Categories
தேசிய செய்திகள்

பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம்….. மத்திய அரசு முடிவு…..!!!

நாட்டில் வன வளங்களை பாதுகாத்து மேலாண்மை செய்யும் வகையில் பழங்குடியினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கூட்டு ஒப்பந்தத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும், பழங்குடியினர் விவகார அமைச்சகம் சேர்ந்து இன்று கையெழுத்திடுகின்றன என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதிகளில் பரம்பரையாக வாழ்ந்துவரும் பழங்குடியினருக்கு வனப்பகுதிகளில் உரிமை அளித்து, அங்கு அவர்கள் பாரம்பரிய தொழில் புரியும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

இனி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம்… நிறைவேறிய மசோதா…!!!!

டெல்லி துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மத்திய அரசின் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வரின் அதிகாரங்களை விடத் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் மசோதா எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கிடையே நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 83 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 45 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதிக உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதாமீதான வாக்கெடுப்பின்போது காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |