குதிரை பந்தயம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் ஆண்டுதோறும் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயம் ஒரு வருடமாக கொரோனா பாதிப்பு காரணமாக நடைபெறவில்லை. கடந்த வருடம் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி குதிரை பந்தயம் நடைபெற்றது. ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகிற 14-ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பந்தயம் நடைபெறுகிறது. இந்த பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக வெளிமாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட குதிரைகள் வந்துள்ளது. […]
Tag: குதிரை பந்தயம்
அமெரிக்காவில் நடந்த பெகாசஸ் உலகக்கோப்பை குதிரை போட்டியில் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளருக்கு 22 கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உலகக்கோப்பை குதிரை போட்டி நடந்தது. இதில் 6000 அடி தூரம் குதிரைகள் ஓடியது. நான்கு வயதுடைய Life is Good எனும் குதிரை மற்றும் நிக்ஸ்கோ என்னும் குதிரை இரண்டிற்கும் இடையில் கடுமையான போட்டி ஏற்பட்டது. எனினும், தொடக்கத்திலிருந்தே முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த Life is Good என்னும் குதிரை இந்த போட்டியில் முதலிடம் […]
ஹாங்காங்கில் குதிரை பந்தயத்தில் கலந்து கொண்ட 2 குதிரைகள் பலத்த காயங்களுடன் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளன. ஹாங்காங்கில் உள்ள ஷா டின் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சர்வதேச குதிரை பந்தயம் நடைபெற்றது. அந்த பந்தயத்தின் போது தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வீராங்கனையான லைல் ஹெவிட்சன் ஓட்டி சென்ற குதிரை எதிர்பாராதவிதமாக தடுமாறி கீழே விழுந்தது. அதனைத் தொடர்ந்து மூன்று குதிரைகள் விழுந்து கிடந்த குதிரையின் மீது மோதி நிலை தடுமாறி விழுந்தன. இந்த சம்பவத்தில் பலத்த காயங்களுடன் மைதானத்தில் […]
ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் ரேஸ் கிளப்பில் ஒவ்வொரு வருடமும் குதிரை பந்தயம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் குதிரை பந்தயம் நேற்று நடந்தது. அப்போது நடந்த விபத்தில் குதிரை பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங்(23) என்ற இளைஞர் பந்தயத்தின் போது, குதிரையிலிருந்து எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த […]