Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் அதிர்ச்சி…! ”1இல்ல.. 2இல்ல” 5 பெண்களிடம்…. சிக்கிய 14வயது சிறுவன் …!!

பிரிட்டனில் 14 வயது சிறுவன் 5 பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளான் . கடந்த மூன்று வாரங்களில் பிரிட்டனிலிலுள்ள  லீட்ஸீல் 14 வயது சிறுவன் 19 லிருந்து 55 வயதான ஐந்து பெண்களுக்கு பாலியல் ரீதியான தாக்குதல் செய்ததாக சிறுவன் மீது புகார் வந்துள்ளது. இதன்படி பூங்காவில் 55 வயதான பெண்ணிடம் சிறுவன் தவறாக நடந்து கொண்டுள்ளான். அதேமாதிரி 29 வயது இளம்பெண்ணை பின்தொடர்ந்து அவரை அச்சுறுத்தும் வகையில் தவறாக தொட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன் கூட தான் வாழ்வேன்…! ப்ளீஸ் எனக்காக கொடு…! கணவன் என நம்பிய பெண்… பிறகு நடந்த விபரீதம் …!!

சென்னையை சேர்ந்த 40 வயது பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரிடமிருந்து 10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் மறுமணம் செய்து கொள்வதற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 13 வயதில் ஒரு குழந்தை உள்ளது. மேலும் தன் கணவரை சமீபத்தில் தான் விவாகரத்து செய்துள்ளார். திருமண மையத்தில் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் இந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுவையில் அதிர்ச்சி…! ”1இல்ல… 2இல்ல”… 10க்கும் மேற்பட்ட பெண்கள்.. இளைஞனின் பகீர் வாக்குமூலம் …!!

புதுச்சேரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடம் பேஸ்புக் மூலம் ஆபாச படத்தை வைத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னையை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கூவத்தூர் காரன் குப்பத்தை சேர்ந்த இளைஞர் கார்த்திக், சமையல் வேலை செய்து வருகிறார். இவர் புதுச்சேரி திருபுவனையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி வந்துள்ளார். தொடர்ந்து ஆசை காட்டி மாணவியை காதல் வலையில் விழவைத்த கார்த்திக், வற்புறுத்தி ஆபாச புகைப்படங்களை பெற்று செல்போனில் பதிவு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! போக்ஸோவில் டாக்டர் கணவர் கைது ..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது  காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

என் கணவர் தூங்கிட்டாரு வா…! இரவில் வந்த ”அந்த” சத்தம்… கண்டதும் அதிர்ச்சியான குடும்பத்தார் …!!

தேனியில் கணவனை கொலை செய்ய உடந்தையாக இருந்த மனைவி மற்றும் கொலை செய்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி அருகே இருக்கும் கோட்டூர் அரசமர தெருவை சேர்ந்த ராஜேஷ் கண்ணன். 44வயதுடைய இவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளி வந்து அங்குள்ள மக்களை நடுங்க வைத்துள்ளது. இவர் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவரின் மனைவி மணிமேகளை. 40வயதான மனைவி, 14வயதில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு ? உச்சகட்ட பரபரப்பு …!!

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழக அரசு வேலை வழங்காவிட்டால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டியுள்ளார். இளைஞர் மணிகண்டன் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? என்ற சந்தேகத்தில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

பாக்குறதுக்கு அழகா இருக்கு…! வீட்டுல வச்சு இருக்கோம்…! யாருக்காவது வேணுமா ? தம்பதிகளின் முடிவால் சிறை …!!

கேரளாவில் நட்சத்திர ஆமையை கடத்தி விற்பனை செய்ய முயன்ற கணவன், மனைவியை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இடுக்கி மாவட்டம் மறையூர் வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக சென்ற முருகன் , கவிதா இணையர், அங்கு அறிய வகை பெண் நட்சத்திர ஆமை யை கண்டு எடுத்துள்ளனர் . பின்னர் அதனை எடுத்து வந்து தங்களது வீட்டில் மறைத்து வைத்து இருந்ததாக தெரிகிறது . இதையடுத்து நட்சத்திர ஆமையை விற்பனை செய்ய பலரிடமும் ஆலோசனை கேட்டு வந்தனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வயதான பாட்டிகளிடம் கைவரிசை…! வசமாக சிக்கிய 4பெண்கள்… சிறையில் தள்ளிய மதுரை போலீஸ் …!!

மதுரை மாநகரில் கோவிலுக்கு சென்ற மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த 4 பெண்களை கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி கைது செய்தனர். மதுரை மாநகரில் வழிப்பறி கும்பல்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கூண்டோடு கைது செய்ய வேண்டும் என்று மதுரை காவல்துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகரம் முழுவதும் அதிரடி வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் தல்லாகுளம் நாராயணபுரம் மந்தையம்மன் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…! பரபரப்பான சென்னை ஏர்போர்ட்… சோதனையில் அதிர்ச்சி …!!

சென்னையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற இரண்டரை கோடி மதிப்புள்ள போதைப் பவுடர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானத்தில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து , ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சரக்கு விமானத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது எலக்ட்ரானிக்  சமையல் பொருட்கள் பார்சலில் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடிகார மருமகனால் தொல்லை…! கதறி அழுத மகள், பேத்தி….. போட்டு தள்ளிய மாமனார் …!!

ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரம் அருகே மகள் பேத்திகளை நிம்மதியாக வாழ விடாத மருமகனை மாமனாரே வெட்டி கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எமனேஸ்வரம் அருகே உள்ள கேணிக் கரையை சேர்ந்த நாகநாதனுக்கும் பொதுவை குடியை சேர்ந்த கருப்பையாவின் மகள் சங்கீதாவிற்கு பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . பரமக்குடி அருகே உள்ள அங்கன்வாடியில் சங்கீதா சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் குடும்பத்தை கவனிக்காமல் நாக நாதன் நாள்தோறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்த மாதம் மகளின் கல்யாணம்…! ஆட்டோ டிரைவர் வீட்டில்…. சென்னையில் நடந்த அதிர்ச்சி …!!

சென்னை பூந்தமல்லி அடுத்த மாங்காட்டில் பூட்டியிருந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாங்காடு சாதிக் நகரில் ஆட்டோ ஓட்டுனர் தமீம் மனைவி தாஹிரா பேகம். இவர் தன்னுடைய பிள்ளைகளுடன் வசித்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டின் கதவை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டனர். இரவு வேலை முடித்து வந்த தமிம் பீரோவை திறந்து பார்த்த பொழுது அதில் வைத்திருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

பாஜகவில் இணைந்த ரவுடி கைது…! ஆந்திரா சென்று தூக்கிய தமிழக போலீஸ் …!!

ஆந்திராவில் பதுங்கி இருந்த பாஜக பிரமுகரரும், கூலிப்படை தலைவருமான கல்வெட்டு ரவி சென்னை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த ரவுடி ரவி சமீபத்தில் பாஜகவில் சேர்ந்தார். அப்பொழுது தான் திருந்தி விட்டதாகவும், சமுதாய பணியில் ஈடுபட போவதாகவும் கூறினார். ஆனால் அதன்பின் தலைமறைவாகி விட்டார். அவருக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் கொலைமுயற்சி வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் ரவுடி ரவி ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பெயரில் ரவியை […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கூலி தொழிலாளிக்கு துயரம்….! கொடூரர்களாக மாறிய குமபல்…! தஞ்சையில் பரபரப்பு வீடியோ …!!

தஞ்சை அருகே பணம் திருடியதாக குற்றம் சாட்டி கூலி தொழிலாளி ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒரு மரத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடித்ததுடன்.அதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாபநாசம் தாலுக்கா பூண்டி மேலத்தெருவில் வசித்து வருபவர் ராகுல். கூலித் தொழிலாளியான இவர் பணம் திருடி விட்டதாக குற்றம் சாட்டி அப்பகுதியை சேர்ந்த சிலர் துணியால் ராகுலின் கண்களை கட்டி இழுத்துச் சென்று மரத்தில் கட்டி வைத்து பிரம்பால் சரமாரியாக […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஏரலில் மினி லாரி ஏற்றி எஸ்.ஐ. கொலை – பரபரப்பு தகவல் …!!

