கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாதேபட்டியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 8 மாத ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த 12-ஆம் தேதி வெங்கடேசனின் மனைவி தனது குழந்தையுடன் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்துக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கி சென்று சிகிச்சை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் உள்ள கழிவறைக்கு செல்லும் முன் தனது குழந்தையை முன்புறம் இருந்த இருக்கையில் படுக்க வைத்து விட்டு சென்றுள்ளார். […]
Tag: குழந்தை கடத்தல்
அமெரிக்க நாட்டில் 21 மாத குழந்தையாக கடத்தப்பட்டவர் சுமார் 51 வருடங்கள் கழித்து குடும்பத்தினருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 1971 ஆம் வருடத்தில் மெலிசா ஹைஸ்மித் என்ற பெண் குழந்தை பிறந்திருக்கிறது. தங்களின் 21 மாத குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு பராமரிப்பாளரை நியமித்திருக்கிறார்கள். ஒரு நாள் பராமரிப்பாளரிடம் குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு கூறிய அவரின் தாய் வெளியில் சென்றிருக்கிறார். அவர் திரும்பி வந்து பார்த்த […]
சத்தீஸ்கரில் பலோட் மாவட்டத்தில் குரூர் கிராமத்தின் தெருக்களில் சந்தேகத்துக்குரிய வகையில் இரண்டு பேர் காவி உடையுடன் சுற்றி திரிந்துள்ளனர். அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இது பற்றி தகவல் கிடைத்து சென்ற போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இந்து சாமியார்கள் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை நம்ப முடியாத போலீசார் அவர்களிடம் காயத்ரி மந்திரம் மற்றும் மகாமிருத்யுஞ்சய மந்திரம் ஆகியவற்றை உச்சரிக்கும் படி […]
கடந்த ஜனவரி 23-ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள பெஸ்தான் பகுதியை சேர்ந்த அலியா ஜாபர் ஷேக் என்பவர், தனது மகன் கடத்தப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த தனது மகனை பர்தா அணிந்த பெண் ஒருவர் கடத்திச் சென்றதாக அலியா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் 38 வயது கர்ப்பிணிப் பெண்ணான ரூபினா சோஹன் சித்திக் மற்றும் அவரது 14 வயது மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். […]
ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை 18 நாட்களாக ஒரு வீட்டில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் நான்கு வயதுடைய Cleo Smith என்ற குழந்தை பெற்றோருடன் வெளியில் சென்றபோது காணாமல் போனது. காவல்துறையினர் சுமார் 18 நாட்களாக குழந்தையை தீவிரமாக தேடி வந்த நிலையில், Carnarvon நகரத்தின் ஒரு குடியிருப்பில் குழந்தை கடத்தி வைக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அந்த குடியிருப்பிற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அடைக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து குழந்தையை […]
அமெரிக்காவில் வீடற்ற நபர் ஒருவர் 3 வயது குழந்தையை கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் 1.12 மணி அளவில் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள Bronx நகரில் 3 வயது பெண் குழந்தையுடன் 65 வயது பாட்டி சாலையை கடக்க முயற்சித்துள்ளார். இந்த நிலையில் அந்த மூன்று வயது பெண் குழந்தையை அங்கு வந்த வீடற்ற நபர் ஒருவர் கடத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சித்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த 65 […]
தாய்லாந்தில் காணாமல் போன ஒரு வயது குழந்தை மூன்று நாட்கள் கழித்து ஒரு குகையில் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தாய்லாந்தில் உள்ள Chiang Mai என்ற கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதிய நேரத்தில், வீட்டிற்கு வெளியில் Pornsiri Wongsilarung என்ற ஒரு வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென்று குழந்தை காணாமல் போனது. எனவே குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் பின்பு, சுமார் 200 காவல்துறையினர், மீட்புக்குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்று […]
கனடாவில் பெற்ற குழந்தையை கடத்தி தந்தையை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா வின்னிபெக்கில் கத்தியை காட்டி தாயின் கையில் இருந்த குழந்தையை மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து குழந்தையின் தாய் புகார் அளித்த நிலையில் 15 நிமிடங்களுக்குள் காவல்துறையினர் கத்தி காயங்களுடன் காருக்குள் இருந்த குழந்தையை கண்டறிந்தனர். ஆனால் குழந்தையை காப்பாற்ற இயலவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையில் குழந்தையின் தந்தை தான் குழந்தையை கடத்தினார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குழந்தையின் தாயும், தந்தையும் […]
கடனை தொகையை திருப்ப தராத காரணத்தினால் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள வெண்ணம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவரின் இளைய மகன் ஹரிஷ் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டான். இதனையடுத்து ராஜசேகர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் ஹரிஷை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் […]
சிவகங்கை மாவட்டத்தில் தனது சொந்த பேரனையே பாட்டி கடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியை சேர்ந்தவர்கள் அருண் ஆரோக்கியம் -தைநீஸ்வரி. இருவரும் காதலித்து வந்த போது அருண் ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் தனிக்குடித்தனம் சென்றனர் . குழந்தை பிறந்தால் குடும்பத்தினர் சமரசம் ஆகி விடுவார்கள் என இருவரும் எதிர்பார்த்துள்ளனர். இதனிடனையே அவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. […]
சென்னை கோயம்பேடு சந்தை பகுதியில் கடத்தப்பட்ட 3 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டு இருக்கிறது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ். இவர், இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று அதிகாலையில் தன்னுடன் உறங்கிக் கொண்டிருந்த 3 மாத பெண் குழந்தை சஞ்சனாவை காணவில்லை என்று குழந்தையின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக காவல்துறையினர் […]
தூங்கிக்கொண்டிருந்த மூன்று மாத குழந்தை காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் விழுப்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் பழ வியாபாரம் செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சத்யா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழை மண்டி அருகே வசித்து வந்துள்ளார். மேலும் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு கிளம்பினாள் கொரோனா பரவி விடும் என்ற பயத்தினால் அங்கேயே இருந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு […]
பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தை இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெங்களூருவில் இருந்து கடத்தப்பட்ட ஐந்து வயது பெண் குழந்தையை போலீசார் நேற்று மீட்டனர். இதனையடுத்து கர்நாடக போலீசார் உடன் இன்று நாகர்கோவில் வருகை தந்த குழந்தையின் தாய் கார்த்திகாவிடம் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பத்ரிநாராயணன் குழந்தையை ஒப்படைத்தனர். இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தன் குழந்தையுடன் உறங்கியுள்ளனர். காலை எழுந்து பார்த்த போது, குழந்தையைக் காணாததால் […]
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தாயுடன் தூங்கிய 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த சினேகா(23) என்ற பெண்ணுக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்ற நபருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் அவர்களுக்கு ராஜேஸ்வரி என்னும் 8 மாத கைக்குழந்தை ஒன்று இருக்கிறது. இவர்கள் பிழைப்பு தேடி சென்னை வந்து, பெசன்ட் நகர் கடற்கரையிலேயே தங்கி ஊசிமணி பாசிமணி விற்று வருகின்றனர். சினேகாவும் பாட்ஷாவும் நேற்று இரவு ஸ்கேட்டிங் […]