குமரி மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குமரிமாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடைவிதிக்கப்பட்ட பகுதிகள் உட்பட 50 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் 50 பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அவர்களுக்கு […]
Tag: குமரி மாவட்டம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் குமரி மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று முன் தினம் அவர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்கள் மழை வெள்ளத்தால் […]
குமரி மாவட்டத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதற்கு யாஷ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி, பின்னர் அதிதீவிர புயலாக மாறி ஒடிஷா வங்கதேசம் இடையே 26ஆம் தேதி மாலையில் கரையை […]
கொரோனா பரவலின் இரண்டாம் நிலை காரணமாக குமரி மாவட்டத்தில் 12 சாலைகள் மூடப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன் காரணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் இணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அது ஞாயிற்றுக்கிழமைகளில் […]
கன்னியாகுமரியில் இரண்டு நாட்களுக்கு பின்பு மீண்டும் கனமழை பெய்வதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த இரு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகர்கோவிலில் இன்று அதிகாலையிலிருந்தே மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. […]
காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் மறைவையொட்டி குமரிமாவட்டத்தில் அவருடைய சொந்த ஊரானஅகத்தீஸ்வரம் கிராமம் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வசந்தரகுமார் உயிர் இழந்ததையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் உறவினர்கள் குவிந்து வருகிறார்கள். அங்கு வைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் அங்கு குவிந்து வருவதால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வசந்தகுமாரின் மறைவையொட்டி அகத்தீஸ்வரம் கிராமமே சோகத்தில் மூழ்கி இருக்கிறது.
சப் இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றம் சுமத்திய இளம்பெண் ஒருவர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்துக்குட்பட்ட 31 வயது பெண், தனது குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அப்போது, காவல் நிலையத்தில் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டருக்கும், இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த பெண் கர்ப்பமானதாகவும், சப்-இன்ஸ்பெக்டர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சமையலறையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் தலையில் பாத்திரம் சிக்கியுள்ளது. அதன்பின் தீயணைப்பு வீரர்களை அழைத்து பாத்திரத்தை அறுத்து எடுத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே கன்னங்குறிச்சி நடுவூர் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவருக்கு 2 வயதில் நீராஜ் என்ற ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கண்ணன் மற்றும் அவரது மனைவி இருவரும் வீட்டில் இருந்த போது, சமையலறையில் பாத்திரங்களை வைத்து நீராஜ் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது குழந்தையின் சுட்டித்தனமான […]
கருங்கல் பகுதியில் விஷ ஊசி போட்டுக் கொண்டு நர்ஸ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் வசித்து வருகின்ற ஹென்றி என்பவரின் மகள் ஆசிகா, அழகியமண்டபம் பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலை செய்து வந்திருக்கிறார். இவர் கொரோனா ஊரடங்கால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இத்தகைய நிலையில் ஆசிகா-விற்கு திருமணம் செய்வதற்காக மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். ஆஷிகா அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இருந்தாலும் உறவினர்கள் அனைவரும் […]