ஏரல் பகுதியில் மினி லாரியை ஏற்றி எஸ்.ஐ கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இருக்கக்கூடிய காவல் நிலையத்துக்கு உட்பட்ட கொற்க்கை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஏரல் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் பாலு என்பவர் அப்போது மதுபோதையில்  டாட்டா ஏசி வாகனத்தை ஓட்டி வந்த முருகவேல் என்பவரை பிடித்து விசாரித்தார். முருகவேல் அருகில் இருக்கக்கூடிய கடையில் மது போதையில் பிரச்சினை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையர்கள் வழுக்கி விழுந்தனர்: தமிழக காவல்துறை தகவல் …!!

நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் நகை வியாபாரி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் இருந்த சுமார் 17 கிலோ தங்கம் தங்க நகைகளையும், 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து விட்டு, நகை வியாபாரி காரிலே தப்பி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கு சொத்து முக்கியம்…! மாமனார் கழுத்தை அறுத்த மருமகன்… சென்னையில் கொடூரம் …!!

சொத்து தகராறில் மாமனாரின் கழுத்தை மருமகன் கொடூரமாக அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் வசித்து வருபவர் குமார். இவரின் மனைவி ஹேமலதா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களுடன் ஹேமலதாவின் தந்தையான 82 வயதான ஜெகநாதனும் வசித்து வந்தார். வேலைக்கு செல்லாமல் இருந்து வந்த குமார் ஜெகநாதனின் பென்சன் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்ததாக தெரிகிறது. இதனிடையே மாமனார் பெயரில் உள்ள வீட்டை தனது […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கஞ்சா போதையில் எல்லை மீறிய மகன்…! நாற்காலியால் அடித்து கொலை… கடலூரை அதிரவைத்த சம்பவம்…!!

கடலூர் அருகே கஞ்சா போதையில் தந்தையை மகனே நாற்காலியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் முதுநகர் மோகன் சிங் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். 55 வயதான இவர் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். இதில் இளைய மகன் சக்திவேல் கஞ்சா போதைக்கு அடிமையானவர் என தெரிகிறது. தொடர்ச்சியாக கஞ்சாவை பயன்படுத்தி வந்த அவர், மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே தன் தந்தையுடன் வீட்டிலிருந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் முன்விரோததால் வீபரீதம்… கதிரிகோலால் இளைஞர் குத்தி கொலை…!!

மதுரையில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவரை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த ரகு ராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இவர் தன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து உள்ளது. பின்னர் தங்களிடம் இருந்த கத்திரிக்கோலை வைத்து ராகு ராஜை குத்தி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி உள்ளது. இதில் படுகாயமடைந்த ரகுராஜ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதல் மனைவியுடன் உறவு…. 2ஆவது மனைவியை கொன்ற கணவன்… சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

முதல் மனைவியுடன் உறவை துண்டிக்காததால் ஏற்பட்ட சண்டையில் இரண்டாவது மனைவியை கணவன் இரும்பு பைப் மூலம் அடித்துக் கொலை செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சென்னை ஆவடி அடுத்த மேல்பாக்கம் பஜனை கோவில் தெருவில் வசித்த சரிதா, தனது முதல் கணவரை விட்டுவிட்டு மதன் என்பவரை கடந்த 3 ஆண்டுக்கு முன் திருமணம் செய்துள்ளார். மதனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன், மகள் உள்ளனர். சரிதா தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷர்மிலியை தன்னுடனேயே […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாஸ்டர் படத்தால் நடந்த கொடூரம் – தமிழகத்தில் அரங்கேறிய பரபரப்பு சம்பவம் …!!

பொங்கல் பண்டிகைக்கு நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு பிறகு நடிகர் விஜய் – விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தை விஜய்யின் ரசிகர்கள் கொண்டாடினர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்திற்கு பல தரப்புகளில் இருந்து வரவேற்பு குவிந்து வருகிறது. படத்தின் தொடக்க நாளில் கொரோனா இருந்தும் கூட ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படத்தை கண்டுகளித்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது சென்னை நெற்குன்றத்தில் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கணவனை இழந்த அப்பாவி பெண்…. கோவிலுக்குள் வைத்து சீரழிப்பு…. நாகையில் பரபரப்பு …!!

நாகை அருகே கட்டிட கூலி தொழிலாளியாக இருந்து வரும் கணவனை இழந்த பெண் தனது சகோதரி வீட்டிற்கு தினந்தோறும் சென்று அங்கு பாதுகாப்பாக இரவு நேரங்களில் மட்டும் தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல சகோதரி வீட்டுக்கு வந்த அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள், பெண்ணின் வாய்பொத்தி அங்குள்ள ஆலயத்தின் அழைத்துச் சென்று அவரை துன்புறுத்தி பாலியல் வன்கொடுமையின் ஈடுபட்டுள்ளார்கள். இரவு 11 மணிக்குப் பிறகு அழைத்து சென்றவர் நீண்ட நேரமாகியும் […]

Categories
சற்றுமுன் நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவிலில் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை – தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி …!!

நாகையில் கோவிலில் வைத்து பெண் கூலி தொழிலாளிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேர் கைதாகி இருக்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சிக்கிய அதிமுக நிர்வாகி… ரகசிய இடத்தில் விசாரணை…. சிறையில் அடைக்க தீவிரம்…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்‍கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்‍கிய நிர்வாகி உள்ளிட்ட மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்‍கில் வெளியான வீடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7வயது சிறுமி பாலியல் … கொடூரனுக்கு மரண தண்டனை…. நீதிமன்றம் தீர்ப்பு …!!

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு இரட்டை மரண தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 6 மாதத்திற்கு முன்பு புதருக்குள் சடலமாக மீட்கப்பட்டார். அதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அண்டை வீட்டுக்காரரான 25 வயதுடைய சாமுவேல் ராஜா என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது உறுதியானது. இந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிகளா…! 100கிலோ தங்கமா ? சிபிஐயிடமே திருட்டு… பரபரப்பு விசாரணை …!!

சிபிஐ வசம் இருந்த 100 கிலோ தங்கம் மாயமான விவகாரம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர். சட்டவிரோத தங்கம் இறக்குமதி தொடர்பாக கடந்த 2012-ம் ஆண்டு, சென்னையில் உள்ள சுரானா நிறுவனத்தில், சிபிஐ சோதனை மேற்கொண்டது. அப்போது 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் தற்போது 103 கிலோ தங்கம் மாயமானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 400 கிலோ தங்கம், சுரானா நிறுவனத்தின் லாக்கரிலேயே, சிபிஐ அதிகாரிகளின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. தங்கத்தை சுரானா நிறுவனம், […]

Categories
தேசிய செய்திகள்

காதல் திருமணம் செய்த அனீஷ்…. தொடர்ந்து மிரட்டிய பெண் வீட்டார்… இறுதியில் நடந்த கொடூரம் ..!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில், காதல் திருமணம் செய்த இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அனீஷ்(29) என்பவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் முடித்துள்ளார். இந்தத் திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் வீட்டார்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக, அனீஷுக்கு பெண் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்…! சென்று பார்த்த போது அதிர்ச்சி… 6பேர் அதிரடி கைது …!!

பொள்ளாச்சி வனப்பகுதியில் இருந்து யானை தந்தங்களை கடத்தி விற்பனைக்கு  முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக ஆழியார் பகுதியில் உள்ள சண்முகபுரம் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் மீன் வளர்ப்பு கடையில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் வன அதிகாரிகள் அந்த கடையில் ஆய்வு மேற்கொண்டபோது யானையின் இரண்டு தந்தங்களையும் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

என்னோட மனைவி போய்ட்டா…! என்னால தனியா முடில…. மகனை கொலை செய்த தந்தை ..!!

திருச்சி  மாவட்டத்தில் மாற்று திறனாளி மகனை கழுத்தை அறுத்து கொன்று செப்டிக் டேங்கில் மூடி வைத்த கொடூர தந்தை கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லட்சுமிபுரம் சேர்ந்த கூலித் தொழிலாளி தங்கவேலுக்கு கோபி என்ற மாற்றுத்திறனாளி மகன் இருந்தார். கடந்த 9 வருடங்களாக மகனை தங்கவேல் மனைவி செல்வராணி உணவு கொடுத்து பராமரித்து வந்துள்ளார். கடந்த 10 தினங்களுக்கு முன்பு தங்கவேலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் மகனை பராமரிப்பதில்  […]

Categories
தேசிய செய்திகள்

ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான முக்கிய குற்றவாளிகள் கைது!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தலைமறைவான  முக்கிய குற்றவாளிகள்  இருவர் திருவள்ளுவரில் கைதுசெய்யப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஏடி.எம் மையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 5 பேர்  கைதுசெய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளிகளில் இருவரை  காவல்துறயினர் தேடி வந்த நிலையில் அவர்கள் காஞ்சிபுரத்தில்  பதுங்கி இருப்பது தெரிய வந்தது.  இதை அடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருவள்ளூர் அடுத்த  கைவண்டுர் என்ற இடத்தில் இருப்பது தெரிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மிக்கல்லை தலையில் போட்டு கணவன் கொலை; மனைவி ஆத்திரம் …!!

கமுதி அருகே மது போதையில் தினசரி சண்டையிட்டு வந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கிளாமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்த பெருமாள், இவரது மனைவி அம்பிகாவதி. இவர் மதுபோதையில் தனது மனைவியுடன் தினசரி தகராறு செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் இருந்த ஆனந்த பெருமாள் தனது மனைவியிடம் மீண்டும் தகராறு செய்து இருக்கின்றார். இதில் ஆத்திரமடைந்த அவரது மனைவி, […]

Categories
தேசிய செய்திகள்

ஹத்ராஸ் பாலியல் சம்பவம் – குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.பி.ஐ. …!!

நாட்டையே உலுக்கிய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் மீதும் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பாதி பணம் கொடுத்தா வீடு ரெடி…! ”ரூ.30,00,00,000 மோசடி” ஈரோட்டில் பரபரப்பு …!!

ஈரோடு அருகே வீடு கட்டித் தருவதாக நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் 30 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளும்படி காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்டவரிடம் புகார் அளித்தனர். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தாசம் பாளையத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று 50 சதவீதம் கட்டணம் செலுத்தினால் அரசின் சலுகை பெற்று வீடு கட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை நம்பி கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் 30 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேண்டாம்…! அது என்னோட மனைவி… நீ இதோட நிறுத்திக்கோ… கழுத்தை அறுத்த கணவன் ..!!

சென்னையில், கள்ளக்காதல் விவகாரத்தில், நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த கூலி தொழிலாளியை எழுப்பி, 3 பேர் கழுத்தறுத்து கொலை செய்த சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ்குமாருக்கு, அதே பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்து பலமுறை எச்சரித்தும், இளவரசனின் மனைவியை சந்திப்பதை அவர் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முந்தினம் இளவரசன் வீட்டில் இல்லாதபோது, அவரது மனைவியை பார்க்க சந்தோஷ்குமார் சென்றுள்ளார். இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சுத்தியலால் அடித்து மனைவி கொலை…! காவல் ஆய்வாளரின் விபரீத முடிவு….!!

லஞ்ச புகார் வழக்கில் அண்மையில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்த லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் காவல் ஆய்வாளர் தனது மனைவியை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் வடுகு பட்டியை சேர்ந்தவர்  பெருமாள் பாண்டியர். இவர் மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு லஞ்சம் பெற்ற வழக்கில் அரசு மருத்துவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

போலி ஃபேஸ்புக் கணக்கிலிருந்து கடன் கேட்டுத் தொந்தரவு …!!

திருச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரின் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளங்களில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக ஆர்.ஜே ஆனந்த் என்பவர் இருந்து வருகிறார். இவருக்கு உடல்நிலை சரியில்லாததாலும், அதற்கு தேவையான மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு நிதி உதவி செய்யுமாறும் அவரே கேட்பதுபோல் சித்தரிக்கப்பட்டு சமூக வலை தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த செய்தி குறித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நீட் மதிப்பெண் முறைகேடு…. டிமிக்கி கொடுத்த மகள், தந்தை…. போலீஸ் மீண்டும் சம்மன் …!!

நீட் மதிப்பெண் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் காவல்துறையினர் அனுப்பிய சம்மனுக்கு மாணவி மற்றும் அவரது தந்தை ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மருத்துவ கலந்தாய்வில் கலந்துகொண்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணவி தீட்சா, சமர்ப்பித்த நீட் மதிப்பெண் பட்டியல் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாணவி தீபா மற்றும் அவருடைய தந்தை பாலச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் பெரியமேடு காவல் நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோசடி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

உள்ளாடைக்குள் தங்கம்….! கடத்தி வந்த 2பேர் சிக்கினர்…. மதுரையில் பரபரப்பு …!!

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. வந்தே பாரத்  திட்டத்தின் கீழ் இந்தியா வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவுப் பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பயணிகளிடம் சோதனையிட்டபோது சந்தேகத்திற்கிடமாக செயல்பட்ட 2 பேரிடம் இருந்து 42.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான எண்ணி 850.80  கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. உள்ளாடைகலுக்குள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலைக்கேறிய போதை…. அட்டூழியம் செய்த வாலிபர்…. அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் …!!

சின்னமனூர் அருகே  அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த  வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. தேனி மாவட்டம்,  சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர்,  27.3.2016 அன்று  பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர்  வழியாக போடி நோக்கி  சென்ற  அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது  […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பாக்கெட்டில் இருந்த ரூ.250க்காக… தீடிரென சூர்யா செய்த செயல்… மடக்கி பிடித்த வில்சன் …!!!

கோவையில் வாலிபரின் பணத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் , பீளமேடு கருப்பண்ண கவுண்டர் லே-அவுட்டை பகுதியில் வசித்து வருபவர் வில்சன். 20 வயதுடைய இவர் ந.வ 4 தேதி ஹோப்காலேஜ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த  வாலிபர் திடீரென  வில்சனின் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ.270-ஐ பணத்தை பிடுங்கி  கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதில்  உஷார்  அடைந்த வில்சன் பொதுமக்களின் உதவியுடன் கொள்ளையனை மடக்கி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவல்….. சோதனையில் சிக்கிய பெண்… அரியலூரில் பரபரப்பு …!!

விக்கிரமங்கலத்தில் மது விற்ற பெண்ணை காவல்துறையினர்  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் மது விற்ப்பனை செய்வதாக  ரகசிய தகவல் கிடைத்து. அந்த தகவலின் படி ஸ்ரீபுரந்தான் பகுதியில்  சோதனையின் போது அங்கு வசித்த 45 வயது மதிக்கத்தக்க கமலா என்பவரின் வீட்டின் பின்புறம் மது விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்த மது பாட்டில்களை காவல்துறை  பறிமுதல் செய்தனர். […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைச்சுட்டாங்க… ரூ. 60,000 போச்சு… பொதுமக்கள் வேதனை …!!

அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில்  திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள  ஓம் சக்தி  கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர்  […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. சேலம் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

சிறுமியிடம் தவறாக நடந்த சென்னையை சேர்ந்த நபருக்கு  3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டம், மயிலாப்பூர்  சேர்ந்தவர் நரேந்திரன். 41  வயதுடைய இவர் 09.8.2016-ம்  அன்று சென்னையில் இருந்து பழனிக்கு புறப்பட்ட விரைவு ரயிலில் முன்பதிவு பயணம் செய்தார். அப்போது அதே ரயிலில் பயணம் செய்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இச் சம்பவம்  சேலம் அருகே  ரயில் வந்துகொண்டிருந்தபோது நடத்து  உள்ளது. உடனே சிறுமியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மேலே வீடு…. கீழே கடை…. அசந்து தூங்கிய குடும்பம்… உள்ளே நுழைந்த கொள்ளையர்கள்… திண்டிவனத்தில் அதிர்ச்சி ..!!

திண்டிவனத்தில் வெல்டிங் பட்டறை உரிமையாளரின் வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தில் மரக்காணம் ரோடு நாகலாபுரத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் குடும்பத்தினருடன் மாடி வீட்டில் வசித்து வருகிறார். கீழ்ப்பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி குடும்பத்தை பார்த்து வந்தார். கடந்த 1ஆம் தேதி வெல்டிங் பட்டறை கதவை பூட்டாமல் குடும்பத்துடன் படுத்து உறங்கியுள்ளார். இதனை அறிந்த மர்ம நபர் நள்ளிரவில் வீட்டில் புகுந்து அங்கு உள்ள பூஜை அறையில் 4 பவுன் நகை […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மகளை அடித்த கணவன்…. நியாயம் கேட்ட தாய், தந்தை…. கத்தியால் குத்திய மருமகன் ..!!

