திருவண்ணாமலை மாவட்டம் ஆலந்துரை அடுத்த கீழ் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயதான பழனி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக அவருடைய மனைவி வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் திரிஷா, மோனிஷா, மகன் சிவா, பூர்ணிமா, பூமிகா ஆகியோரை அருவாளால் வெட்டியதாக சொல்லப்படுகிறது. இதில் த்ரிஷாவுக்கு 14 வயதாகிறது. மேலும் பார்த்தோம் என்றால் மோனிஷா 11 வயது, சிவாவுக்கு 4 வயது, பூரணிமா மூன்று வயது, பூமிகா 9 வயதாகும் இவர்கள் ஐந்து பேருமே சிறுவர்கள். மிகவும் […]
Tag: குற்றம்
பிரபல நாட்டில் பாலியல் பலாத்காரச் சட்டத்தை திருத்தம் செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக சுவிட்சர்லாந் விளங்குகிறது. இந்த நாட்டில் வாழும் பெண்களை யாரேனும் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதற்கு அந்த பெண் புகார் அளித்தால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாக கருதப்படுகிறது. இது அந்த நாட்டின் பாலியல் பலாத்காரச் சட்டத்திலும் இருக்கிறது. இந்த நிலையில் பாலியல் பலாத்காரச் சட்டத்தில் திருத்தங்கள் தேவை. மேலும் ஒரு பெண் எதிர்ப்பு […]
கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
காதல் தகராறு காரணமாக மாணவி சத்யாவை சதீஷ் என்பவர் கொலை செய்ததாக தற்பொழுது தகவல் கிடைத்திருக்கிறது. இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதால் கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் ஆனது வெளியாகி இருக்கிறது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சதீஸ் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவமானது நிகழ்ந்துள்ளது
கேரளாவில் தமிழக பெண் ஒருவர் நரபலி கொடுக்கப்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. கொச்சியில் வசித்து வந்த பத்மா மற்றும் காலடியைச் சேர்ந்த ரொஸாலி ஆகியோரை லைலா தம்பதி நரபலி கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இரண்டு பேரையும் ஏமாற்றி அழைத்து வந்த தரகரையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். கொச்சியில் வசித்த பத்மாவுடன் தமிழ்நாட்டில் உள்ள அவரது உறவினர்கள் பேச முயன்ற போது தொடர்பு கிடைக்கவில்லை. இதையடுத்து பத்மாவுடன் தொடர்பு கொள்ள முடியாதது குறித்து கேரள போலீசுக்கு அவரது உறவினர்கள் […]
புதினின் அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் அணுசக்தி துறை தலைவர் மாயமாகியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ஏழு மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதில் போரில் கைப்பற்றிய உக்ரைனின் பிராந்தியங்களான லூஹான்ஸ், டொனட்ஸ்க், கெர்சன் மற்றும் ஜபோர்ஜியா போன்ற நான்கு பிராந்தியங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர் அறிவிப்பை ரஷ்ய அதிபர் புதன் நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த நான்கு பிராந்தியங்களையும் ரஷ்ய படைகளிடமிருந்து மீட்க உக்ரைன் ராணுவம் […]
உத்திர பிரதேசத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு பள்ளியில் மதிய உணவு பரிமாறப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகியிருக்கும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் தரையில் அமர்ந்தபடி பள்ளி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தில் சாதம் மற்றும் உப்பு சாப்பிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அயோத்தியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய […]
பிரித்தானியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அகதியாக நாட்டிற்கு வந்த உக்ரைனிய பெண் மீது காதல் கொண்டு மனைவியை கைவிட்டதற்கு பிரபலமாக அறியப்பட்டவர் டோனி கார்னெட்(30). இவர் உக்ரைனிய அகதியான 22 வயது சோபியா கர்கடிம் மீது காதல் கொண்டு அவர் தனது பத்து வருட மனைவி லோர்னாவையும்(28) அவரது இரண்டு குழந்தைகளையும் விட்டுவிட்டு வெளியேறி புதிய காதலியுடன் புதிய வீட்டில் குடியேறியுள்ளார். ஆனால் இரு திங்களுக்கு முன் தனது உக்ரைனிய காதலி சோபியா உடன் தனது […]
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் கூறியிருந்தார். இதே போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா […]
நாட்டில் கடந்த வருடம் சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் பரப்பியதாக அதிக வழக்குகள் பதிவான மாநிலங்களில் மேற்குவங்கம் முதலிடத்தில் இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 43 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இதில் 28 வழக்குகள் கொல்கத்தாவில் மட்டும் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த வருடம் தேர்தல் நடைபெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆளும் திரிமுணால் காங்கிரஸ் இருக்கும் பாஜவிற்கும் இடையே கடுமையான […]
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கெங்காபுரம் பகுதியில் புகழ் பெற்ற முத்துமாரியம்மன் கோவில்அமைத்துள்ளது. இந்நிலையில் நேற்று செவ்வாய் கிழமை என்பதால் அந்த கோவிலுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் திரளாக வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் வீட்டில் நன்மை உண்டாகவும் , வீட்டில் மாமியார் -மருமகள் சண்டைகள் தீரவும் சிறப்பு பூஜை செய்வதாகவும் இதற்காக நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள தங்கநகையை கொண்டு வரும் படி கூறியுள்ளார். இதனை உண்மை என […]
உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளதாவது: “உயரதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனே திரும்பப்பெற வேண்டும். ஓராண்டு பயிற்சி முடித்து ரூ.45 ஆயிரம் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். ஆர்டர்லிக்களை […]
அலெக்ஸி நவால்னி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் விமர்சனகாரரான எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மீது 15 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தீவிரவாத அமைப்பை உருவாக்கி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட முயற்சி செய்ததாக நவால்னி மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அறக்கட்டளை நிதி மோசடி மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் உள்ள நாவால்னி இந்த […]
பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி கடந்த 4 ஆண்டுகளாக 20 கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக திமுக டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார். மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய திமுக எம்.பி டி.ஆர் பாலு 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிரதமர் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 50 சதவீதம் குறைக்கப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், எட்டு ஆண்டுகளில் தற்போது 50 சதவீதத்திற்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்தாக குற்றம்சாட்டினார். […]
பாலியல் வழக்கு தொடர்பாக மு க ஸ்டாலின் டிஜிபி சைலேந்திரபாபு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. விருதுநகரில் சமீபத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 22 வயதான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய புகாரில் திமுக நிர்வாகி 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.இதில் முக்கிய குற்றவாளிகளான ஹரிஹரன், […]
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு தமிழக அரசு வழங்கக்கூடிய இந்த ரேஷன் அரிசியை சிலர் வாங்கி விற்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் ரேஷன் அரிசியை வெளிமாநிலங்களுக்கு கடத்தும் செயல்களும் நடைபெற்று வருகின்றன. இதனை தடுப்பதற்காக காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. எனினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரேஷன் அரிசியை வாங்கி விற்பனை செய்வோர் மீது குண்டர் […]
முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து […]
சென்னை மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தேசிய, மாநில சின்னங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்த தகவலை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் கருத்து தெரிவித்தபோது, குற்றம் நடைபெறுவதை காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பது என்பது ஆபத்தானது ஆகும். குற்றவாளிகளும் இதுபோன்ற சின்னங்களைத் தவறாக பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். நாட்டில் அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்களா? என்பதை மக்களும் பார்ப்பார்கள் என்று […]
மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரும், பொதுமக்களும் ஒத்துழைக்க தர வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஸ்ரீ நாதா விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த சுகுணா சிங் மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து பதவியேற்றுக் கொண்ட சுகுணா சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம் இன்னும் முழுமையாக செயல்படுவதற்கு […]
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்த நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10-ஆம் நாள் முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை சி. என் கிராமப் பகுதியைச் சேர்ந்த உடையார், சூர்யா ஆகிய இருவர் வீட்டிலேயே ஊறல் செய்து சாராயம் தயாரித்துள்ளன. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வித்தியாசமான வாசனை வரவே சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் வருகையை அறிந்த […]
மதுரை அருகே மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. அலங்காநல்லூர் அருகே ஐய்யூர் பகுதியில் கார்த்திக் என்பவர் தனது பால் கடை முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அந்த வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்திருந்தார். அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் […]
செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் அருகே ரியல் எஸ்டேட் அதிபரை விரட்டி சென்று கொலை மிரட்டல் விடுத்த இடைதரகர் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கூவத்தூர் பகுதியில் பத்திரப் பதிவை முடித்துக் கொண்டு சிங்க பெருமாள் கோவிலை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான துரை சண்முகம் மணி என்பவர் தனது மனைவி மற்றும் சகோதரருடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். முன் விரோதம் காரணமாக காரில் பின் தொடர்ந்து வந்த இடைதரகர் ராஜா […]
ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை அதிவேகமாக ஓட்டி சென்ற இளைஞருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் லிங்க்கான்ஷிரில் உள்ள ஸ்பல்டிங் அருகிலுள்ள ஒரு சாலையில் கடந்த மார்ச் 8ஆம் தேதி 22 வயதான ட்ரெசி ஹெர்குலிஸ் என்ற நபர் காரை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த போலீஸ் காரை பார்த்தவுடன் அவர் இன்னும் படுவேகமாக ஓட்டி சென்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை துரத்தி சென்றுள்ளனர். மிக வேகமாக சென்ற அந்த […]
ஈரோடு அருகே இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்தி நரபலி கொடுக்க திட்டமிட்ட புகாரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ளரங்கம் பாளையம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது பெற்றோர், சித்தி மற்றும் தாயை திருமணம் செய்து கொண்ட பெண் ஆகிய நால்வரும் கொடுமைபடுத்தியதாகவும், நரபலி கொடுக்க திட்டமிட்டதால் அங்கிருந்து தப்பி தங்களது தாத்தா, பாட்டி ஊரான புன்செய் புளியம்பட்டிக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து தனிப்படை […]
புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி சுடுகாடு அருகே தூக்கி வீசி தலைமறைவான காதலனை போலீசார் கைது செய்தனர். வில்லியனுர் அடுத்த சந்தை புது குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேஷ்ஸ்ரீ என்பவர் விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் கொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் சாக்கு மூட்டையில் இளம்பெண் ஒருவர் […]
புதுச்சேரியில் மனைவி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கணவன், மாமனார் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த பத்மநாபன் என்பவர் தன் மகளை விழுப்புரத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மகள் தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாமனார் பத்மநாபன் நடத்தும் நிறுவனத்திற்கு சென்ற ரஞ்சித் பேசிக்கொண்டு இருந்தார். திடீரென ஆத்திரமடைந்த ரஞ்சி தனது மாமனார் மீது கொலைவெறி தாக்குதல் […]
சென்னையில் மதுபோதையில் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதை தட்டிக்கேட்ட இளைஞர்களை ஆபாச வார்த்தைகளால் பெண் ஒருவர் திட்டிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சென்னை துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சித்திர பாலா. இவர் ஒரு நிகழ்ச்சி முடிந்து அவரது காரில் திருபுரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்திசையில் விக்னேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனை கண்ட சக வாகன ஓட்டிகள் மூன்று கிலோமீட்டர் துரத்தி சென்று காரை […]
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து, அதை புழக்கத்தில் விட முயன்றவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்க , அவரை துரத்தி பிடித்தனர். அவரை சோதனையிட்டதில் அவரிடம் இருபதாயிரம் மதிப்புள்ள இருநூறு மற்றும் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததும், அதனை புழக்கத்தில் விடுவதற்காக அவர் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற […]
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அனுமதியின்றி கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். வேதாரண்யம் அருகே காவல்துறை சிறப்பு பிரிவுக்கு வந்த தகவலின் பேரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கலவை மண் ஏற்றிச்சென்ற டிராக்டர் ஒன்றை மடக்கி பிடித்தனர். இதையடுத்து கைப்பற்றிய டிராக்டரை கரியாப்பட்டினம் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு டிராக்டர் உரிமையாளர் சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை காவலர்கள் மீது வீசியதில் தனிப்பிரிவு காவலர்கள் இருவர் காயம் […]
கேரளா மாநிலம் மலப்புரத்தில் வளர்ப்பு தாய் வீட்டில் உள்ள ஷூவை கடித்தததால் உரிமையாளர் ஆத்திரமடைந்து செய்த நிகழ்வு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தில் உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள இட கரை பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டில் உள்ள ஷூவை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் நாயை ஸ்கூட்டரில் கட்டி மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்து சென்றுள்ளார். இதை பார்த்த ஒருவர் பின் தொடர்ந்து சென்றும் அவர் ஸ்கூட்டரை நிறுத்தாமல் மூன்று கிலோமீட்டர் தூரம் […]
துறையூர் அருகே நாடக கம்பெனியில் போலீஸ் அதிகாரி உடையை வாடகைக்கு எடுத்து அதனை அணிந்து வந்து சகோதரியை மிரட்டி நில பத்திரத்தை அபகரிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சினிமாவில் வருவதைப் போன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தில் தான் அரங்கேறி உள்ளது. நாடக கம்பெனி ஒன்றில் போலீஸ் உடையை வாடகைக்கு எடுத்த ராமஜெயம் என்ற இளைஞர் அதனை அணிந்து வந்து தனது சகோதரி வெண்ணிலாவிடம் உள்ள வீடு மற்றும் நிலப்பத்திரத்தை […]
வேடசந்தூர் அருகே தன்னுடைய கணவன் மற்றும் இரு குழந்தையை விட்டுவிட்டு காதலுடன் சென்ற பெண்ணை காதலனே அடித்துக் கொன்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்த அய்யலூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் மணி அவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியேறிய ரஞ்சிதா, பின்னர் வீடு திரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ரஞ்சிதாவின் தந்தை முருகேசன் வடமதுரை காவல் நிலையத்தில் […]
சென்னை பல்லாவரத்தில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் கர்ப்பிணிப் பெண்ணை கீழே தள்ளிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகரை சேர்ந்த கீதா என்பவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் இரு தினங்களுக்கு முன் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன் கீதாவின் கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றான். ஆனால் கீதா தாலி செயினை இறுக்கமாக […]
பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார். அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம். […]
நாங்கள் குற்றம் செய்திருந்தால் நீங்கள் நிரூபித்து இருக்கலாம் என்று ஸ்டாலின் அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
கன்னடா தேவாலயத்தில் தன்னார்வலராக இருந்தவர் பாலியல் ரீதியாக குற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் ரொரன்ரோவில் உள்ள மிசன் கிரொஸ்டியனா வோஸ் டி தேவாலயத்தில் 62 வயதான ஜோஸ் போர்டிலோ தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார். அவர் தேவலாயத்திற்கு வரும் 18 வயதுக்கு குறைவான இரண்டு சிறுவர்களிடம் பாலியல் ரீதியான குற்றம் செய்து உள்ளார். இவர் கடந்த 2013 ஜூலையில் இருந்து 2020 ஆகஸ்ட் வரை இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இவரை கைது […]
ஜெர்மனியில் உள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் 300-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள கத்தோலிக்க மறைமாவட்டமான கோலோக்னே நகரிலுள்ள RCI திருச்சபையில் மதகுருக்கள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த உண்மைகள் எல்லாம் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் நியமிக்கப்பட்ட ஒரு சுயாதீன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.அந்த அறிக்கையில் கடந்த 1975ஆம் ஆண்டில் இருந்து 2018 வரை 202 குற்றவாளிகள் 316 பேரை பாலியல பலாத்காரம் செய்துள்ளனர் […]
சட்டவிரோதமாக அமெரிக்காவிற்கு ஆள்கடத்த முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது தீர்ப்புக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவை சேர்ந்த இலங்கை தமிழர் கஜமுகன் செல்லையா (வயது 55). இவர் சட்டவிரோதமாக ஆவணங்களற்று புலம்பெயர்வோரை அமெரிக்காவிற்குள் கடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இவர் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தி வரும்போது டூர்க்ஸ் அண்ட் சைகோஸ் பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவர் தனது சுயலாபத்துக்காக சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியதாகவும், அதற்கு […]
உத்திரபிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்ததால் இளம் பெண்ணுக்கு நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் கோவிந்த். இவர் அதே பகுதியை சேர்ந்த யாமினி (19 வயது) என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவிந்த் தனது காதலை வெளிப்படுத்திய போது யாமினி ஏற்க மறுத்துள்ளார். இதனால் சம்பவத்தன்று நள்ளிரவு அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற கோவிந்த் அரிவாளை எடுத்து யாமினி, அவரது தாயார் மற்றும் அவரின் அண்ணியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து […]
ஆந்திராவில் இருந்து கஞ்சா பொட்டலங்களை கடத்தி சென்னையில் விற்பனை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடியை அடுத்த பொத்தூர் கனரா வங்கி எதிரில் உள்ள மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை ஆய்வாளர் நடராஜன் சாதாரண உடையில் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரிடம் விசாரித்தபோது கஞ்சா இருப்பது தெரியவந்தது. அப்போது அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சா பொட்டலங்கள் சிக்கியது. அவரிடமிருந்த […]
