ஆப்கானிஸ்தான் நாட்டின் வடபகுதியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதில் மூவர் காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் பால்க் மாகணத்திலுள்ள என்னும் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூவர் காயமடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய பேருந்தை குறிவைத்து, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்று அந்த மாகாணத்தினுடைய காவல்துறையின் செய்தித் தொடர்பாளரான முகமது ஆசிப் வஜிரி தெரிவித்துள்ளார். இது குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு தற்போது வரை எந்த அமைப்பினரும் பொறுப்பு ஏற்கவில்லை.
Tag: குண்டுவெடிப்பு தாக்குதல்
பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் இருக்கும் சதார் பகுதியில் நேற்று இரவு நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 13 நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதில் நான்கு பேர் உயிருக்குப் போராடிய நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குண்டு வெடிப்பின் போது, அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பலத்த […]
உக்ரைன் நாட்டில் பள்ளிக்கூடம் ஒன்றின் மீது குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 60 நபர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா தொடர்ந்து தீவிரமாக போர் தொடுத்து வருவதால் பக்கத்து நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்திருக்கிறார்கள். பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என்று பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளும் கட்டிடங்களும் குண்டுவீச்சு தாக்குதலில் பலத்த சேதமடைந்திருக்கிறது. இந்த போர் மேலும் தொடரும் என்று கூறப்பட்டிருப்பதால், சொந்த நாட்டிலேயே மக்கள் […]
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்ததில் காவல்துறையினர் மூவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் குவெட்டா பகுதியின் பாத்திமா ஜின்னா சாலையில் திடீரென்று சமூகவிரோதிகள் சிலரால் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு கடை தீப்பற்றி எரிந்துவிட்டது. அதன்பிறகு, உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இந்த பயங்கர விபத்தில் காவல்துறையினர் மூவர் பலியானதாகவும் 25 க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
தேர்தலுக்கு முன்னர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்பு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தாக்குதலானது தேர்தலுக்கு முன்னதாகவே நடைபெற வாய்ப்புள்ளதாக சந்தேகம் எழுப்பியுள்ளது. இது குறித்தான தகவலை கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் தாக்குதல் இம்முறை நடத்தப்படுமாயின் அதற்கு இஸ்லாமியர்கள் பொறுப்பு இல்லை என்றும் கூறியுள்ளார். இதனை தென்னிலங்கை ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியின்போது கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல செய்தி நிறுவனம் ஒன்று ஆப்கானிஸ்தானில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் 100 பேர் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் சமீபகாலமாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பே கொடூரத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் நோட்டா கூட்டுப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய […]