தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையானது ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இத்திட்டத்தை ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் தொடங்கி வைக்கிறார். ரொக்கப் பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும், கரும்பும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசுத்தொகுப்பானது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசில் ஏதாவது குளறுபடி இருந்தால் 1967 […]
Tag: குளறுபடி
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் போல இல்லாமல் இந்த வருடம் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் சென்ற வருடம் வழங்கப்பட்ட 21 பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக புகார் எழுந்ததையடுத்து ரொக்க பரிசு […]
மத்தியபிரதேச மாநிலத்தில் நேற்று 167 டிஎஸ்பிக்கள் மற்றும் சப்-டிவிஷன் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த பட்டியலில் உயிரிழந்த காவலர்களுடைய பெயரும், ஓய்வு பெற்ற காவலர்களுடைய பெயரும் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் டிஎஸ்பி ஜிதேந்திர யாதவ் குவாலியரில் உள்ள 26வது பட்டாலியனுக்கு மாற்றப்பட்டார். ஆனால் ஜிதேந்திர யாதவ் 6 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து சசி பூஷன் சிங் ரகுவன்ஷியும் பட்டியலில் இடம்பெற்றார். […]
கறம்பக்குடி பேரூராட்சியில் வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களில் பல தவறுகள் இருப்பதால் வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கறம்பக்குடி பேரூராட்சியில் மொத்தம் 15-வார்டுகளும், 13,183 வாக்காளர்களும் இருக்கும் நிலையில், இதற்கு முன்பு இருந்த வார்டுகளுடைய எண்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இது மட்டுமின்றி வாக்காளர்களுக்கான வார்டுகளிலும், இதற்கு முன்பு இருந்த பகுதியில் இருந்து மற்றொரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, வாக்காளர்களிடையே குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளரின் பெயர், புகைப்படம் மற்றும் தந்தை பெயர் தவறுதலாக […]
பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, […]
நாளை நடைபெற உள்ள நிலையில் பூத் சிலிப்புகளை வாக்காளர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. இன்று மாலைக்குள் அனைத்து பகுதிகளிலும் பூத் சிலிப்பு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குச்சாவடி விவரங்கள் அடங்கிய பூத் சிலிப்புகளை வாக்காளர்கள் விநியோகிப்பதில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி அரசு ஊழியர்களே பூத் சிலிப் வழங்கும் பணியை தற்போது மேற்கொண்டு […]
பழனியை சேர்ந்த தனியார் பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே ஒடிசாவில் பயணித்தாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று கூறப்பட்டது. ‘பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து பெரும்பாலும் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக் பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை […]
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]
இ_பாஸ் நடை முறையில் குளறுபடிகள் அதிகரித்து வரும் நிலையில் சாமானியர்கள் இ_பாஸ் வாங்குவதில் சவாலாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு. தமிழகத்தில் மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு இ_பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணம் இறப்பு மற்றும் மருத்துவத் தேவைகள் உள்ளிட்ட சில காரணங்களுக்கு மட்டுமே வழங்க கூடிய இந்த இ_பாஸ்கள், ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து […]