அமெரிக்காவில் 16 வயது சிறுமியிடம் பாலியல் குற்றம் செய்த நபரை ர் போலீசார் கைது செய்துள்ளது . புளோரன்ஸ் கவுண்டியை சேர்ந்த 50 வயதான டிவைன் முல்ட்ரோ என்பவர் 11 வயது சிறுமியை கடந்தாண்டு நவம்பர் மற்றும் பிப்ரவரியில் பாலியல் ரீதியாக தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமியிடம் டிவைன் பணம் கொடுத்து வெளியில் சொல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த விஷயம் இப்போது வெளியே வந்த நிலையில் டிவைனை போலீஸ் கைது செய்துள்ளது . மேலும் […]
அமெரிக்காவில் பெண் ஒருவர் 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதால் போலீஸ் அவரை கைது செய்தது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தில் பாராகவ்வுள்டு பகுதியில் வசித்து வரும் 23 வயதான பிரிட்டனை கிரே என்ற பெண் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கர்ப்பமுற்று உள்ளார். ஏற்கனவே கிரே 18 வயது உட்பட்ட சிறுவனுடன் பாலியல் உறவு வைத்திருந்ததை பார்த்த நபர் செப்டம்பர் 29, 2020 அன்று போலீசில் புகார் […]
இலங்கை யாழ்ப்பாணத்தில் தாயே தனது 8 மாத குழந்தையை அடித்து துன்புறுத்தியதால் கைது செயப்பட்டார். இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஒருவர் தனது குழந்தையை பிரம்பால் அடித்தும் , ஒரு கையால் குழந்தையை தூக்கி சென்றும் துன்புறுத்தி வந்துள்ளார். அவரின் கணவர் அரபு நாட்டில் வேலை பார்த்து வருகிறார் .அந்த பெண்ணின் சகோதரன் அவர் குழந்தையை துன்புறுத்தும் செயலை கண்டு உடனே அதனை வீடியோவாக எடுத்து சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார் . https://twitter.com/PTTVOnlineNews/status/1366960627789361154?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1366960627789361154%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F94930%2FMother-who-beat-her-nine-month-old-baby-in-srilanka இந்த […]
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்புப் பணியில் இருந்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் காவல்துறை சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் ராஜேஷ் மீதான பாலியல் வழக்கை […]
தமிழக சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலியல் புகார் அளித்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் […]
நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று 70,40,000 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஈழத்தமிழ் பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழ் பெண்ணான விட்ஜா என்பவர் ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகிறார். அவர் அங்குள்ள சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் நடிகர் ஆர்யா தன்னிடம் ஆன்லைன் மூலம் காதலை தெரிவித்ததாகவும் , பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி 70,40,000 ரூபாய் பெற்றுக் கொண்டு […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே சிறுமியை கடத்திச் சென்றதாக இளைஞர் ஒருவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். வாலிபர் கைது செய்யப்பட்டது எப்படி ? கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பூவிழுந்த நல்லூர் கரைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் கார்த்திகேயன் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். பதின் பருவத்தில் இருந்த சிறுமியும் கார்த்திகேயன் விரித்த காதல் வலையில் விழுந்துள்ளார். […]
சென்னையை அடுத்த ஆவடியில் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். சென்னை ஆவடி அடுத்த மூத்தாபுதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். தனது நிலத்திற்கு பட்டா கேட்டு ஆவடி பாலமேடு கிராமநிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பத்தை பரிந்துரைக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் துர்கா தேவியிடம், சதீஷ்குமார் கேட்டுள்ளார். ஆனால் அவர் பட்டாவிற்கு பரிந்துரை செய்ய ரூபாய் 2,000 லஞ்சம் தரவேண்டும் என […]
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்ததால் காதலியை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சாய் நகரை சேர்ந்தவர் பாவனா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற நபர் சில நாட்களாக அந்த இளம் பெண்ணை காதலிக்க கோரி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் மூலமாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் […]
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாயமான ஒன்றிய கவுன்சிலரின் கணவர் நட்சத்திர ஏரியில் பிணமாக மிதந்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடைக்கானல் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி காந்திமதி. அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலராக இருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற சந்திரன், அதன் பிறகு வீடு திரும்பாததால் கொடைக்கானல் காவல்நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். இந்த நிலையில் நகராட்சி அலுவலகம் எதிரே நட்சத்திர ஏரியில் ஒருவரின் உடல் மிதப்பதாக […]