கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று 98 நாடுகளில் பரவி 45,000 மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 197 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் ஈரான் இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசும்போது குரங்கம்மை பாதிப்பு […]
Tag: குரங்கம்மை
ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுவந்த இத்தாலியருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கம்மை, எச்ஐவி பாதிப்பு கண்டறியப்பட்டது. இத்தாலி நாட்டில் ஒருவருக்கு தொண்டை வலி, சோர்வு மற்றும் தலைவலி ஆகிய அறிகுறிகளை கொண்ட 36 வயதுடையவரை சோதனை செய்தபோது, அவருக்கு ஒரே நேரத்தில் COVID-19, குரங்கம்மை மற்றும் எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஸ்பெயின் நாட்டில் ஒரு பயணத்திற்குப் பிறகு திரும்பியதாகவும், ஒன்பது நாட்களுக்குப் பிறகு அறிகுறிகளை கண்டதாகவும் கூறப்படுகின்றது. அறிகுறிகள் தோன்றிய மூன்று நாட்களுக்குப் பிறகு முதலில் […]
குரங்கம்மை அறிகுறிகளுடன் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட முன்மாதிரி முடிவுகள் வெளியாகி இருக்கின்றது. அதில் அவர்கள் யாருக்கும் குரங்கமை இல்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு ஊசியால் கட்டுப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கின்ற நிலையில் குரங்கம்மை நோய் தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. 70-ற்கும் மேற்பட்ட நாடுகளில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் […]
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. பாதிப்பு ஏற்பட்டால் கட்டாயம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும். குரங்கு அம்மை வரவே வராது என்று கூறவில்லை. 77 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ளது. எனவே தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை […]
மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பாக மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “இந்தியாவை பொருத்தவரை டெல்லி, தெலுங்கானா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் முதல் குரங்கம்மை பாதிப்பு என்றவுடன் தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. அமெரிக்காவிலிருந்து கிருஷ்ணகிரி வந்த சிறுவனுக்கும் மற்றும் தனியார் மருத்துவமனையில் […]
உலக நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக பரவி வந்த கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக ஓயவில்லை. இந்நிலையில் தற்போது குரங்கு காய்ச்சல் சர்வதேச அளவில் வேகமாக பரவி வருகிறது. இது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களுக்கு இடையும் பரவி வருகிறது. இந்த குரங்கு காய்ச்சல் 24 நாடுகளில் 300 பேரை பாதித்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் பிரேசிலில் குரங்கு காய்ச்சல் பரவ தொடங்கிவிட்டது. அங்கு 2 பேருக்கு குரங்கு காய்ச்சல் […]
உலக சுகாதார மையமானது குரங்கு காய்ச்சல், சமூக பரவலாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது என்று எச்சரித்துள்ளது. கனடா, அமெரிக்கா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், ஜப்பான், மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20 நாடுகளில் 200 நபர்களுக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்த குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கும் இருபாலின சேர்க்கையாளர்களுக்கும் தான் அதிகமாக ஏற்படுகிறது என்று ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். இதுபற்றி […]