…. 5 சிறுவர்கள் பரிதாபமாக பலி…!!

நைஜீரியாவில் விவசாய பண்ணை குண்டுவெடிப்பில் 5 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்கா நாட்டின் நைஜீரியா வடமேற்கு பகுதியில் இருக்கின்ற காட்சினா மகாணத்தில் உள்ள யம்மாமா என்ற கிராமத்தில் விவசாய பண்ணை ஒன்று இருக்கின்றது. அங்கு அந்த கிராமத்தைச் சேர்ந்த பல சிறுவர்கள் அவர்களின் கால்நடைகளின் உணவிற்காக புல் அறுக்க பண்ணைக்கு சென்றுள்ளனர். அச்சமயத்தில் சிறுவர்கள் அனைவரும் பண்ணையில் இருக்கின்ற ஒரு மரத்தின் அடியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் அங்கு குண்டு வெடித்ததில் […]

Categories

Tech |