Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சாலையின் இருபுறத்திலும்…. சுற்றித் திரியும் காட்டெருமைகள்…. புகைப்படம் எடுத்து செல்லும் பொதுமக்கள்….!!

சாலையோரங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரியும் காட்டெருமைகளை பொதுமக்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் மலைப் பகுதியில் மான், மிளா, காட்டெருமைகள் போன்ற வனவிலங்குகள் அடிக்கடி சுற்றித் திரியும். ஆனால் தற்போது பாபநாசம் லோயர் டேம் சோதனைச்சாவடியை தாண்டியதும் சாலையின் இருபுறத்திலும் காட்டெருமைகள் கூட்டம் கூட்டமாக நின்று மேய்ந்து கொண்டிருக்கின்றன. இதனை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

Categories

Tech |