Categories
பல்சுவை

குசும்புக்கார குரங்கு!…. சும்மா நடந்து சென்ற முதியவரிடம் செய்த சேட்டை…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இதற்கிடையில் குரங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகிறது. தற்போது ஒரு குசும்புக்கார குரங்கின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் குரங்கு ஒன்று எந்தவொரு காரணமும் இன்றி சாலையில் நடந்து செல்லும் ஒரு முதியவரை உதைத்து விட்டு செல்வதை காண முடிகிறது. முதியவரை உதைத்து […]

Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்… “பள்ளி தலைமை ஆசிரியரின் நெகிழ்ச்சி செயல்”…? குவிந்து வரும் பாராட்டுக்கள்…!!!!!

மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையேயான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியது இல்லை. சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்து அனைத்து சமுதாய மக்களும் ஒன்று திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் வளர்த்து வரும் நாய், பூனை, கிளி, ஆடு, மாடுகளை தங்கள் குடும்பத்தில் ஒருவரை போல பாவித்து வருகின்றார்கள். அதுபோல அழையாவிருந்தாளியாக வீட்டிற்கு வரும் […]

Categories
பல்சுவை

குரங்குக்கு தாகம் தீர்க்கும் மாற்றுத்திறனாளி!…. இணையத்தை கலக்கும் வீடியோ…. பாராட்டும் நெட்டிசன்கள்….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது  @Gulzar_sahab என்ற டுவிட்டர் யூசர் நெகிழ்ச்சியான ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் தாகத்துடன் சுற்றித் திரியும் ஒரு குரங்குக்கு, மாற்றுத்திறனாளி தண்ணீர் கொடுத்து உதவுகிறார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். குரங்கு தண்ணீருக்குதான் அலைகிறது என்பதை உணர்ந்து, அதற்கு தாகம் […]

Categories
பல்சுவை

குறும்புக்கார குரங்கு!…. சிங்கத்திடமே அதன் வேலையை காட்டுது!… வைரலாகும் வீடியோ இதோ….!!!!

சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு  இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். இப்போது சிங்கம் மற்றும் குரங்கு தொடர்பான ஒரு வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், 2 சிங்கங்கள் காட்டுப்பாதையில் நடந்து செல்கிறது. இந்நிலையில் 1 குரங்கு ஒரு சிங்கத்தின் தோள்பட்டையில் அமர்ந்து செல்வதை நாம் வீடியோவில் பார்க்கலாம். இதற்கிடையில் சிங்கமும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

அன்பு ஒன்றே மாறாதது!…. நாய்க்குட்டியை தன் பிள்ளைபோல் வளர்க்கும் குரங்கு…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

வேலூர் மாவட்டத்திலுள்ள காட்பாடி பொன்னை பகுதியில் ஒரு குரங்கு, ஆதரவற்ற நாய்க்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறது. இந்த குரங்குக்கு பிறந்த குட்டிகள் இறந்துவிட்டது. இதன் காரணமாக சாலையில் ஆதரவற்று சுற்றித்திரிந்த ஒரு நாய்குட்டியை அக்குரங்கு தன் குட்டியாகவே பாவித்து எடுத்து வளர்க்க தொடங்கி உள்ளது. மேலும் நாய்க்குட்டிக்கு பாலூட்டி குரங்கை போல் வயிற்றில் வைத்துக்கொண்டு யாரும் அதனை நெருங்காதபடி பாதுகாத்து வருகிறது. அதேபோன்று அந்த நாய்க்குட்டியும் குரங்கிடமே பால் குடித்து பாசத்தோடு வளர்ந்துவருகிறது. மேலும் இந்த குரங்கு […]

Categories
பல்சுவை

நிம்மதியாக ரெஸ்ட் எடுக்கும் நாய்…. வம்பிழுக்கும் குரங்கு…. வெளியான வைரல் வீடியோ…..!!!!

