Categories
தேசிய செய்திகள்

குவிந்து கிடந்த குரங்குகளின் சடலம்…. பின்னணி என்ன?…. கொடூர சம்பவம்…..!!!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க மட்டும் தான் படிப்பீங்களா?…. நாங்களும் படிப்போம்….. அரசு பள்ளியில் மாணவர்களுடன் குரங்கு….. வைரல் வீடியோ….!!!!!

அரசு பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து வகுப்பறையில் குரங்கும் பாடம் படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஜார்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியர் பாடம் நடத்துவதை குரங்குகள் கவனித்து வருகின்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை. மாணவர்கள் நிறைந்த வகுப்பறைக்குள் நுழையும் குரங்கு பின் வரிசையில் சாதாரணமாக சென்று அமர்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே….! பிறந்து 4 மாசம் தான் ஆச்சு….. குழந்தையை தூக்கி எறிந்த குரங்கு….. உயிரே போன கொடூரம்….!!!!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதிக்கு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேந்தவர் நிர்தேஷ் (25). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த மார்ச் மாதம் இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சம்பவத்தன்று, நிர்தேஷ் வழக்கம்போல் தனது 4 மாத கை குழந்தையை வீட்டிலுள்ள மொட்டை மாடிக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கே குழந்தையை கையில் வைத்துக்கொண்டு சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தாங்கமுடியாத குரங்குகளின் அட்டகாசம்” பொதுமக்களின் கோரிக்கை…. போராடி பிடித்த வனத்துறையினர்….!!!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த குரங்குகளை வனத்துறையினர் பிடித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில்  100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அருகில் இருக்கும்  குரங்குகள் புகுந்து சிறுவர், சிறுமிகளை அச்சுறுத்துவது மட்டும் இல்லாமல் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் குரங்குகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து  வனத்துறையினர்  குரங்குகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது சிக்கிய   5  குரங்குகளை  பிடித்துள்ளனர். அதன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! விடிய விடிய…. “கொட்டும் பனியில்”… குரங்குடன் போலீஸ்…. என்னன்னு பாருங்க…!!

அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்து தப்பி சென்ற 4 ஆய்வுகூட குரங்குகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறைப்பனியை கூட பொருட்படுத்தாமல் தேடி அழைந்துள்ளார்கள். அமெரிக்காவில் லாரி ஒன்று மற்றொரு வாகனத்தின் மீது மோதிய விபத்தில் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆய்வுகூட குரங்குகளில் 4 அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்த குரங்குகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படுவதால் அதன் அருகே எவரும் செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். இதனையடுத்து போலீசார் 1 குரங்கை தப்பிய […]

Categories
தேசிய செய்திகள்

பழிக்கு பழியா?…. குரங்குகள் மற்றும் நாய்க்குட்டிகள் இடையில் கடும் யுத்தம்…. ஒரு சுவாரசியமான சம்பவம்….!!!!

மகராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகேயுள்ள பீட் எனும் இடத்தில் நாய்க்குட்டிகளுக்கும், குரங்குகளுக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தில் 80 நாய்க்குட்டிகளை கடித்துக் குதறி கொன்ற 2 குரங்குகளை வனத்துறையினர் வலைவீசி பிடித்தனர். இதனிடையில் நாய் குட்டிகளை தூக்கிக் கொண்டு உயரமான கூரைகளில் தாவும் குரங்குகள் அங்கு இருந்து அவற்றை தள்ளிவிட்டு கொல்வதாக மக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பின் நாய்களுடன் யுத்தம் நடத்தும் குரங்குகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். இந்நிலையில் வெறித்தனமான 2 குரங்குகள் அடையாளம் காணப்பட்டு […]

Categories
Uncategorized

“கொடூரத்தின் உச்சம்” சாலையோரம் கிடந்த சாக்கு மூட்டை…. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கோலார் புறநகர் பகுதியில் 20 குரங்குகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோலார் புறநகர் பகுதியில் நேற்று ஒரு பெரிய சாக்கு மூட்டை மர்மமான முறையில் கிடந்தது. அதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு உடனடியாக புகார் தெரிவித்தனர். அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அந்த சாக்குமூட்டையில் 20க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. இந்த குரங்குகளுக்கு யாரோ மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து […]

Categories
உலக செய்திகள்

BigAlert: சீனாவில் இருந்து பரவும் புதிய வைரஸ்….. உச்சக்கட்ட அதிர்ச்சி….!!!!

சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த நாட்டின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, பிரேசில், ரஷ்யா என்று உலகம் முழுவதும் பரவியது. கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடந்த 2020 முதல் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு கடுமையான பொருளாதார சீரழிவுகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் புதியதாக குரங்கு பி என்ற வைரஸ் பரவல் ஏற்பட்டு வருகிறது.  குரங்குகளை தாக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இவங்க ஏன் இன்னைக்கு வரல… காவல் நிலையத்திற்கு தேடி சென்ற குரங்குகள்… பசியை போக்கிய காவல் துறையினர்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கில் பசியால் தவித்த குரங்குகள் உணவுக்காக காவல் துறையினரை தேடி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மனிதர்களை நம்பி வாழும் நாய்கள், பறவைகள், குரங்குகள் போன்ற ஜீவ ராசிகள் உணவில்லாமல் தவிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளத்தில் இருக்கும் குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை நம்பியே வாழ்ந்து வருவதால் சுற்றுலாதளம் மூடப்பட்டுள்ளதால் குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றது. இதனால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பசியில் வாடும் குரங்குகள்…. வாகனங்களுக்காக காத்திருப்பு… வறட்சியினால் தவிக்கும் விலங்குகள்…!!

திம்பம் மலைப்பாதையில் ஏற்பட்ட  வறட்சி காரணமாக பசியில் வாடும் குரங்குகள் காய்கறி வாகனங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. சத்தியமங்கலத்தில் உள்ள திம்பம் மலைப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலைப்பாதையில்  கடந்த சில மாதங்களாகவே மழை இல்லாத காரணத்தால் அங்கு  இருக்கின்ற மரங்களில் காய்கள் மற்றும் பழங்கள் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகின்றது. இதனால் உணவு கிடைக்காமல் பசியில் சுற்றி திரியும் குரங்குகள் சாலையில் வரும் வாகனங்களை எதிர்நோக்கி உணவுக்காக காத்திருக்கிறது. இந்நிலையில் காய்கறி மற்றும் […]

Categories
உலக செய்திகள்

உலகிலேயே இதுதான் முதல் முறை… “மனித குரங்குகளுக்கு செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி”…!!

அமெரிக்காவின் பிரபல மிருகக்காட்சி சாலையில் உள்ள 9 குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. இந்நிலையில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் தடுப்பூசிகளை பொது மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்நிலையில் உலகிலேயே முதல் முறையாக கலிபோர்னியா மாகாணத்திலுள்ள பிரபல மிருகக்காட்சிசாலையில் ஒன்பது குரங்குகளுக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இந்த 9 குரங்குகளில்  4 குரங்குகள் ஓரங்கட்டான்  வகையைச் சேர்ந்தவை. […]

Categories
மாநில செய்திகள்

8 கூண்டுகள்… 25 குரங்குகள்…. கொத்தா மாட்டிகிச்சு…. தஞ்சையில் வனத்துறையினர் அதிரடி..!!

குழந்தைகளை தூக்கி சென்ற சம்பவத்திற்கு பிறகு வனத்துறையினர் கூண்டு வைத்து 25 குரங்குகளை பிடித்துள்ளனர். தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிக்கும் ராஜன்-புவனேஸ்வரி  என்பவரின் இரட்டை குழந்தை பிறந்து 8 நாளே ஆன நிலையில் குரங்கு ஒன்று வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே சென்று அந்த குழந்தையை தூக்கி சென்றது. இதில் ஒரு குழந்தை மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு குழந்தை குளத்தில் விழுந்து பலியானது. குரங்குகளின் அட்டகாசம் காரணமாக இச்சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே இடத்தில் குரங்குகளின் சடலம்…. விஷம் கொடுத்து கொலையா….? வனத்துறையினர் விசாரணை….!!

30க்கும் மேற்பட்ட குரங்குகள் ஒரே இடத்தில் இறந்து கிடந்ததால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதா என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மஹாபுபாபாத் மாவட்டம் சனிகபுரம் கிராமத்தின் அருகே உள்ள மலையடிவாரத்தில் 30க்கும் அதிகமான குரங்குகள் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், “குரங்குகளை கொன்றது யார் என தெரியவில்லை. வயலை பாதுகாக்க விவசாயிகள் செய்த செயலா அல்லது வேறு யாரேனும் இந்த செயலை செய்தார்களா என்பது பற்றி விசாரித்து வருகிறோம்” என […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அட்டகாசம்…. கிராம மக்களின் யுக்தி….. தெறித்து ஓடிய குரங்கு கூட்டம்….!!

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால்  புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து […]

Categories
பல்சுவை

பால் பாட்டிலுடன் பெண்…. குழந்தைகளாக மாறிய குரங்கு குட்டிகள்….. வைரலாகும் காணொளி…!!

குழந்தைகளுக்கு கொடுப்பது போன்று குரங்கு குட்டிக்கு பால் பாட்டிலில் பால் ஊட்டுவது காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது பெண்ணொருவர் மூன்று குட்டி குரங்குகளுக்கு பால் பால் பாட்டிலை கொடுக்கும் காணொளி சமூக வளைதளத்தில் தற்போது வைரல் ஆகி வருகின்றது. அந்த காணொளியில் பெண்ணொருவர் குழந்தைகளுக்கு பாலூட்ட பாட்டிலில் பால் பவுடர் போட்டு தண்ணீர் கலந்து தயார் செய்து கொண்டிருக்கிறார் என்பது போலவே இருக்கும். ஆனால் அந்தப் பெண்ணின் அருகே ஓடி வருவது குழந்தையல்ல குரங்கு குட்டிகள். அழகான […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நேரத்தில் 30 ஆடுகள்… கடித்து குதறிய குரங்கு கூட்டம்… பரபரப்பு சம்பவம்..!!

30 ஆட்டுக்குட்டிகளை குரங்கு கூட்டம் கொடூரமாக கடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தெலுங்கானா மாநிலம் சூரியபெட் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை அங்கு இருந்த குரங்கு கூட்டம் ஒன்று சுமார் 30 ஆட்டுக்குட்டிகளை கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டு மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றவர் 30 ஆட்டுக்குட்டிகளையும் கொட்டகையில் விட்டுவிட்டு திரும்பியுள்ளார். அச்சமயம் அப்பகுதிக்கு வந்த குரங்கு கூட்டம் ஆடுகளை விடப்பட்டிருந்த கொட்டகையை தாக்கத் தொடங்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் குரங்குகளை விரட்ட முயற்சி […]

Categories
உலக செய்திகள்

ஊரடங்கால் உணவு இல்லை… வன்முறையில் இறங்கிய குரங்குகள்.. பதுங்கும் மக்கள்..!!

ஊரடங்கால் உணவு கிடைக்காத குரங்குகள் பசியால் வன்முறையில் ஈடுபட தொடங்கி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. தாய்லாந்தில் லோப்பூரி நகரம் பிரபல சுற்றுலாத் தலமாகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவு பொருட்களை சாப்பிட ஒரு குரங்கு கூட்டமே காத்திருக்கும். அதுவும் 10 அல்லது 20 குரங்குகள் அல்ல 6000 குரங்குகள் காத்திருக்கும்.  இந்நிலையில் கொரோனா  தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அங்கு இல்லை.  அதனால்  குரங்குகள் உணவு இன்றி வன்முறையில் ஈடுபடத் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தனக்கு இயலாத நிலையிலும்… குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளி… குவியும் பாராட்டுக்கள்..!!

தனக்கு இயலாத நிலையிலும் மனிதநேயத்துடன் குரங்குகளுக்கு உணவளித்து வரும் கூலித்தொழிலாளியின் பணியை அப்பகுதி மக்கள் பாராட்டுகின்றனர். தஞ்சை மாவட்டம் கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் வேங்கூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை ஓரங்களில் புளிய மரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த புளிய மரங்களில் ஏராளமான குரங்குகள் வசித்து வருகின்றன. இந்த குரங்குகள் உணவு தேடி சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதையும், அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று ஏக்கத்தோடு பரிதாபமாக பார்த்துக் […]

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

குரங்கை காப்போம்….! குரல் கொடுப்போம் – சிறப்பு கட்டுரை …!!

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல இன்னல்களை சந்தித்து வரும் ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் பற்றிய சிறப்பு தொகுப்பு கொரோனா தொற்று பரவலின் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மனிதர்கள் படும் அவஸ்தையை விட குரங்குகள் அதிகமாகவே பட்டு வருகின்றன. மனிதர்கள் உணவு தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்த ஐந்தறிவு குழந்தைகளான குரங்குகள் ஊரடங்கினால் பசியால் மரணிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நாகரீகம் வளர வளர காடுகள் நகரங்கள் ஆகின. மனிதர்கள் அத்யாவசிய தேவைக்காக காடுகளை அழிக்கத் தொடங்கினர். […]

Categories
தேசிய செய்திகள்

நண்பா எழுந்துருடா… உனக்கு ஒன்னும் இல்ல… உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய குரங்கு… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ!

ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிருக்குப் போராடி கொண்டிருந்த குரங்கை மற்றொரு குரங்கு தனது உயிரைப் பணயம் வைத்து மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் நந்திகாமா (Nandigama) என்ற இடத்தில் ஏராளமான அனுமன் மந்திகள் (குரங்குகள்) உள்ளன. அப்பகுதியில் சுற்றித்திரிந்து விளையாடுவதை இந்த குரங்குகள் வழக்கமாக கொண்டுள்ளது. இந்நிலையில் இதில் ஒரு குரங்கு உயரமான மின்கம்பத்தைக் கடந்து செல்லும் போது திடீரென மின்சாரம் தாக்கியதில் மயக்கமடைந்து, தலைகீழாக தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இதனைப் […]

Categories

Tech |