ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் கலந்துகொண்ட பொதுமக்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் தங்களது மனுக்களை அளித்துள்ளனர். அதன்படி 320 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குறைதீர்க்கும் கூட்டத்தில் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ. 6 லட்சம் என 12 […]
Tag: குறைதீர்க்கும் கூட்டம்
சாலை விரிவாக்க திட்டத்தால் கையகப்படுத்தப்பட்ட மயானத்திற்கு பதிலாக மாற்று இடம் வழங்கக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள சப்-கலெக்டர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் மனுக்களை வழங்கியுள்ளனர். அப்போது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல உரிமை இயக்கத்தினர் மற்றும் கோலார்பட்டியை சேர்த்த பொதுமக்கள் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கோலார்பட்டியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து […]
அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஆர்.கொமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம், […]
ஆதிவாசி மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே போஸ்பாரா பகுதியில் ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆதிவாசி மக்களிடம் முதியோர் ஓய்வூதியம், சாதி சான்றிதழ் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் களுக்கான சான்றிதழ்களை அதிகாரிகள் பெற்றனர். இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர் பாக்கியலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் முகமது ஜாபர் ஷரீப், வருவாய் ஆய்வாளர் உமா உள்பட சில அதிகாரிகள் கலந்து கொண்டனர். […]
எனது இறப்பு சான்றிதழை பெற்று தரக்கோரி முதியவர் ஒருவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ராசிபுரத்தை அடுத்துள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்த செல்லப்ப கவுண்டர்(85) என்பவர் கலந்துகொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரிக்க சென்றபோது நான் இறந்துவிட்டதாகவும், அதற்க்கான இறப்பு சான்றிதழ் […]
சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 பேருக்கு சுற்றுலா துறை அமைச்சர் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சீரணி கலையரங்கத்தில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் மதிவேந்தேன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். இதனையடுத்து வீட்டுமனை பட்டா, முதிர்கன்னி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய உதவித்தொகை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய 24,72,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 102 […]
தமிழக போலீசாரின் குறைகளை தீர்ப்பதற்காக ‘உங்கள் துறையில் முதல்வர்’ என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் டி.ஜே.பி. சைலேந்திர பாபு குறைகளை கேட்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்தந்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் கமிஷனர்கள் தலைமையில் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் நிறைவேற்ற முடியாத குறைகளை மண்டல ஐ.ஜி.களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அந்த முகாமில் நிறைவேற்ற முடியாத குறைகளை டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடக்கும் முகாமில் மனு அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பொதுமக்கள் அவர்களின் குறைகளை எடுத்துக்கூறி கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனர். அதன்படி கூட்டத்தில் மொத்தம் 318 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து கூட்டத்தில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்துறையின் சார்பில் சுமார் 1 லட்சம் மதிப்பிலான சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய் மற்றும் […]
தமிழகம் முழுவதும் இன்று பத்திரப்பதிவுத்துறை குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற இருப்பதாக அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, முதல்வர் முக. ஸ்டாலினுடைய நடவடிக்கையால் பதிவுத்துறை சீரமைக்கப்பட்டு வருவதோடு பத்திரப் பதிவுக்கு வரும் பொதுமக்களை வரவேற்று சேவை செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 50 பதிவாளர் அலுவலகம், 9 துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகங்களில், பதிவுத்துறை குறைதீர்க்கும் […]
காணொலி வாயிலாக நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் 17 மனுதாரர்கள் கலந்து கொண்டு மனு அளித்துள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து மொத்தம் 17 மனுதாரர்கள் காணொலி வாயிலாக கலந்துகொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான கல்வி […]