குரங்குகள் மனிதர்களை துன்புறுத்தும் பல்வேறு வீடியோக்களை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்துள்ளோம். ஆனால் ஒரு நாய் நிம்மதியாக படுத்து இருக்கும் நேரத்தில் குரங்கு வந்து அதனை  தொல்லைபடுத்தும் வீடியோவானது  தற்போது வெளியாகி வைரலாக பரவி வருக்கிறது. அந்த வீடியோவில் ஒரு நாய் நிம்மதியாக படிகளில் படுத்து இருப்பதை காண முடிகிறது. அப்போது அங்கு வரும் குரங்கு அதனை தொல்லை செய்கிறது.     View this post on Instagram   A post shared by Animal […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பெண்களை பார்த்ததும் அநாகரீகமான சைகை!… குரங்கு செய்த அட்டுழியம்….. வனத்துறை அதிரடி நடவடிக்கை…..!!!!

பொதுவாக குரங்குகள் சில்மிஷம் மற்றும் குறும்புத்தனம் செய்யும் விலங்காக பார்க்கப்படுகிறது. மேலும் குரங்கிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில் பலபேர் உயிரிழந்த சம்பவங்கள் குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏகப்பட்ட குறும்புத்தனம் மற்றும் கொடூரம் ஆக நடந்து கொண்ட ஒரு குரங்கு இப்போது கான்பூரிலுள்ள உயிரியல் பூங்காவில் ஆயுள்தண்டனை அனுபவிக்கிறது. இவ்வழக்கு தனித்துவமாக மாறி இருக்கிறது. இந்த குரங்கினுடைய பெயர் காலியா ஆகும். காலியா மிர்சாபூரில் இருந்து பிடிபட்டு கான்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. காலியா என்றாலே மிர்சாபூர் மக்களிடையே எப்போதும் அச்சம் […]

Categories
தேசிய செய்திகள்

மாடியில் படுத்திருந்த விவசாயியை…. வெறிபிடித்து விடாமல் விரட்டிய குரங்குகள்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகம்….!!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் பரேலியில் 40 வயது விவசாயி தன் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிந்தார். அப்போது அவரை குரங்குகள் கூட்டம் விரட்டியதில் மாடியிலிருந்து தவறி விழுந்துவிட்டார். அதாவது தன்னைத் தாக்கிய குரங்குகள் கூட்டத்திடமிருந்து காத்துக்கொள்ள முயற்சி செய்தபோது தவறுதலாக மொட்டைமாடியிலிருந்து விவசாயி விழுந்துள்ளார். இவர் முகேஷ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடனே பரேலி நகரிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி கடந்த வியாழக்கிழமை மாலை இறந்தார். குரங்குகள் தாக்கியதில் முகேஷ்குமார் தன் சம நிலையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊர்ல இருக்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா…? அண்ணாமலை பேச்சு..!!!!!

தமிழக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனக் கூறி தமிழக பாஜக சார்பில் கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. சுமார் 60 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றாக கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர்கள் செந்தில் பாலாஜி […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும்தான் குடிப்பீங்களா நாங்களும் குடிப்போம்! வொயின்ஷாப்பில் பீரை அலேக்காக குடித்து குரங்கு செய்த அட்டகாசம்….. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதாக மதுப் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபானக்கடையில், மதுவைத் திருடிக்குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்து இருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப் பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். रायबरेली में बंदर का शराब पीने का […]

Categories
உலக செய்திகள்

பைக்கில் வந்து குழந்தையை கடத்த முயன்ற குரங்கு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!!!

இந்தோனேசியாவில் இருக்கும் தஞ்சுங்சாரி என்ற பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் குழந்தைகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பார்க்காத நேரத்தில் பொம்மை பைக்கில் வேகமாக வந்த குரங்கு ஒன்று, அங்கு அமர்ந்திருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை இழுத்தது. இதில் கீழே விழுந்த அந்த குழந்தையை குரங்கு தரதரவென இழுத்து சென்றது. https://twitter.com/maxzanip/status/1256879788343455744 இதனை கண்ட அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கத்திய போது, குழந்தையை இழுத்தச் சென்ற குரங்கு அந்த குழந்தையை அங்கேயே விட்டு சென்றது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இறந்த குட்டியின் சடலத்தை…. 2 நாளாக தூக்கிச்சுற்றும் தாய் குரங்கு…. வைரல் வீடியோ….!!!!

பொதுவாக மனிதர்களுக்கு இருக்கும் சில உணர்வுகள் விலங்குகளுக்கும் இருக்கும். அதிலும் தாய் பாசம் என்பது அனைத்து விலங்குகளுக்கும் அதிகமாக இருக்கும். அண்மையில் கொல்கத்தாவில் தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டியை இரண்டு நாட்களாக தூக்கி சுமந்த வீடியோ வைரலானது. அதே போல் தற்போது உதகை மண்டலத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. உதகை மலைப்பிரதேசம் நிறைந்த ஒரு பகுதி. இங்கு பல விலங்குகள் உள்ளது. அதில், உதகை அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் கடந்த 2 நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

வலியால் துடித்த பெண் குரங்கு…. நெஞ்சை நெகிழவைக்கும் இளைஞரின் செயல்….!!!

புதுச்சேரி அருகே ஒரு கிராமத்தில் பெண் குரங்கு ஒன்றுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்து உள்ளது. இதனை அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர் பார்த்துள்ளார். அதன்பிறகு சற்றும் தாமதிக்காமல் உடனே தனது தொலைபேசியை எடுத்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்தார். அதன் பிறகு அந்த இளைஞர் குரங்கின் கை கால்களை கட்டி முதலுதவி அளித்தார். இதையடுத்து அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் குரங்கு இருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். காயமடைந்த குரங்குக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“சரமாரியாக தாக்கிய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. வனத்துறையினரின் செயல்….!!!!

2 பேரை  தாக்கிய குரங்கை வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மந்தக்கரை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள ஒரு  மரத்தில்  2 குரங்குகள் வசித்து வந்துள்ளது. இந்த குரங்குகள் கடந்த சில நாட்களாக மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை கடித்துள்ளது. மேலும் பள்ளி மாணவன் மற்றும் விவசாயி ஆகிய 2 பேரை சரமாரியாக   கடித்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை அச்சுறுத்திய குரங்கு” பொதுமக்களின் கோரிக்கை…. திண்டுக்கல்லில் பரபரப்பு….!!!!

மக்களை அச்சுறுத்தி வந்த குரங்கை  வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி பிடித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர், கலைஞர் நகர், காந்திநகர் போன்ற பகுதிகளில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே குரங்கு ஒன்று புகுந்து குழந்தைகளை  அச்சுறுத்தி வருவதோடு மட்டும் இல்லாமல்  வீடுகளுக்குள் நுழைந்து தின்பண்டங்களையும் தூக்கி சென்று விடுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் குரங்கை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே… மனிதனை போல் இரண்டு கால்களால் நடந்து சென்ற குரங்கு…. வைரலாகும் வீடியோ…!!!!!

மனிதனைப்போல பாலத்தின் மீது நடந்து சென்றார் குரங்கு வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. விலங்கு கூட்டத்தில் மனிதனுக்கு இணையான அறிவை கொண்ட விலங்கு என அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே விலங்கு குரங்கு. அது மனிதனை போல அமர்வது,  தலையில் பேன் பார்ப்பது போன்ற செயல்களை  குரங்கு செய்வது உண்டு. குரங்குகளை கொண்டு தெருவில் வித்தை காட்டி பிழைப்பு நடத்துவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று பலரையும் கவர்ந்திருக்கிறது. வெளிநாட்டில் பாலத்தின்   மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொல்லை கொடுக்கும் குரங்கு கூட்டம்…. “பிடிச்சு கொண்டு போங்க” வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  அண்ணாநகர், இந்திரா நகர், தாயில்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் குரங்குகளின் தொல்லை அதிகமாக இருந்து வருவதோடு  நாளுக்கு நாள் குரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் வீட்டிற்குள் இருக்கும் பொருட்கள்  அனைத்தையும் குரங்குகள் சேதப்படுத்துவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தொல்லை கொடுத்துவரும்  குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

என்ன ஒரு கொடூர செயல்….!!! கட்டி போடப்பட்ட குரங்குகள்…. அதிர்ச்சியில் மக்கள்….!!!

ஆளில்லாத வீட்டில் துணி பைகளில் கட்டி போடப்பட்டு இருந்த குரங்குகளை கிராம மக்கள் விடிவித்துள்ளனர். தாய்லாந்து நாட்டில் சாராபுரி மாகாணத்தில் ஆளில்லாத வீட்டிலிருந்து வரும் சத்தத்தை கிராம மக்கள் கவனித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த மக்கள் அங்கு நூற்றுக்கணக்கான குரங்குகள் தனித்தனி துணி பைகளில்  வைத்து கட்டி போடப்பட்டு இருந்துள்ளன. இதனை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரிகள் வரும் வரை காத்திருக்காமல் குரங்குகளை அவிழ்த்து விட்டுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் பெட்டியில் வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குக்கு இறுதி ஊர்வலம்….!! 1500 பேர் பங்கேற்பு….!! வினோத சம்பவம்….

மத்திய பிரதேசத்தில் குரங்கிற்கு இறுதி ஊர்வலம் நடத்திய வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தலுபுரா கிராமத்தில் வாழ்ந்து வந்த குரங்கு ஒன்று இறந்துபோனது. இதையடுத்து அந்த குரங்கை கடவுள் அனுமாராக பாவித்து கிராம மக்கள் இறுதி ஊர்வலம் நடத்தினர். மேலும், மந்திரம் கூறி குரங்கின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்தனர். ஹரி சிங் என்பவர் குரங்கிற்கு ஈமச்சடங்கு செய்வதற்காக தலையை மொட்டையடித்துக் கொண்டார். மேலும் கிராம மக்கள் அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. 2 மாத குழந்தையை தூக்கி சென்ற குரங்கு…. என்ன பண்ணுச்சுனு நீங்களே பாருங்க?….

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2 மாத பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற குரங்குகள் தண்ணீர் தொட்டியில் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பெற்றோர்கள், தண்ணீர் தொட்டியில் இறந்த நிலையில் குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பாக்பாட் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் மொட்டை மாடியில் 2 மாத குழந்தையுடன் மூதாட்டி ஒருவர் தூங்கியுள்ளார். அப்போது மாடிகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள், வீட்டின் கதவு திறந்திருந்ததால் […]

Categories
தேசிய செய்திகள்

பழிவாங்கும் எண்ணமே அவைகளுக்கு கிடையாது…. கைதான குரங்குகள் பற்றி வெளியான புதிய தகவல்….!!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள மஜல்காவ் என்ற நகரத்துக்கு அருகில் உள்ள லவோல் என்ற கிராமத்தில் சமீபகாலமாக அங்குள்ள குரங்குகள் அடிக்கடி அந்த கிராமத்தில் உள்ள நாய்களை தூக்கிச் சென்று உயரமான பகுதியில் இருந்து கீழே தூக்கிப் போட்டு கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், மேலும் கடந்த 1 மாதத்தில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட நாய்களை குரங்குகள் அனைத்தும் சேர்ந்து கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து 250 நாய்க்குட்டிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 2 […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

உயிருக்கு போராடிய குரங்கு குட்டி…. வாயோடு வாய் வைத்து ஓட்டுநர் செய்த காரியம்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!

 நாய் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கை ஓட்டுநர் ஒருவர் வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்து அதை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் குன்னம் அடுத்த ஒதியம் கிராமத்தில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த குரங்கு குட்டி ஒன்றை தெரு நாய்கள் கடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காயங்களுடன் அந்த குரங்கு மயங்கி கிடந்தது. இந்த நிலையில் அந்த பகுதியில் வசித்து வரும் கார் டிரைவரான பிரபு உடனே மயங்கி கிடந்த குரங்கை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த குரங்கு…. ஆட்டோ டிரைவர்களிடம் அடைக்கலம்…. நெகிழ்ச்சியான செயல்….!!

கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு ஆட்டோ டிரைவர்களிடம் நண்பர் ஆகிவிட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சம்பத் நகர் பகுதியில் கூட்டத்தை விட்டு பிரிந்து வந்த ஒரு குரங்கு சுற்றித் திரிந்தது. இந்த குரங்கானது ஆட்டோ டிரைவர்களிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஆட்டோ டிரைவர்களின் அரவணைப்பில் குரங்கு இருந்து வந்தது. அது டிரைவர்களிடம் பழங்களை வாங்கி சாப்பிடுவதும் அவர்களிடம் நண்பனைப் போலவும் பழகி வந்தது. மேலும் அந்த குரங்கு ஆட்டோ டிரைவர்களின் மடியில் அமர்ந்து கொஞ்சுவதையும் படத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மரத்திலிருந்து பண மழை பெய்ய செய்த குரங்கு…. ஒரு லட்சம் ரூபாயை பறிகொடுத்த நபர்…. கடைசியில் நடந்தது என்ன….??

மத்திய பிரதேசத்தில் ஒரு லட்சம் ரூபாயை உணவு பொட்டலம் என நினைத்து குரங்கு தூக்கிச் சென்று பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை மரத்திலிருந்து வீசியது அப்பகுதி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஒருவர் தனது துண்டில் ஒரு லட்சம் ரூபாயை முடிச்சுப்போட்டு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு குரங்கு திடீரென்று வந்து அவர் வைத்திருந்த ஒரு லட்சம் பணத்தை மின்னல் வேகத்தில் தூக்கி சென்றது. இதனால் பதறிப்போன அந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்டோ டிரைவரை பழிவாங்கத் துடிக்கும் குரங்கு…. 22km தாண்டி தேடி வந்த அதிர்ச்சி…. காரணம் என்ன….?

சிக்க மங்களூரு அருகே குரங்கு ஒன்று பழி வாங்க வேண்டும் என்பதற்காக 22 கிலோமீட்டர் பயணித்து வந்து, 8 நாட்களாக ஆட்டோ டிரைவரை துரத்தி வருகிறது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சிக்க மங்களூரு பகுதிக்குட்பட்ட கோட்டீகேஹரா என்ற கிராமத்தில் ஒரு பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளிக்கு சில நாட்களுக்கு முன்பு புகுந்த குரங்கு ஒன்று மிகுந்த அட்டகாசம் செய்து வந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கிற்கு இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்த கிராம மக்கள்…. கர்நாடகாவில் நெகிழ்ச்சி சம்பவம்..!!!!

கர்நாடகாவில் தெருநாய்கள் கடித்ததால் இறந்த குரங்கிற்கு கிராம மக்கள் இறுதி சடங்கு செய்து அடக்கம் செய்த சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஜோவரகி தாலுக்காவில் அரலாகுண்டாகி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய குரங்கு ஒன்று தஞ்சமடைந்தது. இந்த குரங்கு அந்த கிராமத்தில் உள்ள வீடுகள் கடைகளில் புகுந்து உணவு பொருட்கள் மற்றும் தின்பண்டங்களை தின்று வந்துள்ளது. இதனால் காலப்போக்கில் அங்குள்ள கிராமவாசிகள் அந்த குரங்கிடம் அன்பு காட்டத் தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

ரூ. 2 லட்சத்தை பறித்து… “நான் ஒன்னு ஒன்னா போடுறேன் நீ எடுத்துக்கோ”… குரங்கு செய்த வேலையை பாருங்க…!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பரோலி மாவட்டத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா. இவர் தன் வாடிக்கையாளர் ஒருவருக்காக நில பதிவுக்கான முத்திரை தாளை வாங்குவதற்காக ஆம்பூரில் உள்ள நில பதிவு அலுவலகத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று வந்த குரங்கு ஒன்று ரூபாய் 2 லட்சம் பணத்தையும் பறித்து கொண்டு அருகிலிருந்த மரத்தின்மேல் சென்றது. இதனால் பதறிப்போன வினோத் குமார் சர்மா பணத்தை தரும்படி குரங்கிடம் கூச்சலிட்டார். இதனால் அருகிலிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

வக்கீல் கையில் ரூ.2 லட்சம் பணம்…. எங்கிருந்தோ வந்த குரங்கு…. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?….!!!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள  ஒரு கிராமத்தில் வினோத் குமார் சர்மா வசித்துவருகிறார். இவர் வக்கீல் தொழில் செய்வது மட்டுமல்லாமல் நில பதிவுக்கான முத்திரைத் தாள்களை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வருகின்ரறார். இந்நிலையில் நேற்று இவர் தனது வாடிக்கையாளர் ஒருவரிடம் முத்திரைத் தாள்களை வாங்குவதற்காக 2 லட்சத்தை பணத்தை பெற்றுக்கொண்டு அலுவலகம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு குரங்கு அவரது பணப்பை பறித்து அவரே எதிர்பாராத […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தின்பண்டங்களை எடுத்துட்டு போகுது…. அட்டுழியம் செய்யும் குரங்கு…. அதிகாரிகளின் முயற்சி….!!

கடைகளில் நுழைந்து தின்பண்டங்கள் மற்றும் பழங்களை தின்று செல்லும் குரங்கை அதிகாரிகள் பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொங்கலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக 3 குரங்குகள் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த குரங்குகள் காட்டூர் ரோடு கண்டியம்மன்கோவில் பகுதி கடைகளில் நுழைந்து பழங்கள் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் செல்கிறது. மேலும் அந்த பகுதியில் செல்பவர்களை பயமுறுத்தி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வனச்சரக அலுவலர் செந்தில்குமார் உத்தரவின்படி, வனவர் திருநாவுக்கரசு […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும் தான் போடுவீங்களா…. இனி நாங்களும் போடுவோம்…. மாஸ்க் அணியும் குரங்கின் வைரல் வீடியோ….!!!

மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன. தற்போது சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி அதனை நிரூபித்துள்ளது. குரங்கு போன்ற முக கவசம் ஒன்றை எடுத்து அதனை சரியாக அணிந்து கொள்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் மிக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மலைத்துப் போய் உள்ளனர். ஒவ்வொரு உயிரினமும் சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு உலகில் வாழ்ந்து வருகிறது. மிக ஆரோக்கியமாக வாழ விரும்பும் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும் தான் குடிப்பீங்களா..? நாங்களும் குடிப்போம்… “குடிமகன்களுக்கு டப் கொடுக்கும் குரங்கு”… வைரலாகும் வீடியோ..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு குரங்கு மதுபான கடையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மத்திய பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோவில் குரங்கு முதலில் மதுபானக் கடைக்குள் நுழைந்து ஒரு பாட்டிலை எடுத்து பாட்டிலின் மூடியை வாயால் திறந்து, பின்னர் மெதுவாகக் குடிக்க தொடங்குகிறது. இதை பார்த்த மது கடைக்காரர் குரங்கிற்கு ஒரு பிஸ்கட்டை வழங்குகிறார். அதனை வாங்க மறுத்த குரங்கு, மதுவை […]

Categories
தேசிய செய்திகள்

குரங்கு பயணித்த விவகாரம்… டெல்லி மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்த விளக்கம்…!!!

டெல்லியில் மெட்ரோ ரயிலில் கடும் பாதுகாப்புகளை மீறி குரங்கு உள்ளே நுழைந்து பயணம் செய்த சம்பவம் பெரும் வைரலானது. நாட்டில் மிகவும் வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் சேவைகளில், டெல்லி மெட்ரோ ரயிலும் அடங்கும். அங்கு எப்பொழுதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாவதும் உண்டு. இத்தகைய சூழலில் டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணித்த சம்பவம் நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. யமுனா பாலம் மற்றும் இந்திரபிரஸ்தா […]

Categories
தேசிய செய்திகள்

அலுமினிய பாத்திரத்தில் தலையை விட்டு… சிக்கித் தவித்த குரங்கு…. தண்ணீர் குடிக்கும் போது ஏற்பட்ட பரிதாபம்…!!!

குரங்கு ஒன்று தண்ணீர் குடிக்க முயன்றபோது பாத்திரத்தில் தலையை விட்டு சிக்கி தவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது . தெலுங்கானா மாநிலம், மகபூபாபாத் பகுதியில் குரங்குகள் நிறைய உள்ளன. வெயிலின் கொடுமை காரணமாக அங்கு பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை எடுத்து அடிக்கடி குடிக்கும். அப்படி இன்று ஒரு குரங்கு அலுமினிய பாத்திரத்தில் இருந்து தண்ணீரை குடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அதன் தலை அலுமினிய பாத்திரத்தில் மாட்டி கொண்டது. அதை எடுப்பதற்கு அந்த குரங்கு […]

Categories
உலக செய்திகள்

வீடியோ கேம் விளையாடும் குரங்கு… எலான் மஸ்க் வெளியிட்ட வீடியோ….!!!

எலான் மஸ்க் என்று கூறியதும் நினைவுக்கு வருவது டெஸ்லா, ஸ்பேஷ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயர்கள்தான். MindPong வீடியோ கேம் விளையாடும் குரங்கின் வீடியோ ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் எனும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ஆனது மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. அதன்படி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய் மீது தாயன்பு கொண்ட ஆண் குரங்கு…. வியப்படைந்த மக்கள்…. வைரலாகும் சம்பவம்…!!

இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை குப்பையில் தூக்கி வீசுவதும் கொடூரமான முறையில் கொலை செய்வதும் அரங்கேறி வருகிறது. இப்படிப்பட்ட கொடூரர்களுக்கு கன்னத்தில் அறைந்தது போல் ஆண் குரங்கு ஒன்று நாய் குட்டியின் மேல் அதிகளவிலான பாசத்தை காட்டி எடுத்துக்காட்டாக இருக்கிறது. வேலூர் மாவட்டம் மேல்புளியங்குடி என்ற கிராமத்தில் கடந்த 10 நாட்களாக ஆண் குரங்கு ஒன்று சுற்றி திரிந்துள்ளது. அந்த குரங்கு அந்த பகுதியில் அனாதையாக கிடந்த நாய் குட்டி ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

யாருகிட்ட… நாங்கலாம் யாரு தெரியுமா..? சேட்டை செய்யும் குரங்கிடம் இருந்து… சாமர்த்தியமாக தப்பிய சிறுவன்…!!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் குரங்கிடம் மாற்றிக் கொண்ட சிறுவன் சிலையாக மாறி தப்பிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒரு குரங்கு ஊரில் உள்ள அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்கு போவர்கள் வருபவர்களை கடித்து குதறியும், நாய்களை துன்புறுத்தியும் அந்த குரங்கு அட்டகாசம் செய்து வருகின்றது. இதனால் அப்பகுதி வாசிகளும் நாய்களும் அந்த குரங்கை கண்டால் அலறி அடித்து ஓடுகின்றனர். குரங்கை […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளை குரங்குகள் தூக்கிச் சென்ற விவகாரம்…”கொன்றது குரங்குகள் தானா”..? சந்தேகிக்கும் வனத்துறையினர்…!!

குழந்தையை குரங்கு தூக்கி சென்ற விவகாரத்தில் வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தஞ்சாவூர் மேல அவலங்களை கோட்டை தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி புவனேஸ்வரி இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 6ஆம் தேதி மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. கடந்த 13ம் தேதி மதியம் வீட்டில் இருந்த புவனேஸ்வரி கழிப்பறைக்கு சென்று இருந்த போது வீட்டுக்குள் இருந்த தனது 2 குழந்தைகளை காணவில்லை. வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரையில் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“என்னோட இரண்டு குழந்தைகளையும் குரங்குகள் தூக்கிட்டு போயிட்டு”… உண்மையில் நடந்தது என்ன…? விசாரிக்கும் போலீசார்…!!

தஞ்சாவூரில் இரட்டை பெண் குழந்தைகளை குரங்குகள் தூக்கி சென்றதாக பெண் அளித்த புகாரை வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.  தஞ்சாவூரில் வசிப்பவர் புவனேஸ்வரி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு இரட்டை  பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் தனது வீட்டிற்குள் திடீரென நுழைந்த குரங்குகள் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக புவனேஸ்வரி கூறியுள்ளார். அவற்றில் ஒரு பெண் குழந்தை வீட்டின் கூரையில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என் குழந்தைகளை குரங்கு தூக்கிட்டு போச்சு… தாயாரின் புகாரை சந்தேகிக்கும் போலீசார்…!

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரமே ஆன இரண்டு பச்சிளம் குழந்தைகளை குரங்கு தூக்கிச் சென்ற சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதுடைய புவனேஸ்வரி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த வாரம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இந்நிலையில் அவரது வீட்டுக்குள் திடீரென கூட்டமாக நுழைந்த குரங்குகள் தன் இரண்டு பெண் குழந்தைகளையும் தூக்கி சென்று விட்டதாக காவல்துறையில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஒரு வீட்டின் கூரையின் மேல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

Flash News: பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தை… தூக்கி சென்ற குரங்கு… பரிதாப மரணம்… பெரும் சோகம்…!!!

தஞ்சை மேல் அரங்கத்தில் பிறந்து 8 நாட்களே ஆன பெண் குழந்தையை குரங்கு தூக்கிச் சென்று அகழியில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சையில் மேல் அரங்கம் என்ற பகுதியில் ராஜா என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அவரின் மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர்கள் மிகவும் ஏழையான குடும்பம். ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அப்பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். வீட்டுக்குள் […]

Categories
உலக செய்திகள்

நான் ஒன்னும் குரங்கு இல்ல.. தடுப்பூசி போட்டுக் காட்டுறதுக்கு… ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு…!

ரஷ்ய ஜனாதிபதி புடின் நான் வேடிக்கை காட்டும் குரங்கு அல்ல என்று தெரிவித்துள்ளார். உலகில் முதல் அதிக செயல்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னரே, அமெரிக்காவின் பைசர் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பல நாடுகளில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளனர். சில நாடுகளில் மட்டுமே ரஷ்ய தடுப்பூசியை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 68 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் கொரோனா தடுப்பூசி […]

Categories
உலக செய்திகள்

மூளைக்குள் சின்னதா ஒரு சிப்… வீடியோ கேம் விளையாடும் குரங்கு… புதிய கண்டுபிடிப்பு…!!!

உலகின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் நடத்திவரும் ஆராய்ச்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் உள்ள மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவர் எலன் மஸ்க். அவர் ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். தற்போது நியூராலிங்க் என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த நிறுவனத்தில் மனித மற்றும் விலங்குகளின் மூளையை ஒரு இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகள் வெகுவாக நடந்து வருகின்றன. அவ்வாறு குரங்கு ஒன்றின் தலையோட்டில் சிறுவர்களை கொண்டது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த குட்டி…. தாய் குரங்கு செய்த மனதை வதைக்கும் செயல்….!!

இறந்த குட்டி குரங்கை  தாய் குரங்கு தூக்கி தடவிக்கொடுத்து, வாயில் வைத்து ஊதியது நடைப் பயிற்சியில் ஈடுபட்ட அனைவரையும் கண்கலக்க வைத்தது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம்  மாவட்டத்தில் அமைத்துள்ள ஏற்காடு மலைப்பாதையில் அதிகமான குரங்குகள் வாழ்ந்து வருகின்றது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலைப் பாதைகளில் அமர்ந்திருக்கும் குரங்குகள் அடிக்கடி வாகனத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக உள்ளது. அவ்வகையில் நேற்று காலை குட்டிக் குரங்கு ஒன்று வாகனத்தில் சிக்கி இறந்துள்ளது. இறந்துபோன குட்டியை தாய் குரங்கு […]

Categories
பல்சுவை

வாலிபரின் வாயை திறந்து… பிரமித்து போய் ஆராயும் குரங்கு… ரசிக்க வைக்கும் வீடியோ..!!

மனிதனின் வாயை திறந்து பார்க்கும் குரங்கின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் விலங்குகளையும் அது செய்யும் சேட்டைகளையும் காணொளியாக பதிவு செய்து வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் குரங்கு ஒன்று மனிதனின் வாயை ஆச்சரியமாக பார்க்கும் காணொளி ஒன்றை பதிவிட்டார். அதில் மேசையின் மீது அமர்ந்திருந்த இரண்டு குரங்குகளில் ஒன்று அருகிலிருந்த ஒருவரின் வாயை திறந்து பார்க்கின்றது. பின்னர் குரங்கு அதன் வாயை […]

Categories
தேசிய செய்திகள்

தண்ணீர் குடிச்சத்துக்கு…. “தூக்கு தண்டனை” இறந்த உடலை நாய்க்கு வீசிய கொடூரம்….!!

தெலுங்கானாவில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் அம்மாபாளையம் பகுதிகளுக்குள் குரங்கு ஒன்று புகுந்து அங்கே உள்ள தோட்டத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழ, சத்தம் கேட்டு வந்த தோட்டத்தின் உரிமையாளர் குரங்கை கம்பால் கடுமையாகத் தாக்கியதோடு, அதனுடைய கழுத்தில் கயிறை கட்டி தொங்கவிட்டு மிகவும் கொடூரமாக அந்த குரங்கை […]

Categories
தேசிய செய்திகள்

நண்பா எழுந்துருடா… உனக்கு ஒன்னும் இல்ல… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் […]

Categories

Tech |