Categories
தேசிய செய்திகள்

BREAKING: உலக சாம்பியன்…… இந்திய வீராங்கனை சாதனை…..!!!!

குத்துச்சண்டை உலக சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் நிக்கத் ஜரீன். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இன்று நடந்த மகளிர் 52 கிலோ எடை பிரிவுக்கான இறுதிப்போட்டியில் தாய்லாந்தின் ஜூடாமஸ்-ஐ வென்று நிக்கத் ஜரீன் பட்டம் வென்றுள்ளார். இந்த வெற்றியால் உலகச் சாம்பியன் பட்டம் வெல்லும் இந்தியாவின் ஐந்தாவது குத்துச்சண்டை வீராங்கனை என்ற பெருமையை நிக்கத் ஜரீன் பெறுகிறார். இவருக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் குத்துச்சண்டை மைதானம்….. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று 110 விதியின் கீழ் பேசிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் 4 மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் என்று கூறினார்.  அறிவு சொத்து போல், உடல் வலிமையும் ஒரு சொத்து. விளையாட்டு, உடலை துடிப்புடன் வைத்திருக்கும். தமிழக வீரர்கள் பன்னாட்டு போட்டியில் பங்கேற்க வேண்டும் .அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூபாய் 3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கம் உருவாக்கப்படும். மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என பிரம்மாண்ட மைதானம் அமைக்க […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை தோல்வி…!!!!

டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் பூஜை ராணி தோல்வியடைந்துள்ளார். குத்துச்சண்டை பெண்கள் 69 – 75 கிலோ எடைப் பிரிவு காலிறுதி போட்டியில் சீன வீராங்கனை லீ கியானுடன், பூஜா ராணி மோதினார். இதில் 0 – 5 என்ற கணக்கில் லீ கியானிடம் பூஜா ராணி தோல்வியடைந்தார். தற்போது குத்துச்சண்டையில் லவ்லினா மட்டும் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.

Categories
விளையாட்டு

குத்துச்சண்டை: ஜப்பான் எதிராக இந்திய வீரர் தோல்வி….!!!

ஜப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிரிஷன். ஜப்பான் நாட்டை சேர்ந்த குத்துச்சண்டை வீரர் Okazawa உடனான போட்டியில் விகாஸ் 0 – 5 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். விகாஸ் வெல்டர்வெயிட் பிரிவில் இந்த போட்டியில் பங்கேற்று விளையாடினார்.  Okazawa தற்போது அடுத்த சுற்றான ரவுண்ட் ஆப் 16-க்கு முன்னேறி சென்றுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

“வேண்டாம்,வேண்டாம்,என்ன விட்டுடுங்க” … 14 வயது சிறுமியை… அனைத்து பெற்றோர்களையும் கலங்க வைக்கும் சம்பவம்..!!

இன்றைய நவீன நாகரீக உலகில் பெண் சுதந்திரம் பற்றி ஆயிரம்தான் பேசினாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நடந்து கொண்டேதான் இருக்கின்றது. குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவருமே பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அனைவரும் சுதந்திரமாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வர முடியும் என்றால் அது நிச்சயம் இயலாத காரியமாக தான் நம் இந்தியாவில் தற்போது இருந்து வருகின்றது. பெண்கள் வேலை செய்யும் இடத்தில் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றால் அதற்கு பதில் கூற முடியுமா என்றால் இல்லை […]

Categories
குத்து சண்டை விளையாட்டு

மிக பிரபல விளையாட்டு வீரர் திடீர் மரணம்… சோகம்…!!!

உலகின் மிகப் பிரபல குத்துச்சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் திடீரென காலமானார். உலகின் மிகப்பெரிய மிடில் வெய்ட் குத்து சண்டை வீரர் மார்வெலஸ் மார்வின் காலமானார். இவருக்கு வயது 66. இவர் 1980 – 1987 வரை யாரும் தோற்கடிக்க முடியாத வீரராக தொடர்ச்சியாக சாம்பியன்ஷிப் பட்டத்தை 12 முறை வென்றவர். குத்துச்சண்டையில் 62-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தவர். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |