வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டு இந்தோனேஷியாநாட்டுக்கு திரும்பிய ஒரு நபருக்கு சென்ற 5 நாட்களாக குரங்கம்மைக்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து பரிசோதனை முடிவில், அந்த நபருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்ற மே மாதம் இங்கிலாந்திலிருந்து குரங்கம்மை நோய்ப்பரவல் கண்டறியப்பட்டது. அதன்பின் ஜூலை மாதத்தில் குரங்கு அம்மையை சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. அதனை தொடா்ந்து நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு […]
Tag: குரங்கு அம்மை
ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்குஅம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கின்றது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை […]
உலகில் சமீப காலமாக குரங்கு அம்மை நோயின் பெயர் பாரபட்சமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் 1958 ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் தான் முதன்முதலாக குரங்கு வைரஸ் நோய் கண்டறியப்பட்டது.இதனைத் தொடர்ந்து இந்த நோய் காரணமாக ஏராளமான குரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பல குரங்குகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இதனைப் போலவே சமீபத்தில் பிரேசிலில் நோய் பயத்தால் மக்கள் குரங்குகளுக்கு விஷம் வைத்துக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. அதனால் உடனடியாக குரங்கு அம்மை நோய்க்கு புதிய […]
குரங்கு அம்மை நோய் தொடர்பான வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து ஆசிய நாடுகளிலும் குரங்கு அம்மை பரவி வருகிறது. எனவே இவற்றை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிர படுத்தியுள்ளது. அந்த வகையில் குரங்கு அம்மை நோய் தொடர்பாக செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை உள்ளிட்ட வழிகாட்டுதல் அடங்கிய அறிக்கை ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குரங்கு அம்மை வந்தால் செய்ய வேண்டியவை: குரங்கு […]
குரங்கு அம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குரங்கம்மை நோயை தடுக்க செய்யக்கூடியவை என்ன? # குரங்கு அம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலாவதாக தனிமைபடுத்த வேண்டும். # சோப்பு மற்றும் தண்ணீர் (அல்லது) சானிடைசர் உபயோகித்து கைகளை அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். # குரங்கு அம்மை பாதிப்பிலிருந்து தற்காத்துகொள்ள முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணியவும். # சுற்றுச்சூழல் சுகாதாரத்துக்காக கிருமி நாசினியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குரங்கு […]
இந்தியாவில் சென்ற ஜூலை 14ம் தேதி குரங்கம்மை பாதிப்பு முதன்முறையாக உறுதிசெய்யப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரள மாநிலம் வயநாடு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டது. அந்நபர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பிறகு குணமடைந்தார். இவரை தவிர்த்து கேரளாவில் மேலும் 4 நபர்களுக்கு குரங்கம்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இதுவரையிலும் குரங்கம்மை உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையானது 5 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று தலை நகர் டெல்லியில் […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதியானது. அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேலும் ஒருவருக்கு இதே போன்ற பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் இன்று மலப்புரம் பகுதியை சேர்ந்த 30 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த 27ஆம் […]
தென்னாப்பிரிக்காவில் இருந்து குரங்கு அம்மை வைரஸ் தற்போது ஐரோப்பியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த தொற்று பாதிக்கப்பட்டால் 6 முதல் 13 நாட்கள் வரை அதன் தாக்கம் இருக்கும். மேலும் பாதிப்பு தீவிரமடைந்தால் 5 முதல் 21 நாட்கள் வரை கூட தாக்கம் இருக்கும். காய்ச்சல், தலைவலி, முதுகு வலி, நிண நீர், முனைகளில் வீக்கம், குளிர்ச்சி, சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் தென்படும். மற்ற […]
குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரள தமிழக எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவித்ததாவது: “குரங்கு அம்மை பாதிப்பு 80 நாடுகளில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. கனடா, அமெரிக்காவில் இருந்து தமிழகத்திற்கு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் குரங்கு அம்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக கேரளா எல்லைப் பகுதிகளில் […]
குரங்கம்மை பாதிப்புக்கு இதுவரையிலும் ஆப்பிரிக்காவுக்கு வெளியே எந்தவொரு நாட்டிலும் உயிர் பலி இல்லை என்ற நிலை இருந்து வந்த சூழ்நிலையில், இத்தொற்றுக்கு பிரேசில் 41 வயது ஆண் ஒருவர் பலியாகிஉள்ளார். இவர் தான் ஆப்பிரிக்காவுக்கு வெளியே குரங்கு அம்மையால் பலியான முதல் நபர் என்று கூறப்படுகிறது. அதாவது கடும் நோய் எதிர்ப்பு பிரச்சினைகள் இவருக்கு இருந்ததாக கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டிலும் ஒருவர் இத்தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். குரங்கம்மையால் உலகளவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் இருக்கிறது. […]
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரோட்டரி கிளப் சார்பில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். முதல்வர் மு.க. ஸ்டாலின் புற்று நோய்க்காக சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் குரங்கு அம்மை […]
குரங்குஅம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெடித்து கிளம்பிய குரங்கு அம்மை கிருமி தற்போது வரை 78 நாடுகள் தீவிரமாக பரவி இருக்கின்றது. அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் இதுவரை 4,600 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக கலிபோர்னிய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 800 பேர் குரங்கு அம்மை வைரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். சான் பிரான்சிஸ்கோ நகரத்தில் […]
கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை என மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்ததாவது: “கன்னியாகுமரியில் குரங்கு அம்மை அறிகுறி என்று வெளியான தகவல் உண்மை இல்லை. குரங்கு அம்மை நோய் குறித்து யூகங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படவில்லை. வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்கள் படிப்பு முடிந்து வீடு திரும்பிய […]
கடந்த 2 வருடங்களாக உலகநாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று இப்போது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் புதியதாக உருவான குரங்கு அம்மை நோய், இப்போது உலகம் முழுதும் பரவி வருகிறது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நுழைந்துள்ளது. இதுவரையிலும் 78 நாடுகளில் 18,000க்கும் அதிகமானோர் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக சுகாதார அமைப்பு சென்ற சில நாட்களுக்கு முன்பு குரங்கு அம்மையை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக […]
அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகளை அச்சுறுத்திவந்த குரங்கு அம்மை நோய் இப்போது இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது. கேரளாவில் இதுவரையிலும் 3 நபர்களுக்கு இந்த பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரையிலும் இந்த தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் நோய் அறிகுறி உள்ளவரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டது. அவற்றில் குரங்கு அம்மை இல்லை என வந்துள்ளது. மத்தியஅரசு இந்தியாவில் 15 இடங்களில் இந்த நோய்க்கான ஆய்வகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் குரங்கு அம்மை நோய்க்கான ஆய்வகம் […]
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, குரங்கு அம்மை பரவல் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி. நாம் எப்போதுமே வைரஸ் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் குரங்கு அம்மையானது குரங்கு அம்மை வைரஸால் உருவாகின்றது. இது ஆர்த்தோ பாக்ஸ் வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பெரிய அம்மை நோயை ஏற்படுத்தும் ஆர்த்தோ பாக்ஸ் வைரஸை ஒத்த பண்புகளை கொண்டுள்ளது. […]
உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிற குரங்கு அம்மையை சர்வதேச சுகாதார நெருக்கடியாக உலக சுகாதார அமைப்பு கடந்த 23ஆம் தேதி அறிவித்துள்ளது. இந்த சூழலில் பிரான்ஸ் நாட்டில் அதிக திறன் கொண்ட குரங்கு அம்மை தடுப்பூசி மையங்கள் நேற்று திறக்கப்பட்டு இருக்கிறது. இந்த நாட்டில் கடந்த வாரம் மட்டுமே 1,567பேருக்கு இந்த நாய் தொற்று பரவி இருப்பதும் தலைநகர் பாரிஸில் மட்டும் 726 பேருக்கு குரங்குமை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். தற்போது பிரான்சில் 1,200க்கும் […]
நைஜீரிய நாட்டு நபர் சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை பாதிப்போடு கம்போடியா தப்பிய நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர், தாய்லாந்தில் வசித்து கொண்டிருக்கிறார். அவர், திடீரென்று குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில், இரண்டு விடுதிகளுக்கு சென்றிருக்கிறார். இது கண்டறியப்பட்டவுடன், அந்த இளைஞர் நாட்டைவிட்டு தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து, தாய்லாந்து நாடு முழுக்க அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரின் மொபைல் எண், கம்போடியாவில் இயங்கியது தெரிய […]
கடந்த சில வாரங்களில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது. இதனால் இதுவரைக்கும் 16,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலால் உலகளாவிய சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து 95% குரங்கு அம்மை பரவலுக்கு பாலியல் நெருக்கங்களே காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் […]
குரங்கு அம்மை பல நாடுகளில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மொத்த பாதிப்பு 3 ஆக அதிகரித்துள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் துபாயிலிருந்து ஜூலை 6ம் தேதி கேரளாவிற்கு வந்ததாகவும், பின்னர் கடும் காய்ச்சலால் கடந்த 13ம் தேதி அங்குள்ள மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் […]
அண்டை மாநிலமான கேரளாவில் 2-வதாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதியாகியுள்ளது தமிழகத்தில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா கன்னூர் மாவட்டத்தில் ஒரு நபருக்கு இத்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் துபாயிலிருந்து திரும்பியதாக தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரங்கம்மை நோய் பரவாமல் தடுக்க தமிழக – கேரள எல்லையில் அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு ஆகிய […]
உலகம் முழுவதும் 14 ஆயிரம் பேருக்கு குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் ஆப்பிரிக்காவில் இதுவரை 5 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோல் அதேனோம் கேப்ரியேசஸ் கூறியது, ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டனம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்திகளில் பரவி வருகிறது. உலக அளவில் இதுவரை 14,000 பேரு குரங்கு அம்மை நோயால் […]
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மைதொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கேரளாவில் மற்றொரு நபர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா சார்ஜ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஐ.கே அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து தொற்று உறுதியான பிறகு அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் […]
ஆப்பிரிக்க நாடுகளில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய்த்தொற்று இப்போது அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. இப்போது சுமார் 50-க்கு அதிகமான நாடுகளில் இந்த நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. உலக சுகாதார நிறுவனமும் இது தொடர்பாக கூடுதல் அக்கறை எடுத்து வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் குரங்கு அம்மை தொற்றானது கண்டறியப்பட்டு இருக்கிறது. சென்ற 12 ஆம் தேதி வளைகுடா நாட்டிலிருந்து கேரளா திரும்பிய 35 வயது நபருக்கு குரங்கு அம்மை இருப்பது […]
உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் இருந்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு விமானத்தில் வந்த ஒரு குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது 2 வயது பெண் குழந்தைக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்தது. […]
கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற உயர் நிலை ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் , 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அறிவித்தார். திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த […]
உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு திரும்பிய ஒருவருக்கு நேற்று குரங்கு அம்மை உறுதி ஆனது. இதையடுத்து, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோயை கண்டறியும் வகையில் மாதிரிகளை பரிசோதிக்க நாடு முழுவதும் 15 வைரஸ் ஆராய்ச்சி மற்றும் கண்டறியும் ஆய்வகங்கள் தயாராக உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் […]
குரங்கம்மை தொடர்பாக புதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குரங்கு அம்மை பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், போதிய படுகை வசதிகளை சிகிச்சைக்கு தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா […]
தற்போது ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55க்கும் அதிகமான நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். இந்த நோய் தற்போது நியூசிலாந்திலும் நுழைந்து இருக்கிறது. அங்கு ஆக்லாந்தில் வசிக்கிற 30 வயதான ஒரு நபருக்கு இத்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர் குரங்குஅம்மை நோய் தாக்கத்துக்கு ஆளாகியுள்ள வெளிநாடு ஒன்றுக்கு சென்று விட்டு திரும்பியவர் என தகவல்கள் கூறுகிறது. ஆகவே குரங்குஅம்மை பாதித்திருக்கும் நாடுகளுக்கு சென்று வந்தவர்கள், அந்நோய்க்கான அறிகுறிகள் பற்றி […]
உலக சுகாதார அமைப்பின் தலைவர் மெலிடா உஷ்னோவிக் ரஷ்ய செய்தி ஊடகம் ஸ்புட்னிக்கிடம் கூறும் போது, மண்டல அளவில் உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆய்வின்படி ஐரோப்பிய பகுதியில் குரங்கு அம்மை பரவக்கூடிய ஆபத்து அதிகமாக இருக்கிறது. அனைத்து நாடுகளிலும் புதிய பாதிப்புகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கு தொடர்பில் உள்ளவர்களையும் கண்டறிய வேண்டும். மேலும் அதன் அதிவேக பரவலை தடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, கனடாவில் […]
தென்னாப்பிரிக்காவில் மேற்கு மாகாணத்தில் உள்ள கேப் டவுன் பகுதியில் வெளிநாட்டிற்கு செல்லாத ஒருவருக்கு குரங்கம்மை பாதித்துள்ளது. இது குறித்து தென்னாபிரிக்கா சுகாதார அமைச்சர் ஜோ பாஹ்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு குரங்கம்மை பரவுவதை தடுப்பது குறித்து பயண கட்டுப்பாடுகள் விதிக்க பரிந்துரைக்கவில்லை. இருப்பினும் உள்ளூர் நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு குரங்கு அம்மை வழக்குகளை கண்டறிதல் மற்றும் அவற்றை மேலாண்மை செய்வதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன. அதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலின் போது விமான நிலையங்கள், துறைமுகங்கள் […]
இங்கிலாந்து நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை இப்போது ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. அந்த நாட்டில் கடந்த 26ஆம் தேதி வரையில் 1,076 பேருக்கு பாதிப்பு இருப்பது ஆய்வக பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் கனடாவில் அதிகளவில் குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஆப்பிரிக்காவிலுள்ள 8 நாடுகளில் இதுவரையிலும் 1500க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதன்பின் ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், […]
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதுவரை 57 நாடுகளில் இந்த நோய் பாதிப்பு உண்டாகி உள்ளது.குரங்கு அம்மை நோய் சமூக பரவல் எதிரொலியாக அவசரநிலையை உலக சுகாதார நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக குரங்கு அம்மை நோய் தொற்று பரவ தொடர்பாக ஆலோசனை நடத்த உலக சுகாதார நிறுவனம் அவசர கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், குரங்கு […]
