Categories
தேசிய செய்திகள்

இது வேற லெவல்!!… குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா…. அரங்கமே உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம்….!!!!!

ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உடா சிறுவர் பூங்காவில் 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசா அணியும் முதல் பரிசை வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். அதன் பிறகு ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துசண்டை விளையாடினார். […]

Categories
உலக செய்திகள்

குத்துசண்டை போட்டியில் துப்பாக்கிசூடு…. பதறியடித்து ஓடிய மக்கள்… அதன்பின் தெரிந்த உண்மை…!!!

அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டி நடந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அமெரிக்க நாட்டில் தற்போது துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப்பள்ளியில் 18 வயதுடைய நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அதனைத் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற…. லவ்லினாவுக்கு ரெனால்ட் பரிசு…!!!

ஜப்பானில் உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பல வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினர். இதில் பல்வேறு வீரர்களும் வெற்றி பெற்று பதக்கங்களைப் பெற்றுள்ளனர். ஒலிம்பிக் வரலாற்றில் தற்போது நடைபெறும் போட்டியில் தான் இந்தியா அதிகபட்சமாக 7 பதக்கங்கள் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம்) வென்றுள்ளது. இவ்வாறு பதக்கங்களை வென்ற வீரர்களுக்கு பல்வேறு தரப்பிலும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டையில் வெண்கலம் வென்ற லாவ்லினாவுக்கு ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் வெளியான […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

அதிரடி துவக்கம்: வெற்றியோடு துவங்கிய முகமது அலி பேரன்…!!!

குத்துச்சண்டை வரலாற்றில் தலை சிறந்த வீரராகக் கருதப்படும் முகமது அலியின் பேரன்  நிகோ அலியின் பேரன் நிக்கோ அலி தனது முதல் குத்துசண்டை ஆட்டத்தில் இன்று களமிறங்கினார். 21 வயதே ஆகும் நிகோ அலி, ஜார்டன் வீக்ஸை முதல் சுற்றிலேயே “டெக்னிகல் நாக் அவுட்” முறையில் வென்றார். நிகோ அலி கருப்பு வெள்ளை “ஷார்ட்ஸ்” அணிந்து குத்துச்சண்டை மேடையில் ஏறியது பலருக்கு முகமது அலியை நியாபகப்படுத்தியுள்ளது.

Categories
குத்து சண்டை சற்றுமுன் விளையாட்டு

BREAKING: ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம் – வாவ்…!!!

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை போட்டியின் வெல்ட்டர் வெய்ட்(69 கிலோ) பிரிவு அரையிறுதி போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனலி புஸேனாஸ் உடன் மோதிய லவ்லினா 0-5 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தார். தோல்வி அடைந்ததால் லவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. தனது முதல் போட்டியிலேயே வெண்கலம் வென்று சாதித்துள்ளார்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

“தோல்வியடையும் தருவாயில்” கோபத்தில் நியூசி வீரரின்…. காதை கடித்த சக வீரர்…!!!

உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா காரணமாக பல்வேறு நாடுகளிலும் பல போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வந்ததது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஜப்பானில் உள்ள டோக்கியோவில்  2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குத்துச்சண்டை போட்டியின் 91 கிலோ எடை பிரிவில் மொராக்கோ வீரர் யூனிஸ் பல்லாவும், நியூசிலாந்து வீரர் […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீரர் மணிஷ் கவுசிக் தோல்வி….!!!!

ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று காலை முதல் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக தொடங்கி உள்ளது. ஒலிம்பிக் பளுதூக்கும் போட்டியில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார். ஒலிம்பிக் போட்டியில் சீனா முதல் தங்க பதக்கத்தை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியின் 63 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மணிஷ் கவுசிக் தோல்வி அடைந்தார். குத்துச்சண்டை ஆடவர் 63 கிலோ எடைப் பிரிவில் முதல் […]

Categories
உலக செய்திகள் குத்து சண்டை விளையாட்டு

FLASH NEWS: மிகவும் பிரபலமான WWE வீரர் காலமானார் – சோகம்…!!!

பிரபல மல்யுத்த வீரர் பால் ஓரன்டார்ப்(71) உடல்நலக்குறைவால் ஜார்ஜியாவில் உள்ள பயேட்டவில்லவில் காலமானார். இவர் முதல் WrestleMania சண்டையில் பங்கேற்று நான்கு பேரில் ஒருவராக புகழ்பெற்றவர். Wristling-ல் ஹால் ஆப் பேம் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர். இவரது இறப்பை மகன் உறுதி செய்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இதையடுத்து பால் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

பிரபல குத்துசண்டை வீரர்…. புற்றுநோயால் மரணம் – சோகம்…!!!

மணிப்பூரை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் (42) புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1998 ஆம் வருடம் அர்ஜுன விருதையும் பெற்றவர். இந்நிலையில் இவருடைய மறைவிற்கு விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
குத்து சண்டை விளையாட்டு

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் மரணம்…. அதிர்ச்சி…!!

குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குத்துச்சண்டை முன்னாள் உலக சாம்பியன் லியான் ஸ்பின்கிஸ்(67) உடல்நலக்குறைவால் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புராஸ்டேட் மற்றும் இதர புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 1976 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்றதை விடவும், குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை வீழ்த்தி 1978-இல் உலகச் சாம்பியன் பட்டம் என்பதால்தான் இவர் மிகவும் பிரபலமானார்.

Categories

Tech |