குடும்ப தகராறில் ஆத்திரம் கொண்டு மாமனார், மாமியாரையும் கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறை வலைவீசி தேடி வருகின்றார்கள். புதுசேரின்  வில்லியனுர் மாவட்டத்தில்  உள்ள நெட்டப்பாக்கம் கரியமாணிக்கம் கோழிப்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ராஜராஜன். 40 வயதுடைய   இவரின் மனைவி ஹேமாக்கு  26 வயது. ராஜராஜன்க்கும், ஹேமாக்கும்  இடையில் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. மேலும்  ஹேமாவை கடந்த சில நாட்களுக்கு முன் , ராஜராஜன் அடித்திருக்கிறார் . இதை அறிந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

வீட்டுல ஒரே சண்டை…. கோவித்துக் கொண்ட மனைவி….. கணவனுக்கு நேர்ந்த துயரம்….!!

குடும்ப தகராறில்  மனைவியும் குழந்தையும் பிரிந்து  பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் மனமுடைந்த கணவன்  தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .  கோவில்பட்டியில் உள்ள பாரதி நகரின்   மேட்டுத்  தெருவைச் சேர்ந்தவர்  மைக்கேல். இவரின் மகன் ராம்ராஜ்,  30வயதுடைய  இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சீதா. இவர்களுக்கு 7-வயதில் பெண் குழந்தை  உள்ளது. அடிக்கடி கணவன், மனைவிக்கும்  இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது . மேலும் கடந்த சில நாட்களில் ஏற்பட்ட குடும்ப […]

Categories
தேசிய செய்திகள்

மேலும் 43 செயலிகள்… இனிமே நோ யூஸ்… என்னென்ன செயலிகள் தெரியுமா..?

மேலும்  43 ஆப்களுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இந்த செயலிகள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, அரசின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றிற்கு எதிரானது  என்று அரசாங்கம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது. தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட 43 ஆப்களின் முழு பட்டியலையும் இந்திய அரசாங்கம் வெளியிட்டு உள்ளது. தடைசெய்யப்பட்ட 43 ஆப்களின் முழு பட்டியல் பின்வருமாறு: AliSuppliers Mobile App Alibaba Workbench AliExpress Smarter Shopping, Better Living […]

Categories
சற்றுமுன் சென்னை மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை – காவல் ஆய்வாளர் கைது …!!

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய ராஜேந்திரன் என்பவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் புகழேந்தியை சஸ்பெண்ட் செய்து காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

காதலியை ஏமாற்றிய காதலன்.. பிளான் போட்ட காதலி..

ஆந்திரா மாநிலத்தில் காதலித்து ஏமாற்றிய காதலன் திருமணத்தை, காதலி தடுத்த நிறுத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பெத்த பஞ்சானியை சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அவரும், அதே நிறுவனத்தில் பணிபுரியும்  மீதகுரப்பள்ளியை சேர்ந்த கணேஷ் என்பவரும் 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவெடித்து  பெற்றோர்களிடமும் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன் கணேஷ் பெருந்தொற்றால் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விமானத்தில் வந்த களிமண்… திருதிருவென முழித்த இருவர்… விசாரணையில் அதிர்ச்சி ….!!

ரூ.56 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1091.560 கிராம் தங்க கட்டிகளை களிமண்ணில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மதுரை விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு வந்த ரகசிய தகவலையடுத்து மத்திய சுங்க இலகா நுண்ணறிவு பிரிவினர் வெளி நாட்டில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளிடம தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். துபாயிலிருந்து மதுரைக்கு ஏர் இந்தியா விமானத்தில் வந்த பயணிகள் இருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மதுரை விமான நிலைய […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

15வயது சிறுமியை ஏமாற்றி…. குடும்பம் நடத்திய பசுபதி… இறுதியில் நடந்த அதிர்ச்சி… சேலத்தில் பரபரப்பு …!!

சிறுமியை கடத்தி வந்து சேலத்தில் குடும்பம் நடத்திய வாலிபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் பசுபதி(25). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 15 ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான சிறுமியை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். பிரசவ வார்டில் இருந்த மருத்துவர்களின் விசாரணையின்போது, சிறுமிக்கு 15 வயது என்றதும் அதிர்ச்சியடைந்து டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் அதே நாளில் சிறுமிக்கு சுக பிரசவத்தில் அழகான […]

Categories

Tech |