லெபனானில் முதல் தடவையாக ஒரு நபர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை பாதிப்பு, உலக நாடுகளில் தற்போது பரவிக் கொண்டிருக்கிறது. எனவே, பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கையாக சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டிருக்கின்றன. கனடா, போர்ச்சுக்கல், ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உட்பட சுமார் 20-க்கும் அதிகமான நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் கூறியிருக்கிறது. இந்நிலையில், முதல் தடவையாக லெபனானில் ஒரு நபர் குரங்கு […]
குரங்கு அம்மை பெயருக்கு பதிலாக புதிய பெயர் வைக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இதுவரை 39 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில் 72 உயிரிழப்புகள் உட்பட 1100 க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 உயிரியலாளர்கள் மற்றும் பிற ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு கடந்த வாரம் குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் சூட்ட வேண்டும் என்று அழைப்பு […]
இங்கிலாந்து நாட்டில் மேலும் 104 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பானது உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனால் அந்நாட்டில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 470 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களில் 99 % பேர் ஆண்கள் எனவும் ஏராளமானவர்கள் லண்டனைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. உலகளவில் 28 நாடுகளில் 1,285 குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகி இருப்பதாக சென்ற வாரம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. அந்த நாட்டை தொடர்ந்து ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் […]
உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறுகையில், உலகம் முழுவதும் இதுவரை 29 நாடுகளில் 1,000-க்கும் மேற்பட்ட குரங்கு அம்மை பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போது முற்றிலும் கட்டுப்படுத்தக் கூடிய நிலையில்தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் […]
உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் 643 நபர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலகசுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கையானது 643ல் இருந்து 650 ஆக அதிகரித்துள்ளது. இது மே 13 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ம் தேதி வரையிலான நிலவரமாகும். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்ட தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறியதாவது “உள்ளூர் தொற்று இல்லாத 26 நாடுகளில் குரங்கு அம்மை பரவி […]
உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த நாடுகளில் இருந்து சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி,தோல் அலர்ஜி மற்றும் அம்மை […]
மங்கி பாக்ஸ் என அழைக்கப்படும் குரங்கு அம்மை நோய் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 20 நாடுகளில் பரவியுள்ள இந்த குரங்கம்மை காரணமாக 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் மேலும் இரண்டு நாடுகளுக்கும் இந்த குரங்கம்மை பரவியுள்ளது. மெக்சிகோவில் இருந்து முதன் முறையாக பரவி வந்த இந்த குரங்கம்மை பல நாடுகளில் தொடர்ந்து பரவி வருவதால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளன. அதுபோல் […]
உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நிலையில், அதை கண்டறிவதற்கான பரிசோதனை முறையை இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனம் கண்டறிந்துள்ளது. டிரிவிட்ரான் (TRIVITRON) என்ற நிறுவனம் ஆர்டி-பிசிஆர் முறையில் குரங்கம்மையை கண்டறியும் முறையை அறிமுகம் செய்துள்ளது. உலகம் முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை யாருக்கும் பாதிப்பு உறுதியாகவில்லை. எனினும் எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயாராக இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. குரங்கு அம்மைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக, […]
குரங்கு அம்மை பரவல் ஏற்படாமல் தடுப்பதற்கு பொது சுகாதார துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குரங்கு அம்மை அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில்: “உலக […]
13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயாகும். இந்த தொற்றானது, ஏற்கனவே பதினொரு நாடுகளில் 80 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 11 நாடுகளில் 80 பேருக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக […]
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிதாக குரங்கு அம்மை வைரஸ் பாதிப்பு பரவி வருகின்றன. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை நோயின் பாதிப்பு தெரிய வந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த பாதிப்பு உறுதி […]
பிரித்தானியாவில் இரண்டு பேர் அரிய வகை நோயான குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் உள்ள வேல்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் குரங்கு அம்மை நோயால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் பொது சுகாதாரத்துறையான PHW அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து மற்றும் PHW ஆகிய இரண்டும் தீவிர […]